3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட் வாங்கி கொடுத்த சிறுமி!

12 வயது நிஹாரிகா த்விவேதி தனது சேமிப்புத் தொகையான 48,530 ரூபாய் கொடுத்து மூன்று தொழிலாளர்கள் விமானம் மூலம் சொந்த ஊர் திரும்ப உதவியுள்ளார்.

22nd Jun 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் தினக்கூலிகளுக்கும் தங்குமிடம், உணவு, குடிநீர் போன்றவற்றை எத்தனையோ நல்லுள்ளங்கள் வழங்கி உதவி வருகின்றனர்.


அப்படிப்பட்ட நல்லுள்ளம் படைத்தவர்களில் ஒருவர்தான் நொய்டாவைச் சேர்ந்த 12 வயதான நிஹாரிகா த்விவேதி. இவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மூன்று புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்துள்ளார்.


நிஹாரிகா புலம்பெயர் தொழிலாளர்கள் படும் வேதனையைக் கண்டு மனம் வருந்தினார். இவர் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்து உதவிய மூவரில் ஒருவர் புற்றுநோயாளி. இவர்கள் ஜார்கண்டில் உள்ள தங்களது வீட்டைச் சென்றடைய உதவியுள்ளார்.

1
“தொலைக்காட்சியில் வரும் செய்திகள் மூலம் இவர்களது நிலையைத் தெரிந்துகொண்டேன். இவர்களது வேதனையைக் கண்டு இவர்கள் வீட்டிற்குச் செல்ல உதவவேண்டும் என்று தீர்மானித்தேன். இவர்கள் நாட்டு நலனில் பங்களித்துள்ளனர். தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் இவர்களுக்கு உதவுவது நமது கடமை. என்னுடைய சேமிப்பில் இருந்து 48,530 ரூபாய் செலவிட்டு இந்த மூவருக்கும் உதவினேன். இவர்களில் ஒருவர் புற்றுநோயாளி,” என்று ஏஎன்ஐ நியூஸ் இடம் நிஹாரிகா தெரிவித்துள்ளார்.

இவரது இந்தச் செயலைக் கண்டு இவரது ட்விட்டர் பதிவை மறுட்வீட் செய்துள்ள ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்,

“இந்த இளம் வயதில் அவர் மிகவும் பொறுப்புள்ளவராக நடந்துகொண்டுள்ளார். நான் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தொழிலாளர்கள் பற்றிய செய்திகளைக் பார்க்கும்போது அவர் மிகவும் கவலைப்படுவார். ஒரு நாள் விமானத்தைப் பார்த்துக்கொண்டே அவர்களை ஏன் நாம் விமானத்தில் அனுப்பக்கூடாது என்று கேட்டார். தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்று கூறி தனது சேமிப்புத் தொகையைக் கொடுத்தார். எங்கள் 12 வயது மகள் இப்படிச் சொன்னபோது எங்களுக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது,” என்று நிஹாரிகாவின் அம்மா சுர்பி த்விவேதி கூறியதாக `லாஜிக்கல் இந்தியன்’ தெரிவித்துள்ளது.


ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இந்தத் தொழிலாளர்களின் துயரத்தை நாம் அனைவரும் பார்த்து வருகிறோம். இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகள் கூட கிடைக்காமல் நடந்தே ஊர் திரும்பி வருகின்றனர்.


கட்டுரை: THINK CHANGE INDIA

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற

Our Partner Events

Hustle across India