பதிப்புகளில்

போலி செய்திகள் பரவுவதை தடுக்க முயற்சி மேற்கொண்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி!

2009-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் அணியைச் சேர்ந்த ரெமா ராஜேஸ்வரி, தெலுங்கானாவின் வனபார்த்தி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புறப் பாடகர்களையும் முரசடிப்பவர்களையும் போலி செய்திகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நியமித்தார்.

YS TEAM TAMIL
10th Jul 2018
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

ஒரு காலத்தில் செய்தி என்பது அவ்வப்போதைய நிகழ்வுகள் குறித்த தகவல்களாகவே இருந்தது. ஆனால் சமீபத்தில் அளவிற்கதிகமான போலி செய்திகள் பரவி வருகின்றன. 2018ம் ஆண்டில் போலி செய்திகள் என்கிற வார்த்தை அடிக்கடி கேட்கப்படும் வார்த்தையாக மாறியுள்ளது. இது தற்போது ஜனநாயகத்திற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. 

சமீபத்தில் மக்கள் கும்பலாக சேர்ந்து நடத்தும் தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கிறது. இதை அடுத்து டிஜிட்டல் தளங்கள் மற்றும் செயலிகளில் கவனம் செலுத்தி இந்திய அரசாங்கம் வதந்திகள் பரவுவதை தடுக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு வாட்ஸ் அப் நிறுவனத்திடம் வலியுறுத்தியது. ஆனால் ஐபிஎஸ் பெண் அதிகாரி ஒருவர் இந்த நடவடிக்கைகளுக்காக காத்திராமல் போலி செய்திகளை தடுக்கும் செயலில் களமிறங்கியுள்ளார்.

இந்தியாவில் சமீபத்தில் அதிகரித்து வரும் தாக்குதல் சம்பவங்களுக்கிடையில் 2009-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் அணியைச் சேர்ந்த ரெமா ராஜேஸ்வரி தெலுங்கானாவில் உள்ள வனபார்த்தி மாவட்டத்தில் ஒரு இளைஞனைக் காப்பாற்றினார். ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட அந்த நபரின் புகைப்படத்துடன் அவர் குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர் என்கிற தகவல் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியதால் ஆத்திரமடைந்த மக்கள் அந்த இளைஞனின் வீட்டு வாசலில் கும்பலாக கூடினர். ரெமா அங்கு செல்லாமல் இருந்திருந்தால் மக்கள் நிச்சயம் அவரை தாக்கி கொன்றிருப்பார்கள்.

அந்த நபரின் நெருங்கிய நண்பரே ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட போலியான புகைப்படத்துடன் வதந்தியை பரப்பியது விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் சற்றும் யோசிக்காமல் தாக்க முற்பட்டனர். ரெமாவின் குழுவினர் குற்றவாளியின் மீது தாக்குதல் நடக்காதவாறு தடுத்தனர். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

”மோசமான விஷயங்களை எளிதாக நம்பிவிட நாம் பழகிவிட்டோம். ஆனால் தகவல்களை சரிபார்ப்பது முக்கியம். வாட்ஸ் அப் வாயிலாக ஒரு தகவலை நீங்கள் பெற்றால் சற்று நிதானித்து சிந்திக்கவும். அந்தத் தகவலை சரிபார்க்கவும். போலியான தகவல் என்று தோன்றினால் அதை அடுத்தவருக்கு அனுப்ப வேண்டாம்,” என்று ரெமா இண்டியா டுடே-க்கு தெரிவித்தார்.
image


2009-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக சேர்ந்த ராஜேஷ்வரி ஆந்திரப்பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டார். 2014-ம் ஆண்டு தெலுங்கானா தனி மாநிலமாக உருவாகி இரண்டாக பிரிந்தபோது அங்கே இருந்தார். ஆனால் நாடு முழுவதும் நடக்கும் சமீபத்திய நிகழ்வுகள் அவரை கவலைக்குள்ளாக்கியது. வாட்ஸ் அப் வாயிலாக பரப்பப்படும் வதந்திகள் வன்முறையையும் கலவரத்தையும் தூண்டக்கூடிய சக்தி கொண்டது என நினைத்தார். 

”இந்தப் பகுதி எளிதாக வன்முறை ஏற்படக்கூடிய பகுதியாகும். அதனால் வாடஸ் அப் குறித்து கவலை கொள்கிறோம். சிறு தூண்டுதல் ஏற்பட்டாலும் வன்முறை வெடித்துவிடும்,” என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ்-க்கு தெரிவித்தார்.

500-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி அமர்வுகள் ஏற்பாடு செய்தார். நூற்றுக்கணக்கான கிராம தலைவர்களுடன் பேசினார். அவர் அனுப்பும் மெசேஜ்களில் கிராம மக்கள் ஆர்வம் காட்டாததால் ரெமா தவறான தகவல்கள் பரவும் பிரச்சனையை சரிசெய்ய பாரம்பரிய தகவல் பரப்பும் முறையை அமல்படுத்தத் தீர்மானித்தார். போலியான செய்திகள் பற்றிய பாட்டுகளை எழுதி பாடுவதற்காக நாட்டுப்புறப் பாடகர்களை பணியிலமர்த்தினார்.

இவரது குழுவினர் நிஜ செய்திகளை பரப்புவதிலும் வதந்திகளை தடைசெய்வதிலும் திறம்பட பணியாற்றினர். ரெமாவின் அதிகாரத்திற்கு உட்பட்ட 400 கிராமங்களில் போலியான செய்திகளால் ஏற்படும் சிக்கல்கள் எதுவும் இல்லை. தகவல் தொடர்பு சிறப்பாக இருப்பதை உறுதிசெய்ய தனது அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட கிராமங்களை ஒதுக்கினார். இவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை கிராமங்களை பார்வையிட்டு கிராம மக்களுடன் ஒன்றிணைந்தனர்.

”இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மெசேஜ்களை சரிபார்க்காமல் அனுப்பவேண்டாம் என எடுத்துரைத்தாலும் இந்த நோக்கம் நிறைவேற அவகாசம் தேவைப்படும்,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக