பதிப்புகளில்

திறமை மிகு 'யுவா' பெண்களுக்கு களச் சிந்தனைகளைத் தாருங்கள்!

17th Dec 2015
Add to
Shares
17
Comments
Share This
Add to
Shares
17
Comments
Share

கடைகோடி கிராமத்துப் பெண்களை மைய நீரோட்டத்தில் இணைப்பதற்கான முயற்சியில் அவர்களுக்குக் கல்வியும் கால்பந்தாட்டப் பயிற்சியும் அளித்து வருகிறது யுவா எனும் ஓர் தொண்டு நிறுவனம்.

வடகிழக்கு மாநிலமான ஜார்கண்டின் ராஞ்சிக்குப் பக்கத்தில் உள்ள சிற்றூர் ஹட்டப்பில் 2009 முதல் செயல்பட்டு வரும் YUWA அமைப்பு, ஃபிரான்ஸ் கஸ்டலரால் நிறுவப்பட்டது. கல்வியையும், கால்பந்தையும் கொண்டு கிராமப் புறங்களில் உள்ள இளம் பெண்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்குவதற்காக துவக்கப்பட்டது இத் தன்னார்வ நிறுவனம். கிராமச் சமூகத்தில் நிலவும் மோசமான பண்பாகிய குழந்தைத் திருமணம், கல்வியின்மை, மனிதக் கடத்தல் ஆகியவற்றில் இருந்து சிறுமியரைப் பாதுகாப்பதற்காகவும், சிறுமியர் உலகத்தில் சாதகமான மாற்றத்தை உருவாக்கவும் பாடுபடுகிறது YUWA. ஜார்கண்ட்டில் பத்தில் ஆறு சிறுமியரை பள்ளியில் இடைநிறுத்தம் செய்து வலுக்கட்டாயமாக குழந்தைப் பருவத்திலேயே மணமுடித்து வைக்கின்றனர். YUWA ஊடகத் தொடர்பாளர் கூறுகையில், ‘’சமூகம் பெண் பிள்ளைகளைத் தங்களது கட்டமைப்பற்குள் இறுத்தி வைக்கப் பார்க்கிறது. நாங்கள் அவர்களைத் தங்களது சொந்தக் கால்களில் நிற்க வைக்க முயற்சிக்கிறோம்’’.

யுவா பெண்கள் 2013 ஆம் ஆண்டு ஸ்பெயினில் காஸ்டெய்ஸ் கப் கால்பந்துப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் தேசிய அளவில் புகழ் வெளிச்சம் பெற்றார்கள். 2014 ஆம் ஆண்டு அமெரிக்கக் கோப்பைப் போட்டியில் பங்கேற்க யுவா பெண்களுக்கு அழைப்பு வந்தது. ஆனால் அவர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைக்கவில்லை. அதில் லெனோவோ தலையிட முன்வந்து, அவர்களது பயணம் தொடர உதவி புரிந்தது. தங்களிடம் அற்புதமான திறமையை வைத்துக் கொண்டு தளராத முயற்சியை மேற்கொள்ளும் யாருக்கும் எங்களது கம்பெனி உதவ புரியத் தயங்கியதில்லை என்கிறார் அந்நிறுவனத்தின் ஊடகத் தொடர்பாளர். YUWA பெண்களுக்கு லெனோவோ நிறுவனம் உதவி புரிவதன் பின்னணி ஒரு சிந்தனையோட்டத்தின் தொடர்ச்சியே.

கால் பந்து அரங்கில் யுவா பெண்கள்

கால் பந்து அரங்கில் யுவா பெண்கள்


யுவா பெண்கள் தங்களது வாழ்நிலையைக் குறித்து தேசிய ஊடகத்திலும், TEDx லும் அளித்த நேர்காணல் பலரின் உள்ளத்தைத் தொட்டது. நவீன உலகத்திற்குத் தம்மைத் தகுதியுடையவர்களாக மாற்றிக் கொள்ளும் விதமாக அறிவுத் துறையிலும் தொழில்நுட்ப அளவிலும் தயார்ப்படுத்திக் கொள்வதை இந்த ஆண்டின் இலக்காக கூட்டாக நிர்ணயித்துள்ளனர் யுவா பெண்களும் லெனோவோ நிறுவனமும். தேசிய அளவிலான இயக்கத்தை நடத்த உள்ள லெனோவோவுடன் பங்குபெற முடிவு செய்துள்ளது YUWA இந்தியா ட்ரஸ்ட். “Pitch to her” (அவளுக்கான களம்) என்ற முழக்கம் இந்தியாவில் தெளிந்த சிந்தனை உடைய அனைவரையும் மெய்யான உலகப் பிரச்சனைகளைக் களைவதற்கு தங்களது கவனத்தைத் திருப்புமாறு அழைக்கிறது.

சிறுமியரின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு வெகுஜன மக்கள் தீர்வைக் காண்பதற்கான போட்டியை நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களை ஹட்டப் கிராமத்திற்கு அழைப்பதென முடிவு செய்துள்ளது பிட்ச் டு ஹர் (www.pitchtoher.com). அதன் மூலம் லெனோவோ, YUWA விற்கு அளித்து வரும் ஸ்பான்சர்ஷிப் உட்பங்காளிகளைச் சேர்க்க முடியும் என்று கருதுகிறது.

நடைமுறைச் சாத்தியமான கருத்தினை யாரேனும் அளிக்க முன் வந்தால் அதனை நான்கு முதல் ஆறு வாரங்களில் செயல்படுத்தத் தயாராக உள்ளது பிட்ச் டூ ஹர். போட்டியில் பங்கேற்பவர்கள் கலை முதல் இசை வரையிலான தயாரிப்பு மாதிரியையும், பயன்பாட்டு செயலியையும் தர முன்வந்தால் அது யுவா பெண்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். எடுத்துக்காட்டாக யுவா பெண்கள் படிக்கும் பள்ளி அறைகளுக்கு பருவ மழைக்காலங்களில் ஓசை கடத்தாத தகரக் கூரை வேய்தல், கால்பந்து விளையாட்டில் யுவா பெண்களின் பயிற்சியாளரின் வருகைப்பதிவை தொலைபேசியில் காண்பதற்குரிய செயலியைக் கட்டமைப்பது, குழந்தைத் திருமணத்தில் இருந்து பெண்களைக் காப்பதற்குரிய வடிவமைப்புச் செயலி ஆகியவற்றிற்கு ஆலோசனைகள் தர முன்வரலாம்.

கடந்த சில நாட்களாக நடப்பது என்ன?

ஜார்கண்ட், ஹட்டப் கிராமத்தில் அமைந்துள்ள யுவா இல்லத்தில் நடப்பது என்ன என்பதை நிகழ் செயலாக நீங்கள் காண இயலும். இணையத் தளத்தில் இணைக்கப்பட்ட யோகக் கலை நிலைக் கணினியிலும், தனிப் பிரிவுகளிலும், தொலைபேசியிலும் லெனோவோ ஆய்வுக் கூடம் தனது கவனத்தைச் செலுத்துகிறது. சிறுமியரின் படைப்புத் திறனை வெளிக் கொண்டுவர குழந்தைகளின் மகே மகே, ஃபிட் பிட் போன்றவற்றை அறிமுகம் செய்வித்துள்ளது லெனோவாவின் ஆய்வகம். கடந்த நாட்களில் யுவா பெண்கள் சுவாரஸ்யமான பல்வேறு அம்சங்களைக் கற்றுக் கொண்டும் தங்களது கைத் திறனைப் பயன்படுத்தி கட்டமைத்தும் வந்துள்ளனர்.

இங்கு ஒரு முன்னோட்டம்

தாங்கள் எத்தகைய உலகத்தில் வாழ்கிறோம், எதை விரும்புகிறோம் என்பதை வெளியுலகிற்கு அறிவிக்க புகைப்படக் கலையைப் பயன்படுத்துகின்றனர். கூகுளில் இடம்பெற்றுள்ள தங்களது கிராம வரைப் படத்தை 360 கோணக் காமிராவைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர். தங்களது கால்பந்து விளையாட்டைப் படம் பிடிக்க ‘கோப்ரோ’ காமிராவை மேலிருந்து படம் பிடிக்கும் விதமாகப் பறக்கும் பலூனில் பொருத்தி வைத்தனர். அந்தக் காமிராவைத் தொலைவில் இருந்தபடியே இயக்க அலைபேசியைப் பயன்படுத்துவதற்கு லெனோவோ தொண்டர்கள் யுவா பெண்களுக்கு உதவி புரிந்துள்ளனர். புகைப்படக் குழு ஒன்று கால்பந்துப் போட்டியை சலனப் படமாக எடுத்துள்ளது.

காமிரா மேலே செலுத்தப்படுகிறது

காமிரா மேலே செலுத்தப்படுகிறது


யுவா இல்லத்துச் சுவர்களில் ஓரிரவில் புடைப்பு ஓவியங்கள் வரைந்து யுவாப் பெண்களை அசத்தி விட்டது லெனோவோ குழு. யுவாப் பெண்கள் அங்கு வந்து பார்த்தபோது தங்களது கண்களையே நம்ப முடியவில்லை. மகிழ்ச்சியின் உச்சத்திற்குப் போய் விட்டனர். பின்னர் யுவா பெண்கள் லெனோவோ ஆய்வகத்திற்குச் சென்று அங்கு சிறுவர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு கூகுள் டூட்டில்ஸைக் கண்டனர். அது தங்களது யுவா சின்னத்துடன் ஆரம்பநிலை விளையாட்டிற்கு அவர்களுக்கு உதவி புரியக் கூடியதாக இருக்கும். அதிக விலை மதிப்புமிக்க தலை வண்ணங்களைச் செலவிடாமலே கணினித் திரையில் வண்ண ஓவியங்கள் உருவாக்க லெனோவோ குழுவினரிடம் கற்று மகிழ்ந்தனர். பின்னர் ஆய்வகத்தில் தாங்களாகவே ‘யுவா டூடில்ஸ்’ உருவாக்கினர்.

யுவா டூடீஸ் உருவாக்கம்

யுவா டூடீஸ் உருவாக்கம்


பிரபல இசையமைப்பாளர் சுரோஜித் சாட்டர்ஜீ கொல்கத்தாவில் இருந்து வந்து யுவா பெண்களுடன் இணைந்து பாட்டுக்கள் பாடி அன்றையப் பொழுதை இன்பகரமானதாகச் செய்தார். மகே மகே குழந்தைகளைப் பயன்படுத்த உதவி புரிந்ததுடன் இசைக்கோர்ப்பிற்கும் உதவினார். இந்திய வாத்திய இசைக்குழுவினர் மத்தியில் பிரபலமானவர் சுரோஜித், பத்தாண்டுகளுக்கு முன்னர் வங்காளத்தில் ‘பூமி’யை இணை நிறுவனராக இருந்து நிறுவியுள்ளார். பின்னர் லெனோவோ குழு இசையமைத்துக் கொடுத்த மகே மகே பாடல்களைப் பாடினர் யுவா பெண்கள். அதனை ரசித்த சுரோஜித், யுவாப் பெண்களுடன் இணைந்து களித்தார். அவர் முன்னிலையிலேயே யுவாப் பெண்கள் நேரடி இசை நிகழ்வுகள் நடத்தினர். அதுவோர் அற்புதமான ஆத்ம பரிமாற்றமாக இருந்தது.

ஹட்டப் கிராமம் இதுவரை இணையத் தளத்தில் கூடப் பதியப்பட்டதில்லை. யுவா பெண்கள் தங்கள் கிராமத்தைப் பற்றி விக்கிப்பீடியாவில் ஒரு பக்கத்தை உருவாக்கியுள்ளனர். தங்களது தெருக்களில் இறங்கி கிராமத்தின் புகழ் பெற்ற இடங்களை மெய்யம்சங்களுடன் படம் பிடித்துள்ளனர். அது முழுமையான நிலவியல் சான்றுகளுடன் தங்கள் கிராம வரைபடத்தை விக்கியில் பதிவதற்கு ஏதுவாக இருந்தது.

Pitchtoher இல் நீங்கள் கலந்து கொண்டு பங்களிப்பும் செய்யலாம். மேலும் அறிய உங்கள் சுட்டியைச் சொடுக்குங்கள்.

ஆக்கம்: Sharika Nair | தமிழாக்கம் போப்பு

Add to
Shares
17
Comments
Share This
Add to
Shares
17
Comments
Share
Report an issue
Authors

Related Tags