பதிப்புகளில்

சமூகப் பணிகளுக்காக நிதி திரட்டும் ‘பவர் ஃபார் ஒன்’

27th Oct 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

இன்று எண்ணற்ற சமூக மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளுக்குத் தேவைப்படும் கவனம் மிகவும் உயர்வாக இருக்கிறது. குறிப்பாக விழிப்புணர்வை உருவாக்கவும் நிதிதிரட்டவுமான அமைப்புகள் வளர்ந்துவருகின்றன. இதுபோன்ற சேவைகளுக்காக நிதி திரட்டுவதற்கான தளங்கள் இதற்கு சிறந்த உதாரணமாக இருக்கின்றன. அவை தலையெடுப்பதை இந்தியா பார்க்கும் கடைசி பத்தாண்டுகள் இதுவாகத்தான் இருக்கும்.

கிவ் இந்தியா, யுனைடெட் வே மற்றும் மிலாப். ஆர்க் (GiveIndia, United Way and Milaap.org) இவையெல்லாம் சில உதாரணங்கள். இந்தக் களத்தில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பது "பவர் ஃபார் ஒன்" (Power for One) தொடங்கப்பட்டு ஒரு மாதம் ஆகிறது. நன்கொடையாளர்களையும் பயனாளிகளையும் ஒன்றிணைப்பதில் புதிய வழிமுறையை கண்டிருக்கிறது.

“நானும் இஷானும் 2010ம் ஆண்டு கல்லூரியில் இருந்தபோது, ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் அது தொடர்பாக இந்த ஆண்டு ஜனவரியில்தான் பணிகளைத் தொடங்கினோம்” என்கிறார் துணை நிறுவனரான மிஹிர் லூனியா. “டீச் பார் இந்தியா மாதிரி நிறைய அமைப்புகள் இருந்தன. அவை உயர்வாக தொடங்கப்பட்டவை. அவர்களிடம் நல்ல நெட்வொர்க்கும் திறமைசாலிகளும் இருந்தார்கள். சிறிய குடும்ப வணிகத்தைப்போல உங்களுக்கு சிறியவையே கிடைக்கும். அவர்கள் வெளியில் தெரியவில்லை. அந்த செயல்முறையில் நாங்களும் ஒருவராக இருக்க விரும்பினோம். அவர்களுக்கு உதவி செய்ய நினைத்தோம்” என்கிறார் அவர்.

image


ஒவ்வொரு மாதமும் பவர் ஃபார் ஒன், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்களை செய்துகொண்டது. அவர்களுடைய சேவைகள் பற்றி அவர்களது இணையதளத்தில் பதிவுசெய்ய வைத்தது. தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் கடுமையாகவும் அந்த அமைப்புகளின் நோக்கம் மற்றும் பணிகளை ஆய்வு செய்வதாகவும் இருந்தது. ஒருமுறை ஒப்புதல் அளித்துவிட்டால், பவர் ஃபார் ஒன் அவர்களை தங்கள் ஆளுகைக்குள் எடுத்துக்கொள்ளும். பிரச்சனைகள், தீர்வுகள், பாதிப்புகள் மற்றும் நிதியைப் பயன்படுத்துதல் பற்றி விவரிக்கும்.

முதலில் நன்கொடைகள் பவர் ஃபார் ஒன்னை வந்தடையும். பிறகு அவர்களுக்கு நோடல் கணக்கு மூலம் வாரம் அல்லது மாதக்கணக்கில் பயனாளி அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. பவர் ஃபார் ஒன்ஸ் 800 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரை வைத்திருக்கும்.

நிதி திரட்டுவதற்கான வழியாக சேவைகளுக்கு ஆதரவு அளிப்பதை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? “ஏனெனில் பெரும்பாலானவர்கள் அதற்காக போராடுகிறார்கள்” என்கிறார் மிஹிர். “நாங்கள் பயனாளிகளுக்கு சமூகவலைதளங்களில் வெறுமனே சேவைகள் பற்றி பகிர்வதன் மூலம் அவர்களுக்கும் ஒரு வாய்ப்பைத் தருகிறோம். ஒவ்வொரு பகிர்வுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 50 ரூபாய் பெறுகின்றன. எங்களிடம் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இருக்கின்றன. அவை தனிப்பட்ட சேவைகளுக்கும் உதவுகின்றன” என்றும் கூறுகிறார் அவர்.

மிலாப்பின் பணி சற்று வேறுபட்டது. “மிலாப் பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்குகிறது. அதேசமயம் நாங்களோ அறக்கட்டளை நன்கொடைகளை வழங்குகிறோம்” என்று விளக்கம் தருகிறார்.

தங்களுடைய வடிவம், கடன் சார்ந்த உதவியைவிட கூடுதல் வெளிப்படைத் தன்மையுடனும் தெளிவுடன் இருப்பதாக பவர் ஃபார் ஒன் கூறுகிறது. “சர்வதேச அளவில் கிவா போன்ற தளங்கள் சமூக காரணங்களுக்காக கடன் பெற்றுத்தருகின்றன. அவர்கள் கடன் வழங்குபவர்களுக்கும் கடனாளிகளுக்கும் இடையே நேரடியான தொடர்பை ஏற்படுத்துவதில்லை. முந்தையவர்களிடம் இருந்து குறைந்த வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள். ஒருவர் லாவோஸில் இருந்துகொண்டு அமெரிக்காவில் இருக்கும் ஒருவருக்கு பணம் அனுப்ப நினைப்பதை செயல்முறையில் நடைமுறைப்படுத்துவது கடினம்” என்கிறார்.

image


“இது மிகவும் சிக்கலானது, நாங்கள் அதிலிருந்து விலகியிருக்கவேண்டும். பணத்தை மற்றவர்களுக்கு வழங்க நினைப்பவர்களுடன், தேவைப்படுபவர்களை மிக எளிமையாக இணைத்து வைத்துவிடுகிறோம்” என்று சொல்கிறார் மிஹிர்.

நன்கொடையாளர்கள் எந்த சமூக காரணங்களுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்திருக்கிறார்களோ அத்துடன் நிரந்தரமான இணைப்பை பவர் ஃபார் ஒன் ஏற்படுத்திவிடுகிறது. ஆனால் அது எளிதான காரியமல்ல. “நிறைய வசதிகள் பெற்றவர்கள் வாய்ப்பற்றவர்களுக்கு ஏதாவது கொடுக்க நினைப்பது சகஜம்தான். ஆனால் நாங்கள் அதற்குள் ஒரு சிறு அர்ப்பணிப்பைச் சேர்த்துவிடுகிறோம். அது கொஞ்சம் கடினமானது” என்று விளக்கமாகப் பேசுகிறார் மிஹிர்.

இந்த குறிக்கோளைத் தொடரவும் தொடர்புப் பணிகளை உயர்த்தவும் பவர் ஃபார் ஒன், சமூகவலைதளங்களைப் பயன்படுத்துகிறார்கள். “நாங்கள் இந்த உறவை சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி பலப்படுத்துகிறோம். அதாவது இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்றவற்றில் அந்த அமைப்பின் வளர்ச்சி பற்றிய அறிக்கைகளை அனுப்பிவைக்கிறோம்” என்று மிஹிர் உற்சாகத்துடன் பகிர்ந்துகொள்கிறார்.

தொடங்கிய ஒரு மாதத்தில் இருந்து, பவர் ஃபார் ஒன் நிறுவனம் பத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஊக்குவித்திருக்கிறது. அடுத்த சில மாதங்களில் 50 முதல் 60 வரையிலான நிறுவனங்களை கைதூக்கிவிடும் திட்டம் வைத்திருக்கிறார்கள். அவர்களில் மிகவும் வெற்றிகரமானது 34 சதவிகிதம் அவர்களின் உறுதிமொழியை உயர்த்தியுள்ளனர். மேலும், அதிகம் வெற்றியடைந்த ஸ்டார்ட் அப் தொழில் நிறுவனங்கள் மொபைல் சார்ந்தே (mobile oriented) இயங்குகின்றன. ஆனால் பவர் ஃபார் ஒன், டெஸ்க்டாப் நிதி திரட்டும் தளங்களை போல் இல்லாமல் வேறுபட்ட பாதையில் செல்கிறது. “நாங்கள் சமூகக் காரணங்களுக்கான வெடிமருந்தாக இருக்க விரும்புகிறோம்” என்று சிரிக்கிறார் மிஹிர்.

image


இந்தக் குழு இன்னும் பணிகளுக்கான விளைவுகளில் உறுதியாக இல்லை. ஆனால் எல்லாமும் கற்கும் நிலையில் உள்ளன என்றும் கூறுகிறார். வேறுபட்ட சமூகக் காரணங்களுக்கு வெளிச்சம் தரும்போது சந்தேகமின்றி அது உயர்வானதாக இருக்கிறது. அது அவர்களுடைய தனித்தன்மையை தணிக்கும் சிக்கலில் பயணிக்கிறது. ஒவ்வொருவருடைய தனித்துவமும் வெளிப்படையாக தெரியாத நிலையில், சமூக வலைதளங்கள், அவரவர்களுக்குரிய அந்த வேறுபாட்டை ஏற்படுத்துகின்றன. 

image


பவர் ஃபார் ஒன் குழுவினர் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், பேஸ்புக் மற்றும் டிவிட்டரை பயன்படுத்தி, நிறுவனத்திற்குள் ஒரு பகிர்ந்துகொள்ளும் பண்பாட்டை வளர்த்தெடுக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு சமூக காரணிகளின் குணாம்சங்களையும் அடையாளம் கண்டு, அவற்றிற்கு ஒப்புதல் அளிக்கமுடிகிறது.

இணையதள முகவரி: Power For One

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags