ஜெஃப் பெசோஸ் உடன் பறக்க இருக்கும் 18 வயது இளைஞர்: யார் இந்த ஆலிவர் டேமன்?

`ப்ளூ ஆரிஜின்' பயணத்தில் அடுத்தடுத்த சாதனை நிகழ்வுகள்!
5 CLAPS
0

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் நாளை தனது ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் 'நியூஸ் ஷெப்பர்ட்' ராக்கெட் மூலம் விண்வெளிக்கு பயணப்பட இருக்கிறார். 'Blue Origin' நிறுவனத்தின் இந்த முதல் பயணத்தில் ஜெஃப் பெசோஸ் தனது சகோதரர் மார்க் பெசோஸ் மற்றும் 82 வயதான மூதாட்டி மேரி வாலஸ் ஃபங்க் ஆகியோர் பறக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் இன்னொருவர் இந்தப் பயணத்தில் பறக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பெயர் ஆலிவர் டேமன்.

யார் இந்த ஆலிவர் டேமன்?

நெதர்லாந்தைச் சேர்ந்த டேமனுக்கு 18 வயதே ஆகிறது. கடந்த வருடம் தான் இவர் பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். இதன்மூலம் பயணிக்க இருக்கும் இளம் வயது கொண்ட நபர் என்ற பெருமையை பெற இருக்கிறார் டேமன். நெதர்லாந்தில் உள்ள ஓஸ்டெர்விஜ்க் நகரில் அமைந்துள்ள சோமர்செட் கேபிடல் பார்ட்னர்ஸ் என்ற தனியார் பங்கு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மல்டிமில்லியனர் ஜோஸ் டேமனின் மகன் இவர்.

மேலும், ஆலிவர் டேமன் தற்போது விமான பைலட் லைசென்ஸ் வைத்திருக்கும் இளம்வயது நபரும்கூட. பைலட் லைசென்ஸ் பெறுவதற்காக ஆலிவர் பள்ளிப்படிப்பை முடித்தபிறகு ஒருவருடம் கல்லூரிப்படிப்பை தொடராமல் இதற்காக செல்வழித்துள்ளார். நெதர்லாந்தில் உள்ள உட்ரெக்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படிப்பில் தற்போது சேர்ந்திருக்கும் நிலையில் தான் அவருக்கு இந்த விண்வெளி வாய்ப்பு கிடைத்துள்ளது. சிறுவயது முதலே, விண்வெளி மீது ஆலிவர் டேமனுக்கு ஆர்வமாம். அதனடிப்படையில், இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ப்ளூ ஆரிஜின் வெளியிட்ட அறிவிப்பில்,

“இந்தப் பயணம் ஆலிவர் டேமன் நீண்டநாள் கனவை நிறைவேற்றும். அவர் நான்கு வயதிலிருந்தே விண்வெளி, சந்திரன் மற்றும் ராக்கெட்டுகளால் வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ளார்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தான் தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக பேசிய, டேமன்,

“விண்வெளிக்குச் செல்வதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன், என் வாழ்நாள் முழுவதும் இதைப் பற்றி நான் கனவு கண்டுள்ளேன். பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் இருந்து உலகை பார்ப்பதை நினைக்கும்போது உற்சாகமாக இருக்கிறது. இதைச் செய்ததற்கும் புதிய ஷெப்பர்டை உருவாக்கியதற்கும் ப்ளூ ஆரிஜின் குழுவுக்கு மிக்க நன்றி," என்று தெரிவித்துள்ளார்.

ஒரு இடத்திற்கான பொது ஏலத்தில் 28 மில்லியனை செலுத்தி வென்ற ஏலதாரருக்கு பதிலாக டீமென் புதிய ஷெப்பர்டில் பறக்க உள்ளார். ஜூலை 20 வெளியீட்டில் ‘திட்டமிடல் மோதல்கள்’ காரணமாக ஏல வெற்றியாளர் வெளியேற வேண்டியிருந்தது என்று ப்ளூ ஆரிஜின் கூறினார். முன்னதாக, டேமன் பறக்க இருக்கும் இருக்கையை 28 மில்லியன் செலுத்தி வேறு ஒரு நபர் முன்பதிவு செய்திருந்தார். ஆனால் திட்டமிடல் தொடர்பாக எழுந்த பிரச்சனையால் அந்த நபர் வெளியேற, தற்போது டேமனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த வாய்ப்புக்காக டேமன் எவ்வளவு தொகை செலுத்தியிருக்கிறார் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால், ப்ளூ ஆரிஜின் இரண்டாவது விண்வெளிப் பயணத்தில் பறக்க அவரின் தந்தை முன்பதிவு செய்திருந்தார். தற்போது, இவர் முதல் பயணத்தில் பறக்க இருப்பதை அடுத்து, ஏலம் எடுத்த நபர் இரண்டாவது பயணத்தில் பறக்க இருக்கிறார்.  

தகவல் உதவி - firstpost | தமிழில்: மலையரசு

Latest

Updates from around the world