பதிப்புகளில்

செடியாக வளரும் ’முளைக்கும் விதை பென்சில்’ தயாரிக்கும் கோவை இளைஞர்கள்!

8th Jul 2017
Add to
Shares
1.1k
Comments
Share This
Add to
Shares
1.1k
Comments
Share

கோவையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ரஞ்சித்குமார், இவரும் இவரின் நண்பர் ராஜகமலேசும் இணைந்து, பென்சில்களின் தலைப்பகுதியில், மரம், பூ செடிகளின் விதைகளை வைத்து முளைக்கும் பென்சில்களை உருவாக்கியுள்ளனர்.

எழுதித் தீர்த்த பென்சில்களை தூக்கி எரியும் போது, அது செடியாகவும், உருவம்பெறுகிறது என்றால் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையான சூழலை நிச்சயம் உருவாக்கும், என்று தங்கள் முயற்சியை பற்றி பேசத்தொடங்கினார் ரஞ்சித்.

ரஞ்சித் மற்றும் ராஜகமலேஷ்

ரஞ்சித் மற்றும் ராஜகமலேஷ்


எஸ்.ரஞ்சித்குமார் இவரது பூர்வீகம் மதுரை. ராஜகமலேஷ் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். இருவரும் கல்லூரி வாழ்க்கையை கோவையில் முடித்தனர். படிக்கும் போதே தெரிந்தது பொறியியல் எங்களுக்கு செட் ஆகாதுனு. தொடர்ந்து படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை பாக்காம வெவ்வேறு துறைகளில் பயணித்தோம். செய்த எந்த வேலையும் திருப்தியை தரலை.

‘‘மாறுபட்ட வாழ்க்கையை வாழனும்னு யோசித்தோம். முதலில் தோன்றியது தொழில். அது தானே வாழ்வை அடையாளப்படுத்தும். யோசித்தபோது உருவானதுதான் இந்த ‘முளைக்கும் விதைப் பென்சில்’ ஐடியா.’’

மரம் வளர்ப்பை அடுத்த தலைமுறைக்கு சொல்லித்தரும் முயற்சி இது. அடிப்படையில் இருந்து உணவு ஊட்டுவது போல அடுத்த தலைமுறையினரிடம் இதை உணர்வோடு கலக்க செய்யும் முயற்சி தான் இந்த விதைப்பென்சில் தயாரிப்பு. 2016-ல் இந்த பென்சிலை தயாரித்த இவர்கள், ‘ஃபார்ம்சில்ஸ்’ (Farmcil Pencils) என்று பெயரிட்டுள்ளனர். 

‘‘சிறுவர்கள் தான் அதிகளவில் பென்சில் பயன்படுத்துகிறார்கள். புதுமையை விரைந்து ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் அவர்களிடம் அதிகம்.’’ பென்சிலில் இருந்து ஒரு செடி உயிர் பெறும்போது, நிச்சயம் பல செடிகளை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும்.

ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாடுகள்ல இந்த விதைகள் கொண்ட பென்சில்கள் இருக்கு. இந்தியாவுலயும் நாம ஏன் இதைக் கொண்டுவரக்கூடாதுன்னு தீர்மானம் செய்தோம். நாங்க எதிர்பார்க்கவே இல்ல இந்த அளவுக்கு மக்கள் கிட்ட வரவேற்பு கிடைக்கும்னு” என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.
image


ஆரம்பத்துல இந்தப் புதிய முறை தொழிலை துவங்க நிறையவே சிரமப்பட்டோம். கடைக்காரர்கள் ஏஜெண்டுகளுக்கு எங்கள் மேல் நம்பிக்கை வரவில்லை . ‘இதுல என்னப்பா லாபம் வரப்போகுது. கொஞ்ச நாள் சப்ளை பண்ணுவீங்க அப்பறம் விட்டுட்டு போய்டுவீங்கன்னு’’ கிண்டல் செய்தாங்க. சொந்தங்கள் எல்லாரும் வேண்டாம்னு ஒருபக்கம் அட்வைஸ் வேற' எதையும் காதுல வாங்கம தொடர்ந்து முயற்சி பண்ணி ஆர்டர்கள் வாங்கினோம். பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமா தந்து அதைப் பயன் படுத்தவச்சி ரிசல்ட்டை பாத்துட்டு, ரொம்ப லேட்டா தொழிலை துவங்கினோம், இரண்டு வருடம் ஆகுது இப்ப வரைக்கும் நல்லபடியா போகுது. 

பொதுவாக பென்சிலின் தலைப்பகுதியை குழந்தைகள் வாயில் வைத்துக் கடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அதனால் சாதரண கேப்சூலை பயன்படுத்தாமல், இயற்கை காய்கறி மூலப்பொருளில் தயாரான கேப்சூல்களை பயன்படுத்துகிறோம். எளிதில் சேதமாகாத வாரும் வடிவமைத்துள்ளோம். தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், மிளகாய், சூரியகாந்தி என கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட காய்கறி, பூ வகை விதைகளோடு கூடிய பென்சிலை தயார் செய்கின்றனர். 

”பென்சில் தயாரிப்பை விட விதைக்குத்தான் முக்கியத்துவம் தருவோம். குழந்தைங்க ஆசையா வாங்கி அதைப் பயன்படுத்திட்டு கடைசியா செடி முளைக்கும்னு நட்டு வைப்பாங்க. எதாவது ஒண்ணு முளைக்காம போச்சுனா அந்தக் குழந்தை மனசு கஷ்டப்படும். அதனால ஒவ்வொரு பென்சில் செய்யும் போதும் மிகக் கவனமா தயாரிப்புப் பணியைச் செய்வோம்.”

எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கம் தருவது இங்குப் பணிபுரியும் இருபதுக்கும்மேற்ப்பட்ட பெண்கள் தான். ஒரே குடும்பம் போல, குறைந்த வருவாயையும் ஏற்றுக்கொண்டு ஒன்று சேர்ந்து தயாரிப்பு பணியைச்செய்கின்றோம். இப்போதைக்கு கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, பக்கமெல்லாம் விற்பனைக்குக் கொண்டுவந்துட்டோம். சென்னை மாதிரியான பெரிய நகரங்களுக்கு சரியான விளம்பரங்களோட சேர்த்து அறிமுகம் செய்யணும். 

image


”10 ரூபாய்க்கு ஒரு பென்சிலை விற்பனை செய்கின்றோம். கனிசமான வருமானம் வருகிறது. ஆனால் எதிர்காலத்தில் இந்த கான்செப்ட் பெரிய அளவில் ஹிட் ஆகும்,” என்கிறார் நம்பிக்கையோடு.

பென்சிலில் முளைக்கும் திறனுள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட வீரியமான விதைகளைத் தான் பயன்படுத்திறோம். விதைதேர்வு செய்வதற்கென்றே எங்களுக்குள்ளேயே ஒரு குழு அமைத்துள்ளோம். பூ , விதைகள், 4 வகைக் காய்கறி விதைகளை வாங்கி, தனித்தனி கேப்சூலில், இயற்கை உரம், தென்னைக்கழிவு ஆகியவற்றோடு விதைகளைவைத்து பென்சிலுடன் இணைக்கிறோம்.

பென்சிலோடு ரப்பர், ஷார்ப்னர், மற்றும் விதையைப் பயிரிடுவதற்கான வழிகாட்டிகையேடு, விதைகள் காலாவதியாகும் காலம் ஆகிய வற்றையும் இணைத்துள்ளோம். விதைகள் குறித்த தகவல்களை ‘தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் எங்களுக்குத் தந்தது’.

இந்த விதைப் பென்சிலுக்கு அவ்வளவு சீக்கிரம் அங்கீகார சான்றிதழ் கிடைக்கவில்லை. நிறையவே அலைகழிச்சாங்க என்று வருத்தப்பட்டார். ஆர்.பி சான்றிதழ் ஆடிட் பண்ற பெண் அதிகாரி ‘ சரி என்னதான்பா பண்றீங்க? வாங்கப் பார்க்கலாம்’னு வந்தாங்க. பார்த்து அசந்துட்டாங்க பாராட்டிட்டு அவங்க குழந்தைகளுக்கும் வாங்கிட்டு போனாங்க. இப்பவரைக்கும் மத்தவங்ககிட்டயும் சொல்லிகிட்டு இருக்காங்க.

அதன் பிறகுதான் எங்களுக்கு இன்னும் நம்பிக்கை வந்தது. எதிர்காலத் திட்டமும் எங்களுக்கு இந்த ’ஃபார்ம்சில்’ மட்டுமே என்கிறார். பெரியளவுல விளம்பரம் எதுவும் செய்யலை. வாய்வழி மூலம் தான் எல்லாரிடமும் சென்றடைவதாக சொல்கிறார்.

‘‘வித்தியாசமான தொழிலை செய்யவேண்டும், அடுத்த தலைமுறையிடம் அதைக் கொண்டு போகணும். குழந்தைகளுக்கான நிறையப் பொருட்கள் தயாரிக்கவேண்டும். இது தான் எங்களின் கனவு,” 

எனத் தன்னம்பிக்கையுடன் பேசி முடித்தார் ரஞ்சித். 

கட்டுரையாளர்: வெற்றிடம்

Add to
Shares
1.1k
Comments
Share This
Add to
Shares
1.1k
Comments
Share
Report an issue
Authors

Related Tags