சிறுதொழில் நிறுவனங்கள் ரொக்க புழக்கத்தை உறுதி செய்ய 10 வழிகள் இதோ!

வர்த்தக செயல்பாடுகள் தொடர்பான ரொக்க வரத்து நிர்வாகத்தை திறம்பட கையாள்வதற்கான வழிகளை பார்க்கலாம்.
7 CLAPS
0

“வருவாய் நிலையில்லாதது, லாபம் நல்லது, ரொக்கம் தான் யதார்த்தம்...” என்று சொல்லப்படும் வழக்கு தற்போதைய நெருக்கடியான காலத்தில் நிதர்சனமாகியுள்ளது.

ரொக்கப் புழக்க நிர்வாகம் என்பது, வர்த்தகத்தின் ரொக்க வரத்து மற்றும் ரொக்க வழங்கலை கவனித்து, அலசி, கட்டுப்படுத்தி மேம்படுத்தும் செயல்முறையாகும். எந்த வர்த்தகத்திற்கும் ரொக்க புழக்கம் முக்கியம் என்றாலும், சிறு தொழில்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொண்டது. வர்த்தகத்தை பாதிக்கக் கூடிய ரொக்கப் புழக்க பாதிப்பை அவர்கள் தவிர்க்க வேண்டும்.

ரொக்க புழக்கத்தை நிர்வகிப்பதற்கான சில வழிகளை இங்கே பார்க்கலாம்.

இன்வாய்ஸ் நிர்வாகம்

விற்பனை செயல்முறை, ரொக்க புழக்க சுழற்சியில் மிகவும் முக்கியமானது. பெறக்கூடிவையும் இதில் அடங்கும். பெறக்கூடியவற்றை நிர்வகிப்பது, சரியான இன்வாய்ஸ் செய்து, நிலுவையில் உள்ள தொகையை பின் தொடர்வது ஆகிய நடவடிக்கைகளை உள்ளடக்கியது.

வழக்கமான நேரங்களில் நிறுவனங்கள் பெறக்கூடிய தொகையில் அதிக ஆர்வம் காட்டமல் இருக்கலாம். இதன் காரணமாக ரொக்க புழக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு சப்ளை சைன் மற்றும் வர்த்தகத்திலும் தாக்கம் செலுத்தலாம்.

பணம் செலுத்தும் கொள்கையை மாற்றிக்கொண்டிருக்கும் நிறுவனம்ங்களை அடையாளம் காண்பது முக்கியம். முன்கூட்டியே பணம் செலுத்த தள்ளுபடி சலுகையை அளிப்பது நல்ல வழி.

இவற்றை எல்லாம் மேற்கொள்ள ஈ.ஆர்.பி (erp) முறையை செயல்படுத்த வேண்டும்.

அன்ல்டிக்ஸ் மூலம் தேவையான தரவுகளை பெறலாம். இதன் மூலம் பெற வேண்டிய தொகையை திறம்பட நிர்வகிக்கலாம். பணத்தை வசூலிக்கும் குழுவின் நோக்கம் நிலுவையில் உள்ள தொகையை இயன்றவரை பணமாக்கம் பெறச்செய்வதாக இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர் நிலையை அறிவது மற்றும் கடன் கட்டுப்பாடு ஆகிய வழிகளையும் பின்பற்றலாம். எனினும் சிறு தொழில் நிறுவனங்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வாடிக்கையாளர் பெரிய நிறுவனம் எனும் போது கவனமாக அணுக வேண்டும்.

கொள்முதலில் கவனம்

கொள்முதல் செய்யும் போது தரத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் சரியான விலையிலும் கவனம் செலுத்த வேண்டும். பொருட்கள் சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும்.

வாடிக்கையாளருடன் ஒப்புக்கொள்ளப்பட்ட முறைக்கு ஏற்ப பணம் செலுத்தும் முறையை அமைத்துக்கொள்வது ரொக்க புழக்கத்திற்கு உதவும். தேவை எனில் சப்ளையர்களுடன் பேசி மாற்றம் செய்து கொள்ளலாம். நெருக்கடியாக காலத்தில் இது மிகவும் அவசியம்.

ஒரு சில நிறுவனங்கள் வேண்டும் என்றே சப்ளையர்களுக்கான தொகையை தாமதிக்கலாம். இது உங்கள் சப்ளையர்களை பாதித்து, உங்களுக்கான சரக்கு டெலிவரியையும் பாதிக்கலாம். இதற்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

கையிருப்பு நிர்வாகம்

விற்பனைக்காக கொள்முதல் செய்த பொருட்கள் மற்றும் உற்பத்திக்காக கொள்முதல் செய்தவை கையிருப்பில் அடக்கும். வர்த்தகத்தை பாதிக்காத வகையில் கையிருப்பு அமைய வேண்டும். அதிக ரொக்கம் இதில் முடங்கிவிடக்கூடாது.

போதுமான கையிருப்பையும், போதுமான ரொக்க புழக்கத்தையும் பராமரிப்பது சிறு தொழில்களுக்கு சவாலானது தான். கையிருப்பு, செயல்பாடு மற்றும் ரொக்க புழக்கத்தை சீராக கையாள விரும்பினால், சப்ளை சைன் நிர்வாகம், திட்டமிடல், கையிருப்பு கொள்கை, உற்பத்தி திட்டம் உள்ளிட்டவை அவசியம்.

கையிருப்பு நிதி வசதியையும் நாடலாம். மற்ற வகை கடன்களை விட இது சிறந்தது.

குத்தகை

வர்த்தகத்தில் வாங்குவது அல்லது குத்தகை எடுப்பது தொடர்பான முடிவு முக்கியமானது. குத்தகை என்பது செலவு மிக்கதாக அமையலாம். எனினும், இந்த இரண்டு வாய்ப்புகளையும் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும். முன்பணம் மற்றும் குத்தகை தொகையை கணக்கு பார்க்க வேண்டும். முன்பணத்தை வேறுவிதத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

குத்தகை எனில் ஒரே நேரத்தில் பெரிய தொகையை செலவிட வேண்டும். இது ரொக்க புழக்கத்திற்கு உதவும். சந்தா முறை போன்றவற்றையும் பரிசீலிக்கலாம்.

அரசுத் திட்டங்கள்

சிறு தொழில் நிறுவனங்கள் நெருக்கடியை சமாளிக்க அரசுத் திட்டங்கள் உதவலாம். அவசரகால கடனுதவி திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் இருக்கின்றன. இத்தகைய திட்டங்களை பயன்படுத்திக்கொள்வதன் மூலம் ரொக்கத்தை திறம்பட நிர்வகிக்கலாம்.

ரொக்க மாற்று சுழற்சி

ரொக்கத்திற்கு ரொக்க மாற்று என்பது செயல்பாட்டு மூலதனம் தொடர்பானது. நிறுவனங்கள் பொதுவாக லாபம்- நஷ்டத்தில் கவனம் செலுத்தி ரொக்க புழக்க நிர்வாகத்தை கவனிப்பதில்லை.

பணம் வர வேண்டியது, பணம் செலுத்த வேண்டியது மற்றும் கையிருப்பு ஆகிய மூன்றையும் திறம்பட நிர்வகிக்க வேண்டும்.

நிலையான செலவுகள்

உங்கள் வர்த்தகத்தை பாதிக்காத வகையில், மாறக்கூடிய செலவுகளைக் கண்டறிந்து அவற்றை நீக்க அல்லது குறைக்க வேண்டும். நிலையான செலவுகளை விட மாறக்கூடிய செலவுகளை நிர்வகிப்பது எளிதானது.

மாறக்கூடிய செலவுகளுக்கு பதிலாக நிலையான செலவுகளைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். இதன் மூலம், நிலையான செலவுகளை குறைத்து வர்த்தகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்கள் வர்த்தகத்திற்குத் தேவையான மூலதன தேவைகளையும் கண்டறிந்து செயல்பட வேண்டும்.

மாற்று வருவாய்

வருவாய் குறையும் போது, மாற்று வருவாய் முறைகளை ஆராயலாம். உதாரணத்திற்கு ஏற்றுமதி சந்தையை விட உள்நாட்டு சந்தையை நாடலாம்.

உங்கள் வசம் உள்ள வளங்களைக் கொண்டு மாற்றி வருவாய் ஈட்டும் வாய்ப்புகளை நாடலாம். கொரோனா காலத்தில் பல நிறுவனங்கள் சானிடைசர், முகக்கவசம் போன்ற தயாரிப்பில் ஈடுபடுகின்றன.

மின்னணு பரிவர்த்தனை

சிறு தொழில் நிறுவனங்கள் மின்னணு பரிவர்த்தனைக்கு மாறுவதன் மூலம் ரொக்க புழக்கத்தை திறம்பட நிர்வகிக்கலாம்.

டிஜிட்டல் நுட்பங்கள்

சிறு தொழில்கள் டிஜிட்டல் நுட்பங்களுக்கு மாறுவது செயல்பாடுகளை மேம்படுத்த உதவும். தானியங்கிமயமாக்கல் உள்ளிட்ட வளர்ந்து வரும் நுட்பங்களை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

இந்த வழிகளோடு உங்கள் சூழ்நிலையை ஆராய்ந்து அதற்கேற்ப சரியான முடிவுகளை மேற்கொண்டு நிலைமையை சமாளிக்கலாம்.

ஆங்கில கட்டுரையாளர்: ஜோசப் வர்கீஸ் | தமிழில்: சைபர் சிம்மன்

 (பொறுப்பு துறப்பு : இந்த கட்டுரையில் இடம்பெறும் கருத்துகள் கட்டுரையாளருடையவை, யுவர்ஸ்டோரியின் பார்வையை பிரதிபலிப்பவை அல்ல.)

Latest

Updates from around the world