காய்கறிகளில் உள்ள கிருமிகளை நீக்கும் சானிடைசர் கிட்– 14 வயது மாணவரின் புதுமை கண்டுபிடிப்பு!

By YS TEAM TAMIL|9th Oct 2020
புனே இண்டஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவரான ஆதித்யா பச்பாண்டே காய்கறிகளில் இருக்கும் கிருமிகளை நீக்கக்கூடிய சானிடைசர் கிட் உருவாக்கியுள்ளார்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கோவிட்-19 பெருந்தொற்று நம் வாழ்க்கை முறையை வெகுவாக மாற்றியுள்ளது. நம் அன்றாட வாழ்வில் முன்பு செய்திராத பல புதிய பழக்கவழக்கங்களைப் புகுத்தியுள்ளோம். வீட்டை விட்டு வெளியில் சென்றால் சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறோம். முகக்கவசம் அணிகிறோம். கைகளை அடிக்கடி கழுவுகிறோம். சானிடைசர் பயன்படுத்துகிறோம். சுத்தமாக இருப்பதற்கு அதிக மெனக்கெடுகிறோம். கிருமிகள் நம்மை அண்டாதவாறு பார்த்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை அதிக கவனத்துடன் மேற்கொண்டு வருகிறோம்.


சானிடைசர் போன்ற கிருமி நாசினிகள் கொண்டு நம்மை சுத்தமாக வைத்திருப்பது சாத்தியப்படுகிறது. ஆனால் நம் உணவில் அன்றாடம் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் இருக்கும் கிருமிகளை எவ்வாறு நீக்குவது?


இந்த பிரச்சனைக்கான தீர்வாக, 'சுரக்‌ஷா கிட்’ என்ற ஒன்றை உருவாக்கியுள்ளார் புனேவைச் சேர்ந்த மாணவர் ஒருவர். இவரது பெயர் ஆதித்யா பச்பாண்டே. இவருக்கு 14 வயதாகிறது. இண்டஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இவர் உருவாக்கியுள்ள இந்த கிட் UV-C கதிர்கள் மூலம் கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உதவுவதாக`தி லாஜிக்கல் இந்தியன்’ குறிப்பிட்டுள்ளது.

1

ஸ்பேஸ் எக்ஸ் எலன் மஸ்கை முன்மாதிரியாகக் கொண்டுள்ளார் இந்த இளம் மாணவர். ஆதித்யா ஏற்கெனவே இந்த கிட் தயாரிப்பிற்கான காப்புரிமை வைத்துள்ளார். சமீபத்தில் இவருக்கு விஞ்ஞான மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சிலிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் இவர் வடிவமைத்துள்ள தயாரிப்பை UV-C நோய் கிருமிகளை அழிக்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆதித்யா இந்தத் தயாரிப்பை மும்பை தாதரில் உள்ளா காய்கறி சந்தைகளில் இலவசமாக வழங்கி வருகிறார்.

“பெருந்தொற்று சமயத்தில் உதித்த யோசனை இது. காய்கறிகளில் உள்ள கிருமிகளை எப்படி நீக்குவது என்று யோசித்தேன். UVC கதிர்கள் கொண்டு வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எப்படி அழிப்பது என்று ஆராய்ந்தேன். இறுதியாக UVC சானிடைசர் பாக்ஸ் உருவாக்கும் எண்ணம் உதித்தது,” என்று ஆதித்யா, ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இடம் தெரிவித்துள்ளார்.

CSIR-CMERI இறுதி மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்ற பின்னர் 15,100 சானிட்டர் பாக்ஸ்களை உருவாக்கி பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களுக்கு வழங்க ஆதித்யா திட்டமிட்டுள்ளார்.

கட்டுரை: THINK CHANGE INDIA

Get access to select LIVE keynotes and exhibits at TechSparks 2020. In the 11th edition of TechSparks, we bring you best from the startup world to help you scale & succeed. Join now! #TechSparksFromHome

Latest

Updates from around the world