பதிப்புகளில்

8,000 லில்லி மலர் அலங்காரம், நோ கிப்ட்ஸ், நோ போட்டோஸ்: ’தீப்-வீர்’ திருமண கொண்டாட்டம்!

The wait is finally over!! பாலிவுட் சினிமாவின் தி க்யூட்டஸ்ட் ஜோடியான தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் ஜோடி இப்போது கணவன்- மனைவி... ரன்வீரின் கடல்விமான என்ட்ரி சினிமாக் காட்சியை மிஞ்சியது.

15th Nov 2018
Add to
Shares
458
Comments
Share This
Add to
Shares
458
Comments
Share

கடந்தாண்டின் இறுதியை விரு-ஷ்கா ஜோடி தனதாக்கிக் கொண்டது போல், இந்தாண்டை தங்களுக்காக்கிக் கொண்டுள்ளனர் தீபிகா படுகோனே - ரன்வீர்சிங் ஜோடி. யெஸ், இப்போ சேருவாங்களா, அப்போ சேருவாங்களா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு பல்சை எகிறவிட்ட, பாலிவுட் சினிமாவின் தி மோஸ்ட் லவ்டு சோடியான ‘தீப்வீர்’ ஜோடியின் திருமணம் சுற்றங்கள் சூழ நேற்று (நவம்பர் 14) இனிதே நிறைவடைந்தது.

ஓம் சாந்தி ஓம் படம் மூலமாக இந்தி திரையுலகுக்கு தீபிகா என்ட்ரி கொடுத்த அதே கால கட்டத்தில் அறிமுகமானவர் ரன்வீர் சிங். இருவரும் இணைந்து நடித்த ’ஃபைண்டிங் ஃபேனி’, ‘கோலியோன் கே ராஸ்லீலா’, ‘ராம்லீலா’, ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவத்’ என அம்புட்டு படங்களுமே டாப் ஹிட். அப்போதிருந்தே, இரண்டு பேருக்கும் லவ்சு லவ்சு என்று பரபரவென பரவியது.

பின், லவ், பிரேக் அப், பிரெண்ட்ஸ்... என ஏகப்பட்ட ஹெட்லைன் செய்திகள் பாலிவுட் பக்கங்களில் நிறைந்த நிலையில், கடந்த மாதம் டும் டும் டும் செய்தியை அபீசியலாய் அறிவித்து மும்பை சிட்டியின் டாக் ஆப் தி டவுணாக்கி, இரு மணங்களும் ஒன்று சேர்ந்துள்ளன.

image


கர்நாடகாவைச் சேர்ந்த தீபிகா, அவர்களின் பாரம்பரிய முறைப்படி கொங்கனி திருமணம் முறையில் நேற்று நடந்த நிலையில், மும்பை பாய் ரன்வீரின் பாரம்பரிய முறைப்படி சிந்தி திருமணம் இன்று நடைப்பெறவுள்ளது. மொத்த அழகையும் தன்னுள் அடக்கிக் கொண்ட ரோம் நகரினை தலைநகரமாய் கொண்ட இத்தாலியின் கோமா ஏரியில் உள்ள வில்லா தெ பால்பியானெல்லோ என்ற வில்லாவில் தான் அவர்களது திருமண வைபம் சிறப்பாய் நடைபெற்று வருகிறது. 

75 ரூம்கள், 4 ரெஸ்டாரண்ட்கள் வித் பார், ஒரு ஸ்பா, உள்ளரங்க நீச்சல் குளம், வெளிப்புற நீச்சல் குளம், 4 கான்ப்ரன்ஸ் ஹால், மற்றும் சுற்றிலும் செடி, கொடிகள் என தாவரவியல் பூங்காவில் சூழப்பட்ட ரிசார்டின் மொத்த பரப்பளவு 26,000 செ.மீ. ஒரு அறையின் ஒரு நாள் வாடகை ரூ 33,000. தீப்வீர் திருமணத்துக்காக அல்ட்ரா லக்சரியஸ் ரிச்சார்டின் 75 ரூம்களும் ஒரு வாரத்துக்கு புக்கிங் செய்துள்ளனர். 75ரூம்களின் ஒருநாள் வாடகை ரூ.24,75,000. சோ, ஓவர் ஆல் ஒரு வாரத்துக்கு திருமண இடத்துக்காக மட்டும் ஒரு கோடியே 73 லட்ச ரூபாய் செலவழித்துள்ளனர். 

பிரம்மாண்ட ரிசார்ட்டை முழுவதுமாய் ஒயிட் அண்ட் கோல்ட் தீமில் கலர்புல்லாய் ஜொலிக்க வைத்துள்ளனர். இந்தியாவின் முதல் பெண் வெட்டிங் பிளானரான வந்தனா மோகன் தான், தீபிகா திருமண டெக்ரேஷனின் மாஸ்டர் மைண்ட். 

பட உதவி : news18

பட உதவி : news18


 மணமேடையை ததும்ப ததும்ப பூக்களால் அலங்கரிக்க திங்கள்கிழமை காலையில், florence நகரத்திலிருந்து பன்னிரண்டு பேரை வரவழைத்துள்ளனர். தீபிகாவின் ஃபேவரிட் மலரான 8,000 ‘லில்லி’ மலர்களைக்கொண்டு மேடையை அலங்கரித்துள்ளனர். ஒரு லில்லி மலர் ஒரு டாலர் என 8000 மலர்களுக்கு ரூ.6 லட்சம் வரை செலவழித்துள்ளனர். 

ஸ்பெஷல் வெட்டிங் கேக் தயாரிப்புகாகவே ஸ்விட்சர்லாந்தில் இருந்து டாப் மோஸ்ட் செஃப்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதில் எக்ஸ்ட்ரா கொண்டாட்டமாய், மாப்பிள்ளை ரன்வீர் சிங் கடல் விமானத்தில் கெத்து என்ட்ரி கொடுத்தாராம். மும்பையில் உள்ள ஜூவல்லரி கடைக்கு சென்று 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள தாலியை தேர்வு செய்த தீபிகா, ரன்வீருக்கு செயின் இன்ன பிற நகைகள் என்று திருமணத்துக்காக ரூ.1 கோடிக்கு நகைகள் வாங்கியுள்ளார். இதற்காக, நகைக் கடையே ஒரு மணி நேரம் அடைக்கப்பட்டதாம். 

பட உதவி : Pinkvilla

பட உதவி : Pinkvilla


மெகா பட்ஜெட் திருமணத்துக்கு எண்ணி எடுத்தார் போல் 40 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளனர். அவர்கள் அனைவருமே தீப்வீரின் சொந்த பந்தங்கள், மற்றும் நெருக்கமான நண்பர்கள், மற்றும் பாலிவுட்டிலிருந்து ஷாரூக்கான், ‘பத்மாவத்’ இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பிரபல நடன இயக்குநர் ஃபரா கான் உள்ளிட்டோரை மட்டுமே திருமணத்துக்கு அழைத்திருக்கிறார்கள். திருமணத்தில் கலந்துக்கொள்ளும் சிறப்பு விருந்தினர்களை ஒரே ஒரு அன்புக் கட்டளை பிரைவெசிக்கு மதிப்பளித்து, செல்போனை உபயோகிக்க வேண்டாம் என்றுள்ளனர். இயற்கை எழில் சூழ்ந்த ஏரிக் கரையில் டெக்னாலஜிக்கு இடமளிக்காமல், தீப்வீர் திருமணத்தை கொண்டாடுவதற்கு இந்த பிளான்.

இருப்பினும், சிவப்பு நிற சாரீயில் தீபிகாவும், வெள்ளை நிற குர்தாவில் ரன்வீரும் மாஸ் லுக் கொடுக்கும் சில போட்டோக்களும் திருமணத்தன்றே லீக்காகிய நிலையில், அபீசியல் போட்டோ வெளியீட்டுக்காக காத்திருக்கின்றனர் தீப்வீரின் ரசிகர் பட்டாளம்.

டில்லியைச் சேர்ந்த பேமஸ் செலிபிரிட்டி போட்டேகிராபர் விஷால் பஞ்சாபியின் கேமிரா கண்கள் கிளிக்கும் அழகிய புகைப்படங்கள், நார்த் இந்தியன் ஸ்டைல் சிந்தி முறை திருமணமும் நடந்து முடிந்தபின் அபீசியலாய் வெளியாக உள்ளன. 

விருஷ்காவின் (விராட் கோலி- அனுஷ்கா ஷர்மா) திருமணமும் இத்தாலியின் அதே ஏரி பகுதியில், அதே ரெட் கலர் சாரீயில் நடந்தது. சேம் ஊரு, சேம் கலரு என மெட்சிங்காக இரு டாப் ஜோடிகளின் திருமணங்கள் நடக்கும் நிலையில் மற்றொரு ஒற்றுமை ஆடை வடிவமைப்பாளர் சப்யாச்சி முகர்ஜி. இந்தியாவின் மிகப் பெரியத் திருமண ஆடை வடிவமைப்பாளரான சப்யாசச்சி முகர்ஜிதான் தீப்வீரின் ஆடைகளையும் டிசைன் செய்துள்ளார். 

திருமணத்துக்கு முன் தீபிகா வீட்டில் நடைபெற்ற நந்தி பூஜாவின் போது.பட உதவி : timesnow

திருமணத்துக்கு முன் தீபிகா வீட்டில் நடைபெற்ற நந்தி பூஜாவின் போது.பட உதவி : timesnow


தவிர, கிப்ட் என்ற வார்த்தைக்கே இடமளிக்காதவாறு முன்கூட்டியே அன்பு மட்டும் போதும் அன்பளிப்புகளை, தீபிகா நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு கொடையாக்குங்கள் என்று கூறியுள்ளனர். எனினும், பஞ்சாப்பின் அமிர்தசரசை சேர்ந்த, தீப்வீரின் டை ஹார்ட் ரசிகர் கம் ஆர்டிஸ்ட் தீபிகா - ரன்வீரின் படத்தை ஆளுயரய அளவுக்கு வரைந்துள்ளார். 

இன்னும் பல ரசிகர்கள் மற்றும் பாலிவுட் உலகத்தார் பலர் சோஷியல் மீடியா முழுவதும் தீப்வீர் திருமண வாழ்த்து செய்திகளை நிரப்பி வருகின்றனர். இத்தாலியில் கல்யாண பிளானை ரகசியமாக முடித்தாலும், பெங்களூருவிலும் மும்பையிலும் ரிசெப்ஷன் நிகழ்ச்சியில் பாலிவுட் உலகத்தாரையே அழைத்து கொண்டாட்டமாய் கொண்டாட உள்ளனர் இந்த செலிபிரிட்டி ஜோடி.

வாழ்த்துகள் மணமக்களே!

Add to
Shares
458
Comments
Share This
Add to
Shares
458
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக