பதிப்புகளில்

சாக்லேட் மீதான காதல்! ராஷ்மி வஸ்வானியை தொழில்முனைவராக்கிய கதை!

பொழுதுபோக்காக சாக்லேட் செய்ய துவங்கிய ராஷ்மி வஸ்வானி இப்போது அதையே முழுநேர தொழிலாக செய்கிறார்.

31st Aug 2015
Add to
Shares
70
Comments
Share This
Add to
Shares
70
Comments
Share

அப்போது ராஷ்மி வஸ்வானி, டெல்லி ஐ.எம்.ஐயில் முதுகலை பட்டம் படித்துக்கொண்டிருந்தார்.பெங்களூரில் இருக்கும் அவரது வீட்டுக்கு அவ்வப்போது விடுமுறைக்காக செல்வார். அந்த சமயங்களில் பொழுதுபோக்காக சாக்லேட் செய்வது இவருக்கு வழக்கம், பிறகு இவரது அப்பாவுக்கு அந்த சாக்லேட்டுகள் பிடித்து போகவே அடிக்கடி செய்து அப்பாவை குஷிபடுத்தினார்...

பிறகு இவர் படித்துமுடித்ததும் நிதி ஆலோசனை நிறுவனத்தில் வேலை கிடைத்தது. காலை 9மணியிலிருந்து மாலை 5 மணிவரை பணி. மூன்று மாதத்திலேயே இந்த வேலை போரடிக்கவே, பழையபடி சாக்லேட்டில் கவனம் செலுத்தினார். தீபாவளி சமயத்தில் சின்னதாக ஒரு ஸ்டால் போட்டு விற்று பார்த்தார், மக்களிடம் அது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. "கார்பரேட் ஒன்றுக்கு ஒரே ஒரு பாக்ஸ் சாக்லேட் கொடுத்தோம். உடனேயே அவர்களிடமிருந்து 200 பாக்ஸ் ஆர்டர் கிடைத்தது. இது தான் எங்கள் முதல் கார்பரேட் ஆர்டர்” என்கிறார் பெருமிதத்துடன் இந்த 33 வயது தொழில்முனைவர் ராஷ்மி வஸ்வானி. இவர் ரேஜ் சாக்லேட்டியர்(Rage Chocolatier) என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார்.

நிறுவனங்கள், விழாக்காலங்களில் இனிப்புகளையும், காய்ந்த பழங்களையும் பரிசாக வழங்குவதை போலவே இப்போது சாக்லேட்டுகளையும் பரிசளிக்க துவங்கியிருக்கிறார்கள். ”அவர்கள் பொதுவாகவே நீண்டகாலம் தங்கக்கூடிய வித்தியாசமான, புதுவிதமான பரிசுகளில் ஆர்வம் காட்டுகிறார்கள்” என்கிறார் ராஷ்மி. சாதாரண சாக்லேட்டுக்கும்,வெளிநாட்டு சாக்லேட்டுகளுக்கும் நீண்ட இடைவெளி இருப்பதை கவனித்தார். தன்னுடைய சாக்லேட் தயாரிப்பில் புது யோசனைகளையும் புகுத்தினார்.

குடும்பத்தொழில்

ராஷ்மி டெல்லியில் படித்துக்கொண்டிருந்த போது அவரது சகோதரி சட்டம் படித்துக்கொண்டிருந்தார். இவர் சாக்லேட் செய்யும்போது அவரும் ஆர்வமாக சில உதவிகளை செய்வார். 

"ஒரு நாளைக்கு இது இவ்வளவு பெரிய அளவுக்கு செல்லும் என நாங்கள் யோசித்ததே இல்லை. இன்று நாங்கள் சில்லறை விற்பனைத்துறையின் ஒரு பகுதியில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்”.
ராஷ்மி வஸ்வானி , நிர்வாக இயக்குனர், ரேஜ் சாக்லேட்டியர்

ராஷ்மி வஸ்வானி , நிர்வாக இயக்குனர், ரேஜ் சாக்லேட்டியர்


ராஷ்மி மனிதநேயமிக்கவர். குழந்தைகள் எல்லோருக்குமே சாக்லேட் பிடிப்பதால் அவ்வப்போது தன் குழுக்களோடு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்களுக்கு சென்று சாக்லேட்டை அவர்களுக்கு வினியோகிப்பதை முக்கியமாக கருதுகிறார். சாக்லேட்டுகளை உலகத்தரத்திற்கு ஈடாக வடிவமைத்ததோடு அல்லாமல் சில புதுமையான செய்திகளை உள்ளடக்கி க்ரீட்டிங் கார்டுகளை போன்ற தோற்றத்தில் சாக்லேட்டுகளை அளிப்பதால், "சிலர் இதை க்ரீட்டிங் கார்டு என்று தப்பாக புரிந்துகொண்டு வாங்கி சென்றுவிட்டு, கவரை திறந்து பார்த்த பிறகு தான் சாக்லேட் என்று தெரிந்துகொள்கிறார்கள்” என்கிறார் புன்னகைத்துக்கொண்டே.

இன்று ரேஜ் சாக்லேட்டியர் பெங்களூருவின் மிகமுக்கியமான பகுதி ஒன்றில் கடை துவங்கியிருக்கிறார்கள். இந்த கடையில் சாக்லெட்டுகளை அன்றன்றைக்கு செய்து அன்றே விற்றுவிடுகிறார்கள். இப்போது 12 பேர் வேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “முன்பெல்லாம் நானே சாக்லேட் செய்து கொண்டிருந்தேன், இப்போது என் மேனேஜருக்கும் குழுவுக்கும் வேலையை பகிர்ந்தளித்திருக்கிறேன். இது ஒரு மிகப்பெரிய பொறுப்பு” என்கிறார் ராஷ்மி. இப்போது இந்நிறுவனத்தில் இவரது அம்மா அப்பாவும், இரண்டு உடன்பிறந்தவர்களும் பங்குதாரர்களாகியிருக்கிறார்கள்.

சவால்கள்

"இதை துவங்கிய சமயத்தில் எனக்கு எந்த குறிக்கோளுமே இல்லை. இப்போது இதுவே வணிக மாதிரி(business mode) ஆகியிருக்கிறது. இது சவாலான ஒன்று” என்கிறார். இவர் மார்கெட்டுக்கு வந்த புதிதில் இவருடையதை எல்லோரும் காப்பியடித்துவிடும் ஆபத்திருந்தது. காரணம் இவர் மிக மிக மெதுவாக துவங்கி, மெல்ல நகர்ந்து, இயற்கையான வளர்ச்சியை எட்டியதே.

சாக்லேட் மாதிரிகள்

சாக்லேட் மாதிரிகள்


“ஆரம்பத்தில், சாக்லேட்டின் ஒவ்வொரு பகுதியும் என் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது எல்லாமே பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது என் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்துள்ளது என்பதை புரிந்துகொள்கிறேன்” என்கிறார். கர்நாடக அரசின் சுற்றுலாத்துறையோடு இணைந்த பிறகு, நினைவுச்சின்னங்களை உள்ளடக்கிய சாக்லேட் தயாரிப்பிலும் ஈடுபாடு காட்டத் துவங்கி இருக்கிறார்கள். பிரபலமான நினைவுச்சின்னங்கள், கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற இடங்கள் போன்றவை சாக்லேட் அட்டைகளில் புகுத்தப்பட்டு பன்னாட்டு விமானதளத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த புத்திசாலித்தனமான முறை சுற்றுலாவை பிரபலப்படுத்த உதவியிருக்கிறது.
சமீபத்தில் புதிய கடை ஒன்றை திறந்திருந்தாலும் நிறுவனத்தை உடனடியாக விரிவுபடுத்தும் விருப்பம் இல்லை, வேறு திட்டங்கள் இருக்கிறது என்கிறார் ராஷ்மி. "ஒரு குழந்தை எங்கள் கடைக்குள் நுழைந்து, எங்கள் சாக்லெட்டை முகமெல்லாம் பூசி கொண்டு சாப்பிடுவதை பார்க்கும் போது பூரிப்பு ஏற்படுகிறது. இப்போதைக்கு எங்கள் கவனமெல்லாம் சாக்லேட்டை சரியான நேரத்தில் விநியோகிக்க வேண்டும் என்பதே, இப்போது தொழில் கணிசமாக வளர்ந்திருக்கிறது” என்கிறார் ராஷ்மி. தான் படித்த மேலாண்மை படிப்பு தற்போது உபயோகமுள்ளதாக ஆகியிருக்கிறது என்கிறார்.
நினைவுச்சின்னங்களை உள்ளடைக்கிய புதுவித சாக்லேட்டுகள்

நினைவுச்சின்னங்களை உள்ளடைக்கிய புதுவித சாக்லேட்டுகள்


அவரது ஊக்கம்

தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே ராஷ்மியின் ஊக்கம். ரேஜ் சாக்லேட்டியரை துவங்கியதாலேயே இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இது சிலிர்ப்பாக இருக்கிறது என்கிறார். “என்ன இருந்தாலும் இனிப்பான சாக்லேட்டை யாராவது வேண்டாமென்று சொல்லுவார்களா” என்கிறார் புன்முறுவலுடன்.

யாருக்கெல்லாம் தொழில் தொடங்கும் கனவு இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் இவர் சொல்லும் ஆலோசனை, சிறியதாக துவங்குங்கள் அதிகம் கவனம் செலுத்தி உழையுங்கள் என்பதே. "பொருளின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யாதீர்கள். மார்கெட்டை சோதித்துக்கொண்டே மெல்லமாக வளருங்கள். உங்களிடம் புதிய சிந்தனை இருந்தால் அதை நம்புங்கள். துணிச்சல் இல்லையேல் விளைச்சல் இல்லை” என்று கூறி முடித்துக்கொண்டார்.

Add to
Shares
70
Comments
Share This
Add to
Shares
70
Comments
Share
Report an issue
Authors

Related Tags