பதிப்புகளில்

மருத்துவப் பிரிவில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் மெட்லைஃப்

21st Dec 2017
Add to
Shares
30
Comments
Share This
Add to
Shares
30
Comments
Share

துஷார் குமார், பிரஷாந்த் சிங் இருவரும் இணைந்து 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் ‘மெட்லைஃப்’ (Medlife) என்கிற ஸ்டார்ட் அப்பை துவங்கினர். பெங்களூருவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் உடல்நலப் பராமரிப்புப் பிரிவில் செயல்பட்டு ஹெல்த்கேர் டெலிவரி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. இந்த ஸ்டார்ட் அப் 30 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியுள்ளது.

உடல்நலப் பராமரிப்பு சேவையை பெற விரும்புவோரின் மிகப்பெரிய கவலையே சரியான சேவையளிப்போரை கண்டறிவதுதான். சிறப்பு மருத்துவர்கள், நோய் கண்டறியும் மையம், மருந்துகள் வாங்குமிடம் போன்றவற்றில் சரியான இடத்தை கண்டறிவது பலருக்கு சவாலாகவே உள்ளது. இப்படிப்பட்ட சேவைகளைத் தனது வயதான பெற்றோருக்கு பெறுவதில் பல சிரமங்களை சந்தித்தார் 38 வயதான துஷார் குமார். இதற்கு தீர்வுகாண எண்ணி உருவாக்கியதுதான் மெட்லைஃப்.

இவரது பெற்றோருக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை வாங்குவதற்காக பல மருந்து கடைகளில் தேடி அலைந்துள்ளார் துஷார்.

”ஒரு முறை தேவையான மருந்துகளை வாங்குவதற்காக 40 கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு மருந்து கடைக்குச் செல்ல நேர்ந்தது. அப்போதுதான் இந்தச் சந்தையில் ஒரு மிகப்பெரிய இடைவெளி இருப்பது அவருக்குத் தெளிவானது,” என்கிறார்.

வெளிநாட்டில் சிறிது காலம் தங்கியிருந்தபோது இந்திய சந்தையில் காணப்படும் தொடர்பின்மை அவருக்கு புரிந்தது. வெளிநாடுகளில் மருத்துவர்களை ஆலோசிப்பது முறையாக நிர்வகிக்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும். ஆலோசனைக்கான முறை எப்போது வரும் என்பதை ஆன்லைனில் கண்காணிக்கும் வசதி இருந்தது.

மருத்துவர் அளிக்கும் மருந்துச் சீட்டு மின்னனு வடிவில் இருப்பதால் பேப்பர் பயன்பாடு இல்லை. மருந்துகளின் இருப்பு எந்த மருந்துக் கடையில் உள்ளது என்பதும் தெரியப்படுத்தப்படும் என்றார்.

”என்னுடைய மருந்துகள் அனைத்தும் மருந்துகடையில் பேக் செய்யப்பட்டு தயாராக இருக்கும். நான் சென்று பெற்றுக்கொள்ளவேண்டிய பணி மட்டும்தான்,” என்றார் துஷார்.
image


முரண்பாடு

இந்த முரண்பாடுதான் இந்திய ஹெல்த்கேர் சுற்றுச்சூழலில் மாற்றம் தேவை என்பதையும் அதை தொழில்நுட்பத்தின் உதவியுடன் மட்டுமே சாத்தியப்படுத்தமுடியும் என்பதையும் துஷாருக்கு உணர்த்தியது. 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் தனது நண்பர் பிரஷாந்த் சிங் உடன் இணைந்து ’மெட்லைஃப்’ நிறுவனத்தை நிறுவினார்.

மெட்லைஃப் ஒரு ஹெல்த்கேர் தளம். இந்தத் தளம் உடல்நலப் பராமரிப்பு சார்ந்த சேவை வழங்கப்படும் முறையில் இருக்கும் பற்றாக்குறைகளை தொழில்நுட்பத்தின் மூலம் தீர்த்துவைப்பதில் கவனம் செலுத்துகிறது. உடல்நலப் பராமரிப்பு சேவை பெற விரும்புவோர் அது தொடர்பான அனைத்து விதமான சேவைகளையும் அணுக உதவும் வகையிலான ஒரு தளத்தை வழங்க விரும்பினோம் என்றார் துஷார். அதாவது கிளினிக் செல்லுதல், மருந்துச் சீட்டுகளை பதிவுசெய்து சேமித்து வைத்தல், ஆன்லைனில் மருந்துகளை ஆர்டர் செய்து டெலிவரி பெறுதல், மருத்துவர்களுடன் மின்னணு வாயிலான ஆலோசனை, நோய்கண்டறியும் சோதனைகளை திட்டமிடல் உள்ளிட்ட சேவைகளை வழங்க விரும்பினார்.

மருந்துக்கடையைத் தாண்டிய வளர்ச்சி

ஆரம்பத்தில் மெட்லைஃப் சரக்கு அடிப்படையிலான மின் மருந்துக்கடை பிரிவிலும் மருத்துவர்கள் டிஜிட்டல் வாயிலாக நோயாளியின் தரவுகளை நிர்வகிக்கவும் சேமிக்கவும் உதவும் வகையிலும் செயல்பட்டனர். எனினும் அதன் பின்னர் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை, ஆரோக்கியம் சார்ந்த தயாரிப்புகள், ஆய்வு சேவை உள்ளிட்ட சேவைகளை வழங்கத் துவங்கினர்.

தற்போது இந்த மூன்று சேவைகளையும் பெறுவதற்கு வாடிக்கையாளர்களே நேரடியாக கையாளும் வகையிலான ஒரே செயலியை மெட்லைஃப் உருவாக்கியுள்ளது. மருத்துவர்கள் நோயாளி குறித்த தகவல்களை ஆன்லைனில் செயலி வாயிலாக பதிவு செய்து சேமித்து வைக்க இந்தத் தளம் உதவுகிறது.

எனினும் ஆரம்பத்தில் மருத்துவர்கள் தரப்பிலிருந்தும் நோயாளிகள் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு இருந்தது. மின் மருந்தகம் என்கிற முறை புதிதாக இருந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் தயங்கினர். எனினும் மக்களுக்கு விவரித்து புரியவைத்ததும் மெட்லைஃப் சேவையை ஏற்றுக்கொள்ளத் துவங்கினர்.

ஒரு சம்பவம் குறித்து துஷார் விவரிக்கையில்,

“ஒரு முறை பார்ட்னர் மருத்துவரின் ஆலோசனை பெற வந்திருந்த 80 வயது பெண்மனி ஒருவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. மருத்துவரை ஆலோசிக்க வரும்போது பழைய மருந்து சீட்டை எடுத்து வர மறந்துவிடுவதாகவும் இதனால் சிகிச்சைக்கான ஆலோசனை வழங்குவதற்கு மருத்துவருக்கு குழப்பம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். ஆனால் இன்று மெட்லைஃப் இந்தப் பணியை பார்த்துக்கொள்கிறது. மருத்துவர் எலக்ட்ரானிக் ஃபைலில் மருந்துச் சீட்டை பார்த்துக்கொள்ளலாம். நோயாளிக்கு சரியான நேரத்தில் மருந்துகள் வீட்டில் டெலிவர் செய்யப்படும்.”

சவால்களை எதிர்கொள்ளுதல்

மருத்துவர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது குறித்து அவர் விவரிக்கையில் மருத்துவர்கள் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றார். ஆகவே மருத்துவர்கள் பணியை எளிதாக்கும் வகையில் நோட்பேட் கொண்டு குறிப்புகளை எழுதிக்கொள்வது போன்ற ஒரு ப்ராடக்டை மெட்லைஃப் உருவாக்கியது.

”எங்களது ப்ராடக்டைக் கொண்டு தரவுகளை சேகரித்து அதை முழுமையாக டிஜிட்டைஸ் செய்வோம். இதனால் மருத்துவரும் நோயாளிகளும் மின் வடிவில் தரவுகளை பதிவிட்டு சேகரித்து முக்கியத் தேவையெழும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்,” என்றார் துஷார்.

தற்போது ப்ளேஸ்டோரில் மெட்லைஃப் செயலி 4,50,000 பதிவிறங்கள் செய்யப்பட்டுள்ளது. 1,200-க்கும் அதிகமான மருத்துவர்கள் செயலியை பயன்படுத்திவருவதாகவும் குழுவினர் தெரிவிக்கின்றனர். ஒரு மாதத்திற்கு அனைத்து சிறப்பு பிரிவுகளிலிருந்தும் 250 முதல் 300 மருத்துவர்கள் புதிதாக இணைகின்றனர். 

”தற்சமயம் இந்த ப்ராடக்டை ஐந்து நகரங்களில் மட்டுமே வழங்கி வருகிறோம். அடுத்த நிதியாண்டிற்குள் 30 நகரங்களில் செயல்பட திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

துஷார், பிரஷாந்த் தவிர முக்கியக் குழுவில் வங்கி மற்றும் ஆயுள் காப்பீட்டுத் துறையில் 14 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமிக்க சௌரப் அகர்வால், 14 ஆண்டுகளுக்கும் கூடுதலான தொழில்நுட்ப மேலாண்மை அனுபவமிக்க சௌரப் மிட்டல், செயல்பாடுகள் மற்றும் வணிகங்களை உருவாக்குவதில் 17 ஆண்டுகால அனுபவமிக்க ரகுனந்தன் ஸ்ரீநிவாசன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

சந்தை

இந்திய மருந்துத் துறை தற்போது 15 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட சந்தையாகும். தேவையை பூர்த்திசெய்வதில் குறைவான திறன், டெலிவரியில் தாமதம், காலாவதியான மற்றும் போலி மருந்துகள் போன்றவை இந்தத் துறையில் காணப்படும் சில பிரச்சனைகளாகும். ஒழுங்குமுறை சார்ந்த சவால்கள் இருப்பினும் மருந்துத் துறை குறிப்பிடத்தக்க அளவு வளர்ந்து வருகிறது.

இந்தப் பிரிவில் மேட்ரிக்ஸ் (Matrix) நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படும் மைரா (Myra) நேரடியாக தயாரிப்பாளர்களிடமிருந்து மருந்துகளை வாங்கி கிடங்கில் சேமித்து அங்கிருந்து மருந்துகளை டெலிவர் செய்கிறது. மெட்லைஃப் ஹெல்த்கேர் சுற்றுச்சூழலின் வெவ்வேறு அம்சங்களை ஒருங்கிணைப்பதால் Sequoia ஆதரவுடன் செயல்படும் ப்ராக்டோ (Practo), 1 எம்ஜி நிறுவனங்களுடனும் சமீபத்தில் சீரிஸ் பி நிதியாக 16 மில்லியன் டாலர் உயர்த்திய Bessemer ஆதரவுடன் செயல்படும் ஃபார்மாஈஸி (PharmaEasy) நிறுவனத்துடனும் போட்டியிடுகிறது.

தனிச்சிறப்பு

மருத்துவர்கள், நோயாளிகள், ஆய்வகங்கள், மருந்தகங்களை அனைத்தையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கும் ஒரு முழுமையான ஹெல்த்கேர் தொகுப்பை வழங்குகிறது மெட்லைஃப் என்கிறார் துஷார். அக்டோபர் மாதம் வரை மெட்லைஃப் கிட்டத்தட்ட 1,200 மருத்துவ க்ளினிக்குகளை தளத்தில் கொண்டுள்ளது. 

"எங்களது சொந்த சரக்கு இருப்பைக் கொண்டு எங்களது மின் மருந்தகத்தில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறோம். தற்போது இருபதுக்கும் மேற்பட்ட நகரங்களில் எங்களது பதிவுசெய்யப்பட்ட மருந்தகங்கள் உள்ளன. அத்துடன் நோய் கண்டறியும் பகுதியில் சாம்பிள் சேகரிப்பதன் வாயிலாகவும் வருவாய் ஈட்டுகிறோம். எங்களது தற்போதையை ரன் ரேட் 190 கோடி ரூபாய். ஒவ்வொரு மாதமும் 20 சதவீதம் வளர்ச்சியடையும் நிலையிலும் நிதியாண்டை நிறைவு செய்கையில் 300 கோடி ரூபாய் வருவாயை எட்டுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.”

தனிப்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து இந்நிறுவனம் 30 மில்லியன் டாலர் உயர்த்தியுள்ளது. 2018-ம் ஆண்டில் நிறுவன அளவில் லாபகரமாக இயங்க தயாராகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

தீவிர விரிவாக்க உத்திகளைக் கொண்டு 2018-ம் ஆண்டில் 100 நகரங்களில் செயல்பட விரும்புவதாக இக்குழுவினர் தெரிவிக்கின்றனர். சிறப்பான வாடிக்கையாளர் அனுபவத்தை உருவாக்கவும் நோய்கண்டறிதல் மற்றும் ஆலோசனை போன்ற பிரிவுகளில் விரிவடையவும் தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

எதிர்கால திட்டம் குறித்து துஷார் குறிப்பிடுகையில்,

”நாடு முழுவதும் ஃப்ரான்சைஸ் மாதிரி வாயிலாக நேரடியாக விற்பனை செய்யும் மருந்துக்கடைகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம். கொல்கத்தாவில் முதல் கடையை நிறுவ பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அடுத்த மூன்று மாதங்களில் இது முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட கால அடிப்படையில் நோயாளிகளின் பிரச்சனைகளில் கிட்டத்தட்ட அனைத்திற்கும் தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரு எளிமையான சுற்றுசூழலை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.”

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப்

Add to
Shares
30
Comments
Share This
Add to
Shares
30
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக