பதிப்புகளில்

எஸ்.எம்.எஸ் மார்க்கெட்டிங்கில் வெல்லும் வழிகள்...

16th Mar 2018
Add to
Shares
53
Comments
Share This
Add to
Shares
53
Comments
Share

குறுஞ்செய்தி பிராச்சாரங்கள் மூலம் வாடிக்கையாளர்களை திறம்பட சென்றடைவது எப்படி?

எஸ்.எம்.எஸ் மார்க்கெட்டிங் என்பது வாடிக்கையாளர்களை மொபைல் போன் மூலம் குறுஞ்செய்தி வழியே சென்றடைவதாகும். 2020-ல் உலக மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் மொபைல் போன் வைத்திருப்பார்கள் என கணிக்கப்படும் நிலையில், இலக்கு வாடிக்கையாளர்களை சென்றடைய குறுஞ்செய்திகள் மிகவும் செயல்திறன் வாய்ந்த வழியாக கருதப்படுகின்றன.

image


"வாடிக்கையாளர்களை சென்றடைய மிகவும் தனிப்பட்ட மற்றும் நேரடியான வழியாக எஸ்.எம்.எஸ் மார்க்கெட்டிங் கருதப்படுகிறது."

டிலியோட் அறிக்கையின் படி, வாடிக்கையாளர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் காலையில் கண் விழித்த 5 வது நிமிடத்தில் மொபைல் போனை எடுத்து பார்க்கின்றனர் மற்றும் தனிநபர்கள் ஒரு நாளுக்கு சராசரியாக 50 முறை போனை எடுத்து பார்க்கின்றனர். மேலும் எஸ்.எம்.எஸ் மார்க்கெட்டிங் அதிக கிளிக் செய்யும் விகிதம் மற்றும் குறைந்த செலவு விகிதம் கொண்டுள்ளதால் சலுகைகள் மற்றும் விளம்பரங்களைக் கொண்டு சேர்ப்பதற்கான சிறந்த ஊடகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

சட்டப்பூர்வமான வழிகளில் வாடிக்கையாளர்களின் பிரைவசியை மதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டால் எஸ்.எம்.எஸ் மார்க்கெட்டிங் என்பது பிராண்ட் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சர்வே மூலம் வாடிக்கையாளர்கள் கருத்தறியவும் ஏற்ற வழியாகும்.

எஸ்.எம்.எஸ் மார்க்கெட்டிங் தரும் அணுகூலங்கள்

1. செலவு குறைவானது.

2. நான்கு நிமிடங்களுக்குள் 97 சதவீத குறுஞ்செய்திகள் படிக்கப்படுகின்றன.

3. இமெயில் அல்லது மற்ற ஊடகங்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே இணைப்புகளை கிளிக் செய்யும் நிலையில், குறுஞ்செய்திகளில் வரும் இணைப்புகளை 19 சதவீதம் பேர் கிளிக் செய்கின்றனர்.

4. 30 சதவீத எஸ்.எம்.எஸ் பிரச்சாரங்கள் 30 சதவீத எதிர்வினை விகிதத்தை பெற்றுள்ளன. மற்ற எல்லா ஊடகங்களிலும் அதிகமானது.

வெற்றிகரமான எஸ்.எம்.எஸ் பிரச்சாரத்தை உருவாக்க தேவையான அம்சங்கள்:

1. வாடிக்கையாளர் பகுப்பு

தொலைபேசி அல்லது இமெயில் மார்க்கெட்டிங் போலவே சரியான செய்தி சரியான வாடிக்கையாளரை சென்றடையாவிட்டால் அது ஸ்பேம் என கருதப்படும். வாடிக்கையாளர்கள் வகைப்படுத்துவதன் மூலம் சரியான வாடிக்கையாளர்கள் பொருத்தமான செய்தியை உறுதி செய்யலாம். வாடிக்கையாளர்களின் வாங்கும் வரலாற்றை கவனிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் வசிப்பிடம் பற்றிய தகவல்களை திரட்டுவதன் மூலம் அவர்களை சரியாக குறி வைக்க முடியும்.

2. செய்தி அனுப்பும் நேரம்

எந்த செய்தியையும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் நேரம் முக்கியமானது. உங்கள் செய்தி ஊடுருவும் தன்மை கொண்டதாக இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு அதிகாலையில் ஒருவருக்கு விளம்பர செய்தி அனுப்புவது ஏற்றதல்ல. இ-மெயில்கள் சனிக்கிழமைகளில் சிறந்த பலன்களை அளிக்காமல் போனாலும், குறுஞ்செய்திகள் எதிர்பார்த்த பலனை தரலாம். சரியான நாள் மற்று நேரத்தை கண்டறிய பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட வேண்டும். முதலில் குறிப்பிட்ட நாளில் சோதனை செய்தி அனுப்பி எதிர்வினையை ஆய்வு செய்யவும்.

3. செய்தியின் தன்மை

சரியான செயலுக்கான தூண்டுதல் செய்தியில் இருக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவிலான சலுகை திட்டம் போன்றம் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குல் செயல்படத்தூண்டும் செய்திகளே அதிக பலன் தருகின்றன.

இமெயில் பிரச்சார திட்டங்களில், 24 மணி நேரத்திற்கு பின், அவற்றை திறந்து பார்க்கும் விகிதம் அதிகரிக்கிறது என்றால் எஸ்.எம்.எஸ் செய்திகளில் முதல் 60 நிமிடங்களில் 70 சதவீத செய்திகள் படிக்கப்படுகின்றன. வாடிக்கையாளரின் பெயரை குறிப்பிடுவது போன்ற தனிப்பட்ட முறையிலான செயல்களையும் மறக்க வேண்டாம்.

4. எளிமை

எஸ்.எம்.எஸ் செய்திகள் 160 எழுத்துக்கள் வரம்புகளை கொண்டது. எனவே விஷயத்தை சுருக்கமாக சொல்ல வேண்டும்.

முக்கிய அம்சங்கள்:

அ. தெளிவாக இருக்க வேண்டும்.

ஆ. என்ன செய்ய வேண்டும் என விளக்க வேண்டும்.

இ. கெடு இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தும் செய்திகளை அனுப்ப வேண்டாம். ஸ்பேம்களை அனுப்ப வேண்டாம்.

இது உங்களுக்கான வாய்ப்பே தவிர உரிமை அல்ல. வாடிக்கையாளர் எப்போது வேண்டுமானாலும், வெளியேறும் வாய்ப்பை அளிக்கவும். goo.gl or bit.ly போன்ற முகவரி சுருக்க சேவைகளை பயன்படுத்தவும்.

5. பதில் கருத்துகள்

வாடிக்கையாளர்கள் குறுஞ்செய்தி வந்த முதல் 5 நிமிடங்களில் அதற்கு எதிர்வினை ஆற்றுவதால், 31 சதவீத வாடிக்கையாளர்கள் எஸ்.எம்,எஸ் சர்வேக்களுக்கு பதில் அளிக்கின்றனர். இ-மெயில் செய்திகளை பார்த்தீர்களா என கேட்பதற்கு இதை பயன்படுத்திக்கொள்ளலாம். இமெயில் திறக்கப்படும் வாய்ப்பையும் இது அதிகரிக்கும். பதில் அளிக்காத வாடிக்கையாளர்களை பட்டியலில் இருந்து நீக்கிவிடுவது நல்லது. சலுகையை பெற 6767 எண்ணுக்கு செய்தி அனுப்பவும் அல்லது உங்கள் அபிமான ஆடைக்கு சலுகை பெறுங்கள் போன்ற வாசகங்களை இடம்பெறச்செய்யவும்.

தள்ளுபடிகள், வவுச்சர்கள், விளம்பர திட்டங்கள், முக்கிய தினங்கள் போன்றவற்றுக்கு எஸ்.எம்.எஸ்சை பயன்படுத்தலாம்.

வெற்றிகரமான எஸ்.எம்.எஸ் பிரச்சார திட்டத்தை உருவாக்கும் வழி

வாடிக்கையாளர்கள் கவனத்தை ஈர்க்க உதவும் மூன்று அடுக்குகள்:

a. தகவல் அடுக்கு

b. உணர்வு அடுக்கு

c. கட்டளை அடுக்கு

image


1. முக்கிய வாய்ப்புகள்

காட்பாதர் படத்தில் வரும், அவரால் நிராகரிக்க முடியாத சலுகை வாய்ப்பை முன் வைத்தேன் எனும் வசனம் நினைவில் உள்ளதா? ஒருவரால் நிராகரிக்க முடியாத வகையில் தூண்டுதல் இருக்க வேண்டும் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். இன்றைய வேகமான உலகில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அல்லாத செய்திகளை பெற விரும்புவதில்லை.

2. சலுகை மூலம் தொடர்பு

வாடிக்கையாளர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் துவக்கத்திலேயே சலுகையை சுட்டிக்காட்டி விட வேண்டும். தெளிவான தகவலை நேரடியாக சொல்ல வேண்டும். ஒரு செயலை செய்யத்தூண்ட வேண்டும்.

3. பிரத்யேக தன்மை

வாடிக்கையாளர்கள் பிரத்யேக தன்மையை எதிர்பார்க்கின்றனர். எஸ்.எம்.எஸ் அனுப்பும் போது அதை பெறுபவர்கள் பிரர்த்யேக தன்மையை பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரு வாய்ப்பு எல்லோருக்குமானது என்றால் அதில் ஈர்ப்பு குறைந்துவிடும்.

4. அவசரம்

வாய்ப்பை இழந்துவிடுவோம் எனும் எண்ணம் மிகச்சிறந்த தூண்டுதலாக இருக்கும். குறிப்பிட்ட கால அளவிலான சலுகை நல்ல ஈர்ப்பை பெறும். செல்லுபடியாகும் காலத்தையும் தெளிவாக உணர்த்த வேண்டும். வாடிக்கையாளர் கிளிக் செய்ய இணைப்பையும் உருவாக்க வேண்டும்.

5. உள்ளூர்தன்மை

சலுகையை தெரிவிக்கும் போது கடைகளின் இருப்பிடத்தை குறிப்பிட வேண்டும். ஆன்லைன் ஸ்டோர் என்றால் அதற்கான இணைப்பை வழங்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட செயலை மேற்கொள்ள தூண்ட வேண்டும். அது பின்பற்ற எளிதாக இருக்க வேண்டும்.

எஸ்.எம்.எஸ் செய்தி உதாரணம்:

பிரத்யேக கடைகளில் 2 ஆடை வாங்கினால் 1 இலவசம். ஏபர்ல் 30 வரையே இந்த சலுகை. உங்கள் வாய்ப்பிற்கு அணுகவும்: goo.gl/xyz.

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்கள். அவை யுவர்ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)

ஆங்கிலத்தில்: அன்ஷுமன் தத்தா, தமிழில் சைபர்சிம்மன் 

Add to
Shares
53
Comments
Share This
Add to
Shares
53
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக