பதிப்புகளில்

கல்லூரியில் படித்துக்கொண்டே எப்படி இவர்களால் ஒரு நிறுவனத்தை உருவாக்கி விற்கமுடிந்தது?

3rd Apr 2016
Add to
Shares
62
Comments
Share This
Add to
Shares
62
Comments
Share

கடந்த வருடம் ஜனவரி மாதம் நான் ரயிலில் IIT கராக்பூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தேன். இங்குதான் நான் படிக்க விரும்பினேன். ஆனால் இப்போது அங்கு செல்வது ஒரு போட்டியில் பங்கேற்பதற்காக. வணிக திட்டம் குறித்த ஒரு போட்டி. இந்த பயணத்திற்கான மொத்த செலவு 10,000 ரூபாய். இதை முதலீடாக நினைத்தேன். இதைவிட பத்து மடங்கு நான் திரும்பப் பெறுவேன். எப்படி என்கிறீர்களா? போட்டியில் வென்றுதான்.

இன்றைய வேகமான ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலில் ரிஸ்க் என்பதும் அதிக வருவாய் என்பதும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. அதிலும் ஒரு மாணவன் தொழில்முனைவோராவதில் ரிஸ்க் அதிகம்.

முதலீடு என்னாகும்? தோற்றால் இழப்புதானே. குறைந்தது நேரமும் உழைப்பும் வீணாகுமல்லவா? அதுவும் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவன் எனும்போது அவனது நேரமும் உழைப்பும் எவ்வளவு மதிப்புமிக்கது. அப்படியிருக்க அவன் தோற்கும்போது வலிப்பது இயற்கைதானே. மாதச் சம்பளம். நடுத்தர குடும்பம். சாதாரண சாப்பாடு. சாதாரண பேருந்தில் பயணம். இந்தச்சூழலில் தோல்வி. இருப்பினும் அடுத்த முயற்சி.

image


நாம் ஏன் இப்படி செய்கிறோம் என்று பல முறை யோசித்திருப்போம். ஆனால் ஏன் எப்படி தொடங்கினோம் என்று நினைக்கும்போது அனைத்தும் மறந்துவிடும். மறைந்துவிடும்.

1.தீர்வு வேட்டை

உங்கள் தம்பிக்கு படிப்பில் ஒரு பிரச்சனை. அது நியாயமானதாக உங்களுக்கு தோன்றுகிறது. ஏனென்றால் இதே பிரச்சனையை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள். நீங்கள் என்னதான் விழுந்து விழுந்து படித்தாலும் பரீட்சையின் மதிப்பெண்களில் பெரிய மாற்றம் இருந்ததில்லை. இன்று உங்கள் தம்பிக்கும் அதே பிரச்சனை. நான்கு வருடங்கள் கடந்து விட்டது. ஆனால் எதுவும் மாறவில்லை. ஏன் தொழில்நுட்பம் உதவவில்லை என்று யோசிப்பீர்கள்.

நீங்களே சரி செய்ய முயற்சிப்பீர்கள். உங்களது நண்பர்கள் சிலரது உதவியுடன் களத்தில் இறங்குவீர்கள். பல நிறுவனங்களில் பயிற்சிக்கு சென்றிருப்பீர்கள். பல புதிய யோசனைகள். பல தயாரிப்புகளில் உங்கள் புதுமையான சிந்தனையை புகுத்தியிருப்பீர்களல்லவா? சில ஆண்டுகால பயிற்சியிலும் அனுபவத்திலும் பெற்ற உங்கள் கோடிங் திறமை உதவ வேண்டுமல்லவா?

இப்படித்தான் நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பீர்கள். ஒரே ஒரு நபர் உங்கள் தயாரிப்பை நிராகரிக்கும்வரை. பிறகு அந்த கல்வி நிறுவனத்திற்கு உங்கள் படைப்பை புரிந்துகொள்ளும் தொழில்நுட்ப வல்லமை இல்லை என்று நினைப்பீர்கள்.

2. அடுத்தடுத்த முயற்சி

நீங்கள் மனம் தளராமல் அடுத்த கல்வி நிறுவனத்தை அணுகுவீர்கள். மாணவர்களின் கல்வி முறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த நினைப்பீர்கள். எங்கே தவறு செய்கிறார்கள் என்று எடுத்துரைக்க முனைவீர்கள். அதைச் சரிசெய்ய நீங்களே உருவாக்கிய மென்பொருள் மூலம் உதவவும் முன்வருவீர்கள்.

ஆனால் மறுபடி தோல்வி. அடுத்தடுத்த தோல்விகள். அதிக பயணம் மேற்கொள்வீர்கள். பயிற்சியின்போது சேமித்திருந்த பணம் அனைத்தையும் நிறுவனங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்திற்கும் வணிக திட்டம் குறித்த போட்டிகளுக்கும் செலவிட நேரிடும்.

அப்பாவிடம் இதுகுறித்து பேசுவீர்கள். அனைவரும் புறக்கணிக்கிறார்கள் என்று வருந்துவீர்கள். பழைய வழிமுறைகளையே பின்பற்றலாம் என்றும் தோன்றும்.

image


3. தெளிவு மற்றும் மெருகேறிய சிந்தனை

மீண்டும் முயற்சிக்க நினைப்பீர்கள். உங்களுக்கு தெரியாத விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்ள அதில் அனுபவமுள்ளவர்களுடன் உரையாடுவீர்கள். அனைத்தையும் ஒட்டுமொத்தமாக சரிசெய்ய முடியாது. சிலவற்றை நீங்கள் மாற்றுவீர்கள். நீங்கள் எங்கே என்ன தவறு செய்தீர்கள் என்று புரிய ஆரம்பிக்கும்.

புதிய சிந்தனைகள் தோன்றும். உங்கள் அலோசகரின் வழிகாட்டுதலுடன் ஒரு புதிய தயாரிப்பை உருவாக்கும் எண்ணம் தோன்றும். இருவரின் பரஸ்பர அனுபவமும் அதில் அடங்கியிருக்கும். திடீரென்று ஒரு முன்னேற்றப் பாதை கண்முன் தோன்றும். நம்பிக்கை என்பது ஒரு போதைப்பொருள் போன்றது. நம்மை அடிமைப்படுத்திவிடும். இருவரும் வெவ்வேறு திசையில் போட்டிக்கு பயணித்தாலும் இருவரும் வெற்றி பெறுவீர்கள்.

4. முன்னேற்றம்

உங்கள் தயாரிப்பு குறித்த பல்வேறு அம்சங்களை விளக்கும் பக்கத்தை அறிமுகப்படுத்துவீர்கள். எப்படி ஒரு மாணவன் தன்னுடைய பயிற்சியாளருடன் ஒரு சில நொடிகளில் இணைய முடியும் என்ற தகவல்கள் இருக்கும். எப்படி ஒரு சின்ன சாட் மூலம் மாணவன் தன்னுடைய சந்தேகங்களுக்கு விடை காணலாம் என்ற விவரம் அடங்கியிருக்கும். ஒவ்வொரு விஷயத்தையும் உற்றுநோக்கி அதற்கேற்றவாறு உங்கள் தயாரிப்பு வடிவமைக்கப்பட்டிருக்கும்.

உங்களுக்குத் தெரிந்த பல நண்பர்கள், பயிற்சியாளர்கள், முதியவர்கள் இந்த பக்கத்தில் இணைவார்கள். உங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள். உங்களுக்கு பெருமையாக இருக்கும். புத்திசாலித்தனமான செயல் செய்திருக்கிறோம் என்ற திருப்தி ஏற்படும். முதலீட்டு நிறுவனங்களிலிருந்து சில ஆய்வாளர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். உங்கள் தயாரிப்பு முழுமையாகவில்லை. ஒருவரும் உபயோகிக்கவில்லை. ஒரு ரூபாய்கூட இன்னும் ஈட்டவில்லை. இருப்பினும் அனைவருடனும் நீங்கள் பேசத்தொடங்கியிருப்பீர்கள். நேரடி கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும். முழு நம்பிக்கையுடன் உங்கள் இணை நிறுவனரையும் அழைத்துக்கொண்டு டெல்லிக்கு புறப்படுவீர்கள்.

5. சந்திப்புகள்

ஒரு மணி நேரத்தில் தெரிந்துவிடும் யாரும் உங்களுக்கு முதலீடு செய்யப்போவதில்லை என்று. இதை யாரும் வெளிப்படையாக தெரிவிக்காவிட்டாலும் உங்களுக்கு தெரியாதா என்ன? எத்தனை புறக்கணிப்புகளை சந்தித்திருக்கிறீர்கள்? மற்ற சந்திப்புகளும் முடிவடைந்தது. எதுவும் சரியாக இல்லை.

சந்திப்புகளுக்கும் கூட்டங்களுக்கும் நிறைய நேரம் செலவானது. உங்களால் தயாரிப்பில் சரிவர கவனம் செலுத்தமுடியாமல் போகும். ஏனென்றால் எல்லாவற்றிற்கும் நேரம் செலவிட நேர்கிறதல்லவா? மறுபடி தயாரிப்பின் பக்கம் திரும்புவீர்கள். இரவு முழுவதும் கோடிங் வேலை நடக்கும். சமூக ஊடகங்களில் உங்களது பிராண்டை நிலைநிறுத்த தேவையான தேர்வுகளில் கவனம் செலுத்துவீர்கள்.

6. திருப்பம்

அனைத்தையும் எதிர்கொள்வீர்கள். ஏனென்றால் உங்களிடம் ஐந்து ஜூனியர்ஸ் பல இன்டென்ர்ஷிப்புகளை துறந்து உங்களின் தயாரிப்புக்காக உழைக்கிறார்கள். எங்கிருந்து பணம் வரும், எப்படி எல்லா பிரச்சனைகளும் தீரும் என்று உங்களுக்கு தெரியாது. மாணவர்களும் பயிற்சியாளர்களும் இந்த முயற்சியை விரும்புகிறார்கள். நல்ல தயாரிப்பை அளிக்க உங்களுக்கு சிறிது அவகாசம் தேவைப்படுகிறது.

நேரம் போதவில்லை. செமிஸ்டர் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் தயாரிப்பை வெளியிடவில்லை. யாரும் நிதியுதவி செய்ய முன்வரவில்லை. திடீரென்று இரு பெரும் நிறுவனங்கள் ஒரே நேரத்தில் தங்கள் முதலீட்டு திட்டத்தை அறிவித்தனர்.

7. பாதுகாப்பு

ஒரு வழி பிறந்துவிட்டது போல இருந்தது. நீங்களும் உங்கள் இணை நிறுவனரும் சேர்ந்து பல விஷயங்களை யோசிப்பீர்கள். இறுதியில் ஒரு நாள் நிறுவனத்தை விற்றுவிடலாம் என்று முடிவெடுப்பீர்கள்.

இது வெகு சீக்கிரமாக எடுக்கப்பட்ட முடிவுதான். பத்து மாத காலம் முடிந்துவிட்டது. ஒரு பாதுகாப்பற்ற சூழலை உணர்வீர்கள். மேலும், உங்கள் எல்லா பயிற்சியாளர்களுக்கும் இண்டென்ர்ன்ஷிப் கிடைப்பது உறுதி. அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதால் உங்கள் முடிவு சரியானதாக படும்.

ஒரு சின்ன அலுவலகத்தில் வேலை செய்வீர்கள். தயாரிப்பை வெளியிடும் பணியில் இறங்குவீர்கள். அடுத்த சில வாரங்களில் எல்லா ஆவணங்களிலும் கையெழுத்திடுவீர்கள். BITS-ன் இத்தனை வருட வரலாற்றில் கல்லூரியில் படிக்கும்போதே ஒரு நிறுவனத்தை விற்பனை செய்த முதல் நபர் நீங்கள்தான் என்று சிலர் சொல்வார்கள்.

image


எதற்கும் கலங்காமல் அடுத்த நாள் தயாரிப்பை வெளியிட முடிவெடுத்தீர்கள். அனைவரும் ஆமோதித்தனர். உங்களை நம்புகிறார்கள். அவர்களுக்கான உங்கள் முயற்சியை நம்புகிறார்கள் என்று மகிழ்வீர்கள். எப்போதும் உங்களுக்கு துணை நிற்கும் ஒரு குழுவை உருவாக்கியதற்காக நெகிழ்ந்து போவீர்கள்.

பயணங்களும் கடும்முயற்சியும்

தயாரிப்பை வெளியிட்டீர்கள். நீங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லையென தோன்றியது. உடனே பல சமூக ஊடகங்களை அணுகுகிறீர்கள். தயாரிப்பை மேலும் சிறப்பாக்க பல முன்னேற்றங்களை செய்தவண்ணம் இருக்கிறீர்கள். செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் தலைப்புச்செய்தி வரும் வரை தொடர்கிறது உங்கள் போராட்டம்.

இதோ உங்கள் தயாரிப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீங்கள் உருவாக்கிய தளத்தை மக்கள் கட்டணத்துடன் உபயோகிக்கிறார்கள். குழந்தைகள் அதிகாலை ஐந்து மணிக்கு உபயோகிப்பது தெரிகிறது. நள்ளிரவு இரண்டு மணிக்கு உபயோகிப்பது தெரிகிறது. இவ்வாறு வளர்ச்சி தொடர்கிறது. பல சந்தாதாரர்கள் உருவானார்கள். உங்களால் பலரை தக்கவைத்துக்கொள்ள முடிகிறது.

நீங்கள் இன்னும் கல்லூரி படிப்பில் இருக்கிறீர்கள். பிலானிக்கும் பெங்களூருவிற்கும் மாதா மாதம் பயணம். இப்பொழுது விமான பயணத்திற்கு செலவாகிறது. மறுபடி மாத இறுதியில் ஒன்றும் இல்லை. நிலைமை மாறத்தான் போகிறது என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது. இருப்பினும் கடினம்தான்.

தற்போதைய நிலை குறித்து யாருடனாவது கலந்தாலோசிப்பது நல்லது என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால் உங்களைச் சுற்றி யாரும் இல்லை.

ஏன் நம்மால் மற்றவர்களை எளிதில் அணுகமுடியவில்லை என்று வியக்கிறீர்கள். BITS-போன்ற கல்லூரியிலிருப்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால் மற்ற கல்லூரியின் நிலைமை எப்படியிருக்கும்? அங்கிருப்பவர்களுக்கு எப்படி வேலை வாய்ப்பு கிடைக்கும். அடுத்து அவர்களுக்கு எப்படி உதவலாம்? 

image


அடுத்தகட்ட முயற்சி

நீங்கள் உருவாக்கிய தயாரிப்பை துறப்பீர்கள். VP&Products என்ற பொறுப்பை துறப்பீர்கள். மறுபடி இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியாது. அதிக வருமானத்தை இழப்பீர்கள். பல்லாயிரம் டாலர்கள் ஈக்விட்டியில் இழக்க நேரிடும். இவ்வளவும் தெரிந்தும் அடுத்த ரிஸ்க் எடுக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்கள்.

உங்கள் இணை நிறுவனருடன் பேசுவீர்கள். அவரும் சம்மதிப்பார். எப்படி ஒரு தயாரிப்பை தொடங்கி உருவாக்கினோம் என்று நினைவுகூறுவார். திறமையான தகுதியான இளைஞர்களை சரியான குழுவுடன் இணைப்பதுதான் உங்களது நோக்கம். இன்றே இப்பொழுதே அதைத் தொடங்க ஆயத்தமாவீர்கள்.

டேப்சீஃப்

முதல் தயாரிப்பின் அனுபவம் கொண்டு புத்தாண்டில் மறுபடி அடுத்த இலக்கு நோக்கி களமிறங்குவீர்கள்.

ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப சிறந்த நிபுணர்களின் அலோசனை பெறமுடியும். இவ்விருவரையும் இணைக்கும் பாலமாக 2016-ல் பிப்ரவரி மாதம் 18-ம் தேதி உருவானதுதான் டேப்சீஃப் (TapChief).

இப்படித்தான் என் புதிய அத்தியாயம் ஆரம்பமானது.

என்னால் எந்த விதத்திலாவது உங்களுக்கு உதவ முடியும் என்று நீங்கள் நினைத்தால் உடனே டேப்சீஃபை தொடர்பு கொள்ளவும்.

ஆசிரியர் : ஷஷான்க் முரளி

(பொறுப்புத்துறப்பு : இதில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரின் சொந்த கருத்துக்களாகும். எந்தவிதத்திலும் யுவர் ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை.)

தமிழில் : ஸ்ரீ வித்யா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


Add to
Shares
62
Comments
Share This
Add to
Shares
62
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக