Gold Rate Chennai: தடலாடியாக உயர்ந்த தங்கம் விலை; சவரன் ரூ.43,400-க்கு விற்பனை
நேற்று தங்கம் விலை சற்றே சரிந்த நிலையில் இன்று மீண்டும் கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளது. இந்தப் போக்கு நீடிக்கும் எனத் தெரிகிறது.
நேற்று தங்கம் விலை சற்றே சரிந்த நிலையில் இன்று மீண்டும் கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளது, ஆபரணத் தங்கம் வாங்க விரும்புவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (16/03/2023)
கடந்த வார இறுதி முதலே கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று சற்றே குறைந்தது நகை பிரியர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்தது. ஆனால், இன்று தங்கம் விலை மீண்டும் தடாலடியாக உயர ஆரம்பித்துள்ளது நகை வாங்க காத்திருப்போரையும், நடுத்தர மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,380 ரூபாய்க்கும், சவரன் 43,040 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (வியாழக்கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்து 5,425 ரூபாயாகவும், சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து 43,400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 45 ரூபாய் அதிகரித்து 5,891 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து 47,128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போல் அல்லாமல் இன்று வெள்ளியின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 20 காசுகள் அதிகரித்து 72 ரூபாய் 20 காசுகளுக்கும், ஒரு கிலோவிற்கு 200 ரூபாய் அதிகரித்து 72 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

திடீர் உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்காவில் அடுத்தடுத்து வங்கிகள் திவாலான நிலையில், சுவிஸ் நாட்டின் 2வது பெரிய வங்கியான கிரெடிட் சூயிஸ் பங்குகளும் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்களின் பார்வை பங்குச்சந்தையில் இருந்து பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,425 (மாற்றம்: ரூ.45 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.43,400 (மாற்றம்: ரூ.360 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,891 (மாற்றம்: ரூ.45 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 47,128 (மாற்றம்: ரூ.360 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,355 (மாற்றம்: ரூ50 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,840 (மாற்றம்: ரூ.400 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,842 (மாற்றம்: ரூ. 55 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 46,736 (மாற்றம்: ரூ.440 அதிகரிப்பு)