Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

உலகின் தலைசிறந்த விமான நிலையமாக சிங்கப்பூர் சாங்கி ஏர்போர்ட் திகழ்வது எப்படி? - வியத்தகு அம்சங்கள்

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் ‘உலகின் சிறந்த விமான நிலையம்’ என தொடர்ந்து 12-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான காரணம், சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

உலகின் தலைசிறந்த விமான நிலையமாக சிங்கப்பூர் சாங்கி ஏர்போர்ட் திகழ்வது எப்படி? - வியத்தகு அம்சங்கள்

Monday March 20, 2023 , 3 min Read

பிரிட்டனைச் சேர்ந்த விமான போக்குவரத்து ஆராய்ச்சி நிறுவனமான ஸ்கைட்ராக்ஸால் என்ற இணையதளம் ‘உலக விமான நிலைய விருதுகள் 2023’ பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சிங்கப்பூர் சாங்கி (Changi) விமான நிலையம் முதலாவது இடத்திலும், கத்தாரின் ஹமாத் விமான நிலையம் 2-வது இடத்திலும் உள்ளது.

உலக அளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விமானப் பயணிகளிடையே நடத்தப்பட்ட ஆய்வின் படி, ஸ்கைட்ராக்ஸ் தனது பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் படி ஆசியாவின் சிறந்த விமான நிலையம், பயணிகளுக்கான உணவு, ஓய்வு வசதிகள், ஷாப்பிங், செக்-இன், வருகை, இடமாற்றம், பாதுகாப்பு, இமிக்ரேஷன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்தப் பட்டியலில் தயாரிக்கப்பட்டுள்ளது.

டாப் 10 விமான நிலையங்கள் எவை?

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் முதலாவது இடத்தையும், தோஹாவின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் இரண்டாவது இடத்தையும், டோக்கியோவின் ஹனேடா விமான நிலையம் மூன்றாவது இடத்தையும், தென்கொரியாவின் தலைநகரான் சியோலில் அமைந்துள்ள இன்சியான் சர்வதேச விமான நிலையம் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.

பாரீஸ் 5-வது இடத்திலும், இஸ்தான்புல் ஆறாவது இடத்திலும், முனீச் ஏழாவது இடத்திலும் மற்றும் சூரிச் எட்டாவது இடத்திலும், நரிடா சர்வதேச விமான நிலையம் ஒன்பதாவது இடத்திலும், ஸ்பெயினின் மாட்ரிட்-பராஜாஸ் விமான நிலையம் 10-வது இடத்திலும் உள்ளது.

கடந்த ஆண்டு டாப் 10 பட்டியலில் கடைசி இடம் பிடித்த ஒசாகாவின் கன்சாய் சர்வதேச விமான நிலையம் 2023-ம் ஆண்டுக்கான பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த ஆண்டு முதல் 10 இடங்களில் ஜப்பானின் இரண்டு விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையம் 3-வது இடத்திலும், நரிடா சர்வதேச விமான நிலையம் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

சாங்கி விமான நிலையத்தின் சிறப்புகள்:

சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையம் 1981-இல் நிறுவப்பட்டது. அதன் பின்னர் 660 'சிறந்த விமான நிலையம்' விருதுகளைப் பெற்றுள்ளது. பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக விமான நிலையம் அதன் வடிவமைப்பு மற்றும் விநியோகத்தை தொடர்ந்து புதுப்பித்து வருகிறது.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் 12-வது முறையாக உலகின் சிறந்த விமான நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், நீங்கள் வேறு எங்கும் காண முடியாத அளவிற்கு பூங்கா, செயற்கை அருவி உள்ளிட்ட கற்பனைக்கு எட்டாத விஷயங்கள் இந்த விமானத்திற்குள் உள்ளன.

  • ஒருவேளை நீங்கள் சுற்றுலாவிற்கு சிங்கப்பூர் செல்கிறீர்கள் என்றால், முதலில் நீங்கள் சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கியமான இடமாக சாங்கி விமான நிலையம் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
Sigapore
  • விமான நிலையத்திற்குள் பட்டாம்பூச்சிகளை பார்ப்பதே கடினமான விஷயம். ஆனால், உலகிலேயே முதன்முறையாக சாங்கி விமான நிலையத்தில் உள்ள T3 ட்ரான்சிட்டில் பட்டாம்பூச்சி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், 1000-க்கும் மேற்பட்ட வெப்பமண்டல பட்டாம்பூச்சிகள் உள்ளன.

