பதிப்புகளில்

திருநங்கைகள், வெண்புள்ளி மனிதர்கள் மற்றும் பலரை முன்னேற்றும் அனுபவ் குப்தாவின் திட்டம்!

YS TEAM TAMIL
21st Nov 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
"ஹூ பாங்கி பனைனே உது ஆ முரக் கங்கமா
ஹூ… உதான் சே ஆஜ் தன்மன்மா, ஆஷா மானே ஆஜ் அந்தர்மா
ஆஷா மானே சே அந்தர்மா, ஹூ ஆஷா மானே சே அந்தர்மா
ஆஷா மானே சே அந்தர்மா, அந்தர்மா, அந்தர்மா..."

இந்தப் பாடலின் சுருக்கம் இதுதான். 40 வயதான அங்குரா(பரத்)பட்டீல் என்ற திருநங்கை, இருளில் இருந்து வெளிச்சத்துக்கான தனது பயணம் பற்றி பாடலாக எழுதியுள்ளார். விடுதலைக்கான அவரது வேட்கையும் எதிர்பாலினம் மீதான கவர்ச்சி பற்றியும் அதில் வெளிப்படுத்தியுள்ளார். அங்குரா குரலெடுத்துப் பாடும்போது, அவருடைய இனிமையான குரல் அவருடைய உலகத்துக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது. அந்தப் பாடலின் மொழியாக்கம் இதுதான்.

நான் விடுதலையான பறவைகளுடன் இருக்கவேண்டும் வண்ணமாகவும் விடுதலையின் வண்ணமாகவும் நான் இருக்கிறேன் . 
திறந்த வெளியில் விடுதலைப் பறவையாக பறக்க ஆவலுறுகிறேன்.
என் உடலின் ஒவ்வொரு துகளும் விடுதலையை சுதந்திரத்தை அடைய துடிக்கிறது.

வதோதராவில் வசிக்கும் அங்குரா, மஹாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் பட்டயப் படிப்பு படித்திருக்கிறார். இந்தப் பாடல் அங்குராவின் “சாங்க்ஸ் ஆப் கேரவன்” என்ற ஆல்பத்தில் ஒரு பகுதி. இந்த ஆல்பம் ஒலிப்பதிவு செய்துகொண்டிருந்தபோது அவருடைய அனுபவத்தை அங்குரா பகிர்ந்துகொண்டார். “இந்தியாவில் நடப்பது இதுதான் முதல்முறை. எல்லோரையும் போலத்தான் நாங்களும், எங்களுக்கு குரல்களும்கூட உண்டு. இசைக்கு பாலின வேறுபாடு கிடையாது. என்னுடைய திறமையைப் பார்த்து முதன்முதலாக நம்பிக்கை பிறந்திருக்கிறது” என்கிறார்.

கேரவனின் பாடல்கள் சொந்தக் காலில் நிற்பது பற்றி பாடுகின்றன. இந்த புதுமையான எண்ணத்துடன் வந்த 'ஜீவன் அறக்கட்டளை'க்குப் பின்னால் அனுபவ் குப்தா இருக்கிறார். இந்தியா முழுவதையும் சேர்ந்த 9 மாநிலங்களைச் சேர்ந்த 9 வேறுபட்ட மொழிகளைச் சேர்ந்த 9 திருநங்கைகள் 5 வகையான 13 பாடல்களைப் பாடும் முயற்சி. இந்த திட்டத்தில் 6 வேறுபட்ட இசையமைப்பாளர்கள் 17 மாதங்கள் கடுமையாக உழைத்து, 24 மாதங்கள் நிதிக்காக காத்திருந்து அந்த ஆல்பம் வெளியிடப்பட்டது. இப்புதுமையான இசை முயற்சிக்கு யுஎன்டிபி இந்தியா மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த பிளானட் ரோமியோ பவுண்டேஷனும் ஆதரவு வழங்கின.

இந்த பாடல்கள் ஆல்பம் வெளியிடும் எண்ணம் ஏன், எப்படி உருவானது என்பது பற்றி அனுபவ் கூறுகிறார்:

image


நான் எப்போதும் எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வரும் திருநங்கைகளின் பாடல்களைக் கேட்டிருக்கிறேன். அவர்களுடைய பாடல்கள் சிலவற்றை ஒலிப்பதிவு செய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்டால் அடுத்த தலைமுறையினரும் கேட்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று வியந்திருக்கிறேன். அந்தக் குழுவில் இருந்த சிலரது குரல் இனிமையாக இருக்கும். அவர்கள் பாடகராக தொடர்ந்தால் சிறப்பாக இருப்பார்கள். அப்படித்தான் இந்த ஆல்பம் உருவானது

இந்த ஆல்பத்திற்கான எண்ணம் திருநங்கைகளால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் இசை ஆல்பம் என்ற பெருமையை ஏற்படுத்தியது. அவர்கள் இசைத் திறமை மற்றும் பாடும் திறமையை காட்டுவதோடு கலை கலாச்சாரத்தை பாதுகாப்பதும் பெருமிதம் அளித்தது. ஆல்பத்தின் அடுத்த சிறப்பு பற்றி அங்குஷ் எடுத்துரைத்தார், “ஒரே ஸ்டைலில் மோசமாக பாடுவதுபோல சினிமாவில் காட்டப்படும் திருநங்கைகள் பற்றிய கண்ணோட்டத்தை மாற்ற நினைத்தோம். ஆல்பத்தில் பங்கேற்ற திருநங்கைகள் 13 பேரில் 6 பேர் இசையில் பட்டம் பெற்றவர்கள்”

மீண்டும் தொடக்கத்துக்கு

மீடியாவில் வளர்ச்சியான கேரியரை கொண்டிருந்தார் 31 வயதான அங்குஷ் குப்தா. பிவிஆர் நெஸ்ட், பிவிஆர் சினிமாஸின் சமூக சேவையில் பணியாற்றும்போது பள்ளிகளுக்கான சுற்றுச்சூழல் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். மேலும் எச்ஐவி விழிப்புணர்வு தொடர்பாகவும் பணியாற்றியிருக்கிறார்.

இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். இந்த சமூக மற்றும் ஊடக அனுபவங்களை ஒரே கூரையின்கீழ் கொண்டுவர நினைத்தார். அப்படித்தான் 2010ம் ஆண்டில் ஜீவன் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. வெகுஜன ஊடகம் மற்றும் சமூகப் பிரச்சினைகளில் இடையில் இருக்கும் இடைவெளியைக் குறைப்பதற்கான எண்ணம்தான் ஜீவன் அறக்கட்டளையின் பின்னால் இருந்தது. நீண்டநாட்கள் ஒரு பிரச்சினையில் ஈடுபடுவது. அதில் முழுமையாக கவனம் செலுத்துவது மட்டுமல்ல, தேவையான விழிப்புணர்வையும் நிதியையும் ஏற்படுத்துவதோடு அதை வெகுஜன மக்களிடம் எடுத்துச்செல்வது.

கேரவனின் பாடல்கள் ஜீவன் அறக்கட்டளையின் இரண்டாவது திட்டம். முதல் திட்டம் வெண்புள்ளிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

image


வெண்புள்ளிகள் வெண்குஷ்ட நோயல்ல

இந்தியாவில் வெண்புள்ளிகள் பற்றிய அறிவு அரிதாகவே இருந்தது. அதனை மக்கள் வெண்குஷ்ட நோய் (Leucoderma) என்று நினைத்துக்கொண்டார்கள். வெண்புள்ளிகள் என்பது மரபியல் நிலையில் கண்கள் மற்றும் உடலில் நிறமியை இழப்பதால் ஏற்படுகிறது. வெண்புள்ளியால் தாக்கப்பட்டவர்கள் பார்வை குறைவாக இருக்கும். “அவர்கள் பணிபுரியும் இடங்களில் வேற்றுமையை எதிர்கொண்டார்கள். மக்களில் சிலர் வெண்புள்ளிகள் தொற்று என்று நினைத்தார்கள். அவர்களுக்கு மற்றவர்களைவிட ஐக்யூ குறைவு என்று கருதினார்கள்” என்று அங்குஷ் கூறுகிறார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக பள்ளிகளில் பயிற்சி பட்டறைகளை ஜீவன் அறக்கட்டளை நடத்தியது. வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்த தவறான எண்ணத்தை அந்த பட்டறைகள் ஏற்படுத்தின. மேலும் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நல்ல சூழலை உருவாக்கியது. பயிற்சிப் பட்டறைகள் ஊடக நிறுவனங்களில் நடத்தியது பத்திரிகையாளர்கள் மத்தியில் வெண்புள்ளிகள் பற்றி நல்லெண்ணத்துடன் புரிந்துகொள்ள உதவியாக இருந்தது. ஜீவன் அறக்கட்டளை சிறு சந்திப்புகளை நடத்தி தோல் நலம், பார்வைக் குறைபாடு மற்றும் அரசு நலத்திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு கவுன்சிலிங் கொடுத்தார்கள். அல்பினிசம் எனப்படும் வெண்புள்ளி நோயைப் பற்றி நன்றாக புரிந்துகொள்ள ஏழைப் பெற்றோருக்கு அது உதவியாக இருந்தது.

வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்ட குழுவினரிடத்திலும் ஜீவன் அறக்கட்டளை விழிப்புணர்வை ஏற்படுத்தியது. வெண்புள்ளி பாதிப்புக்குள்ளான பாக்தி தாலட்டி மீடியாவில் பணிபுரிகிறார். அவர் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர், அதுபற்றிய கட்டுரைகள் எழுதிவருகிறார்.

image


”நான் பயணம் செய்யும்போது குழந்தைகள் அல்ல, பெரியவர்கள்தான் என்னைக் கண்டு விலகுவார்கள். அதுபற்றி எனக்கு கவலை ஏற்பட்டதில்லை. வெண்புள்ளி பற்றி மக்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஜீவன் அறக்கட்டளைதான் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்வர்களை, சந்திக்கும் மக்களுக்கு எப்படி எதிர்கொள்வது என்று சொல்லிக்கொடுத்தது. என் வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையையும் சந்திக்கவில்லை. ஆனால் பிறகு நான் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டதைப் பார்த்தேன். அது என் கண்களைத் திறந்தது” என்று அனுபவத்தைப் பேசுகிறார் பாக்தி.

ஜீவன் அறக்கட்டளை இன்று வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்ட 300 பேருடன் பணியாற்றிக்கொண்டிருக்கிறது. அனுபவ் பேசும்போது, “நாங்கள் ஐநாவுடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டுவருகிறோம். முதன்முறையாக ஐநா ஜூன் 13ம் தேதியை வெண்புள்ளிகள் விழிப்புணர்வு தினமாக அறிவித்தது. வெண்புள்ளி பற்றி விரிவான கையடக்கப் புத்தகம் ஒன்றை மக்களுக்காக வெளியிட திட்டம் வைத்திருக்கிறோம்” என்று குறிப்பிடுகிறார்.

சவால்களும் அடுத்த திட்டமும்

ஆரம்பத்தில் இருந்தே முதலீடு என்பது அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வந்திருக்கிறது. “சாங்க்ஸ் ஆப் கேரவன்” ஆல்பத்தை வெளியிடுவதற்கு நீண்ட நாட்கள் ஆனதற்குக் காரணம் நிதிப் பற்றாக்குறைதான். அனுபவ்வின் எண்ணத்தை எல்லோரும் புரிந்துகொண்டார்கள். ஆனால் நிதியுதவி செய்ய யாரும் முன்வரவில்லை. லெஸ்பியன், திருநங்கை, இருபாலினம் ஆகியவர்களுக்காக பணியாற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த பிளானட் ரோமியோ அமைப்பு 5 ஆயிரம் ஈரோஸ் நிதியுதவி செய்தது. பெண்களுக்கான சமவுரிமை, வறுமை ஒழிப்ப, சுற்றுச்சூழலுக்காகப் பாடுபடும் யுஎன்டிபி இந்தியாவும் உதவியது. குழு முதலீடு மூலம் 26 ஆயிரம் ரூபாய் கிடைத்தது.

தன்னுடைய தந்தையிடம் இருந்து உதவி கிடைக்கவில்லையென்றால் ஜீவன் அறக்கட்டளை சாத்தியமாயிருக்காது என்கிறார் அனுபவ். “முதலீடு சரியான நேரத்தில் கிடைத்தால், எங்களுடைய திட்டங்களை முறையாக செயல்படுத்தமுடியும் என்று நினைக்கிறேன். எங்களுக்கான செயல்முறை செலவுகள் குறைவுதான். இங்கு எல்லோருமே முழுநேர வேலையில் இருந்து வருகிறார்கள்”

தன் குழுவினரைத்தான் வலிமையாக நினைக்கிறார் அனுபவ். ஜீவன் அறக்கட்டளை துணைத் தலைவர் சமீர் கார்க், வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர். “ நான் சமீரை ஒரு மாலில்தான் சந்தித்தேன். என்னுடன் அழைத்துவந்துவிட்டேன். ஏனென்றால் அந்த நாளில்தான் வெண்புள்ளி விழிப்புணர்வுக்காக பணியாற்றவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. என்னுடைய இடது மற்றும் வலதுகரங்களாக அவர் இருக்கிறார். மிகவும் கடுமையான உழைப்பாளி. எடுத்துக்கொண்ட லட்சியத்திற்காக பாடுபடுபவர். எங்களிடம் மிகச்சிறந்த குழு இருக்கிறது” என்று உற்சாகம் பொங்கப் பேசுகிறார் அனுபவ். சமீர், அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார்.

image


எதிர்வரும் ஆண்டுகளில் அனுபவ், மாஸ்குலர் டிஸ்ட்ராபி எனப்படும் தசைச் சிதைவு நோய் மற்றும் வளர்ச்சிக்குறைபாடு விழிப்புணர்வுக்காக திட்டம் வைத்திருக்கிறார். அதற்கான தேவையான வசதிகளை இந்தியாவில் உருவாக்குவதுதான் அவருடைய இலக்கு. அதற்காக வேறெங்கும் போகவேண்டியதில்லை. சமூகம் மற்றும் அரசுகளிடையே பெரும் மனமாற்றத்தைக் கொண்டுவந்துவிடமுடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது.

ஆக்கம்: Snigdha Sinha தமிழில்: தருண் கார்த்தி

இணையதள முகவரி: Songs of the Caravan, Songs of the Caravan Facebook page, Albinism India Group Facebook page

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags