Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

ஹோட்டல் வணிக விற்பனையை அதிகரிக்க 13 சூப்பர் வழிகள் இதோ!

ஆன்லைன் ஆர்டர் வசதி மூலம் ரெஸ்டாரண்ட் விற்பனையை அதிகரிப்பதற்கான 13 எளிய வழிகள் இதோ:

ஹோட்டல் வணிக விற்பனையை அதிகரிக்க 13 சூப்பர் வழிகள் இதோ!

Tuesday September 22, 2020 , 4 min Read

வீட்டு சாப்பாடு போர் அடித்தால் ஹோட்டல் போய் சாப்பிடுவதை வழக்கமாகிக் கொண்டனர் மக்கள். ஆனால் இந்த கொரோனா கால ஊரடங்கால், பெரும்பாலும் ஹோம் டெலிவரியில் மட்டுமே ஆர்டர் செய்துவந்தனர். தற்போதுள்ள நிலையில் ரெஸ்டாரண்ட்களுக்கு ஆன்லைன் ஆர்டர் வசதி என்பது இனியும் ஒரு வாய்ப்பு மட்டும் அல்ல, அது தவிர்க்க இயலாததாகி இருக்கிறது.


மொபைல் செயலிகள் அல்லது இணையதளங்கள் மூலம் பெறப்படும் ஆர்டர்கள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. எனவே, ரெஸ்டாரண்ட் உரிமையாளர்களுக்கு, ஆன்லைன் பதிவு வசதியில் முதலீடு செய்வது தவிர வேறு வழியில்லை. ஆனால் இது மட்டும் போதாது.


முன்பெல்லாம் இணைய மேடைகள், ரெஸ்டாரண்டை கண்டறிய மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது, ஆன்லைனிலேயே வர்த்தகத்தை நடத்தலாம் எனும் நிலை வந்துள்ளது. ஆன்லைன் பதிவு முறையில் சில அடிப்படையான அம்சங்கள் இருந்தால், வர்த்தகத்தை மேலும் லாபகரமாக நடத்தலாம். இதற்கான வழிகளை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.

ரெஸ்டாரண்ட் விற்பனையை அதிகரிக்க உதவும் 13 வழிகள் இதோ:

1. இணையதள வசதி


ரெஸ்டாரண்ட்கள் எப்படி இயங்குகின்றன என உங்களுக்குத்தெரியும். எனவே, வாடிக்கையாளர்கள் வேகமாக ஆர்டர் செய்வதற்கான வசதியை நீங்கள் அளிக்க வேண்டும். இதை ஆன்லைன் ஆர்டர் வசதி மூலம் செய்யலாம். இதன் மூலம் மூன்றாம் தரப்பு சேவை நிறுவனங்களுக்கு அளிக்கும் தொகை வாயிலாக 30 சதவீதம் சேமிக்கலாம். உங்கள் இணையதளம் மூலம் வரும் ஆர்டர்கள் அதிக வருவாயை பெற்றுத்தரும்.  


2. ரெஸ்டாரண்ட் கூப்பன் சலுகை வசதி


மூன்றாம் தரப்பு சேவை மூலம் ஆர்டர் பெறுவதாக இருந்தால், உங்கள் ரசீதுடன் சலுகை குறிப்பை அளிக்கலாம். அடுத்த முறை ஆர்டர் செய்தால் 30 சதவீத சலுகைக்கான கூப்பன்களை வழங்கலாம்.  இதன் மூலம் ஏற்கனவே உள்ள ஆர்டரிங் சேவையை பயன்படுத்திக் கொள்வதோடு, வாடிகையாளர்களை உங்கள் இணையதளம் நோக்கி ஈர்க்கலாம்.  வாடிக்கையாளர்களை சலுகை பயன்படுத்த முன்வந்தால் உங்களுக்கு நேரடி வருவாய் கிடைக்கும். இதன் மூலம் லாப விகிதம் அதிகரிக்கும்


3. இ-மெயில் முகவரி


இணைய ஆர்டர் மூலம் வருவாயை அதிகரிக்க எளிய வழி, வாடிக்கையாளர்களின் இ-மெயில் முகவரியை பெறுவதாகும். இ-மெயில் மார்க்கெட்டிங் சக்தி மிக்க வழியாகும். 2017ல் இ-மெயில் பயனாளிகள் எண்ணிக்கை 3.7 பில்லியனாக இருந்தது. உங்கள் மார்க்கெட்டிங்கில் இ-மெயில் முகவரிகளை சேர்த்துக்கொண்டு, சலுகை வாய்ப்புகள் உள்ளிட்ட தகவல்களை அனுப்பி வையுங்கள். வாடிக்கையாளர்களை சமூக ஊடகங்களிலும் பின் தொடரச்செய்யலாம். உங்கள் விற்பனை நிலையத்தை நோக்கியும் வரச்செய்யலாம்.


4. விற்பனை முனையம்


உங்கள் ரெஸ்டாரண்டின் விற்பனை மையத்தை ஆன்லைன் பதிவு வசதியுடன் ஒருங்கிணைப்பது அவசியம். உங்கள் விற்பனை பாதையில் சரியான இடங்களில் வாடிக்கையாளர்களை சென்றடைய இது உதவும். விற்பனை தொடர்பான தகவல்களையும் பெறலாம். அதிகம் விற்பனையாகும் பொருள், அதிகம் செலவாகும் பொருள் போன்றவற்றை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். எந்த தினத்தில் அதிகம் விற்பனையாகிறது என்றும் அறிந்து கொள்ளலாம். 


5. டிஜிட்டல் மேடைகள்


மக்கள் தங்கள் இருப்பிடம் தேடி உணவு வர வேண்டும் என விரும்புகின்றனர். பெரும்பாலனோர் போன் மற்றும் இணையம் மூலம் ஆர்டர் செய்கின்றனர். எனவே உங்கள் ரெஸ்டாரண்டிற்காக உணவு ஆர்டர் செய்யும் செயலியை உருவாக்குவது நல்லது.


ரெஸ்டாரண்ட் உரிமையாளராக நீங்கள், ஆன்லைன் உணவு ஆர்டர் செய்யும் வசதியை பயன்படுத்திக்கொள்வதோடு, தனிப்பட்ட விவரங்களை சேகரித்து விளம்பர தகவல்களை அனுப்பி வைக்கலாம். வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்கும் பொருட்கள் மீது சலுகைகளை அறிவிக்கலாம். ஆப் மூலம் உங்கள் ஆர்டர் வசதியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லலாம்.


செயலியை உருவாக்கித்தரும் திறன் கொண்டவரை இதற்காக நாடலாம். உணவு ஆர்டர் வசதியை மேம்படுத்த டிஜிட்டல் வழிகள் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்திக்கொள்ளவும்.


6. கூகுள் பிஸ்னஸ் பட்டியலில் உங்கள் ரெஸ்டாரண்ட்


கூகுள் மை பிஸ்னஸ் பகுதியில் உங்கள் வர்த்தகம் இடம்பெறுவது சிறந்த வழியாகும். கூகுள் தேடல் முடிவுகள் பட்டியலில் இது உங்கள் வர்த்தகத்தை மேம்படுத்தும். உங்கள் வர்த்தகத் தகவல்களை கூகுளில் பட்டியலிட்டதும், வாடிக்கையாளர்கள் தேடும் போது, உங்கள் வர்த்தகம் அருகாமை உணவு பகுதியில் காண்பிக்கப்படும். இது வர்த்தகத்தை அதிகரிக்க உதவும்.


7. சரியான கீவேர்டுகள்


கூகுள் தேடல் பட்டியலில் முன்னிலை பெற சரியான கீவேர்டுகளை பயன்படுத்த வேண்டும். தேடியந்திர உத்திகள் மூலம் இதை செய்யலாம்.


8. உங்கள் ரெஸ்டாரண்ட் இணைய முகவரி


உங்கள் லாபத்தை இரு மடங்காக்க, வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் ஆர்டர் வசதியை அளிக்க வேண்டும். உங்கள் ரெஸ்டாரண்ட் பெயரில் ஒரு இணைய முகவரியை உருவாக்குங்கள். இது தேடல் பட்டியலிலும் முன்னிலை பெற உதவும். வாடிக்கையாளர்கள் அதிகம் ஆர்டர் செய்வார்கள்.


9. சமூகப் பகிர்வு


மக்கள் சமூக ஊடகம் மூலம் தொடர்பு கொள்கின்றனர். இந்த வாய்ப்பை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் சமூக ஊடகத்தில் பகிர்வதற்கான இணைப்பை உருவாக்கவும். இதற்கு சலுகையும் அளித்து ஊக்குவிக்கலாம்.


10. சமூக ஊடக மார்க்கெட்டிங்


சமூக ஊடக மார்க்கெட்டிங் சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். சமூக ஊடகம் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான நல்ல வழியாகும். ஃபேஸ்புக் போன்றவற்றில் உங்கள் மெனுவை வெளியிடவும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை சென்றடையலாம்.


11. சிறந்த மெனு


வாடிக்கையாளர்கள் முதலில் பார்ப்பது உங்கள் மெனுவை தான். அதைவைத்து தான் ஆர்டர் செய்யத் தீர்மானிக்கின்றனர். எனவே, உங்கள் மெனு நன்றாக ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது முக்கியம். அது ஈர்ப்புடையதாகவும் இருக்க வேண்டும். உணவுப்பொருட்கள் தொடர்பான விரிவான குறிப்புகளை இடம்பெறச்செய்யலாம். ஆன்லைன் ஆர்டர்களுக்கு காம்போ வகை மெனுக்கள் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதால் அதுபோன்று மெனுவை செட் செய்யலாம்.


12. ப்ரீ ஆர்டர் வசதி


உணவுப்பொருட்களை முன்கூட்டியே ஆர்டர் செய்யும் வசதியை அளிப்பது நேரத்தை மிச்சமாக்கும். வர்த்தக நிறுவன ஆர்டர்களுக்கு இது உதவியாக இருக்கும்.


13. பல முனை விற்பனை


கிராஸ் செல்லிங் உத்தியையும் கடைப்பிடிக்கலாம். இணைப்புகள் அல்லது எட்டிப்பார்க்கும் விளம்பரங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். பர்கரை மேம்படுத்துவது எப்படி எனக்கூறி, வேறு ஒரு பாணத்தை வாங்க வைக்கலாம். ஆனால் ஒன்று இதை மிகையாக மேற்கொள்ளக் கூடாது. ஆன்லைன் ஆர்டர் வாடிக்கையாளர்களைக் கவர சிறந்த வழியாகும். இந்த முறையை நீங்கள் பின்பற்றுவது அவசியம். ஆன்லைன் ஆர்டர் முறையில் அளப்பறிய வாய்ப்புள்ளது.


ஆங்கில கட்டுரையாளர்: அமிரா ஜஸ்வால் | தமிழில்- சைபர்சிம்மன்


பொறுப்புத்துறப்பு- இது யுவர்ஸ்டோரி சார்பில் பயனர் உருவாக்கிய கட்டுரை. இதன் உள்ளடக்கம் மற்றும் பார்வை கட்டுரை எழுதியவருடையது. யுவர் ஸ்டோரியின் பார்வை அல்ல.