பதிப்புகளில்

750 சதுர அடி இடத்தை 45 ரோபோக்கள் கொண்டு சுத்தம் செய்து சாதனை படைத்த சென்னை ஐஐடி மாணவர்கள்!

8th Nov 2017
Add to
Shares
126
Comments
Share This
Add to
Shares
126
Comments
Share

ஐஐடி மெட்ராசை சேர்ந்த 270 மாணவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து 45 ரோபோக்களை உருவாக்கி அதை 750 சதுர அடி இடத்தை சுத்தம் செய்ய வைத்தனர். செண்டர் ஃபார் இன்னோவேஷன் மூலம் செயல்பட்ட இம்மாணவர்கள் ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அதிகாரிகள் முன்னிலையில் இந்த ரோபோக்களைக் கொண்டு சுத்தம் செய்யும் சாதனயை படைத்துள்ளனர். அதிகபட்ச ரோபோக்களை பயன்படுத்தி சுத்தம் செய்ததால் இது சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது. 

ஆர்பிஎம் மோட்டார் பொறுத்தப்பட்ட கூடுதல் வேகமான இந்த வகை ரோபோக்களில் இரண்டு ஸ்க்ரப்புகள் பொறுத்தப்பட்டு கீழே இருக்கும் தூசியை உறிஞ்சும் தன்மை மூலம் சுத்தம் செய்ய வடிவமைத்தனர் மாணவர்கள். உறிஞ்சி எடுக்கப்படும் தூசி, ரோபோவினுள் ஒரு டனலில் சேர்க்கப்படுகிறது. ப்ளூடூத் மூலம் இணைக்கப்பட்ட இந்த ரோபோக்களை மொபைல் போன் கொண்டு இயங்க செய்யும் வகையில் மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். ரோபோக்களில் பொறுத்தப்பட்டுள்ள அல்ட்ரா சவுண்ட் வசதியால் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல் இடைவிடாமல் 5 நிமிடங்களுக்கு சுத்தம் செய்தது. 

பட உதவி: NDTV

பட உதவி: NDTV


மாணவர்களில் ஒருவரான கெளரவ் லோதா ரோபோக்களின் பயப்பாடு பற்றி என்டிடிவி பேட்டியில் கூறுகையில்,

“இவை மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியை வழங்கும். அடிப்படை எலக்ட்ரானிக்ஸ், ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன் மற்றும் வயர்லெஸ் கம்யூனிகேஷன், 3-டி ப்ரிண்டிங், ராபிட் ப்ரோடோடைப்பிங் மற்றும் சாப்ட்வேர் மாடலிங் உள்ளிட்ட பல விஷயங்களையும், குழு முயற்சி, நேர மேலாண்மை, தீர்வு காணுதல் மற்றும் ஆளுமைகள் குறித்தும் கற்றுக்கொடுக்கும்,” என்றார். 

ஸ்வச் பாரத் அபியான், திட்டத்துக்கு உதவ நினைத்த மாணவர்கள், தங்களின் புத்தாக்கம் மற்றும் திறமைகளை பயன்படுத்தி ரோபோவை உருவாக்கி மனிதர்கள் செய்யும் சுத்தப் பணியை செய்ய வைத்தனர். இதே போல் சாக்கடை சுத்தம் மற்றும் தூர்வாறுவதிலும் ரோபோக்களை பயன்படுத்த முடியும் என்று கூறுகின்றனர். 

ஆசிய சாதனை புத்தகத்தில் விரைவில் இடம்பெறவுள்ளது இந்த சாதனை. பேராசிரியர் பி.ரவீந்திரன் இது பற்றி டெக்கன் ஹெரால்ட் பேட்டியில் பகிர்கையில்,

“ஸ்வச் பாரத் அபியான் திட்டத்துக்கு உதவிட நாட்டில் சிறந்த கல்வி நிலையமான ஐஐடி-யில் திறமைமிக்க மாணவர்களைக் கொண்டு இந்த தானியங்கி ரோபோக்களை உருவாக்கியுள்ளது பெருமையாக உள்ளது,” என்றார். 

கட்டுரை : Think Change India

Add to
Shares
126
Comments
Share This
Add to
Shares
126
Comments
Share
Report an issue
Authors

Related Tags