Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

பதின்ம வயது பெண்களுக்கான காஸ்மெட்டிக்ஸ் ப்ராண்ட்: மாதம் 1.2 லட்சம் வருவாய் ஈட்டும் 13 வயது சிறுமி!

மும்பையைச் சேர்ந்த அனுஷ்கா போத்தார் ஷாம்பூ, கண்டிஷனர் உள்ளிட்ட தனிநபர் பராமரிப்புப் பொருட்களை வழங்குவதற்காக Snazz என்கிற நிறுவனத்தைத் தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார்.

பதின்ம வயது பெண்களுக்கான காஸ்மெட்டிக்ஸ் ப்ராண்ட்: மாதம் 1.2 லட்சம் வருவாய் ஈட்டும் 13 வயது சிறுமி!

Wednesday April 20, 2022 , 3 min Read

அனுஷ்கா போதார் பதின்ம வயதைச் சேர்ந்தவர். இந்த வயதினருக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கும் என்பதை இவர் நன்கு அறிந்திருந்தார். குறிப்பாக தனிநபர் பராமரிப்பு சார்ந்த பிரச்சனைகளை இவரும் சந்தித்திருப்பதால் அதன் தீவிரத்தை உணர்ந்திருந்தார்.

“முகப்பரு, அரிப்பு என இளம் பருவத்தினர் ஏராளமான சருமப் பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். ஒவ்வொருவரின் கூந்தல் மற்றும் சரும வகைகள் மாறுபடும். அவற்றிற்கேற்ப சரியான ஊட்டச்சத்து அவசியம். என் அம்மா பிரபல பிராண்ட் ஒன்றைப் பயன்படுத்துவார். அதை நானும் முயற்சி செய்து பார்த்தேன். சருமத்தில் ஒவ்வாமை ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டேன்,” என்கிறார் அனுஷ்கா.

இதுபற்றி அவர் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

”அப்போதுதான் பெரியவர்களும் குழந்தைகளும் பயன்படுத்தும் வகையில் ஏராளமான பிராண்டுகள் இருந்தபோதும் இந்தியாவில் பதின்ம வயதினருக்கென்று பிரத்யேகமாக தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் இல்லை என்பது தெரியவந்தது,” என்கிறார்.
1

அனுஷ்கா மும்பை திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி மாணவி. எலான் மஸ்க், ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ் போன்ற ஜாம்பவான்கள், மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுவதை கவனித்தார். இவர்களைக் கண்டு அனுஷ்காவிற்கும் சாதிக்கவேண்டும் என்கிற உந்துதல் பிறந்தது.

சருமப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது குறித்து பலரிடம் பேசினார். அவரது நண்பர்களும் இதே பிரச்சனையை சந்திப்பதும் தீர்வு தேடி வருவதும் தெரிய வந்தது. இதன் விளைவாக இவர் உருவாக்கிய பிராண்ட்தான் Snazz. இந்த பிராண்ட் தனிநபர் பராமரிப்புப் பொருட்களில் கவனம் செலுத்துகிறது.

“கூந்தல் மற்றும் சருமப் பராமரிப்பில் வளரிளம் பருவத்தினரின் தனித்தேவைக்கு ஏற்ப Snazz சேவையளிக்கிறது. சரியான ஊட்டச்சத்து, தனித்துவமான நறுமணம், சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் என இளம் பருவத்தினரின் தனிநபர் பராமரிப்புத் தேவைகளுக்கு முழுமையான தீர்வளிக்கிறோம். ’உங்கள் விருப்பப்படி நீங்கள் இருக்கலாம்’ என்பதே Snazz டேக்லைன்,” என அனுஷ்கா விவரிக்கிறார்.

அனுஷ்கா, தப்பர் தொழில்முனைவோர் அகாடமியில் (YEA) இணைந்தார். இதன் காரணமாக விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல், நிதி மேலாண்மை, விநியோகச் சங்கிலி உள்ளிட்டவற்றின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள முடிந்தது. அதுமட்டுமல்ல துறைசார் நிபுணர்கள் ஆதரவுடன் அவரது வணிக யோசனை வடிவம் பெறவும் இந்த இணைப்பு உதவியுள்ளது.  

கடினமான முயற்சி

அனுஷ்காவின் தொழில் முயற்சிக்கான ஆரம்ப முதலீட்டை அவரது அப்பா அபிஷேக் போத்தார் கொடுத்துள்ளார்.

“பலமுறை சோதனைகள் செய்தோம். முன்வடிவத்தை உருவாக்கினோம். அதன்பின்னர், Snazz ஃபார்முலேஷன் இறுதி வடிவம் பெற்றது. ஷாம்பூ, கண்டிஷனர் போன்றவற்றைப் பொருத்தவரை அறிவியலாளர்கள் பலர் ஒன்றிணைந்து பல வாரங்கள் நேரம் செலவிட்டு ஆய்வகங்களில் ஆய்வு செய்த பின்னரே ஃபார்முலேஷன் முடிவு செய்யப்பட்டது,” என்கிறார்.

ஆய்வக பரிசோதனைகள் முடிந்த பிறகு முதலில் உருவாக்கப்பட்ட முன்வடிவம் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்பட்டு கருத்து கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் தயாரிப்பு மேம்படுத்தப்பட்டது.

மும்பையைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவருடன் பார்ட்னர்ஷிப் முறையில் இணைந்து Snazz தயாரிப்புகளை உருவாக்கினார் அனுஷ்கா. மகாராஷ்டிராவின் துலே பகுதியில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிராண்டின் முதல் தயாரிப்புகளில் ’Apple Addiction’ ஷாம்பூக்களும் ’Argon Amber’ கண்டிஷனர்களும் அடங்கும். இயற்கையான மூலப்பொருட்கள் கொண்டு ஊட்டச்சத்து நிறைந்தவையாக தயாரிக்கப்படுகின்றன.

PETA வழிகாட்டு நெறிமுறைகளின்படியும் நிலையான வளர்ச்சி இலக்குகளின்படியும் இந்த பிராண்ட் செயல்படுகிறது. நச்சுப்பொருட்கள் அடங்கிய தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் எதுவும் இந்த பிராண்டின் தயாரிப்பில் சேர்க்கப்படுவதில்லை.

2
Snazz 250 மி.லி பாட்டிலின் விலை 600 ரூபாய் நகர்ப்புற ப்ரீமியம் வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது. Snazz அறிமுகப்படுத்தபட்ட ஒரு மாதத்திலேயே 1.2 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் மும்பை நகருக்குள் இந்த பிராண்டின் வலைதளம் மூலமாகவும் இன்ஸ்டாகிராமிலும் ஆர்டர் செய்து தயாரிப்புகளை பெறமுடியும். இந்தியா முழுவதும் விரிவடையும் வகையில் அமேசான், ஃப்ளிப்கார்ட், நைகா போன்ற மின்வணிக தளங்களில் செயல்படவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இளம் வயதில் தொழில் முயற்சியில் களமிறங்கி மக்களின் நம்பிக்கையைப் பெறுவது அத்தனை எளிதாக இருக்கவில்லை என்கிறார் அனுஷ்கா.

”இளம் நபர் ஒருவர் சிறியளவில் தொடங்கும் இந்த வணிக முயற்சி வெற்றியடையுமா என்கிற சந்தேகம் இருந்ததால் ஆரம்பத்தில் பலர் தயக்கம் காட்டினார்கள். என் பெற்றோரின் ஆதரவுடன் இறுதியாக ஒரு குழுவை உருவாக்கி தயாரிப்பை சந்தையில் அறிமுகப்படுத்தினோம். பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தியவாறே வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறேன்,” என்கிறார்.

வரும் நாட்களில் உற்பத்தி, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளை விரிவுபடுத்த அனுஷ்கா திட்டமிட்டிருக்கிறார். இரண்டு ஊழியர்களை முழுநேரமாக நியமிக்கவும் உள்ளார்.

இந்தியா முழுவதும் செயல்படவேண்டும். வாடிக்கையாளர்கள் முழு திருப்தியுடன் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும். இந்த இலக்குகளை முன்னிறுத்தியே முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார் அனுஷ்கா.

ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா