பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

By kanimozhi
January 13, 2023, Updated on : Fri Jan 13 2023 13:01:32 GMT+0000
பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களின் நான்கு சக்கர வாகனங்களுக்கு 50% வரி சலுகை வழங்குவதற்கான அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களின் நான்கு சக்கர வாகனங்களுக்கு 50% வரி சலுகை வழங்குவதற்கான அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்கள் என பயன்படுத்தப்படும் அனைத்து பேட்டரி வாகனங்களுக்கும் (மின்சார வாகனங்கள்) 100% விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

Bettery

இந்தியாவில் காற்று மாசைக் கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் பதிலாக மின்சாரம் மற்றும் பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் எலெக்ட்ரிக் வாகனம் வாங்குவோருக்கு வரி விலக்கு மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் மாதம் 31ம் தேதி, 2022ம் ஆண்டு, மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் விதி 2 இன் பிரிவின் கீழ், போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களாகப் பயன்படுத்தப்படும் அனைத்து பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்களுக்கும் (மின்சார வாகனங்கள்) 100% வரி விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு அறிவிப்பு:

தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019-க்கு இணங்க பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 100% வரி விலக்கு அளித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகமும் கேட்டுக்கொண்டது.

இந்தநிலையில், 01.01.2023 முதல் 31.12.2025 வரை பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 100% வரி விலக்கு அளித்து இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு நிதித் துறையின் ஒப்புதல் தேவையில்லை எனவும், தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் வரிவிதிப்புச் சட்டம், 1974 பிரிவு 20 மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி அனைத்து பேட்டரி வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் வரிவிதிப்புச் சட்டம், 1974ன் கீழ் பேட்டரியில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத நான்கு சக்கர வாகனங்களுக்கு வாழ்நாள் வரியில் 50% சலுகை வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.