பதிப்புகளில்

கடந்த 19 ஆண்டுகளாக உரிமை கோரப்படாத 10 ஆயிரம் பிணங்களுக்கு இறுதிச் சடங்கு செய்துள்ள ஆயுப்!

16th Jan 2018
Add to
Shares
830
Comments
Share This
Add to
Shares
830
Comments
Share

இறந்த உடல்களுக்கு பாதுகாவலராகவே பார்க்கப்படும் ஆயுப் அஹ்மத்தின் பணி, மனிதாபிமானத்தின் மீது ஒருவருக்கு இருக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. யாரும் உரிமை கோராத மனித உடல்களை பிணவறைக்குக் கொண்டு சென்று அதன் பிறகு உடலை தகனம் செய்கிறார் அல்லது இறுதிச் சடங்குகளை மேற்கொள்கிறார் இந்த இளைஞர். 

image


மனிதாபிமானம் நிறைந்த சிந்தனையும் ஒவ்வொரு மனிதனின் மீதுள்ள இரக்கமும் இந்த அசாதாரணப் பணியை மேற்கொள்ள அவருக்கு உந்துதளித்தது.

ஆயுப் குண்டூல்பெட்டிற்கு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் ஒரு பிணத்தைச் சுற்றி மிகப்பெரிய கூட்டம் கூடியிருந்ததைப் பார்த்தார். கிட்டத்தட்ட பத்து மணி நேரம் கழித்து அதே பகுதியைக் கடந்து செல்லும்போது அந்தப் பிணம் அதே இடத்தில் இருந்ததைக் கண்டு அதிர்ந்தார். இந்தச் சம்பவம் அவருள் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

”ஒரு உறவினரோ நண்பரோ இருந்தால் எவ்வாறு கவனித்துக் கொள்வார்களோ அதே போன்று ஆயுப் கவனித்துக்கொள்கிறார். முதலில் பிணத்தின் உறவினரைக் கண்டறிய முற்படுகிறார். அவ்வாறு யாரையும் கண்டறிய இயலாத பட்சத்தில் அவரே அடக்கம் செய்கிறார் அல்லது இறுதி சடங்குகளை மேற்கொள்கிறார்.”

38 வயதான ஆயுப், மைசூரைச் சேர்ந்தவர். கடந்த 19 ஆண்டுகளாக இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார். ஆயிரக்கணக்கான பிணங்களுக்கு இறுதிச் சடங்கு செய்துள்ளார். இது குறித்து எண்ணிக்கையை அவர் குறித்து வைக்கவில்லை எனினும் அவரால் இறுதிச் சடங்கு செய்யப்பட்ட உடல்களின் எண்ணிக்கை சுமார் 10,000 இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

காவலர்கள் பணி நிறைவடைந்ததும் ஆயுப் ஜி என்றழைக்கப்படும் இவருக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ பணிகள் முடிந்ததும் இவர் சென்று பிணத்தை மீட்டு வருகிறார். இறந்தவரின் உறவினர்களைத் தேடிக் கண்டறிய அந்த பிணத்தின் புகைப்படத்தை முகநூலில் பதிவிடுகிறார்.

யாரேனும் பிணத்தின் உறவினர் என உரிமை கோரினால் ஆயுப் அவர்களிடம் உடலை ஒப்படைத்து விடுகிறார். சில சமயம் அவரது செயலுக்காக நன்றி பாராட்டி சிலர் 50 ரூபாய் அல்லது 100 ரூபாய் கொடுப்பார்கள். எனினும் யாரும் உரிமை கோராத நிலையில் ஆயுப் இறுதிச் சடங்குகளை நடத்திவிடுகிறார்.

ஆயுப் வீட்டில் அவரது செயல்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறினார். பெங்களூரு வந்தடைந்தார். தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையில் பணிபுரியத் துவங்கினார். லால்பாக் பகுதியில் ஒரு பிணத்தைக் கண்டபோது அதை காவலர்களிடம் ஒப்படைக்க தீர்மானித்தார்.

இது ஒரு சிறந்த சேவை என்பதை உணர்ந்தார் ஆயுப். மைசூரு திரும்பியதும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டார். அப்போதிருந்து தனது செயலுக்காக வருந்தாமல் இத்தகைய பணியில் தொடர்ந்து வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறார் ஆயுப்.

கட்டுரை : Think Change India

Add to
Shares
830
Comments
Share This
Add to
Shares
830
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக