பதிப்புகளில்

விண்வெளியில் ஓர் சீரியல் ஷூட்டிங்...

தங்கள் ஆவணப்பட தொடருக்காக விண்வெளி சென்ற நேஷனல் ஜியோகிராபி தொலைக்காட்சிக் குழு!

Mahmoodha Nowshin
26th Apr 2018
Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share

திரைப்படத்தை தத்ரூபமாக தருவதற்காக இயக்குனர்கள் பல எல்லைக்கு செல்வதுண்டு ஆனால் இங்கு ஒரு தொலைகாட்சி ஓர் ஆவணப்படத் தொடரை எடுப்பதற்காக விண்வெளிக்கே சென்றுள்ளது.

நேஷனல் ஜியோகிராபி சேனல் ’ஒன் ஸ்ட்ரேன்ஜ் ராக்’ ’One Strange Rock’ என்னும் ஓர் ஆவணப்படத்தை எடுத்து கடந்த மாதம் 26 ஆம் தேதி வெளியிட்டது. இது பூமி மற்றும் விண்வெளி பற்றிய ஆவணப்படம் ஆகும். இது 10 பாகங்களாக இந்த தொலைகாட்சியில் வாராவாரம் ஒளிபரப்பப் படுகிறது. இது பூமியை மறு கோணத்தில் காட்டப்படும் தொடர் என்பதால் நாசாவை சேர்ந்த 8 விண்வெளி வீரர்களை கொண்டு இயக்கியுள்ளார் பெரும் திரைப்பட இயக்குனர் டேரன் அரோனோஃப்ஸ்கி.

ஒன் ஸ்ட்ரேன்ஜ் ராக் குழுவினர் மற்றும் விண்வெளி வீரர்கள்

ஒன் ஸ்ட்ரேன்ஜ் ராக் குழுவினர் மற்றும் விண்வெளி வீரர்கள்


இந்த ஆவணப்படத்தின் ஒவ்வொரு பாகமும் ஒரு விண்வெளி வீரர் மற்றும் பூமியின் ஓர் அங்கத்தின் அடிப்படையை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. மேலும் இந்த படத்தின் மையப் புள்ளி பூமியின் கதையை பூமியை விட்டு வெளியில் சென்றவர்கள் விவரிப்பதுதான். இதற்காக இந்த விண்வெளி வீரர்களை பல நாட்கள் தயார் செய்துள்ளது இந்த படத்தின் குழு.

ஆறு கண்டங்களைச் சுற்றியுள்ள 45 நாடுகளில் 900,00 மைல் தூரத்தில் 195 இடங்களில் இந்த தொடருக்கான படப்பிடுப்பு நடந்துள்ளது இதில் விண்வெளியும் அடங்கும்.

“திரையில் 8 விண்வெளி வீரர்கள் தெரிந்தாலும் கேமராவுக்கு பின் இருந்து ஒன்பதாவதாக ஐரோப்பிய விண்வெளி வீரர் பாலோ நெஸ்போலி பணியாற்றியுள்ளார். விண்வெளி காட்சிகளை டேரன் அரோனோஃப்ஸ்கி அறிவுரைக்கேற்ப படம் எடுத்து கொடுத்துள்ளர்,”

என்கிறார் இத்தொடரின் பத்தாவது பாகத்தை இயக்கிய ஜோன்ஸ், ஸ்பேஸ்.காம்-க்கு அளித்த பேட்டியில்.

ரெட் கேமிராவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இயக்குனர் டேரன் அரோனோஃப்ஸ்கி பாலோ நெஸ்போலிக்கு சொல்லிக் கொடுக்க, விண்வெளி காட்சிகளை மிக அழகாக படம் எடுத்துக் கொடுத்துள்ளார். அதிலும் பாலோ படம் எடுக்க சென்றபோது அதே நேரத்தில் அதிர்ஷ்டவசமாக இந்த தொடரில் வரும் விண்வெளி வீரர் பெக்கி விட்சனும் விண்வெளியில் இருந்ததால், அவரது காட்சி விண்வெளியில் மிக துல்லியமாக படம் எடுக்க உதவியதாக குறிப்பிடுகிறார் ஜோன்ஸ்.

image


விண்வெளி வீரர்களே நேரடியாக பங்கேற்று விளக்குவதால் இந்தத் தொடர் மிக உணர்ச்சிகரமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கிறது இத்தொடரின் குழு. மேலும் இத்தொடரை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தொகுத்து வழங்குகிறார்.

இதுவரை ஐந்து பாகங்கள் ஒளிபரப்பான நிலையில் வரும் 30ஆம் தேதி அடுத்த பாகம் ஒளிப்பரப்பாக உள்ளது. மே 28ஆம் தேதியுடன் இந்த தொடர் முடிவுக்கு வரவிருக்கிறது.

இதோடு நிறுத்தி விடாமல் நேஷனல் ஜியோகிராபி சேனல் விர்சுவல் ரியாலிட்டி கேமிராவை விண்வெளியில் செலுத்த நாசா உடன் பணியாற்றி வருகிறது. இதன் மூலம் 3டி மற்றும் 360டிகிரி யில் விண்வெளி பற்றிய குறும்படம் எடுக்க உதவும் என முயற்சி செய்து வருகிறது.


Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share
Report an issue
Authors

Related Tags