பதிப்புகளில்

பிராண்டுகளை சந்தைபடுத்தும் ‘க்ரியா’ நிறுவனம்

27th Sep 2015
Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share

5000 போட்டியாளர்களுக்கிடையே பிராண்ட் சந்தைபடுத்தும் பிரிவில் (brand merchandising segment) முதல் இடத்தை பிடிக்க ‘க்ரியா’ (Crea) திட்டமிட்டுள்ளது.

பிராண்டுகளின் பொருட்களை சந்தைப்படுத்துதல் என்பது விளம்பரத்துறையின் ஒரு பகுதி. ஒரு நிறுவனத்தை ஊக்குவிக்க செய்யப்படும் 'கொரில்லா சந்தைப்படுத்துதல்' முறையில் இது ஒரு முக்கியமான கட்டம் ஆகும். கார்பரேட்டுகளின் பின்பத்தை உயர்த்துதல், ப்ராண்ட் அல்லது நிகழ்ச்சிகளை கருத்தரங்குகள் மூலமாக பிரபலப்படுத்துதல், போன்றவை இதற்கு உதாரணம். மூன்று பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட இந்த தொழிற்பிரிவில் சுமார் ஐந்தாயிரம் பேர் போட்டியாளர்கள் தொழில் புரிந்து வருகின்றனர். எனினும், இவ்வளவு பெரிய அமைப்பில், இந்த தொழில்துறை சரிவர ஒருங்கிணைக்கப்படாமலும் கட்டமைக்கப்படாமலும் சிதறுண்டு இருப்பது மட்டுமல்லாது ஒரு அமைப்பாகவும் செயல்படவில்லை.

image


இந்த சந்தையை நன்றாக மதிப்பீடு செய்த, உப்கார் எஸ். சர்மா (Upkar S. Sharma) இதில் மிகப்பெரிய தொழில் வாய்ப்பு உள்ளதாக கருதினார். 2008 ஆம் ஆண்டில் ‘க்ரியா’ (Crea) வை தொடங்கினார். இது வணிக வர்த்தக பிரிவிற்கிடையே, பிடுபி (B2B) தேவைகளை நிறைவேற்றுவதுடன் நிறுவனங்களுக்கு தேவையான பரிசுப்பொருட்கள், விருதுகள், ஊக்குவிப்பு பொருட்கள் (promotional merchandise) மற்றும் சீருடைகள் போன்ற பிராண்ட் சந்தைப்படுத்தல்களை நிறைவு செய்கிறது.

"நாங்கள் துறை நிபுணராக செயல்பட்டு அவர்களது தொழிலை சந்தைபடுத்தும் பிரிவினை மேம்படுத்த நிறுவனங்களுக்கு உதவுகிறோம். இன்று, அழகு சாதனம் , மது பானம், ஓட்டல்கள் மற்றும் ஃ பிட்நெஸ் போன்ற துறைகளின் தேவைகளை நிறைவு செய்கிறோம். இந்த தொழில்களில் சந்தைபடுத்தும் பொருட்கள் ஒரு செலவாக இல்லாமல், வருவாயை பெருக்கக்கூடிய பொருட்களாகவும் அமைகிறது. இதனால் தான் இது போன்ற தொழில்களில் மார்கெட்டிங் செய்வோர், சந்தைபடுத்துதல் என்பது மிகவும் முக்கியம் என கருதுகிறார்கள். இது, எங்கள் திறன்களை வெளிக்கொணர்வதில் பெரிதும் உதவிகரமாக உள்ளது" என்கிறார் உப்கார்.

‘க்ரியா’ வின் அணுகுமுறையில் புதிதாக என்ன இருக்கிறது ?

உப்கார் கூறுவதன் படி, இந்த தொழிலில் இறங்குவது மிகவும் சுலபம். இதற்கு அதிக முதலீடும் தேவையில்லை. இதன் காரணமாக தான், சிறு விற்பனையாளர்கள் மற்றும் இணையதளம் மூலம் தொழில் செய்வோர் இத்தொழிலில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவர்கள் பொருளை சார்ந்த வியாபாரம் செய்கின்றனர். ஆனால் கிரியா, தனது வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதுடன், அவர்களுக்கு தொழிலை சார்ந்த ஆலோசனை கூறுகளையும் வழங்கி வருகிறது.

"விலை பற்றி பேசுவதை விட நாங்கள் ஆலோசனைகளை முன்னிறுத்துவோம். இது, எங்களுக்கு, வாடிக்கையாளர்களிடையே இருக்கும் உறவினை பலப்படுத்துவதுடன் லாபமும் ஈட்டுத்தருகிறது" என்கிறார் உப்கார் (Upkar).

நிறுவனத்தில் வளர்ச்சி

இந்த நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60 சதவீகித நிலையான வளர்ச்சி காண்பதாக கூறுகிறது. 2014-15 ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் கூட்டு வருவாயளவு ரூ.15கோடியை தாண்டியது. மேலும் இந்த நிதியாண்டில் ரூ.25கோடியை அடையும் என்றும், அதற்காக கடினமாகவும் உழைக்கின்றது.

உலகின் பிரபலமான பிரண்டுகளுடன் ‘க்ரியா’ (Crea) பணியாற்றி வருகிறது. கூகிள், பெர்னொட் ரிகார்ட்(Pernod Ricard), லோரியல், ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டல்கள் (Ritz Carlton hotels), பிட்சா ஹட், வேரோ மோடா(Vero Moda), ஜாக் ஜோன்ஸ் (Jack Jones), கோஹினூர் ஃபுட்ஸ் (Kohinoor Foods) போன்ற முன்னணி நிறுவனங்கள் இதில் அடங்கும். "நாங்கள் சுமார் 25 நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். ஒட்டுமொத்தமாக, எங்களுடன், சுமார் 400 வாடிக்கையாளர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் பணியாற்றி வருகின்றனர்.

வணிக மாதிரி குறித்து உப்கார் கூறுகையில், "எங்களது வணிக மாதிரி மிகவும் நேர்படையானது. என்னதான் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை முதல் அதனை நிறைவேற்றுதல் வரை முழுவதுமாக செய்தாலும், நாங்கள் என்ன கொடுக்கிறோமோ அதற்கு தான் பணம் பெறப்படுகிறது. மேலும் நாங்கள் ஒப்பந்த முறையில் வேலை செய்வதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்".

சந்தை பிரிவு மற்றும் சவால்கள்

பிராண்ட் சந்தைபடுத்தும் தொழில், சுமார் 3 பில்லியன் டாலர் வர்த்தகம் கொண்டதாகும். இந்த தொழில் குறித்த எந்த விதமான தீவிர ஆய்வும் இதுவரை மேற்கொள்ளப்பட்டதில்லை என்பது நிபுணர்களின் கருத்தாக இருந்தாலும் சுமார் 5000 த்திற்கு மேற்பட்டோர் இத்தொழிலை ஆர்வத்துடம் செய்துவருகின்றனர். எனினும் இத்தொழிலில் கவலை தரக்கூடிய வகையில் சில கட்டமைப்பு குறைபாடுகள் உள்ளன.

"ஒருங்கிணைப்போ அல்லது அதற்கான சாத்தியக்கூறு இல்லாத திசையை நோக்கிச்செல்வதால், சில தொழில்களை போல், தன்னை விரிவுபடுத்தி கொள்ளவோ அல்லது ஒருங்கிணைத்து செயல்பட விரும்பாத தொழிலாக இது திகழ்கிறது. ஆனால், ‘க்ரியா’வில் நாங்கள் இது போன்றதொரு நிலையை, வெகு விரைவில் மாற்றியமைக்க பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்", என்கிறார் உப்கார்.

இது தவிர, இத்தொழிலுக்கு சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களோ, வியாபாரிகளோ அல்லது வாடிக்கையாளர்களோ, அவர்களின் மனநிலை என்பது மிக பெரிய சவாலாக அமைகிறது. "விளம்பரங்கள் மற்றும் நிறுவன நிகழ்ச்சிகளை பொருட்படுத்துவது போல், சந்தைபடுத்துவதில் யாரும் அதிக அளவில் மெனக்கெடுவதில்லை. இந்த சந்தைக்கு அதிர்வை ஏற்படுத்தினால் நல்ல மாற்றத்தினை எதிர்பார்க்கலாம் என்று நம்புகிறேன்". என்கிறார் உப்கார்.

போட்டி

இந்த அமைப்புசாரா சந்தையில், பல சிறிய அளவில் தொழில் செய்வோர் மற்றும் விற்பனையாளர்கள் நன்றாகவே சம்பாதிக்கிறார்கள்.

இவர்களை தவிர, பெயர் சொல்லக் கூடிய வகையில் இ-யந்திர (eYantra), டால்ஃபின் டிஸ்ப்ளேஸ் (Dolphin Displays) மற்றும் பிராண்ட் ஸ்டிக் (BrandStick) போன்றோரும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில், இ-யந்திர (eYantra) போன்ற நிறுவனங்கள், நிதி பற்றாகுறை இல்லாத போதிலும், பல வகைகளில் முயற்சிகள் மேற்கொண்டும், அவர்களால் ஒரு அழுத்தமான முத்திரை பதிக்க முடியவில்லை. நடைமுறையில், ‘க்ரியா’வின் வியாபார போட்டியாளர்களை கவனிக்கும் போது, இவர்கள் இணையதளத்தில் உள்ள பொருட்பட்டியல் கொண்ட விற்பனையாளர்களாகவே காணப்படுகின்றனர்.

எங்கள் நிறுவனம், பிராண்ட் நிறுவனங்களும், அதன் விற்பனை பிரிவுகள், அன்பளிப்பு பொருட்களுக்கான இணையதளங்கள் (gifting websites) மற்றும் பிற அலுவலக பொருட்கள் விற்பனையாளர்களிடமிருந்தே போட்டியினை எதிர்கொள்கிறது.

தற்போது, 50 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் சர்வதேச நிறுவனங்களின் பார்வை இந்தியாவின் மீதி பதிந்துள்ளதால் வரும் ஆண்டுகளின், போட்டி நிலவரம் வெகுவாக மாற்றங்களை சந்திக்கும். இது கண்டிப்பாக ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும், சிதறிக்கிடக்கும் இத்தொழிலை ஒருங்கிணைக்கும் என்று நம்பலாம்.

Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share
Report an issue
Authors

Related Tags