  • சாங்கி விமான நிலையத்தின் கட்டிடக் கலையே பயணிகளை மயக்கும் விதமாக உள்ளது. குறிப்பாக டெர்மினல்கள் 2 மற்றும் 3-க்கு இணைக்க அமைக்கப்பட்டுள்ள இணைப்பு பாலமும், குவிமாடம் வடிவ கட்டிடக் கலை அற்புதமாக அமைந்துள்ளது. விமான நிலையத்திற்குள் பச்சை பசெலென எங்கு திரும்பினாலும் மரம், செடி கொடிகளால் சூழப்பட்டுள்ளது. அதற்கு கீழே ஸ்பெஷலாக பல்வேறு வகையான தாவரங்களைக் கொண்ட ஷிசிடோ என்ற வனப் பள்ளத்தாக்கு அமைக்கப்பட்டுள்ளது அழகோ... அழகு..!
Sigapore
  • சாங்கி விமான நிலையத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள பூங்கா ஒன்று பயணிகளின் கவனத்தை கவரக்கூடிய முக்கிய இடமாக உள்ளது. ஜூவலின் லெவல் 5-ல் அமைந்துள்ள கேனோபி பார்க் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது காத்திருப்பு நேரத்தை செலவிட சரியான இடமாக உள்ளது.
Sigapore
  • சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள 4 முனையங்களிலும் உடற்பயிற்சி கூடம் மற்றும் குளியலறை வசதிகள், பயணிகளுக்கான ஓய்வறைகள், உலகின் மிக உயரமான உட்புற நீர்வீழ்ச்சி, 16 மீட்டர் உயரமுள்ள சிறுவர்கள் சறுக்கி விளையாடும் பகுதி, 10 அடுக்குகளைக் கொண்ட ஜூவல் என்ற சில்லறை வணிக வளாகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

  • சாங்கி விமான நிலையத்தைப் பொறுத்தவரை லூயிஸ் உய்ட்டன், பர்பெர்ரி மற்றும் குஸ்ஸி போன்ற உயர்தர ஆடம்பர பிராண்டுகள் முதல் யுனிக்லோ மற்றும் முஜி போன்ற பட்ஜெட் ஃப்ரெண்ட்லி கடைகள் வரை பயணிகளின் வசதிக்கு ஏற்ப பொருட்களை வாங்க ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் சிறந்த விமான நிலையம் எது?

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிறந்த விமான நிலையத்திற்கான விருதைப் பெற்றுள்ளதாக ஸ்கைட்ராக்ஸ் தெரிவித்துள்ளது.

ஸ்கைட்ராக்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகெங்கிலும் உள்ள சிறந்த 50 விமான நிலையங்களில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய விமான நிலையம் டெல்லி விமான நிலையம் ஆகும். உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் 2023 பட்டியலில் டெல்லி விமான நிலையம் 36-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு டெல்லி விமான நிலையம் 37-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Sigapore

பட்டியலில் உள்ள மற்ற இந்திய விமான நிலையம் ஹைதராபாத் விமான நிலையம் ஆகும். இது இந்தியாவின் சிறந்த பிராந்திய விமான நிலையம் மற்றும் சிறந்த விமான நிலைய பணியாளர்கள் ஆகிய விருதுகளை வென்றுள்ளது. இந்த விமான நிலையங்கள் சில கடந்த ஆண்டை விட பல இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 62-வது இடத்தில் இருந்த ஹைதராபாத் விமான நிலையம் 65-வது இடத்தில் உள்ளது. இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய விமான நிலையமான பெங்களூரு 61-வது இடத்தில் இருந்து 69-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 65-வது இடத்தில் இருந்த மும்பை சர்வதேச விமான நிலையம், இந்த ஆண்டு 84-வது இடத்தில் உள்ளது.