பதிப்புகளில்

பெண்கள் குழந்தைப்பேறு பணி இடைவெளிக்கு பின் மீண்டும் பணியைத் தொடர சில டிப்ஸ்!

YS TEAM TAMIL
21st Apr 2018
Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share

ஒரு உயிரை உருவாக்கி பேணிப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றும் விதத்தில் இயற்கை பெண்களை வடிவமைத்துள்ளது. எனினும் பணிக்குச் செல்லும் பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கென பிரத்யேகமாக பணி வாழ்க்கையில் இடைவெளி எடுக்கத் தீர்மானிக்கும்போது அவர் மன உளைச்சலுக்கு ஆளாக நேர்கிறது. தொடர்ந்து நீண்ட நாட்கள் பணியில் இல்லாது போனால் அதனால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதும் வீட்டில் தனது கடமைகளை முறையாக நிறைவேற்றிவிட்டு அனைத்தும் சீரானதும் எவ்வாறு பணி வாழ்க்கையைத் தொடர்வது என்பதுமே அவரது முக்கியக் கவலையாக இருக்கும்.

இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 27 சதவீதத்தினர் மட்டுமே பணிபுரிவதாக உலக வங்கியின் 2013-ம் ஆண்டின் ஆய்வு தெரிவிக்கிறது. இது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிகா (BRICS) ஆகிய நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களில் பெண்களின் பங்களிப்பில் மிகக்குறைந்த விகிதமாகும். இந்த நாடுகளில் அதிகபட்சமாக 64 சதவீத பெண்களின் பங்களிப்புடன் சீனா விளங்குகிறது.

மற்றொரு புள்ளிவிவரத்தைத் தொடர்புப்படுத்திப் பார்த்தோமானால் அது மேலும் கவலை அளிப்பதாக உள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பணிபுரியும் 1,000 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி திருமணமான பெண்களில் 18-34 சதவீதத்தினர் மட்டுமே குழந்தை பிறந்த பிறகும் பணியைத் தொடர்கின்றனர். 

பெண்கள் தங்களது பணி வாழ்க்கைக்குத் திரும்புவதைக் காட்டிலும் அதை துறந்துவிடுவதையே எளிதான தீர்வாக கருதுகிறார்கள் என்பதையே இந்தத் தரவு சுட்டிக்காட்டுகிறது.
image


பெண்களின் பணிவாழ்க்கையைப் பொருத்தவரை அவர்களது முன்னேற்றத்தில் தடைகள் இருப்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் அது குறித்து ஆத்திரமடைந்து கூச்சலிடுவதைக் காட்டிலும் நடைமுறைக்கு ஏற்றவாறான முறையாக திட்டமிடப்பட்ட அணுகுமுறையை மேற்கொண்டால் பெண்கள் தங்களுக்கு ஆர்வம் அதிகமுள்ள பணி வாழ்க்கைக்கு எளிதாக திரும்ப முடியும். 

நீங்கள் குழந்தைப்பேறு சமயத்தில் பணியில் இருந்து இடைவெளி எடுக்க தீர்மானிக்கும்போது அதை எவ்வாறு திட்டமிடலாம் என்பதற்கான சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இடைவெளி எடுப்பது சட்டபூர்வமான உரிமை

மகப்பேறு பயன்கள் சட்டத்தில் 2017-ம் ஆண்டில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி பெண்கள் தனது முதல் இரண்டு குழந்தைகள் பிறக்கும் சமயத்தில் 26 வார ஊதியத்துடன்கூடிய விடுப்பை எடுத்துக்கொள்ளலாம். ஒழுங்குப்படுத்தப்பட்ட துறையில் பணியாற்றும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்திய அரசாங்கம் இந்த உரிமையை வழங்கியுள்ளது. ஒரு பெண் தனது மேலதிகாரியிடம் விடுப்பு வேண்டி விண்ணப்பிக்கும்போது தனது உரிமையைக் கேட்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். விடுப்பு எடுப்பது குறித்து வருந்தவேண்டிய அவசியமில்லை.

சிறப்பாக செயல்படுபவர்கள் இன்றியமையாதவர்கள்

சிறந்த ஊழியரை எந்த முதலாளியும் இழக்க விரும்பமாட்டார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு பெண் ஊழியர் ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை பணியில் இருந்து இடைவெளி எடுக்க விரும்பினாலும் புத்திசாலியான மேலதிகாரிகள் நிச்சயம் அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு விடுப்பு வழங்குவார். ஏனெனில் அதற்கு பதிலாக அந்தப் பெண் ஊழியர் நிறுவனத்தின் மேல் காட்டும் விசுவாசமானது நிறுவனத்தின் பார்வையில் விலைமதிப்பற்றதாகும்.

நெகிழ்வு தன்மை கொண்ட பணி

மகப்பேறு விடுப்பு நாட்களில் பெண்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடலாம். பயணம் செய்ய முடியாது என்பதால் வீட்டிலிருந்து பணி புரிவது குறித்தோ அல்லது பகுதி நேரமாக பணியாற்றுவது குறித்து சிந்திக்கலாம். வரவிருக்கும் ப்ராஜெக்ட் குறித்த ஆய்வுப்பணிகளில் ஈடுபடலாம். இதனால் அவர்கள் பணிக்குத் திரும்புகையில் புதிய ப்ராஜெக்டை எளிதாக கையாளமுடியும்.

பணியிலமர்த்துபவரின் கவலையும் நியாயமானதே!

பெண்கள் விடுப்பு எடுக்கவேண்டியதற்கான காரணம் நியாயமானதாக இருக்கும் அதே வேளையில் பணியிலமர்த்துபவரின் கவலையும் நியாயமானதே என்பதை உணரவேண்டும். 

விடுப்பு எடுக்கும் குறிப்பிட்ட பெண் ஊழியரின் பொறுப்புகளை மேற்கொள்ள தற்காலிகமாக ஒருவரை நியமிக்கவேண்டும். வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் பொறுப்பில் இருந்தாலோ அல்லது விடுப்பு எடுக்கும் பெண் ஊழியர் தனிப்பட்ட வகையில் பங்களிக்கும் விதத்தில் பணிபுரிந்து வந்தாலோ வேறொருவரை அந்தப் பணியில் நியமித்து பணியைத் தொடர்வதில் சிக்கல் இருக்கும்.

பெரிய கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆறு மாத ஊதியத்தை வழங்குவது கடினமாக இருக்காது. ஆனால் ஆரம்ப நிலையில் போராடிக்கொண்டிக்கும் ஸ்டார்ட் அப்பிற்கு ஒரே பணிக்கு இருவருக்கு ஊதியம் வழங்குவது சுமையாகவே இருக்கும். இந்த சந்தர்ப்பங்களில் முன்பே பரஸ்பரம் கலந்தாலோசித்து திட்டமிட்டபடி சம்பளத்தில் ஒரு பகுதியை மட்டும் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

செயல்திறன் மதிப்பீடு, ஊதிய உயர்வு போன்றவற்றிற்கு பெண் ஊழியர்கள் அதிக முக்கியத்தும் அளிக்காமல் இருக்கலாம். முழுநேரமாக பணிக்குத் திரும்பியதும் செயல்பாடுகளை துரிதப்படுத்தி திறமையை நிரூபித்துக்கொள்ளலாம். அதே போல் தற்காலிகமாக அவரது பணியை தொடரப்போகும் மாற்று ஊழியரிடம் கவனமாக தனது பணியை ஒப்படைக்கவேண்டும். நிறுவனத்தின் ஒரு உறுப்பினராக, ஒரு பங்குதாரராக தன்னைக் கருதி பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுவது அந்தப் பெண் ஊழியரின் கடமையாகும்.

