பதிப்புகளில்

காது கேளாதோர் மேம்பாட்டிற்காக செயல்படும் காது கேளாத தொழில் முனைவர்!

18th May 2018
Add to
Shares
38
Comments
Share This
Add to
Shares
38
Comments
Share
க்ளோபல் ரீச் அவுட் (GRO) நிறுவனரான அலிம் சாந்தனி இந்த முயற்சியின் வாயிலாக காது கேளாதோருக்கான அடையாளம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களது மேம்பாட்டிற்குத் தேவையான வளங்களை வழங்கி அவர்களுக்கு அதிகாரமளிக்கிறார்.

அலிம் 2007-ம் ஆண்டு அமெரிக்காவில் GRO அமைத்தார். 2016-ம் ஆண்டு ஏர்டெல்லின் சுனில் பாரதி மிட்டலால் நிதி பெறப்பட்ட கார்ப்பரேட் சமூக பொறுப்பு முயற்சியான செண்டம் ஃபவுண்டேஷனுடன் இணைந்து இந்தியாவில் செயல்படத் தீர்மானித்தார்.

image


அமைதியின் ஒலி

ஒரு சிறிய திபெத்தியன் டீ ஷாப் மற்றும் டெல்லியின் பரபப்பான ஹாஸ் காஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றின் இடையே அமைந்துள்ளது செண்டம்GRO (CentumGRO).

அன்றைய நாள் அப்போதுதான் துவங்கியிருந்தது. ஆசிரியர்கள் கான்ஃபரன்ஸ் அறையில் புதிய பாடதிட்டம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். அலிமின் சைகை மொழிபெயர்ப்பாளரான சௌரவ் ராய் என்னை ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நேர்காணலுக்கான நேரம் வரும் வரை நான் உரையாடிய வாக்கியம் ’உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி’ என்பது மட்டுமே. அதுவும்கூட செண்டம்GRO-வில் உள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படுத்தும் இந்திய சைகை மொழி போலல்லாமல் அமெரிக்க சைகை மொழி என்பது எனக்குப் பின்னரே தெரியவந்தது,

இந்தப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும் காது கேளாதோர் என்பதே மற்ற காது கேளாதோருக்கான பள்ளிகளில் இருந்து அலிமின் இந்த முயற்சியை வேறுபடுத்திக் காட்டுகிறது.

டெல்லியில் அலுவலகத்தை அமைத்ததில் இருந்து ஏழு பேட்ச் மாணவர்கள் இங்கிருந்து பட்டம் பெற்றுள்ளனர்.

image


செண்டம்GRO விரிவான இரண்டு மாத திறன் பயிற்சி திட்டத்தை வழங்குகிறது. காது கேளாத நிபுணர்கள் அடங்கிய குழு மாணவர்களின் கற்றல் தேவைகளுக்காக காட்சி வடிவிலான பாடதிட்டத்தை உருவாக்குகின்றனர். காது கேளாதோருக்கு அதிகாரமளிக்கும் பாடங்கள் தலைமைப் பண்பு திறன்கள், காது கேளாதோருக்கான பாடங்கள், பொறுப்புடைமை, பாகுபாடுகளை எப்படித் தவிர்ப்பது உள்ளிட்டவற்றை கற்றுக்கொடுக்கிறது.

மாணவர்களுக்கு எழுத படிக்க கற்றுக்கொடுக்கவும் ஆங்கிலத் திறனில் பயிற்சியளிக்கவும் இந்திய சைகை மொழியை இணைத்துக் கொண்டு இரண்டு மொழிகளுடன்கூடிய அணுகுமுறையை ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர். நேர்காணலுக்கான பயிற்சி அளிக்கும்போது அவர்கள் ரோல் ப்ளே நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதில் பணியில் காது கேட்கும் திறன் கொண்டவர்களுடன் சிறப்பாக தொடர்பு கொள்வதற்கான நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

இங்குள்ள ஆசிரியர்கள் செண்டம்GRO-வின் முன்னாள் மாணவர்கள். காது கேளாத மாணவர்கள் சிறப்பாகப் புரிந்துகொள்ளவும் சுயமாக அதிகாரமளிக்கப்படும் திறனை வளர்த்துக்கொள்ளவும் அவர்களுடன் இணைவதற்கு ஆசிரியர்கள் இந்திய சைகை மொழியை பயன்படுத்துவது அவசியம் என்று இந்த ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த வழிமுறையானது செண்டம்GRO-வைச் சேர்ந்த அனீஷ் குமார் போன்ற பல மாணவர்களுக்கு உதவியுள்ளது. அனீஷ் தற்போது டெல்லியில் ஒரு உயர்தர ரெஸ்டாரண்டில் மேலாளராக இருக்கிறார்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு காது கேளாதோர் சமூகத்தைச் சேர்ந்த பலரைப் போன்றே இவரும் தன்னுடைய திறனை முழுமையாக வெளிப்படுத்தி தன் கனவை நோக்கி பயணிக்கவேண்டும் என்று தொடர்ந்து போராடி வந்தார். மாணவர்கள் அனைவரும் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும் அவர்களது கனவு நனவாகும் முயற்சிக்கு செண்டம்GRO உதவுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார் அலிம்.

அலிம் இன்று மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக போராடும் குழுவில் பணியாற்றுகிறார். இந்தக் குழு வாயிலாக காது கேளாதோர் பங்கேற்பை சமூகத்தில் அதிகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்திய திரைப்படங்களில் ஆங்கிலத்தில் சப்டைட்டில் கட்டாயமாக்கப்படவேண்டும் என கோரிக்கை வைக்கிறார்.

மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தை சிறப்பாக புரிந்துகொள்ள இந்திய சைகை மொழியில் ஒரு செயலியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். 

”இந்த சட்டம் அதிக சொற்களைக் கொண்டுள்ளதால் ஒருவர் இதைப் புரிந்துகொள்வது சிரமமாக உள்ளது. இந்த சட்டத்தின் பிரிவுகளை விவரிக்கும் வகையிலான சூழல்கள் அடங்கிய ரோல் ப்ளே கொண்ட செயலியை உருவாக்க விரும்புகிறேன்,” என்று அலிம் விவரித்தார்.

இந்தியா திரும்ப தீர்மானித்ததில் இருந்து அலிம் சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளார்.

சைகை மொழி

குறைபாடுகளுடன் ஒருவர் பிறந்துவிட்டால் அத்துடன் அவரது மகிழ்ச்சியும் ஆர்வமும் முடிந்துவிட்டது என்கிற வலுவான கருத்து நிலவும் நாட்டில் காது கேளாத குறைபாட்டுடன் பிறந்த அலிம் படிப்பிற்காக அமெரிக்கா அனுப்பப்பட்டார். 

“நான் கலிஃபோர்னியாவில் படித்தேன். ஆரம்பத்தில் எனக்கு சைகை மொழி தெரியாது,” என்று அவரது சைகை மொழிபெயர்ப்பாளர் சௌரவ் வாயிலாக தெரிவித்தார் அலிம். 

சௌரவ் அலிமின் வாக்கியங்கள் மட்டுமின்றி அதிலுள்ள ஒவ்வொரு நுணுக்கங்களையும் மிகவும் சிறப்பாக எடுத்துரைக்கிறார். 

image


அலிம் ஒரு நல்ல சைகை மொழிபெயர்ப்பாளரைக் கண்டால் பாராட்டுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

“சைகை மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறை உள்ளது. ஒரு நல்ல சைகை மொழிபெயர்ப்பாளர் கிடைப்பது அரிது,” என்றார். 18 மில்லியன் காது கேளாதோர் இருக்கும் இந்திய நாட்டில் வெறும் 250 நல்ல சைகை மொழிபாளர்கள் மட்டுமே உள்ளனர் என குறிப்பிட்டார்.

ஐஎஸ்எல் சைகை மொழிபெயர்ப்பாளர்களுக்கான ஒழுக்கக்கோட்பாடுகளை நிர்ணயிக்கும் செயல்முறையிலும் ஈடுபட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சைகை மொழிபெயர்ப்பாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். இதில் நாடு முழுவதும் இருந்து 35 சைகை மொழிபெயர்ப்பாளர்கள் பங்கேற்றனர். 

”சைகை மொழிபெயர்ப்பாளரின் ஒழுக்கக்கோட்பாடுகளுக்கான கொள்கைகளை நிலைநாட்டுவதே இதன் நோக்கமாகும்,” என்றார்.

முயற்சிக்கான உந்துதல்

அலிம் 2013-ம் ஆண்டு வாஷிங்டன் டிசி-ல் உள்ள Gallaudet பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கல்வியில் நிர்வாகம் மற்றும் மேற்பார்வையில் டாக்டரேட் பட்டம் பெற்றார். இந்தியாவில் மேற்படிப்பிற்கான கல்வி நிறுவனங்களில் காது கேளாதோர் ப்ரோக்ராம்களுக்கான சாத்தியக்கூறுகள் குறித்தே அவரது ஆய்வுரை இருந்தது.

அலிம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் சிக்கல்களைச் சந்தித்ததாக தெரிவித்தார். 

“பல்கலைக்கழகத்தில் மற்றவர்களைக் காட்டிலும் வேறுபட்டிருப்பது பிரச்சனை அல்ல என்பதையும் என்னைப் போன்ற பலர் வெற்றியாளர்களாகவும் தலைவர்களாகவும் இருப்பதை உணரந்தேன்,” என்றார்.

அவர் சற்றும் எதிர்பாராத வகையில் மாணவர்கள் குழுவின் தலைவரானார். இது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ”இந்த அனுபவமே என்னுடைய இன்றைய முயற்சிகளை சாத்தியப்படுத்தியது,” என்றார்.

image


’இகோயிங் க்ரீன்’ என்கிற அமெரிக்க நிறுவனம் head, heart, hustle ஆகிய மூன்று H வாயிலாக மக்கள் தங்களது ஆர்வத்தைக் கண்டறிய ஊக்குவிக்கிறது. இதை முன்னுதாரணமாகக் கொண்டே அலிம் இந்தியா திரும்பி இத்தகைய ஒரு முயற்சியை ஆரம்பத்திலிருந்து துவங்க திட்டமிட்டார்.

”உங்களது திறன் உங்களது அறிவாற்றலாகும் (head). நீங்கள் செய்யவிரும்புவதை மனதுடன் (heart) தொடர்புப் படுத்தலாம். என்னைப் பொருத்தவரை நான் தலைமைப்பண்பு சார்ந்த அறிவைப் பெற விரும்பினேன். அத்துடன் பயணிக்க விரும்பினேன். எனவே இந்தியா வந்து இந்த முயற்சியைத் துவங்கினேன் (hustle),” என்கிறார் அலிம். 

உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியாக பணியாற்றி வந்தார். அந்தப் பணியைத் துறந்தே இந்தியா திரும்பி இதற்கு முன்பு சற்றும் பரிச்சயம் இல்லாத ஒரு முயற்சியை மேற்கொள்ளத் தீர்மானித்தார். அவர் எதிர்பார்த்தது போலவே அவரது பெற்றோர் அவரது இந்த தீர்மானம் குறித்து மனம் வருந்தினர்.

காதுகளுக்கான இசை

கார்ப்பரேட் சமூக பொறுப்பு விருதுகளில் இந்தியாவில் சிறப்பான உள்ளடக்கிய சமூகம் என்கிற பிரிவில் செண்டம்GRO பாரதி சேஞ்ச்மேக்கர் விருதினை வென்றது. ”இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகக்கூடிய ஒரு சூழலை உருவாக்கவேண்டும் என்கிற கனவை எவ்வாறு சாத்தியப்படுத்துவது? காது கேட்கும் திறன் கொண்டவர்களை காது கேளாதோர் உலகில் பங்கெடுக்க அழைப்பு விடுக்கிறோம். 

இதை ISL Trivia quiz வாயிலாக செய்கிறோம். இதில் ஒவ்வொரு குழுவிலும் காதுகேட்கும் திறன் கொண்டவர்களும் காது கேளாதவர்களும் இணைந்திருப்பார்கள். அவர்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொண்டு ஒன்றாக வெற்றியடைய வேண்டும். இதை டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய பகுதிகளில் செயல்படுத்தி உள்ளோம். நல்ல வரவேற்பு கிடைத்தது,” என்றார் அலிம்.

image


திரைப்படங்களில் அதிக ஆர்வம் கொண்ட இவர் இந்தியாவில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு சப்டைட்டில்கள் அவசியம் என்று பிரச்சாரம் செய்து வருகிறார். 

“அமெரிக்காவில் சப்டைட்டில்கள் இணைக்கப்படவேண்டும் என்பது சட்டமாகும். அதை இந்தியாவிலும் செயல்படுத்தவேண்டும்,” என்றார். 

அடிக்கடி இசைக்கச்சேரிகளுக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் செல்லும் இவர் மாணவர்களும் இங்கு செல்ல ஊக்குவிக்கிறார். உள்ளடக்கிய கலாச்சாரத்தை உருவாக்கவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இதை சமூகம் உணர்ந்தால் அனைத்தும் சிறப்பிக்கும். இதை அலிமின் செண்டம்GRO நிரூபித்துக் காட்டுகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : தீப்தி நாயர் | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
38
Comments
Share This
Add to
Shares
38
Comments
Share
Report an issue
Authors

Related Tags