பதிப்புகளில்

நாணயங்கள் சேகரித்து மில்லினியர் ஆன சாதனையாளர்!

நான்கு நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஒரு லட்சம் அரிய நாணயங்களை சேகரித்துள்ள மனீஷ் தமேஜா பல சாதனைகளை முறியடித்து வெற்றி கண்டவர்!

19th Jul 2017
Add to
Shares
145
Comments
Share This
Add to
Shares
145
Comments
Share

முறையான கல்வி பயில்வது என்பது சாதாரண விஷயமல்ல. பாடம் சார்ந்த சவால்கள், ஒத்த வயதினருடனான அழுத்தங்கள், பெற்றோரின் எதிர்பார்ப்புகள் என பல்வேறு விஷயங்கள் நிறைந்ததிருக்கும். பல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இப்படிப்பட்ட அழுத்தங்களிலுருந்து விடுபட உதவுவது அவர்களது பொழுதுபோக்கு மட்டுமே. அதேபோல மனீஷ் தமேஜாவின் பொழுதுபோக்கு அவரது வாழ்க்கையின் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. வளர்ந்த பருவத்திலும் உடன் பயணித்துள்ளது.

image


நாணயங்களை சேகரிப்பதே 31 வயதான மனீஷின் பொழுதுபோக்காகும். இளம் வயதிலேயே இந்தப் பழக்கம் துவங்கிவிட்டது. பரம்பரையாக பாதுகாத்து வந்த நாணயங்கள் இவரிடம் கிடைத்தது. உத்வேகத்துடன் தொடர்ந்து சேகரித்தார். இவர் பல பட்டங்களை வென்றுள்ளார். 500 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சம் நாணயங்களை சேகரித்துள்ளார். இவற்றால் அவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது. கின்னஸ் உலக சாதனை, லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸ், இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ், ஆசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ், கோல்டன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ், ரெகார்ட் ஹோல்டர்ஸ் ரிபப்ளிக், யூகே, வேர்ல்ட் ரெகார்ட்ஸ் இந்தியா, ஸ்டார் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் மற்றும் அசிஸ்ட் வேர்ல்ட் ரெகார்ட்ஸ் போன்ற பெரும்பாலான உலக சாதனை பட்டியல்களில் இடம்பெற்றுள்ளார்.

உத்வேகத்தினால் பொழுதுபோக்கில் ஈடுபாடு அதிகரித்தது

உத்திரப்பிரதேசத்தின் பாராய்ச் நகரத்தைச் சேர்ந்தவர் மனீஷ். வசதியான குடும்பத்தில் வளர்ந்தார். அவரது கொள்ளுதாத்தா தொழில்முனைவில் ஈடுபட்டிருந்தார். நாணயங்களை சேகரிப்பதில் அவருக்கு அதீத ஆர்வம் இருந்தது. இவ்வாறு அவர் சேகரித்த நாணயங்களின் தொகுப்பு ஈர்க்கும் விதத்தில் இருந்தது. வீட்டிலிருந்த குழந்தைகளின் ஆர்வத்தையும் தூண்டியது.

அவ்வாறு ஈர்க்கபட்ட குழந்தைகளில் மனீஷ் ஒருவர். அவரது பள்ளியில் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்ட பொருட்களை படைப்புத் திறன் நிறைந்த விதத்தில் சமர்ப்பிக்கச் சொல்லியிருந்தனர். அவரது கொள்ளுதாத்தாவின் நாணயங்களின் தொகுப்பைக் கொண்டு சிறப்பாக ஒரு ப்ராஜெக்டை உருவாக்கினார்.

எனக்கு நாணயங்களின் மீது ஆர்வம் ஏற்படுவதற்கு என்னுடைய கொள்ளுதாத்தா மற்றும் தாத்தாதான் காரணம். எனக்கு ஊக்கமளித்த ஒரு விஷயமே பொழுதுபோக்காக மாறியது ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றார் மனீஷ்.
image


1986-ம் ஆண்டு அவரது கொள்ளுதாத்தா இறந்தவுடன் அவரது குடும்பம் கடனில் சிக்கித் தவித்தது. உத்திரப்பிரதேசத்தில் லக்கிம்பூர் கெரி பகுதியில் இருந்த 30 அறைகள் கொண்ட சொகுசு வீட்டை விற்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். அந்த நிலையிலும் சேகரிக்கபட்ட நாணயங்கள் அனைத்தும் புதிய வீட்டிற்கு எடுத்துவரப்பட்டது.

கடந்து வந்த பாதை

வழக்கமாக அனைத்து பெற்றோர்களுக்கும் இருக்கும் ஆசையே மனீஷின் பெற்றோருக்கும் இருந்தது. அவர் ஒரு மருத்துவராக வேண்டும் என்று அவரது அப்பா விரும்பினார். பொறியியல் படிப்பை முடித்து நல்ல பணியில் சேரவேண்டும் என்று அம்மா விரும்பினார். ஆனால் அப்துல் கலாமினால் ஈர்க்கப்பட்ட தலைமுறையைச் சேர்ந்தவரான இந்த இளைஞர் வேறு விதமாக திட்டமிட்டார். ஒரு அரசு அதிகாரியாகவே மனீஷ் விரும்பினார்.

ராஜஸ்தான் வித்யாபீட் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலைதொடர்பு பொறியியல் பிரிவில் படிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைதொடர்புத் துறையின்கீழ் இயங்கும் தொலைதொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் (TCIL) நிறுவனத்தில் எக்சிக்யூடிவ் அளவு அதிகாரியாக இணைந்தார்.

எனினும் அரசாங்கப் பணியில் ஈடுபடவேண்டும் என்கிற அவரது விருப்பம் நிறைவேறியது. 2008-ம் ஆண்டு வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பான் ஆப்பிரிக்க இ-நெட்வொர்க் திட்டத்தில் (PAeNP) ஏழு வருடங்கள் ஈடுபட்டார்.

தான்சானியா, சாம்பியா, மடகாஸ்கர், லெசோத்தோ, மொரீஷியஸ், கென்யா, செனகல் போன்ற ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து பணிபுரிய 2010-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சென்றார். கார்ப்பரேட்கள், மருத்துவ மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை பயனாளிகளுடன் ஒன்றிணைப்பதற்காக கல்வி மற்றும் சுகாதாரத் துறையின் ப்ராஜெக்டுகளில் பணிபுரிந்தார்.

image


தொடர்ந்து அறிவை மேம்படுத்திக்கொண்டிருப்பது அவரது முக்கிய சாதனைகளில் ஒன்று எனலாம். 31 வயதில் இந்தியா மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலிருந்து எட்டு முதுகலைப் பட்டங்களும் இரண்டு இளநிலை பட்டங்களும், ஆறு சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற அவரது விருப்பம் காரணமாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி பிரிவில் முதுகலைப் படிப்பு மேற்கொண்டார். பிறகு உதய்பூரின் பசபிக் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைப் பிரிவில் பிஎச்டி பயின்றார். சமூகப்பணி நடைமுறை குறித்த ஆய்வாக மேக்ரோ, மெசோ மற்றும் மைக்ரோ ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் ப்ரொஃபஷனல் சோஷியல் வொர்க் ப்ராக்டீஸ் என்பதில் சிறப்பு கவனம் செலுத்தினார்.

சமூகப் பணி, நாணயம் சேகரிப்பு மற்றும் கல்வி ஆகிய பிரிவுகளில் படைத்த சாதனைக்காக 25 தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார். ராஜீவ் காந்தி எக்சலன்ஸ் விருது மற்றும் தொலைதொடர்பு அமைச்சகத்தின் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். தொடர்ந்து பல விருதுகளை பெற்றவண்ணம் உள்ளார்.

நீண்டுகொண்டே இருக்கும் அவரது சாதனைகள் குறித்து கூறுகையில்,

நாணயங்கள் மீது எனக்கிருக்கும் ஆர்வம் அங்கீகரிக்கப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய பொழுதுபோக்கு எனக்கு ஒரு மிகப்பெரிய மரியாதையை அளிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

எதிர்காலம்

நாணயங்களை சேகரிப்பதில் அவருக்கு இருந்த அதீத ஆர்வத்தை மேலும் தீவிரப்படுத்தியதில் ஆச்சரியமேதும் இல்லை.

நாணயங்களில் பிஎச்டி பயின்று வருகிறேன். நாணயங்கள் அருங்காட்சியகத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். 
image


நான்கு நூற்றாண்டுகளைச் சேர்ந்த நாணயங்களின் தொகுப்புகளை காட்சிப்படுத்தும் விதத்தில் அருங்காட்சியத்தை அமைக்க திட்டமிட்டுள்ளார். அவரது இந்த ப்ராஜெக்டை செயல்படுத்தினால் உலகின் முதல் 3D நாணயவியல் அருங்காட்சியகம் இவருடையதாக இருக்கும்.

நாணயங்களை சேகரிக்கும் வழக்கம் என்னுடைய கொள்ளுதாத்தாவால் துவங்கப்பட்டது. இன்று நானும் இந்த வழக்கத்தைத் தொடர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். என்னால் அவரை பார்க்கமுடியாமல் போனாலும் நான் உலகளவில் வெற்றியைத் தழுவவும் மரியாதையைப் பெறவும் அவரது ஆசியே எனக்கு உதவுகிறது.

கொள்ளுதாத்தாவின் மரபை தொடர்ந்து எடுத்துச்செல்லும் பயணத்தில் அவரது பெற்றோரின் ஆதரவு தொடர்ந்து அவருக்குக் கிடைக்கிறது. அவரது பெற்றோர்களுக்கு மகனின் எதிர்காலம் குறித்த வெவ்வேறு திட்டங்கள் இருந்தாலும் அதை ஒதுக்கிவிட்டு மனீஷிற்கு ஆதரவளித்தனர்.

உங்களுடைய பெற்றோர் புன்னகைப்பதைப் பார்ப்பதும் அவர்களது புன்னகைக்கு நீங்கள் காரணமாக இருப்பதுமே உலகின் மிகப்பெரிய சாதனையாகும் என்றார் மனீஷ்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி மோகன்

Add to
Shares
145
Comments
Share This
Add to
Shares
145
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக