பதிப்புகளில்

நெட்வொர்க்குகளை ஒருங்கிணைத்து இந்தியாவின் இணையதள பிரச்சனைக்கு தீர்வளித்த ஸ்ரீராம்குமார்!

இந்தியாவில் நிலவும் இணையதளத்தின் வேகம் மற்றும் இணைப்பு பிரச்சனைகளுக்காக நெட்வொர்க் மற்றும் ப்ராட்காஸ்டிங் பகுதியில் பணியாற்றுகிறார் ஹார்டுவேர் இன்ஜினியரான ஸ்ரீராம்குமார்

5th May 2017
Add to
Shares
107
Comments
Share This
Add to
Shares
107
Comments
Share

ஸ்ரிக்ஸ் ஸ்ரீராம்குமார் சென்னையிலுள்ள க்ரெசெண்ட் பொறியியல் கல்லூரியில் 2004-ம் ஆண்டு பட்டம் பெற்றார். 2010-ம் ஆண்டு அவரது மூன்று நண்பர்களுடன் இணைந்து தொழில் தொடங்க திட்டமிட்டார். ஆறு வருடங்கள் கழித்து மூவரும் ஒரு திட்டத்தை உருவாக்கினார். ஆனால் சில தடங்கல்கள் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டு குழுவிலிருந்த இருவர் விலகினர். இந்த சமயத்தில்தான் ஸ்ரீராமின் ஸ்டார்ட் அப் பயணம் துவங்கியது. கல்லூரி நாட்களிலிருந்தே ஹார்ட்வேரில் அவருக்கு விருப்பம் இருந்தது. 

image


மோட்டோரோலா மற்றும் டெக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்து ப்ராட்காஸ்டிங் மற்றும் நெட்வொர்க் டிவைஸ் குறித்து தெரிந்துகொண்டார். இது Watchy Tech (தற்போது Zifilink) துவங்க அடித்தளமாக அமைந்தது.

சென்னையைச் சேர்ந்தவர்

ஸ்ரீராம் சென்னையில் 1983-ம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை சென்னையில் டெலிகாம் துறையில் பணியாற்றிவந்தார். வெளிப்படையாக பேசுபவராகவே வளர்ந்தார். பத்தாம் வகுப்பு வரை சிபிஎஸ்ஈ பள்ளியில் படித்தார். அவரது இளம் பருவத்தில் அவரை நல்வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கு கடமைப்பட்டதாக உணர்ந்தார்.

1994-95-ம் ஆண்டிலேயே அவரது பள்ளியில் 30 கம்ப்யூட்டர்கள் இருந்தது. பள்ளியில் எட்டாம் வகுப்பிலிருந்துதான் கம்ப்யூட்டர் வகுப்புகள் எடுக்கப்படும். ஆனால் அவரது தந்தையின் அலுவலகத்திலுள்ள மெயின் ஃப்ரேம் கம்ப்யூட்டரில் ஏழாம் வகுப்பு படிக்கும்போதே Foxpro ப்ரோக்ராம்களை ரன் செய்யத் துவங்கினார். கோடை விடுமுறையின்போது அவரது பாட்டி சென்னையில் நடத்திவந்த பள்ளியிலுள்ள கம்ப்யூட்டரில் ப்ரோக்ராமிங் கற்றுக்கொண்டார். பத்தாம் வகுப்பு படிக்கும்போது BASIC-ல் ஒரு சிறிய கேம் உருவாக்கினார். 2001-ல் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் சேர்ந்தார்.

image


கல்லூரி முதலாமாண்டு படித்துகொண்டிருந்தபோது அவரது வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கியதால் அதிக நேரம் செலவிட்டு ப்ரோக்ராம் செய்தார். அதை வலைதளத்தில் வெளியிட்டார். அவரது நண்பர்கள் அவற்றை பதிவிறக்கம் செய்து பெயரை மாற்றி அவர்கள் உருவாக்கிய ப்ராஜெக்டாக சப்மிட் செய்தனர். ஸ்ரீராம் அவரது நண்பர்களுடன் இணைந்து பணம் சம்பாதிக்க எண்ணி அசெம்பிள் செய்யப்பட்ட கம்ப்யூட்டர்களை விற்பனை செய்யத் துவங்கினார். இதற்காக அருகிலுள்ள சைபர் காஃபேக்களை அணுகினர். கம்ப்யூட்டர் வாங்க விரும்புபவர்களுக்கு இவர்களை பரிந்துரைத்தால் அவர்களுக்கு கமிஷன் அளிப்பதாக தெரிவித்தனர். ஒரு கம்ப்யூட்டருக்கு 1000 ரூபாய் லாபம் கிடைத்தது. டயல் அப் லைன் கட் ஆகிவிடுவது, மாடம் ட்ரைவர் பழுதாகி விடுவது போன்ற வழக்கமான பிரச்சனைகளை சரிசெய்யத் துவங்கினார்கள். இதிலிருந்தும் பணம் சம்பாதித்தனர்.

சென்னை உட்பட அனைத்து நகரங்களிலும் கேபிள் டிவி செட்டாப் மூலமாகவே இருக்கவேண்டும் என்று இந்திய அரசாங்கள் கட்டுப்பாடு விதித்தது. இரண்டு மாதங்களில் முற்றிலும் டிஜிட்டலாகிவிடும் என்று அறிவித்தது. அவரது கல்லூரி நண்பர்களுடன் இணைந்து வீட்டில் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்களுக்காக மென்பொருள் சார்ந்த செட்டாப் பாக்ஸை உருவாக்க நினைத்தார். இதற்காக ஓபன் சோர்ஸ் அப்ளிகேஷன் மற்றும் டிவி ட்யூனர் கார்ட் பயன்படுத்தினர். இவர்களது கல்லூரி இவர்கள் ப்ராஜெக்டை தமிழக அரசாங்கத்திடம் அனுப்பியது. அந்த வருடத்திற்கான சிறந்த ப்ராஜெக்டாக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் அதை செயல்படுத்த நிதியுதவியையும் அரசாங்கம் அளித்தது.

செட்டாப் பாக்ஸ்

2004-ல் Sify-யில் சேர்ந்தார். இந்நிறுவனம் செட்டாப் பாக்ஸ் பகுதியில் செயல்பட நினைத்து அதன்பின் முயற்சியை கைவிட்ட நேரம் அது. Sify மெசன்ஜரில் பணிபுரிந்தார். அதன் வீடியோ கான்ஃபரன்சிங் சேவைக்கு பொறுப்பேற்றார். துரதிர்ஷ்டவசமாக நுகர்வோர் சந்தையில் இந்த ப்ராடக்ட் அறிமுகப்படுத்தப்படவில்லை. 

Sify-ல் ஒரு வருடம் பணியாற்றியபின் செட்டாப் பாக்ஸ் சார்ந்த அனுபவமிருந்ததால் மோட்டோராலா பெங்களூருவில் உருவாக்கிய செட்டாப் பாக்ஸ் யூனிட்டில் இணைந்தார். முதலில் செட்டாப் பாக்ஸ் டெஸ்டிங் குழுவில் பணியாற்றினார். ஆறு மாதங்களுக்கு பிறகு நடந்த சம்பவம் அவரது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது. 

image


”வாடிக்கையாளர்களில் ஒருவரது செட்டாப் பாக்ஸ் ரீஸ்டார்ட் ஆகிக்கொண்டிருந்தது. டெவலப்மெண்ட் குழு அமெரிக்காவில் இருந்தது. நாங்கள் அவர்களது டெஸ்ட் கேஸ் எழுதியிருந்ததால் பணியை எங்களிடம் ஒப்படைத்தனர். அரை நாளில் பிழையை (bug) கண்டறிந்தோம்.”

மோட்டோரோலா இந்தியாவில் டெவலப்பர் குழுவை தொடங்கியதால் அவர்களது செட்டாப் பாக்ஸ் யூனிட்டில் இணைந்தார். அப்போது இந்தியாவிற்கு மாற்றப்பட்ட ஒரு டெவலப்மெண்ட் ப்ராஜெக்டை ஏற்றுக்கொள்ள அமெரிக்கா சென்றார். மோட்டோரோலா அறிமுகப்படுத்தும் செட்டாப் பாக்ஸ்கள் சீனாவின் Foxconn சென்டர்களில் தயாரிக்கப்படுகிறது. Foxconn-ல் ஷாப் ஃப்ளோர் அமைப்பது ஸ்ரீராமின் பணியாகும். மொத்த ஷாப் ஃப்ளோர் மென்பொருளும் மோட்டோரோலாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இவை கண்டெண்ட்களை டீக்ரிப்ட் செய்யக்கூடிய ரகசிய கீ கொண்ட IP செட் டாப் பாக்ஸ்கள். 

செட் டாப் பாக்ஸ்களை Foxconn உற்பத்தி செய்தபோதிலும் மோட்டோரோலாவின் மென்பொருளால் இயக்கபடும் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டு சீரியல் நம்பர் ஒதுக்கப்படும்.

செட்டாப் பாக்ஸில் வீடியோ வரும்போது அது என்க்ரிப்ட் செய்யப்பட்டிருக்கும். செட்டாப் பாக்ஸில் உள்ள ரகசிய கீ வீடியோவை டீக்ரிப்ட் செய்யும். இந்த கீ ஒவ்வொரு செட்டாப் பாக்ஸிலும் வேறுபட்டிருக்கும். இதை அமெரிக்க ஃபெசிலிட்டிதான் உருவாக்கியது. கீ ரகசியமாக மாற்றப்படுவதற்கான PKCS மற்றும் இதர தரங்களை இந்த மென்பொருள் உறுதிசெய்யும்.

image


ஸ்ரீராம் இந்த மென்பொருளிற்கு பொறுப்பாக இருந்தபோது அது சிறப்பாக செயல்படவில்லை. பல்வேறு உற்பத்தி ஃபெசிலிடிக்களிலும் பயன்படுத்தும் விதத்தில் அவரும் அவரது குழுவினரும் இணைந்து டிஸ்ட்ரிப்யூடட் டேட்டாபேஸ் உருவாக்கினர்.

மோட்டோரோலாவில் இரண்டரை வருடங்கள் பணியாற்றியபின் வளர்ச்சியில்லாத காரணத்தால் Tektronix-ல் சேர்ந்தார். வீடியோ ப்ராடெக்டுகளை டெஸ்ட் செய்யும் கருவியை டெக்ஸ்ட்ரானிக்ஸ் தயாரித்தது. உதாரணத்திற்கு செட்டாப் பாக்ஸ் உருவாக்கும்போது சரியான MPEG ஸ்ட்ரீம் வரும்போதும் செட்டாப் பாக்ஸ் வேலைசெய்கிறதா என்பதை உறுதிசெய்யவேண்டும். சில நேரங்களில் பிரச்சனை ஏற்படலாம். சிஸ்டத்தில் செலுத்தக்கூடிய க்ளீன் ஸ்ட்ரீம்களையும் கரப்டட் ஸ்ட்ரீம்களையும் உருவாக்கி சிமுலேட் செய்ய டெக்ட்ரானிக்ஸ் உதவுகிறது.

பொதுவாக ப்ராட்காஸ்டிங் மற்றும் மொபைல் துறையில் டெஸ்டிங்கிற்கு இந்த ப்ராடக்டை பயன்படுத்துவார்கள். டெக்ட்ரானிக்ஸில் ப்ராட்காஸ்டிங் மற்றும் MPEG துறை குறித்து தெரிந்துகொண்டார். உலகளவில் 2020-ல் ஒட்டுமொத்த நுகர்வோர் இணைய ட்ராஃபிக்கில் 82 சதவீதம் IP வீடியோ ட்ராஃபிக் இருக்கும். 2015-ம் ஆண்டைவிட இது 70 சதவீதம் அதிகமாகும். High throughput நெட்வொர்க்கை எப்படி உருவாக்குவது என்றும் அதிலுள்ள சிக்கல்கள் குறித்தும் ஸ்ரீராம் அறிந்திருந்தார். இந்த நிபுணத்துவத்தைக் கொண்டு ஸ்டார்ட் அப் துவங்க திட்டமிட்டார்.

ஸ்டார்ட் அப் துவக்கம்

2004-ல் ஸ்ரீராம் அவரது மூன்று நண்பர்களும் இணைந்து 2010-ல் தொழில் துவங்க தீர்மானித்தன்ர். பட்டப்படிப்பு முடித்த பிறகு அடிக்கடி சந்தித்து விவாதித்தனர். 2010-ல் மூன்று நண்பர்களில் இருவரும் வேலையை துறந்துவிட்டனர். சில மாதங்கள் கழித்து ஸ்ரீராம் அவர்களுடன் இணைந்தபின்பு மூவரும் திட்டமிட்டனர்.

டிவி அல்லது செட்டாப் பாக்ஸுடன் இணைத்து ஃபோட்டோ, வீடியோ போன்ற பெர்சனல் விஷயங்களை சேமிப்பதற்கான ஒரு ஹார்ட்வேர் சாதனத்தை உருவாக்கினர். இந்த சாதனம் இணையதளத்தில் இணைக்கப்பட்டு ஃபேஸ்புக் போன்ற தளங்களில் ஒவ்வொரு முறை இமேஜ் பதிவேற்றம் செய்யும்போதும் ஒன்றிணைந்துவிடும். ஃபோட்டோக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு லோக்கல் மெமரியில் சேமிக்கப்படும். ஸ்ரீராம் கூறுகையில், 

”ஹார்ட்வேர் பகுதியில் பணிபுரியத் துவங்கியபோது காம்பேக்ட் ஹார்டுவேர், குறைந்த வோல்டேஜ், ஓபன் சோர்ஸ் எம்பெடட் போர்ட்கள் பற்றாக்குறை போன்றவற்றில் அதிக சிக்கல்கள் இருப்பதை உணர்ந்தோம். எனவே இந்த முயற்சியை கைவிட்டோம்.” என்றார்.

இதற்கிடையே கூகுள் நிறுவனம் கூகுள் டிவியை அறிமுகப்படுத்தியபோது அதன் செட் டாப் பாக்ஸில் எழுதப்பட்டிருக்கும் அப்ளிகேஷன் குறித்து சிந்திக்கையில் லைவ் ஸ்ட்ரீமிங் வெட்டிங் குறித்த எண்ணம் தோன்றியது. அதை முயற்சிக்கையில் தொலைதூரத்தை வெப்காமிராவில் ஃபோகஸ் செய்வது, தெளிவற்ற ஆடியோ, மோசமான இணையதள இணைப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார். ஹை டேட்டா கண்டெண்ட்களை இணையதளம் வாயிலாக அனுப்புவதில் உள்ள பிரச்சனைகளுக்கு யாரும் தீர்வுகாணவில்லை என்பதை உணர்ந்தார். 

”பல 3ஜி கனெக்‌ஷன்களை ஒன்றிணைத்து அதிக திறனை (high capacity) கொண்டுவருவது குறித்து சிந்தித்தோம்.”

அதிவேகம் மற்றும் நம்பகமான இணையதளம்

2011 மற்றும் 2012-ல் அதிக அலைவரிசையைப் பெற பல நெட்வொர்க்குகளை இணைப்பது குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார் ஸ்ரீராம். திருமண லைவ் ஸ்ட்ரீமிங் நிறுவனமான Watchy Tech (தற்போது Zifilink) என்கிற ஸ்டார்ட் அப்பை துவங்கினார். நெட்வொர்குகளை இணைத்து டேட்டா ஸ்பீடை அதிகரித்தபோதும், அவர்களுடையது SD ப்ராடக்ட். சந்தை HD ப்ராடக்டிற்கு மாறியிருந்ததால் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஸ்ரீராம் கூறுகையில்,

”என்னிடம் இரண்டு வாய்ப்புகள் இருந்தது. ஒன்று HD ப்ராடக்டை உருவாக்குவது. அல்லது நெட்வொர்க் அக்ரிகேட்டரில் மட்டும் கவனம் செலுத்தி செயல்படுவது. நாங்கள் இரண்டாவது முயற்சியைத் தேர்ந்தெடுத்தோம்.”

2014-ல் மிகப்பெரிய ப்ராண்டுகள் போர்டபிள் என்கோடர்ஸை அறிமுகப்படுத்தியது. முன்பு போலல்லாமல் இவற்றை நிகழ்வுகளுக்கு கையில் எடுத்துச் செல்லலாம். SD கார்டில் வைக்கவேண்டிய அவசியமில்லை. சந்தையில் இந்த என்கோடர்கள் இருக்கும் நிலையில் வீடியோக்களை இணையதளத்தில் இணைக்க ப்ராண்டுகளுக்கு உதவி தேவைப்பட்டது. இந்நிலையில்தான் இந்த ப்ராண்டுகளின் விநியோகஸ்தர்கள் Watchy Tech-ஐ தீர்விற்காக அணுகியதால் இந்நிறுவனம் சந்தையில் ப்ராடக்டை அறிமுகப்படுத்தியது.

Watchy Tech-ன் தொழில்நுட்பம்

ஸ்ரீராம் மற்றும் அவரது குழுவினரும் Leopard Board-ல் துவங்கி பின்னர் BeagleBone மாறினர். ARM சார்ந்த தளத்திலிருந்து இண்டெல் சார்ந்த தளத்திற்கு நிறுவனம் மாறியது. ஏழு நெட்வொர்க்குகளை இணைத்திருந்ததால் ப்ராடக்ட் ‘Bond 007’ என பெயரிடப்பட்டது.

சமீபத்தில் Zifilink என மறுப்ராண்ட் செய்யப்பட்டது. Linux மற்றும் Python பயன்படுத்தப்பட்டது. பெரும்பாலான டூல்கள் ஓபன் சோர்ஸ் செய்யப்பட்டவை. “ஒரு குழு எம்பெடட் சாதனங்களிலும் சிஸ்டம் ப்ரொக்ராமிங்கிலும் பணிபுரிந்தது. மற்றொரு குழு க்ளௌட் காம்பொனெண்டில் பணிபுரிந்தது. ஒட்டுமொத்த தீர்விற்கும் நெட்வொர்க் ப்ராக்சியை அணுகக்கூடிய க்ளௌட் காம்பொனெண்ட் ரன் ஆகவேண்டும்.” என்றார் ஸ்ரீராம்.

image


100 mbps ப்ராட்பேண்ட் இணைப்பு உள்ளபோதும் வணிகங்களுக்கு பேக்அப் அவசியம். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று மணி நேர தடங்கல்கூட மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் மீடியா சந்தையில் அல்லாமல் பொது சந்தையில் கவனம் செலுத்துகிறது. எட்டு வெவ்வேறு நெட்வொர்க்குகளை இணைப்பதால் நெட்வொர்க் டவுன் டைமை Zifilink குறைக்கிறது. ப்ராட்பேண்ட் அல்லாத வயர்லெஸ் பயன்படுத்தப்படும் பகுதிகளிலும் ப்ராடக்டை எளிதாக விற்பனை செய்யமுடிகிறது என்றார் ஸ்ரீராம். இந்த வருடம் நேபால், பங்களாதேஷ், இந்தியா ஆகிய பகுதிகளில் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. அமெரிக்காவிலும் செயல்பட விரும்புகிறது.

ஹார்ட்வேரையும் தாண்டி ப்ராட்காஸ்டிங் மற்றும் நெட்வொர்க் பகுதி ஸ்ரீராமிற்கு அதிக உற்சாகமளிக்கிறது. இன்று வரை ஐந்து க்ளோபல் பேடெண்ட்களை இந்நிறுவனம் பதிவு செய்துள்ளது. இதில் ஒன்று மொபைல் ஃபோன்களில் நெட்வொர்க்கை ஒருங்கிணைப்பது குறித்தது.

சவால்கள் நிறைந்த பயணம்

R&D மற்றும் சப்ளை செயினிற்காக முதலீடு செய்வது, அன்றாட செயல்பாடுகள் என அனைத்து செலவுகளையும் சமன்படுத்துவது ஸ்ரீராமிற்கு மிகக் கடினமான விஷயமாக இருந்தது. அவர் கூறுகையில்,

உங்களிடம் பணப் பற்றாக்குறை இருக்கும் போது மிகப்பெரிய அளவில் திட்டமிடுவது மிகவும் கடினமாகும்.

சவால்களை சமாளிக்க முதலீட்டாளர்களும் குழுவினரும் பெரிதும் உதவியதாக தெரிவித்தார் ஸ்ரீராம். நம்பிக்கையுடன் செயல்பட்டு அவரது நிறுவனம் முன்னேறியது. ஸ்ரீராம் கூறுகையில், 

”Watchy Tech-க்கு சந்தையில் வரவேற்பு கிடைக்கும் வரை மிகக்குறைந்த சம்பளத்தையே பெற்றுக்கொண்டோம். தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் பல தியாகங்களை செய்யவேண்டியிருந்தது. அதுபோன்ற சந்தர்ப்பங்களில் குடும்பத்தினருக்கு பல விளக்கங்களை அளிக்கவேண்டியிருந்தது. இப்போதைய நிலையை அடைய இரண்டு வருடங்கள் போராடவேண்டியிருந்தது.”

ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்க பல ஆண்டுகள் ஆகும். ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைய வெவ்வேறு வழிகளை கண்டறியும்போதுதான் புதுமையான சிந்தனைகள் பிறக்கும். அவர் கூறுகையில்,

வேறுபட்ட நோக்கத்தை உருவாக்குவது புதுமையல்ல. உங்களது தற்போதைய நோக்கத்தை அடைய உதவும் திறமையான மாற்று வழிதான் புதுமையாகும்.

Zifilink ஒரு உண்மையான பிரச்சனைக்கு தீர்வாக அமைவதால் அதை உருவாக்கியது குறித்து மகிழ்ச்சியடைகிறார் ஸ்ரீராம். புதுமையான முறையில் பிரச்சனைகளுக்கான தீர்வை இந்தியாவிலிருந்து உருவாக்கியவர் என்கிற அடையாத்தையே அவர் விரும்புகிறார்.

ஆங்கில கட்டுரையாளர் : அலோக் சோனி

Add to
Shares
107
Comments
Share This
Add to
Shares
107
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக