பதிப்புகளில்

மொபைல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை உலகிற்கு வெளிகாட்டும் யுவர்ஸ்டோரியின் விழா ‘மொபைஸ்பார்க்ஸ்’2016 அறிவிப்பு!

YS TEAM TAMIL
18th Oct 2016
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

அண்மையில் பிரபல ஆன்லைன் தளங்களின் தள்ளுபடி விழாவில் கிட்டத்தட்ட 70 சதவீதம் விற்பனை மொபைல் போன்கள் மூலமே நடந்துள்ளது ஆச்சர்யம் ஒன்றுமில்லை. மொபைல் போன் பயன்பாட்டில் இந்தியா வேகமாக முன்னேறி வரும் வேளையில், இணையத்தை போன்கள் மூலம் பெறுவதிலும் முதன்மை இடத்தை பிடிக்க ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி, பல்வேறு ஸ்டார்ட்-அப்’ களுக்கு சந்தையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

இதனை வலியுறுத்தும் வகையில், யுவர்ஸ்டோரி தனது வருடாந்திர கருத்தரங்கான ‘மொபைல் ஸ்பார்க்ஸ்’ MobileSparks விழாவை நடத்த திட்டமிட்டுள்ளது. மொபைல் ஸ்பார்க்சின் ஐந்தாவது பதிப்பை இந்த ஆண்டு தலைநகர் புது டெல்லில்யில் நடத்துகிறது யுவர்ஸ்டோரி. 40 சிறப்பு பேச்சாளர்கள், 60 பார்ட்னர்கள் மற்றும் 1000க்கும் அதிகமான பங்கேற்பாளர்களுடன் இந்த ஆண்டு மொபைல் ஸ்பார்க்ஸ் நடைபெற உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக மொபைல் போன்களின் தொழில்நுட்பத்தை வலியுறுத்தும் ஒரு சிறந்த நிகழ்வாக மொபைல் ஸ்பார்க்ஸ் பார்க்கப்படுகிறது. 

image


இந்த ஆண்டு கருத்தரங்கில் வலியுறுத்தப்படும் முக்கிய அம்சங்கள்:

* வருமானம் ஈட்டுதல் மற்றும் பணம் செலுத்துதல்

* உள்ளூர் மொழி தொழில்நுட்பம்

* டெவலப்பர் கருவிகள்

* ஆப் விநியோகம் மற்றும் வளர்ச்சி அளவீடு

* அரசின் திட்டங்கள், விதிமுறைகள்

* ஊரக ஊடுருவல் மற்றும் திறந்தவெளி ஏபிஐ

கடந்த ஓர் ஆண்டில் இணையதளங்களில் இருந்து மொபைல் ஆப்களுக்கு பல சேவைகள் மாறியுள்ளதை பார்க்கமுடிகிறது. விரைவில், மொபைல் சந்தை வெப் சந்தையை விற்பனைத்துறையில் தோற்கடிக்கும் என்று மார்க்கெடிங் வளர்ச்சி நிறுவனம் Criteo கணித்துள்ளது. இந்தியாவில் இணையதள வர்த்தக வாடிக்கையாளர்கள் 2020க்குள் 174 மில்லியனை தொடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன்கள் தனிப்பட்ட முறையில் சேவை வழங்குவதால் அதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

உணவு சந்தை, கல்வி, மருத்துவம், கேளிக்கை போன்ற வர்த்தகங்களில் செயலிகளின் ஆக்கரமிப்பு அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படையில் பல மொபைல் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றனர். மோடியின் அரசும் இதற்கு ஊக்கமளிக்கும் வகையில் ‘MyGovApp’ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலமும் மொபைல் தொழில்நுட்ப சந்தையில் வளர்ச்சி அடைய பல திட்டங்களை வகுத்துள்ளது. மொபைல் பொருளாதாரம் நாட்டின் வருங்கால வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. 

1000 டெவலப்பர்ஸ், 500 ஸ்டார்ட்-அப்’ கள் மற்றும் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் யுவர்ஸ்டோரி நடத்தும் கருத்தரங்கில் கலந்துகொள்ள உள்ளனர். நவம்பர் 18 ஆம் தேதி புது டெல்லியில் இவ்விழா நடைபெறுகிறது. 

மொபைல் சந்தையில் பணிபுரியும் தொழில்முனைவோர், ஆப்’களை தயார் செய்யும் ஸ்டார்ட் அப்கள் உங்களின் சேவையை/தயாரிப்பை சிறந்த பங்கேற்பாளர்கள் முன் காட்சிப்படுத்த ஒரு வாய்ப்பு... இதை தவற விடாதீர்கள்... 

நீங்கள் ஒரு தொடக்க நிறுவனமா? உடனே ‘MobileSparks ஸ்டார்ட்-அப் ஆஃப் தி இயர்’ (MobileSparks startup of the year 2016) பகுதியில் தேர்வு பெற விண்ணப்பியுங்கள். நாங்கள் சிறந்த 10 ஸ்டார்ட்-அப்’களை எங்கள் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்போகிறோம். 

நீங்கள் ஒரு டெவலப்பரா? தொழில்முனைவரா? விசி? இல்லை உங்கள் சொந்த நிறுவனத்தை தொடங்க யோசித்துக் கொண்டிருக்கிறீரா? இது உங்களுக்கான சரியான சந்தர்ப்பம். டிக்கெட்களை வாங்குங்கள், பயனடையுங்கள். (சலுகை டிக்கெட் விலை ரூ.4299/ அக்டோபர் 20 வரை) அதற்கு பின்னர் டிக்கெட்டின் விலை ரூ.7499 ஆகிவிடும். 

டிக்கெட் வாங்க: MobileSparks 2016

மேலும் சந்தேகங்கள், ஸ்பான்சர்களுக்கு இந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்! 

தேதி: நவம்பர் 18, 2016

இடம்: இந்தியா ஹாபிடாட் செண்டர், புது தில்லி

நேரம்: 9 am to 6 pm

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags