Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

கொரோனா வைரஸை ஓழிக்க உதவும் 'டெர்மினேட்டர்' கருவிகள்: 18 வயது மாணவனின் கண்டுபிடிப்புகள்!

பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த ஆர்டர்!

கொரோனா வைரஸை ஓழிக்க உதவும் 'டெர்மினேட்டர்' கருவிகள்: 18 வயது மாணவனின் கண்டுபிடிப்புகள்!

Sunday October 17, 2021 , 2 min Read

கோவிட் தொற்றுநோய் நாட்டின் சுகாதாரத்தை மாற்றி எழுதியுள்ள நிலையில், பல மக்கள் தங்கள் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கவும் அது வழிவகுத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மக்கள் தங்கள் சுகாதாரத்தை பெரிய அளவில், அதேநேரம் எளிதாக பராமரிக்க உதவும் வகையில் பல புதுமையான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அப்படி ஒரு முன்னெடுப்பை செய்தவர் தான் மிஹிர் வர்தன்.


அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இரண்டாம் ஆண்டு மாணவரான மிஹிர் வர்தன், புற ஊதா கிருமி நீக்கம் கொள்கைகளில் வேலை செய்யும் சாதனங்களை ‘டெர்மினேட்டர்' என்ற பெயரில் கண்டுபிடித்திருக்கிறார்.

மாணவன்

குருகிராமைச் சேர்ந்த 18 வயதான மிஹிர் வர்தன் 'டெர்மினேட்டர்' பெயரில் மூன்று கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துள்ளார். அவை, டெர்மினேட்டர் மெகா, டெர்மினேட்டர் மினி மற்றும் டெர்மினேட்டர் டர்போ.


தனது கண்டுபிடிப்புகளைப் பற்றி பேசும், மிஹிர் வர்தன்,

“கொரோனா தொற்றுநோய் உலகை தாக்கியபோது, UVC- சுத்திகரிப்பு சாதனங்கள் சிறிய பொருட்களுக்குக் கிடைத்தன. ஆனால், பெரிய அளவில் பெரிய பொருள்களை திறம்பட மற்றும் திறமையாக சுத்தப்படுத்தக்கூடிய உயர் திறன் கொண்ட கருவி கிடைக்காமல் இருப்பதை நான் கண்டேன். அதற்கான தேவையும் அதிகமாக இருந்ததை உணர்ந்தேன். அதனை உருவாக்கும் முனைப்பில் அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு செய்தேன். டெர்மினேட்டர் மெகா எனது முதல் கண்டுபிடிப்பு,” என்றார்.

”டெர்மினேட்டர் மெகா அதிக திறன் கொண்ட, 1,000 லிட்டர், UVC சுத்திகரிப்பு சாதனம் ஆகும். இது பெரிய பொருட்களை சுத்தப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வெற்றியால் முதலில் இரண்டு நிறுவனங்களுக்கு இந்த சாதனம் ஆர்டர் செய்யப்பட்டது. பின்னர், பிரதமர் அலுவலகம் உட்பட 12 இடங்களுக்கு இந்த சாதனம் ஆர்டராக பெறப்பட்டது," என்றுள்ளார்.

இதனிடையே, 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட சாதனத்திற்கான சிறிய அலகுகளுக்கான ஆர்டர்களையும் மாணவன் மிஹிர் வர்தன் பெற, அப்படி உருவானது தான் ‘டெர்மினேட்டர் மினி’.

மாணவன்

இது வணிகப் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு சாதனங்களும் வலுவானவை, எளிதில் செயலாற்றக்கூடியவை. பராமரிக்க மற்றும் சேவை செய்ய எளிதானவை. UVC கதிர்வீச்சின் கசிவைத் தடுக்கவும், அறைக்குள் பிரதிபலிப்பு மேற்பரப்பை வழங்குவதன் மூலம் சாதனத்தின் செயல்திறனை அதிகரிக்கவும் எளிதானவை.


இந்த சாதனங்களின் உள்வடிவமைப்பு அலுமினியத்தால், மரத்தால் ஆனவை. இந்த சாதனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வயரிங் மற்றும் யுவிசி டியூப் விளக்குகள் உள்நாட்டில் பெறப்பட்டவை.

டெர்மினேட்டர் மெகாவின் விலை சுமார் ரூ.28,000, டெர்மினேட்டர் மினி ரூ.20,000 என்று நிர்ணயித்துள்ளார் மாணவன் மிஹிர் வர்தன்.

கண்டுபிடிப்புகளை மாணவன் மிஹிர் மேற்கொண்டிருந்தாலும், அதனை வணிக ரீதியாக விற்க நிறுவனங்களுடன் கூட்டணி ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள மிஹிர்,

“கண்டுபிடிப்புகளை வணிகரீதியாக உற்பத்தி செய்ய என்னுடன் கூட்டாளியாக இரண்டு நிறுவனங்கள் வந்தன. வணிகரீதியாக வடிவமைக்கப்பட்ட பிறகு, எனது அடுத்த சவாலுக்கு செல்ல முடிவு செய்தேன். டெர்மினேட்டர் மெகா மற்றும் மினியின் பயனர்களின் கருத்துக்களை நிவர்த்தி செய்தேன்," என்றுள்ளார். 

ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு ஆன் மாத்யூ | தமிழில்: மலையரசு