Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

இந்திய வரலாற்று இடங்களை தெரிந்து கொள்ள உதவும் செயலி!

17 வயதான அவந்திகா இந்தியாவின் பண்பாட்டைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இந்திய வரலாற்று இடங்களை தெரிந்து கொள்ள உதவும் செயலி!

Friday February 21, 2020 , 3 min Read

அவந்திகா கண்ணா செயலி உருவாக்குபவர். இவர் ‘இந்தியா ஸ்டோரி’ (India Story) நிறுவனர். இந்தியாவின் வரலாற்றை இன்றைய தலைமுறையினரும் வரவிருக்கும் அடுத்தடுத்த தலைமுறையினரும் மீட்டெடுக்க ஊக்குவிக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டுள்ளார்.


அவந்திகா தனது அப்பாவுடன் எடின்பர்க் கோட்டைக்குச் சென்றதும் முறையாக பாதுகாக்கப்பட்ட அந்த நினைவுச்சின்னத்தின் அழகை ரசித்ததும் இன்றளவும் அவரது நினைவில் பசுமையாக உள்ளது. ஆனால் தன் தாய்நாடான இந்தியாவில் பல்வேறு வரலாற்று நினைவுச் சின்னங்கள் அதிகாரிகளால் முறையாக பராமரிக்கப்படாததைக் கண்டு மனம் வருந்தினார்.

1

மற்ற நாடுகளைப் போன்று இந்திய நினைவுச்சின்னங்களும் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும் என்று இவர் விரும்பினார். எனவே ‘இந்தியா ஸ்டோரி’ (India Story) என்கிற செயலியை இவர் உருவாக்கியுள்ளார். இந்தச் செயலி இந்தியாவில் உள்ள நினைவுச்சின்னங்களைக் கொண்டு இந்தியாவின் வரலாற்றைப் பதிவு செய்கிறது. இதில் தொகுக்கப்பட்டுள்ள விரிவான ஆடியோ பதிவு நினைவுச்சின்னங்கள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள உதவும்.


அவந்திகா குருகிராமின் ஆரவள்ளி வளாகத்தில் உள்ள ஸ்ரீ ராம் பள்ளியில் ஹியூமானிட்டீஸ் படிக்கும் மாணவி. இவர் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் வெவ்வேறு அம்சங்கள் குறித்து தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டவர்.

“புலப்படும் மற்றும் எளிதாகப் புலப்படாத பண்பாட்டின் அழிவு என்பது மனித வரலாறு மற்றும் உலகளாவிய பன்முகத்தன்மையின் அழிவிற்கு சமமானது,” என்கிறார் அவந்திகா.

இந்த நம்பிக்கையே அவர் இந்தியா ஸ்டோரி செயலி உருவாக்க உந்துதலளித்துள்ளது.

இவரது பெற்றோர் இருவரும் மார்கெட்டிங் நிபுணர்கள். இவர்கள் அன்றாட வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தொடர்புடைய விளையாட்டுகளை அவந்திகாவுடன் விளையாடுவது வழக்கம். இந்தியாவின் வரலாற்று நினைவுச்சின்னங்கள் புறக்கணிக்கப்படும் பிரச்சனைக்குத் தீர்வுகாண செயலி உருவாக்கும் முயற்சிக்கும் இந்த வழக்கம் பெரிதும் உதவியது.


அவந்திகாவிற்கு தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் உள்ளது. தொழில்நுட்பம் பல விதமான பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வலிமை கொண்டது என்பதை உணர்ந்து அவருக்கு அதில் ஆர்வம் அதிகரித்தது. செயலியின் முன்வடிவத்தை உருவாக்க ஜிபிஎஸ், ஆட்டோ நேவிகேஷன் போன்ற டூல்களை ஆராய்ந்தார். இவற்றைக் கொண்டு பயனர் இடைமுகத்தையும் குறைந்தபட்ச சாத்தியமான தயாரிப்பையும் (எம்விபி) உருவாக்கினார்.


அவந்திகா தனது செயலியை விரிவுபடுத்த 30 பேர் கொண்டு குழுவை ஒன்றிணைத்தார். எழுத்தாளர்கள், மார்கெட்டிங் நிபுணர்கள், போட்டோகிராபர்கள், ப்ரோக்ராமர்கள் என மாணவர்கள் மற்றும் வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றனர்.


கலாச்சார நடைப்பயணம் ஏற்பாடு செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் போன்றோருடன் இணைந்து செயல்பட்டார். இவர்களை வலைதளம் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். செயலி உருவாக்கும் இவரது முயற்சி எளிதாக இருந்துவிடவில்லை. நினைவுச்சின்னங்கள் குறித்த தகவல்கள் எளிதாகக் கிடைக்கவில்லை. சரியான தகவல்களைப் பெற ஆவணக்காப்பகங்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் ஆராய வேண்டியிருந்தது.


இளம் தொழில்முனைவராக இருப்பது மற்றுமொரு சவாலாக இருந்தது. இவரது முயற்சியை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. முறையான வழிகாட்டல் கிடைக்கவில்லை. எனினும் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து வெற்றிகரமாக செயலியை உருவாக்கினார் அவந்திகா.


இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்க்கிடம் இருந்து அவந்திகா செயலிக்காக சீட் நிதி பெற்றுள்ளார். இளம் தொழில்முனைவோர் அகாடமி என்கிற இன்குபேஷன் திட்டத்தில் பங்கேற்றார். இதில் தனது செயலியின் முன்வடிவத்தைக் காட்சிப்படுத்தி நிதி பெற்றுள்ளார்.


சமீபத்தில் அவந்திகா தனது செயலியை சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் துணை பொதுச்செயலாளரிடம் சமர்ப்பித்து ஆலோசனைகள் பெற்றார். மதம் சார்ந்த பயணத்தையும் செயலியில் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 2019ம் ஆண்டு iOS மற்றும் ஆண்ட்ராய்ட் தளங்களில் இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


இந்தியாவின் வரலாற்றை உலகமே தெரிந்துகொள்ள உதவும் வகையில் கூடுதல் நகரங்களையும் மாநிலங்களையும் இணைத்துக்கொண்டு செயலியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார்.


பாரம்பரியம் தொடர்பான முழுமையான உள்ளடக்கத்தை உருவாக்கவும் பாரம்பரிய நடைப்பயணத்திற்கான தளமாக விரிவுபடுத்தவும் விரும்புகிறார். அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன்படும் வகையில் இருக்கவேண்டும் என்பது இவரது விருப்பம்.

“பன்முகத்தன்மையை நாம் மதித்து கொண்டாடினால் நாம் ஒரு குழுவாக ஒன்றுபடமுடியும். முக்கியமாக தலைமைத்துவத்தில் சுய சிந்தனையின் முக்கியத்துவத்தை நான் தெரிந்துகொண்டேன். என்னுடைய குறைகளை நான் கண்டறிவதற்கான வாய்ப்பையும் அவற்றை எதிர்கொள்ளத் தேவையானத் துணிவையும் நான் பெற இந்த முயற்சி எனக்கு பெரிதும் உதவியது,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர்: நிரந்தி கௌதமன் | தமிழில்: ஸ்ரீவித்யா