தற்காலிகமாக பணியில் இல்லை என்றாலும் கற்கலாம்

நீண்ட இடைவெளி எடுப்பதன் காரணமாக சில மாதங்கள் வருவாயை இழப்பது பெரிய விஷயம் அல்ல. ஆனால் தொழில்நுட்பம் குறித்த புரியலையோ அல்லது தனிப்பட்ட பணிபுரியும் பாணியையோ இழந்தோமானால் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே மேலதிகாரியுடன் ஆலோசித்து வீட்டில் இருக்கும் நேரத்தில் தொழில்நுட்பம் அல்லது வணிகம் சார்ந்த அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகளை திட்டமிடவேண்டும். இது பணிக்குத் திரும்புகையில் விரைவாக செயல்பட உதவும். பணிக்குத் தொடர்புடைய சான்றிதழுடன்கூடிய வகுப்பிலும் கலந்துகொள்ளலாம்.

மகப்பேறு விடுப்பிற்குப் பிறகு பணிக்குத் திரும்புதல்

ஒரு தாயாக குழந்தையைப் பராமரிப்பதும் முக்கிய பொறுப்புதான். எனவே பணிக்குத் திரும்பியதும் தனது கவனத்தை பணிக்கும் குழந்தைக்கும் பகிர்ந்தளிப்பது ஒவ்வொரு நாளும் சவாலாகவே இருக்கும். குழந்தை பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே அவரால் புத்துணர்ச்சியுடன் பணிபுரிய முடியும்.

நிறுவனங்கள் குழந்தை பராமரிப்பு வசதியை அலுவலக வளாகத்தினுள் ஏற்பாடு செய்யலாம். ஸ்டார்ட் அப்கள் அருகாமையில் உள்ள குழந்தை பராமரிப்பு மையங்களுடன் இணைந்து தங்களது ஊழியர்களின் குழந்தைகளை பராமரிக்க ஏற்பாடு செய்து கொள்ளலாம். இது சட்டரீதியாக கட்டாயமாக்கப்பட்டதாகும்.

பெண்கள் அதே பொறுப்புகளை இடைவெளிக்குப் பிறகு ஏற்கும்போது அவர் தற்காலிகமாக இல்லாத அந்த காலகட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும். குழுவுடன் இணைந்திருந்தும் நடந்து முடிந்த அலுவலக சந்திப்புகளின் குறிப்புகள் அல்லது அறிக்கைகள் போன்றவற்றை படிக்க நேரம் ஒதுக்குவதன் மூலமும் பணியைத் தொடர்வதைத் துரிதப்படுத்த முடியும்.

வேலை நேரங்களை முறையாக திட்டமிடுவது முக்கியமாகும். கணவனும் மனைவியும் அனுசரித்து வேலை நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம். பணியிட பொறுப்புகளையும் வீட்டுப் பொறுப்புகளையும் சேர்ந்து சுமப்பதால் பணியிடத்தில் உள்ள குழுவின் ஒத்துழைப்பும் முக்கியமானதாகும்.

நீண்ட நாட்கள் இடைவெளி எடுத்த பிறகு பணிக்கு திரும்புகையில் சூழல் கடினமானதாகவே இருக்கும். ஒரு தாயாக வீட்டில் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பையும் நிறைவேற்றவேண்டும் என்பதால் சிக்கல் அதிகரிக்கும். பணிக்குத் திரும்பி மீண்டும் செயல்படுவது எளிதாக இருக்கவும், பணியை இடையில் நிறுத்திய சமயத்தில் இருந்து மீண்டும் விரைவாகத் தொடரவும் பணியில் இருந்து விடுப்பு எடுப்பதற்கு முன்பு அதற்குத் தேவையான ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறுதி செய்யவேண்டும். பணி இடைவெளியை முறையாக திட்டமிட்டு திரும்புகையில் பணியைத் தொடர்வது எளிதாக இருப்பதுடன் தேவையற்ற மன உளைச்சலையும் போக்கலாம்.

ஆங்கில கட்டுரையாளர் : அனுராதா சி | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக