பதிப்புகளில்

ரிசர்வ் வங்கியின் முதல் பெண் கவர்னராக நியமிக்கப்பட வாய்ப்புள்ள அருந்ததி பட்டாச்சர்யா பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

15th Jul 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

'நான் மறுபடியும் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்க படமாட்டேன்' என்று எதிர்பார்ப்பதாகக் கூறிய, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஜூன் 18-ந் தேதி வெளியிட்ட செய்தியால், அடுத்து அந்த பதவியை வகிக்க போகிறவர் யார் என்று எல்லோர்க்கும் சில யூகங்கள் எழுந்தன. வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் ராஜனின் பதவிகாலம் முடிவடைய இருக்கும் நிலையில், ஆதாரங்களின் அடிப்படையில் 'அருந்ததி பட்டாச்சர்யா' ரிசர்வ் வங்கியின் முதல் பெண் கவர்னராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்று டைலி பாஸ்கர் தளம் அறிவித்தது.

image


கொல்கத்தாவில் ஒரு பெங்காலி குடும்பத்தில் பிறந்த அருந்ததி, அந்நகரின் பிராபோர்ன் கல்லூரி மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்றவர். இவரது கணவர் ஐ.ஐ.டி கரக்பூரின் ஒரு முன்னாள் பேராசிரியர் ஆவார். இவர்களுக்கு ஒரு மகளும் உண்டு.

1977இல் அருந்ததி, பாரத் ஸ்டேட் வங்கியின் தகுதிகாண் அதிகாரியாக (ப்ரோபேஷனரி ஆபீசராக) பணிபுரியத் தொடங்கினார். இவரது பதவி காலத்தில், வங்கி பல வெற்றிகள் கண்டு சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளது. இவர்தான் பாரத் ஸ்டேட் வங்கியின் தற்போதய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வங்கியின் தலைமை பொது மேலாளராக பணிபுரிந்த போது, பாரத் ஸ்டேட் வங்கியின் ஜெனரல் இன்சூரன்ஸ், எஸ்பிஐ மக்ஃவாரி இன்ப்ராஸ்ட்ரக்சர் பன்ட் (SBI macquarie infrastructure fund), எஸ்பிஐ எஸ்ஜி குளோபல் செக்ஃயூரிட்ஸ் பிரைவேட் லிமிடட் ( SBI SG Global securities private limited) முதலியவற்றை நிறுவியதன் மூலம் மக்களுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்திய பெருமையை கொண்டுள்ளார். மேலும் நிதி திட்டமிடல் (Financial planning) மற்றும் மொபைல் பாங்கிங் (Mobile Banking) சேவைகளையும் அறிமுகப்படுத்தினார்.

பாரத் ஸ்டேட் வங்கி இவரை அதன் தொலைநோக்கியாக கருதுகிறது, அதன் வரலாற்றிலேயே முதல் பெண் தலைவராக அருந்ததியை 2013இல் நியமித்தது. இது தானாகவே, இந்தியாவின் தலைசிறந்த 500 கம்பெனிகளில் ஒன்றான ஸ்டேட் வங்கியை தலைமை தாங்கும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் இவருக்கு வாங்கித் தந்துள்ளது.

உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் அருந்ததியை 25 -வதாக பட்டியலிட்டு அவர் முயற்சியை ஃபோர்ப்ஸ் இதழ் பாராட்டியது. 2014இல் அருந்ததியின் தலைமையில் தான், மது சீமானான விஜய் மல்லயாவை, பாரத் ஸ்டேட் வங்கி சவால் விட்டு, கிங்பிஷ்ர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை 'வில்புல் டிஃபால்டர்' (Willful defaulter) என்று அறிவிக்கக் கோரி கண்டிப்பு நோட்டீஸ் அனுப்பியது. மார்ச் 2016இல் விஜய் மல்லயாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து, அவர் சொத்துக்களின் முழு விவரங்களையும் அளிக்கும்படி பாரத் ஸ்டேட் வங்கி, கடன் மீட்பு தீர்ப்பாயத்திடம் கேட்டுக்கொண்டது.

2013இல் பிரதீப் சௌதுரிக்கு அடுத்ததாக அருந்ததி, பாரத் ஸ்டேட் வங்கியின் தலைவரானார். "தலைசிறந்த 100 குளோபல் தின்கர்ஸ்" (Top 100 Global Thinkers) பட்டியலில் அருந்ததியை ஒருவராக ஃபாரின் பாலிசி இதழ் வெளியிட்டது. மேலும் பார்சூன் இதழ், ஆசியா பசுபிக்கின் சக்திவாய்ந்த பெண்களில் இவரை நான்காவதாய் அறிவித்து பெருமைப்படுத்தியது.

அதுமட்டுமின்றி அருந்ததி, பாரத் ஸ்டேட் வங்கி தலைவராக, குழந்தைகள் மற்றும் முதியவர்களை கவனித்து கொள்ள பெண் ஊழியர்களுக்கு, இரண்டு வருடத்திற்கு சப்படிகல் பாலிசி (Sabbatical Policy) எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.

கட்டுரை: Think Change India

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக