Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

சென்னை நிறுவனம் 'Aqua Connect' 1.1 மில்லியன் டாலர் நிதி பெற்றது!

தமிழக இறால் வளர்ப்பு விவசாயிகள் ஏற்றுமதி சந்தை வளர்ச்சியில் உதவும் சென்னையைச் சேர்ந்த இந்நிறுவனம், 1.1 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.

சென்னை நிறுவனம் 'Aqua Connect' 1.1 மில்லியன் டாலர் நிதி பெற்றது!

Thursday September 26, 2019 , 3 min Read

’அக்வாகனெக்ட்’ (Aquaconnect) நிறுவனம், ஆம்னிவேர் மற்றும் HATCH உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து 1.1. மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.


இந்த நிதியை கொண்டு, அக்வாகனெக்ட் தனது விவசாயிகள் வலைப்பின்னலை மேலும் வளர்த்தெடுக்கவும், அக்வாகல்சர் சூழலுக்காக புதிய SaaS கருவிகளை அறிமுகம் செய்ய, தனது ஃபார்ம்மோஜோ மேடையில் தொழில்நுட்ப மேம்பாடுகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

அக்வா

ஆம்னிவேர் நிறுவனத்தின் ரெய்ஹம் ராய், அக்வாகனெக்ட் இயக்குனர் குழுவில் இணைந்து வளர்ச்சி உத்திகளுக்கு வழிகாட்ட உள்ளார். ஐசி யூனிவர்சலின் சென்னை குழு, இந்த மாற்றத்திற்கு வழிகாட்டியது.

”குழுவை விரிவாக்க, செயற்கை நுண்ணறிவு சார்ந்த எங்கள் மேடையை மேம்படுத்த, எங்கள் ஆம்னிசேனல் சந்தை திறனை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும். 2020ல் இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் 15,000 இறாள் விவசாயிகளை சென்றடைய திட்டமிட்டுள்ளோம். ஆம்னிவேர் மற்றும் ஹாட்ச் அக்வால்கல்சரை புரிந்து கொள்வதால், எங்கள் முதல் நிறுவன நிதி சுற்றுக்கு அவை மிகவும் ஏற்றதாக அமைகின்றன,” என்று அக்வாகனெக்ட் இணை நிறுவனர், சி.இ.ஓ ராஜ் மனோகர் சுந்தரம் கூறினார்.

அக்வாகனெக்ட் சேவை

2017ல் ராஜ் மனோகர், சஞ்சை குமார் மற்றும் சண்முக சுந்தர ராஜ் ஆகியோரால் துவக்கப்பட்ட அக்வாகனெக்ட், செயற்கை நுண்ணறிவு சார்ந்த மேடை மூலம், கணிப்புத்திறன் கொண்ட எஸ்.ஏ.ஏ.எஸ் கருவிகள் மூலம் ஆசியாவில் உள்ள விவசாயிகளை இணைப்பதோடு, ஆம்னிசேனல் சந்தை வாய்ப்பையும் வழங்குகிறது.

இந்த சுற்றுக்கு முன், இந்நிறுவனம் ஹாட்ச் நிறுவனத்திடம் இருந்து ஏஞ்சல் நிதி திரட்டியிருந்தது.

ஹேட்ச் நிறுவனம் நார்வேயில் நடத்திய சந்திப்பு நிகழ்ச்சியில் அக்வாகனெட்க்ட் பங்கேற்ற பிறகு இந்த நிதி அவர்களுக்குக் கிடைத்தது. அக்வாகல்சர் சார்ந்த இரண்டாவது ஸ்டார்ட் அப்பில் ஆம்னிபேர் முதலீடு செய்துள்ளது.


அக்வாகனெக்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள், கடல்வாழ் விலங்குகளின் நோய்களை கணிக்கவும், தண்ணீர் தரத்தை மேம்படுத்தவும் வழி செய்கிறது. மேலும் FarmMojo மொபைல் செயலி அறிமுகம் செய்து, இந்தியா மற்றும் இந்தோனேசியாவில், 3,000 விவசாயிகளுக்கு சேவை அளித்து வருகிறது. வரும் காலத்தில் தெற்காசியாவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.


750 பண்ணைகளில் உள்ள ஆயிரக்கணக்கான அக்வா விவசாயிகளுக்கு ஃபார்ம்மோஜோ உதவியாக உள்ளது.

“ இந்த செயலி மூலம் விவசாயிகளில் வருவாய் 5 சதவீதம் அதிகரித்ததை கண்டறிந்துள்ளோம். இது நோய்கள் தோன்றுவதையும் குறைத்துள்ளது,” என்கிறார் ராஜ்.

அக்வா விவசாயிகள்

அக்வாகனெக்ட், அக்வா பண்ணைகளைச் சுற்றி வசிக்கும் உள்ளூர் மக்களுடன் இணைந்து செயல்பட்டு, நன்னீர் குளங்களில் இருந்து மாதிரிகளை எடுத்து அவற்றை ஆய்வுக் கூடங்களில் அளிக்க வைக்கிறது. ஃபார்ம்மோஜோ செயலி, ஒரு விவசாயிக்கு நான்கு மாதங்களுக்கு ரூ.1,500 வசூலிக்கிறது. இதி மொத்த செலவின் 0.2 முதல் 0.5 சதவீதம் மட்டுமே.


தண்ணீரை பரிசோதித்து முடிவுகளை அளிக்க 10 பயிற்சி பெற்ற நபர்களை நிறுவனம் நியமித்துள்ளது. இந்த முடிவுகள் விவசாயிகளுக்கு ஃபார்ம்மோஜோ செயலி மூலம் வழங்கப்படுகிறது.


இந்த ஸ்டார்ட் அப் விவசாயிகள் வலைப்பின்னலை ஆம்னிசேனல் சந்தைக்கும் இணைக்கிறது. இங்கு விவசாயிகள், இறால்குஞ்சு மையங்கள், ஆய்வுக்கூடங்கள், கருவி நிறுவனங்கள், தீனி உற்பத்தியாளர்கள், சான்றிதழ் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள், காப்பீடு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுடன் தொடர்பு கொள்ளலாம்.

”அக்வாகனெக்ட், இந்தியாவில் மற்றும் ஆசியாவில் நீலப்புரட்சிக்கான கிரியா ஊக்கியாக உள்ளது. மேலும் இந்திய அரசும், அக்வாகல்சர் துறைக்காக ஆதரவை அதிகரித்து வருகிறது. மீன்வளத்துறை, கால்நடைத் துறை மற்றும் பண்ணைகளுக்கான தனி அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளதோடு, பிரதான் மந்திரி மத்ஸ்யா சம்படா யோஜா திட்டத்தையும் துவக்கியுள்ளது. ராஜ் மற்றும் அவரது குழுவினர் சர்வதேச அளவிலான ஸ்டார்ட் அப்பை உருவாக்கி வருவதாக நம்புகிறோம்,” என்று ஆம்னிவேர் நிர்வாக பங்குதாரர் மார்க் கான் கூறினார்.

சந்தை

ஆண்டுக்கு 700,000 டன் இறால்களை உற்பத்தி செய்யும் 7.1 பில்லியன் டாலர் மதிப்பிலான அக்வா கல்சர் துறையில் இந்த ஸ்டார்ட் அப் கவனம் செலுத்தி வருகிறது. ஐஐடி- கான்பூர் பட்டதாரியான ராஜ், உலக பொருளாதார அமைப்பின் இளம் சர்வதேச தலைவராக தேர்தெடுக்கப்பட்டவர் மற்றும் இதற்கு முன்னர் மொபைல் நுட்ப நிறுவனமான ஹெக்சாலேப்சை நிறுவியுள்ளார்.


சஞ்சய், அனுபவம் வாய்ந்த அக்வாகல்சர் விவசாயி மற்றும், வென்மணி கல்சர் எனும் நிறுவனத்தை துவக்கியவர். சண்முகராஜ், காப்பீடு உள்ளிட்ட துறைகளில் உயர் பதவி வகித்திருக்கிறார்.

”ஒராண்டுக்கு மேல் ராஜ் மற்றும் குழுவினருடன் நெருக்கமாக பணியாற்றியதில், இறால் வளர்ச்சிப்பாதையில் அவர்களால் சிறந்த செயல்பாட்டை அளிக்க முடியும் என்ற நம்பிக்கையில், நிதி அளிக்கப்பட்டுள்ளது,” என்று ஹேட்ச் நிறுவனர் நிர்வாக பங்குதாரர் கார்ஸ்டன் குரோம் கூறினார்.

ஆங்கில கட்டுரையாள்ர்: சிந்து காஷ்யப் | தமிழில்:சைபர்சிம்மன்