பதிப்புகளில்

ரைனோக்களை காப்பாற்ற யானை கழிவிலிருந்து காகிதம் தயாரிக்கும் 'எல்ரைனோ'

cyber simman
9th Sep 2015
Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share

"எல்ரைனோ" (Elrhino), உண்மையில் ஒரு விபத்து” என்கிறார் நிஷா போரா. நிஷாவின் தந்தை, ஓய்வு பெற்ற சுரங்க பொறியாளரான மகேஷ் போரா தன்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கான விஷயத்தை தேடிக்கொண்டிருந்தார். அப்போது தற்செயலாக மகேஷ், ராஜஸ்தானில் காகித தயாரிப்பாளர்கள் யானைகளின் கழிவை கொண்டு காகிதம் தயாரிப்பது பற்றி படித்தார். ராஜஸ்தான் யானைகளுக்காக அறியப்படும் இடம் அல்லவே. இதை அங்கு செய்வது மிகவும் விநோதமான இடம் ஆயிற்றே என அவர் நினைத்தார்” என்கிறார் நிஷா. "ஆக, அசாமில் இருந்த மகேஷ் , கழிவில் இருந்து காகிதம் தயாரிப்பதை நேரில் பார்ப்பதற்காக உடனே ராஜஸ்தானுக்கு புறப்பட்டார்.

ராஜஸ்தானில் இருந்து திரும்பியதும், மகேஷ் காகித தயாரிப்பை நீடித்த வளர்ச்சி மற்றும் சமூக நோக்கம் கொண்டதாக மாற்றும் நோக்கில் பரிசோதனைகளை மேற்கொண்டு பார்த்தார். "அவரது வயதில் புதிதாக ஒரு வர்த்தகத்தை துவங்க முடியும் என யாரும் நம்பவில்லை” என்கிறார் நிஷா. பெரும்பாலான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஓய்வு பெற்ற மனிதர்களுக்கு வரக்கூடிய கிறுக்குத்தனம் இது என நினைத்தனர். இருந்தாலும் நிஷா தந்தையை சென்று பார்த்து, தன்னால் ஏதாவது ஒரு வகையில் உதவ முடியுமா என தெரிந்து கொள்ள விரும்பினார். இந்த பயணம் அவருக்கு மறக்க முடியதாதாக இருந்தது.

ஓய்வு பெற்ற சுரங்க பொறியாளர் மற்றும் வன பாதுகாப்பு ஆர்வலரான மகேஷ் போரா ராஜஸ்தானில் கழிவில் இருந்து  காகிதம் தயாரிக்கப்படுவதை பார்த்து ஊக்கம் பெற்றும் அசாமில் எல்ரைனோவை துவக்கினார்

ஓய்வு பெற்ற சுரங்க பொறியாளர் மற்றும் வன பாதுகாப்பு ஆர்வலரான மகேஷ் போரா ராஜஸ்தானில் கழிவில் இருந்து காகிதம் தயாரிக்கப்படுவதை பார்த்து ஊக்கம் பெற்றும் அசாமில் எல்ரைனோவை துவக்கினார்


”அவர் செய்து கொண்டிருக்கும் அற்புதமான வேலையை பார்த்ததும் நான் அசந்து விட்டேன்” என்கிறார் நிஷா. மகேஷ் ஏற்கனவே பணியாளர்களை அமர்த்திக்கொண்டிருந்தார். இயந்திரங்கள் நிறுவப்பட்டு எல்லாம் செயல்படும் நிலையில் இருந்தன. "சுவாரஸ்யமான ஒன்றை எதிர்பார்த்து கொண்டிருந்த எனது தேடலுக்கும் இது பொருத்தமாக இருந்தது” என்கிறார் நிஷா. ஆனால் தனது சொந்த மண்ணுக்கான விஜயத்தின் போது தனக்கான பாதையை தீர்மானிக்க முடியும் என அவர் கனவிலும் நினைத்துப்பார்த்திருக்கவில்லை. படிப்பை முடித்ததும் நிஷா கார்ப்பரேட் உலகில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். "நான் சந்தை ஆய்வுத்துறையில் ஆய்வாளராக இருந்தேன்”, சில காலம் முன் நான் குவாண்டம் எனும் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். 2 ஆண்டுகள் கழித்து நான் வேலையை ராஜினாமா செய்த போது எனது மேலதிகாரி நான் நல்ல வேலையை தூக்கியெறிந்து செல்வதாக கூறினார்” என்கிறார் நிஷா. கார்ப்பரேட் பதவி ஏணியில் அவர் முன்னேறிக்கொண்டிருந்தாலும் அது தனக்கான களம் இல்லை என உணார்ந்தார்.

எல்ரைனோ துவக்கப்பட்ட போது அதை பிராண்டாக உருவாக்க வேண்டும் என்பது நோக்கமாக இருக்கவில்லை. மாறாக வருவாய் ஈட்டும் வாய்ப்பை வழங்கி அசாமின் 2,000 ஒற்றை கொம்பு கண்டாமிருகங்களை காப்பாற்றுவதே நோக்கமாக இருந்தது. இந்திய வனப்பரவில் ஒரு காலத்தில் அதிகம் காணப்பட்ட ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் பின்னர் அரிதாகி 3,000 எனும் அளவுக்கு சுருங்கிவிட்டது. அவற்றில் பெரும்பகுதி அசாமில் இருக்கின்றன.செயற்பாட்டாளர்கள் மற்றும் வன விலங்கு காப்பாளர்களை கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த போரா குடும்பத்திற்கு வனப்பாதுகாப்பு என்பது எப்போதுமே முக்கியமாக இருந்தது.“எல்ரைனோ, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என விரும்புனோம். எல்லோரும் அவற்றை வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் காகிதங்களை தயாரிக்கத்துவங்கினோம். ஆனால் இவற்றை வாங்குவதற்கு யாரும் இல்லை என்பதை விரைவில் தெரிந்து கொண்டோம்” என்கிறார் நிஷா. இதில் வியப்பதற்கும் எதுவுமில்லை. இந்தியாவும் காகித உற்பத்தியில் உலகிலேயே மிகப்பெரிய இடத்தில் இருக்கிறது. இதில் முன்னணி ஆலைகளே 9,00,000 பேரை வேலைக்கு வைத்துள்ளன. மறுபுறத்தில் வட இந்தியாவில் குறிப்பாக ஜெய்பூரில் குடிசைத்தொழிலாக காகித தயாரிப்பில் 10,000 பேருக்கு மேல் ஈடுபட்டிருந்தனர். இதன் மதிப்பு ரூ21 கோடி. "காகித உற்பத்தி பற்றி பேசினாலே டன்களாகவும், கிலோவாகவும் தான் இருக்கும்” என்கிறார் நிஷா. இப்படி நிலைப்பெற்றிருந்த ஒரு தொழிலில் அசாமில் ஒரு மூலையில் துவங்கப்பட்ட சிறிய நிறுவனம் நீடித்திருக்க வாய்ப்பில்லை. "வட கிழக்கில் காகிதம் தயாரிக்க எந்த காரணமும் இல்லை” என்கிறார் அவர். அதோடு கழிவில் இருந்து தயாரிக்கப்பட்ட காகிதம் தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்குவதும் நிஷாவுக்கு சவாலாக இருந்தது. “இது சாதாதரண காகிதம் போல இருக்காது என்று நினைத்தனர். இந்த காகிதம் எந்த அளவுக்கு தரமானது என நிரூபித்து காட்ட வேண்டியிருந்தது. எனவே மாதிரிக்காக சில பொருட்களை உருவாக்கி காட்டினோம்” என்கிறார் அவர். கண்காட்சிகளில் காகிதம் வாங்க யாரும் முன்வராவிட்டாலும் தங்கள் மாதிரி தயாரிப்புகளை பலரும் ஆர்வத்துடன் பார்வையிட்டத்தை நிஷா கவனித்தார். ஃபேஸ்புக் பக்கத்திலும் கூட இந்த அம்சம் தான் அதிக ஆர்வத்தை ஈர்த்தது. நண்பர்கள் வட்டத்தில் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த பக்கம் வெற்றிகரமான வர்த்தக்த்திற்கான அடிப்படையாக அமையும் என அவர் நினைத்திருக்கவில்லை. ஆனால் ரசிகர் ஒருவர், கழிவால் உண்டாக்கப்பட்ட காகித்ததின் மீது நேசம் கொள்ளத்துவங்கியது இதற்கான வழியை காட்டியது.

எல்ரைனோ குழு

எல்ரைனோ குழு


”வாடிக்கையாளரை மையமாக கொண்டதாக இதை நான் உருவாக்கவில்லை. சிறப்பாக செயல்பட்டு வர்த்தக நிறுவனங்களுக்கு விற்க திட்டமிட்டிருந்தோம். பொது மக்களுக்கு தகவல் மட்டுமே தெரிவிக்க விரும்பினோம். இன்று இரண்டு ஆண்டுகள் கழித்து, வாடிக்கையாளர் ஈடுபாட்டின் அருமையை உணர்ந்திருக்கிறேன். எல்ரைனோ ரசிகர்கள் இந்த தயாரிப்பை தாங்கள் வாங்காத நிலையிலும் கூட மிகுந்த ஈடுபாடு காட்டி வருகின்றனர். எனவே இப்போது நுகர்வோர் மத்தியிலும் இந்த தயாரிப்பை கொண்டு வர இருக்கிறோம்” என்கிறார் நிஷா.

ஒரு நல்ல கதை தானாக ஈர்ப்பை உண்டாக்கும் என்று நிஷா நம்புகிறார். எல்ரைனோவில் அற்புதமான கதை இருக்கிறது. வர்த்தக இலக்கை சமூக நோக்குடன் இணைப்பது தான் அவரது மிகப்பெரிய சவாலாக இருந்தது. லாபம், நீடித்த வளர்ச்சி மற்றும் அசாமின் காண்டாமிருகங்களை காக்கும் முயற்சிகளுக்கு இடையே எல்ரைனோ பாலமாக இருக்கிறது. "எங்களுக்கு கிடைக்கும் ஆர்வம் மற்றும் ஈடுப்பாட்டை பார்க்கும் போது காண்டாமிருகங்களின் எதிர்காலத்தில் தாக்கம் செலுத்தக்கூடியதாக இருக்கும் என நினைக்க துவங்கும் அளவுக்கு எல்ரைனோ பெரிதாக வளர்ந்திருக்கிறது" என தோன்றுவதாக நிஷா சொல்கிறார்.

எல்ரைனோ குழு

எல்ரைனோ குழு


நீடித்த தன்மை கொண்ட மற்றும் ஒற்றை கொம்பு கண்டாமிருகங்களை காக்க உதவும் இது போன்ற நிறுவனங்களுடன் அசாம் அரசு இணைந்து செயல்படும் என்று நிஷா நம்பிக்கை கொண்டுள்ளார். இந்த விலங்குகளுக்காக பாடுபட்டு வரும் நபர்களுக்கு நிதி உதவி அளிக்கும் பவுண்டேஷனை அவரது குடும்பம் நடத்தி வருகிறது.

இந்த பிராந்தியத்தில் மேலும் பலர் இது போன்ற நிறுவனங்களை துவக்க, அரசு தன்னைப்போன்றவர்களை ஆதரிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்கிறார். "நிதி உதவிக்காக அல்லது போட்டியில் பங்கேற்பதற்காக விண்ணப்பிக்கும் போதெல்லாம், வடகிழக்கு பகுதியில் இருந்து நிறுவனத்தை துவக்கி நடத்துவதற்காகவே எங்களுக்கு கூடுதல் அங்கீகாரம் வேண்டும் என நினைக்கிறேன். உள்கட்டமைப்பு, திறன் மற்றும் வானிலை என எல்லாமே வர்த்தகத்தை சவாலாக்குகிறது. வடகிழக்கிற்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதி எங்களை போன்றவர்களை சரியாக வந்தடைவதில்லை. இதனாலேயே வட கிழக்கில் இருக்கும் எங்களுக்கு தனிப்பட்ட கவனம் அளித்து பரிசீலிக்க வேண்டும்” என்கிறார் நிஷா. எல்ரைனோவின் சமூக நோக்கத்திலான வர்த்தக முறை காரணமாக இவற்றை பரிசுப்பொருட்கள் கடைகளில் விற்பனை செய்ய முடியவில்லை என்கிறார் அவர். கைகளால் செய்யப்படுவதால் உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதாக கூறுபவர் எங்கள் தயாரிப்பு சிறப்பானதாகவும் பிரத்யேகமானதாகவும் இருப்பதாக பெருமிதம் கொள்கிறார்.

எல்ரைனோ காகித்த்தால் செய்யப்பட்ட புத்தகம்

எல்ரைனோ காகித்த்தால் செய்யப்பட்ட புத்தகம்


தங்கள் நிறுவனம் அதன் நெறிமுறை சார்ந்த அணுகுமுறை காரணமாக பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட முடியாது என கூறும் நிஷா போரா, தங்கள் வருவாய் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே எங்களின் முக்கிய குறிக்கோள் என்கிறார் நிஷா.

Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share
Report an issue
Authors

Related Tags