பதிப்புகளில்

ஸ்மைல் பிளீஸ் என சொல்லும் ஸ்மார்ட் மிரர்!

புன்னகைத்தால் மட்டுமே உயிர் பெற்று முகம் காட்டும் உணர்வுப் பூர்வமான நவீன கண்ணாடியை வடிவமைத்து வியக்க வைத்திருக்கிறார் ஒரு இளம் வடிவமைப்பாளர்!

23rd Jul 2018
Add to
Shares
27
Comments
Share This
Add to
Shares
27
Comments
Share

ஸ்மைல் பிளீஸ் என்பது புகைப்படம் எடுப்பதற்கு முன், காமிரா கலைஞர்கள் தவறாமல் சொல்லும் வார்த்தைகள். இந்த இரண்டு வார்த்தைகளை ஒரு கண்ணாடி சொன்னால் எப்படி இருக்கும்? இப்படி ஒரு புதுமை கண்ணாடியை அமெரிக்க வடிவமைப்பாளர் பெர்க் இல்ஹன் (Berk Ilhan) உருவாக்கியிருக்கிறார்.

அவர் உருவாக்கியிருக்கும் கண்ணாடி பேசும் கண்ணாடி அல்ல: ஆனால் அதன் முன் போய் நிற்கும் ஒவ்வொரு முறையும் அது பேசாமல் பேசுவதை உணரலாம். ஆம், அந்த கண்ணாடி முகம் பார்க்கும் கண்ணாடி என்றாலும், அதில் சாதாரணமாக முகம் பார்த்துவிட முடியாது. அதன் முன் புன்னகைத்தால் மட்டுமே முகம் பார்க்க முடியும். இதுவே அதன் சிறப்பம்சம்.
image


இணைய உலகில் தற்போது அதிகம் பேசப்படும் தொழில்நுட்பங்களில் முக உணர்வு (facial recognition) தொழில்நுட்பமும் முக்கியமானதாக இருக்கிறது. முக அசைவுகளை காமிரா மூலம் உணர்ந்து மென்பொருள் மூலம் அலசி ஆராய்ந்து செயல்படும் இந்த தொழில்நுட்பம் பலவித பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பல கண்காணிப்பு சமூகம் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் திகிலானவையாகவும் இருக்கின்றன.

ஆனால், அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த இளம் வடிவமைப்பாளரான பெருக் இல்ஹன், அடிப்படையில் தொழில்நுட்பத்தை மனித நேயத்தோடு அணுகுபவராக அறிய முடிகிறது. அதனால் தான் அவர் முக உணர்வு தொழில்நுட்பத்தை உணர்வு பூர்வமாக பயன்படுத்தி புன்னகைக்கும் கண்ணாடியான ஸ்மைல் மிரரை உருவாக்கியிருக்கிறார்.

இந்த கண்ணாடி, வழக்கமான முகம் பார்க்கும் கண்ணாடியோடு, நவீன காமிரா மற்றும் ஒரு பிராசஸரை கொண்டுள்ளது. கண்ணாடிக்கு பின்னணியில் இருக்கும் இந்த காமிரா மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மென்பொருளிலும் தான் விஷயமே இருக்கிறது. ஏனெனில் கண்ணாடியை இயக்குபவையே இவை தான்.

ஏற்கனவே சொன்னது போல், இந்த கண்ணாடியில் முகம் பார்க்க வேண்டும் எனில், இதன் முன் நின்று புன்னகைக்க வேண்டும். இப்படி தன் முன் இருப்பவர்கள் புன்னகைக்கும் போது, காமிரா முக உணர்வு நுட்பம் மூலம் அதை கிரகித்துக்கொண்டு, கண்ணாடியை கண் விழிக்க அனுமதிக்கிறது. உடனே அதில் பார்ப்பவரின் உருவம் தோன்றும். மற்றபடி இந்த கண்ணாடியில் முகம் பார்க்க முடியாது.

சிலருக்கு, கண்ணாடி முன் நின்று புன்னகைத்து பார்க்கும் வழக்கம் உண்டு அல்லவா? இந்த கண்ணாடியோ புன்னகைத்தால் மட்டுமே முகம் காட்டும்.

புன்னகைக்கும் முகத்தை காணும் போது உருவம் காட்டும் உணர்வுள்ள கண்ணாடி இது என்று தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார் இல்ஹன். கண்ணாடியை பார்த்து புன்னகைக்கும் போது, ஏற்படக்கூடிய ஆச்சர்ய உணர்வை உண்டாக்கி, உற்சாகமான தனிப்பட்ட இயக்கத்தை அளிப்பதே இதன் நோக்கம் என்கிறார் அவர்.

விளையாட்டுத்தன்மை கொண்டிருந்தாலும் இல்ஹன் இந்த கண்ணாடியை வேடிக்கையாக உருவாக்கிவிடவில்லை. புன்னகைக்கும் பழக்கத்தை பரவலாக்குவதே அவரது நோக்கம். சிரித்த முகத்துடன் இருப்பதால் ஏற்படக்கூடிய சுய நன்மைகள் குறித்து உளவியல்ரீதியாக அறிந்து கொண்டதன் அடிப்படையில் இந்த கண்ணாடியை உருவாக்கி இருக்கிறார்.

image


சிரித்த முகம் கொண்டிருப்பது பல்வேறு நல்ல விளைவுகளை உண்டாக்குவதாக உளவியல் ஆய்வுகள் தெரிவிப்பதையும் தனது தளத்தில் இவர் மேற்கோள் காட்டியிருக்கிறார். இந்த பழக்கம், மனநிலையை மேம்படுத்தி, மன அழுத்தத்தை குறைப்பதாகவும் கருதப்படுகிறது.

நிஜ வாழ்க்கையில் இந்த சித்தாந்ததை பரப்பும் வகையில் செயல்பட்டு வரும் புதுமை மருத்துவர் பேட்ச் ஆடம்சை ஊக்கமாகக் கொண்டு இதை உருவாக்கி இருப்பதாகவும் இல்ஹன் கூறுகிறார். கடந்த ஆண்டு இந்த கண்ணாடியை புற்றுநோயாளிகளை மனதில் கொண்டு அவர் அறிமுகம் செய்தார். நோயால் அவதிப்பட்டு வரும் மனிதர்களை புன்னகைக்க வைப்பதற்காக இந்த ஸ்மைல் மிரரை உருவாக்கினார்.

தற்போது இந்த கண்ணாடியை அனைவருக்குமான திட்டமாக அறிமுகம் செய்திருக்கிறார். இந்த புதுமை கண்ணாடியை நண்பர்களுக்கு பரிசளிக்கலாம். மருத்துவமனைகள், பூங்க்காகள், நகர்புற இடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் காட்சிக்கு வைத்து புன்னகை மந்திரத்தை பரப்பலாம்.

புன்னகைக்கும் முகத்தைவிட மகிழ்ச்சியானது வேறில்லை எனும் கருத்தை பரவச்செய்து, மகிழ்ச்சியான முகங்களை மலரச்செய்வதை இந்த கண்ணாடி நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த புதுமை கண்டுபிடிப்பிற்காக சிறந்த வடிவமைப்பிற்கான விருதையும் இல்ஹன் பெற்றிருக்கிறார்.

வடிவமைப்பில் மனிதநேயம், பரிவு, தொழில்நுட்ப உற்சாகம் எல்லாம் கலந்திருக்க வேண்டும் என்று கூறுபவர் வேறு பல புதுமையான வடிவமைப்புகளையும் உருவாக்கியிருக்கிறார். இவற்றில் பல சிறந்த வடிவமைப்பிற்கான விருது பெற்றவை. பயனாளிகளை படி ஏறிச்செல்வது போன்ற உடற்பயிற்சி சார்ந்த செயல்களில் ஈடுபட வைக்கும் விளையாட்டுத்தன்மை கொண்ட ஸ்மார்ட்போன் செயலி உள்ளிட்டவை இதில் அடங்கும். ஸ்மார்ட் ஹோம் சாதனத்தை நவீன விளக்குடன் இணைத்து குளியல் அறையில் செயல்படும் அவசர கால எச்சரிக்கை சேவையையும் இவர் உருவாக்கி இருக்கிறார்.

முதன்மை ஆய்வுக்கு பிறகு ஒட்டுமொத்த நோக்கில் பொருட்களை வடிவமைப்பதாக கூறும் இவரது வடிவமைப்புகள் மற்றும் அதன் பின்னே உள்ள மனிதநேய தொழில்நுட்ப கருத்தாக்கங்களை அறிந்து கொள்ள அவரது இணையதளத்தை நாடலாம்; http://www.berkilhan.com/about/

Add to
Shares
27
Comments
Share This
Add to
Shares
27
Comments
Share
Report an issue
Authors

Related Tags