பதிப்புகளில்

ஸ்டார்டப் ஸ்போர்ட்ஸ் லீக்..! மோதி விளையாட நீங்க தயாரா ?

யுவர்ஸ்டோரி-Playo இணைந்து நடத்தும் ஸ்டார்ட்-அப்’களுக்கான விளையாட்டு போட்டிகள்!

25th Jan 2018
Add to
Shares
15
Comments
Share This
Add to
Shares
15
Comments
Share

தொழில் எவ்வளவு பெரிதாக சிறிதாக இருப்பினும், அதில் போட்டி என்ற ஒன்று எப்போதும் உண்டு. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, மற்றவரோடு போட்டி போட்டுகொண்டு, யாருடைய தரம் சிறந்ததாக உள்ளது? யார் சந்தையில் முதலிடத்தில் இருக்கிறார்கள் என சதா சர்வகாலமும் சிந்தித்து கொண்டிருக்கின்றோம். அப்படி இருக்க தொழில்முனைவோருக்கும், பெருநிறுவனங்களில் பணிபுரிவோருக்கும் கண்டிப்பாக சூழல் பழக்கமானதாக இருக்கும்.

எத்துனை தூரம் தாக்குபிடிக்க இயலும்? எத்துனை தூரம் அயராது, கண் இமைக்காது, திசை மாறாது, இலக்கை நோக்கி பயணிக்க இயலும்? இவை அனைத்தும் உங்கள் அலுவலங்கங்களில் அல்ல, மைதானங்களில் பரிசோதிக்கப்படும்.

யுவர் ஸ்டோரி-ப்ளேயோ ஸ்டார்டப் ஸ்போர்ட்ஸ் லீக்-ன் இரண்டாவது சீசனுக்கான நேரம் இது. தொழில்முனையும், பெருநிறுவனங்களில் கசக்கி பிழியப்படும் உங்களது மூளைகளுக்கு சிறிது ஓய்வாக விளையாட வேண்டிய களமிது. அணியாகவும் பங்கு பெறலாம். தனியாக துணையோடும் பங்கு பெறலாம். முடிவெடுக்கும் திறனுக்கு சரியான தீனி காத்துள்ளது.

image


வீரனுக்கு உரிய குணங்களை கொண்டாடுதல் :

இந்நிகழ்ச்சி விளையாடுபவர்களுக்கு மட்டும் அல்ல, விளையாட்டை விளையாட என்ன தேவை, ஒவ்வொரு வீரனும் கடந்து வரும் பாதை என்ன, களத்தில் விதிகள் என்ன விளையாட்டு வீரனுக்கு உரிய குணங்கள் என்ன என்பதை அறிந்துள்ள எவரும் இதில் பங்கு பெறலாம்.

முதலீட்டாளராக இருக்கலாம், தொழில்முனைவில் வேலைபார்ப்பவராக இருக்கலாம், பெருநிறுவனம் உங்களது இருப்பிடமாக இருக்கலாம். ஆனால் இங்கு அனைவரும் ஒன்றே. விளையாட்டை போற்றும் வீரர்கள்.

என்ன எதிர்பார்க்கலாம்?

2 நாட்கள் எதிர்பார்க்காத பல விஷயங்கள் உங்களுக்கு காத்திருக்கின்றன. மகிழ்ச்சி, சோகம், கோவம், என அனைத்து உணர்ச்சிகளையும் வெளிக்கொணரும் வண்ணம் விளையாட்டுகள் உள்ளன. ஒரு அணியாக பங்குபெறலாம். அல்லது ஒரு துணையோடு பங்குபெறலாம்.

கூடைப்பந்து 3க்கு 3:

5வருக்கு பதில் மூவர் விளையாடும் கூடைப்பந்தாட்டம் இது. பந்தினை எதிரிகளிடம் சிக்காது கடத்தி, உயர்த்தி எவ்வாறு வெல்ல போகின்றீர்கள்?

பூப்பந்தாட்டம் :

சாய்னா நேவாலுக்கு சவால் விடும் அளவிற்கு திறமை உள்ளது. பீ வி சிந்துவாக சிதறடிக்க இயலுமா எதிர் அணியா நீங்கள்? களம் காத்துக்கிடக்கின்றது.

எறிபந்து 4க்கு 4 :

இது கலப்பு இரட்டையர் ஆட்டம். ஒவ்வொரு அணியிலும் 2 ஆண்கள் 2 பெண்கள் இருப்பார்கள். எந்த இடம் யாருக்கு சிறந்தது என்பதை முடிவு செய்து களம் காணுவது நலம்.

கால்பந்து 5க்கு 5:

இரு அணியிலும் 5 பேர் இருப்பார்கள். அலுவலகத்தில் நீங்கள் பாஸாக இருந்தாலும், இவ்விளையாட்டில் பாசாக சிறிது திறமை வேண்டும் பாஸ் பண்ணுவதில். குறி பார்த்து பந்தை உதைக்க முடிந்தால் இங்கு நீங்கள் களம் காணலாம்.

மட்டைப்பந்து 6க்கு 6:

மீனுக்கு நீந்த கற்று தருவதும் கிரிக்கட் பற்றி இந்தியர்களுக்கு கற்றுத்தருவதும் ஒன்று. நேரம் வீண். எனவே 6 பேர் ஒரு அணியாக பௌன்சர் வீசத் தயாராகுங்கள்.

சிறப்பு நிகழ்வுகள் :

விளையாட்டுகள் வேண்டாம். ஆனால் விளையாட பிடிக்கும் என நீங்கள் கூறினால் உங்களுக்கு ஏற்ற சில விஷயங்கள் இங்கு உண்டு.

வால் க்லைம்பிங் (சுவர் ஏற்றம்), பெயிண்ட் பால், லேசர் டேக், பௌலிங், கார்ட்டிங், மேலும் கயிறு இழுக்கும் போட்டியும் உண்டு இங்கு (அது இல்லைனா எப்பிடி ?)

கடைசியாக உங்களை பள்ளிப்பருவத்திற்கு அழைத்து செல்ல இங்கு 7 ஸ்டோன்ஸ் விளையாட்டும் உள்ளது. (சந்தேகம் இருந்தால், ஜெயம் ரவி திரிஷா சம்திங் சம்திங் திரைப்படத்தில் ஆடும் விளையாட்டு). மீண்டும் பள்ளிக்கு போகாமலே குழந்தைகளாக மாறும் வாய்ப்பு இது.

நீங்க தயாரா? உங்களுக்கு பிடிச்ச விளையாட்டை விளையாட இந்த சுட்டிய சொடுக்குங்க

உங்க விளையாட்ட நீங்க விளையாடி முடிச்சுட்டு, உங்க அணிக்கு உற்சாக பானத்தோடு உற்சாகம் ஊட்டலாம். மேலும், சில நேரங்களில் அறிவுப்பசிக்கும் உணவளிக்கும் வண்ணம் "பையர் சைடு சாட்", உடலுக்கு வலிமை சேர்க்கும் வண்ணம் உடற்பயிற்சி அமர்வுகள் என அனைத்தும் உண்டு.

தொழில் முனைவோரா அல்லது பெருநிறுவன பணியாளரா என்பது முக்கியம் அல்ல, நீங்க விளையாட்டை விரும்புபவரா? அதுதான் அவசியம்...

உங்கள் குழுவோடு பங்குபெற உடனே விரையுங்கள் பதிவு செய்யுங்கள்.

Add to
Shares
15
Comments
Share This
Add to
Shares
15
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக