பதிப்புகளில்

அமெரிக்க மண்ணில் கால் பதித்து தொழில் சாம்ராஜ்யத்தை கட்டமைத்த படேல் பிரதர்ஸ்!

YS TEAM TAMIL
6th Mar 2018
Add to
Shares
16
Comments
Share This
Add to
Shares
16
Comments
Share

1968-ல் 23 வயதான மஃபத் படேல் தன் வீட்டு வாசலில் தேடி வந்த பொன்னான வாய்ப்பினால் தன் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்தார். எம்பிஏ படிக்க இந்தியானா பல்கலைகழகத்தில் விசா கிடைத்த செய்தி வந்தது அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.  

ஆறு சகோதரர்களுடன் குஜராத் மாநிலத்தில் மெஹ்சானா என்னும் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் மஃபத் வளர்ந்தார். பதனில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தார். தனது எம்பிஏ-வை முடித்ததும் சிகாகோவிற்கு குடிபெயர்ந்தார். அங்கே குடிபெயர்ந்த பல இந்தியர்களை சந்தித்தார். அவர்களுக்கு பிடித்த இந்திய உணவு அன்னிய நாட்டில் கிடைக்காததை உணர்ந்த அவர் இந்திய உணவின் தேவைப் பற்றி தெரிந்து கொண்டார்.

image


1971-ல் ரமேஷ் திருவேதி என்ற நண்பர் மஃபதிடம் ஒரு உணவு சம்மந்தமான தொழில் ஐடியாவுடன் வந்தார். நல்ல ஒரு வாய்ப்பை பார்த்த மஃபத் தன் சகோதரர் துல்சி மற்றும் மனைவி அருணாவின் உதவியை நாடினார். Quartz மீடியா செய்தியின் படி, மூன்று ஆண்டுகளில் அவர் ஒரு இந்திய மளிகைக் கடையை நிறுவினார். செப்டம்பர் 1974, 900 சதுர அடி இடத்தில் காலை 9 முதல் இரவு 9 மணி வரை கடையை நடத்தி தீவிரமாக உழைத்தார். மீதி இருந்த சமயத்தில் சிறு சிறு வேலைகள் செய்தார் படேல்.

இன்று படேல் சகோதரர்கள் 140 மில்லியன் டாலர் சாம்ராஜ்யத்துக்கு சொந்தக்காரர்கள். சிகாகோவில் டேவோன் அவென்யூவில் தொடங்கிய முதல் டிப்பார்ட்மெண்டல் கடையை அடுத்து படேல் ஏர் டூர்ஸ் என்ற ட்ராவல் ஏஜென்சியை தொடங்கினார். சாஹில் என்ற ஆடைகள் பொட்டிக் நிறுவினார். இந்திய திருமணங்களுக்கு அதில் ஆடைகள் தயாரித்தார். படேல் ஹாண்டிகிராப்ட்ஸ் மற்றும் யுடென்சில்ஸ் மற்றும் படேல் கபே என்ற உணவிடம் என்று பலவற்றை நிறுவியுள்ளனர் இச்சகோதரர்கள்.

மூன்று தலைமுறைகள் தாண்டி படேல் பிரதர்ஸ் குழுமம் டெக்சஸ் முதல் கலிபோர்னியா வரை 51 இடங்களில் தன் பிராண்டை நிறுவியுள்ளது.

”குஜராத்தி தொழில் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு அன்னிய மண்ணில் உணவுத்துறைக்கான தேவை இருப்பது தொடக்கத்திலேயே புரிந்தது, என்றார் துல்சி படேல்.

படேல் பிரதர்ஸ் இந்தியர்களின் தேவையை நன்குணர்ந்ததால் இன்று தொழிலில் கொடி கட்டி பறக்கின்றனர். 90-கள் மத்தியில் படேல் சகோதரர்கள் நியூயார்க், ஹூஸ்டன், அட்லாண்டா மற்றும் டெட்ராய்ட்டில் தங்களின் பிராண்டை பிரபலமாக்கினர். 

1991 முதல் அவர்களின் வாரிசுகள் எடுத்து நடத்தும் தொழிலில் ‘ராஜா புட்ஸ்’ என்ற பெயரில் பல உணவுவகைகளை விற்பனை செய்கிறது. ரெடிமேட் சப்பாத்தி, பட்டாணி, சமோசா என்று பல இந்திய உணவுகள் அமெரிக்காவில் அமோக விற்பனை ஆகிறது. த

தற்போது அவர்கள் இந்திய அமெரிக்க மெடிக்கல் அசோஷியேஷன் உடன் சேர்ந்து என்ஜிஓ மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்கிறார்கள். இந்தியாவிலும் சம்வேதனா பவுண்டேஷன் என்ற அமைப்பை நிறுவி 160 வீடுகளை இலவசமாக அளித்துள்ளார்கள். ஒரு பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவமனையையும் குஜராத் நிலநடுக்க பாதிப்பாளர்களுக்காக நிறுவியுள்ளனர்.

கட்டுரை: Think Change India 

Add to
Shares
16
Comments
Share This
Add to
Shares
16
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக