பதிப்புகளில்

நீங்கள் யார்? நீங்கள் செய்ய முயற்சிப்பது என்ன? உங்கள் அடையாளத்தை புரிய வையுங்கள் நிறுவனர்களே: செகோயா கேபிடல் ஷைலேந்திர சிங்

31st Oct 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

மன்னிக்கவும், நீங்கள் யார் என மீண்டும் சொல்லுங்கள்? "அமெரிக்காவில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனராக நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட மிகவும் உற்சாகமான மற்றும் பணிவை உண்டாக்கிய அனுபம்” என்று டெக்ஸ்பார்க்ஸ் 2015 ல் பேசிய செகோயா கேபிடல் (Sequoia Capital ) நிறுவனத்தின் ஷைலேந்திர சிங் தெரிவித்தார்.

தங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்வதே தொழில்முனைவோர் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. உலகிற்கு உங்களை தெரியாது. எனவே உங்கள் அடையாளத்தை நிலை நிறுத்துவது முழுவதும் உங்கள் பொறுப்பு. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான பொறியியல் நிறுவனர்கள் இதை உணர்வதில்லை. மைய செய்தியை வலுவாகவும், சக்தியாகவும் இருக்கச்செய்ய தகவல் தொடர்பு மிகவும் முக்கியமானது என்கிறார் ஷைலேந்திர சிங்.

image


பல நிறுவனர்கள் தகவல் தொடர்பு மார்கெட்டிங் துறையின் பணி என நினைக்கின்றனர் அல்லது ஒரு சிலர் தங்கள் நிறுவனம் தான் அடுத்த வாட்ஸ் அப் என நினைத்துக்கொண்டு அதற்கு தகவல் தொடர்பு அவசியம் இல்லை என நினைக்கின்றனர்” என்று கூறும் ஷைலேந்திர சிங், நிறுவனர்கள் தகவல் தொடர்பில் கவனம் செலுத்தினால் நீண்ட கால நோக்கில் பலனளிக்கும் என்று குறிப்பிட்டார்.

மைய செய்தி

மைய செய்தி எளிமையானது என்றாலும் பெரும்பாலான நிறுவனர்கள் கீழ்கண்ட நான்கு விஷயங்களை சரியாக செய்ய போதிய நேரம் மற்றும் முயற்சியை செலவிடுவதில்லை என்று ஷைலேந்திர சிங் சுட்டிக்காட்டுகிறார்.

1. தொலைநோக்கு மற்றும் இலக்கு அறிக்கை; ஒரு வர்த்தகத்துக்கு இவை மிகவும் முக்கியம். ஏனெனில் ஏதேனும் சந்தேகம் என்றால் இவற்றை நீங்கள் குறிப்பாக கொள்ளலாம். வேறு விதமாக சொல்வதானால் இவை தான் வழிகாட்டும் கொள்கைகள்” என்கிறார் ஷைலேந்திர சிங்.

2. இ-மெயில்களுக்கான வாசகங்கள்; நிறுவனர்கள் தாங்களின் நோக்கம் பற்றி ஒரு சில முறை மெயில் அனுப்புவதுண்டு, ஓவ்வொரு முறையும் அவை வேறுபட்டிருக்கும் என்கிறார் ஷைலேந்திர சிங். "ஒரு நிறுவனராக தகவல் தொடர்பில் உங்களால் சீரான தன்மையை கடைபிடிக்க முடியாவிட்டால் உங்கள் குழுவில் உள்ள மற்றவர்களாலும் அது முடியாது”.

3. எந்த நேரத்திலும் தயார் நிலை; ஒரு தொழில்முனைவவோர் தனது அடையாளத்தை நிலைநிறுத்த விரும்பினால் எந்த நேரத்திலும் விற்பனை செய்யத்தயாராக இருக்க வேண்டும்” என்கிறார் ஷைலேந்திர சிங். நீங்கள் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். உங்கள் நிறுவனத்தில் அங்கம் வகிக்க உள்ள ஊழியர்களிடம் விற்பனை செய்ய வேண்டும். உங்களுடன் வர்த்தகம் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்ய வேண்டும். "எல்லா நேரங்களிலும் நீங்கள் விற்பனை செய்ய வேண்டும். உங்களுக்கு அதில் விருப்பமில்லாவிட்டால், இதை செய்யக்கூடிய அல்லது விற்பதற்கு கற்றுக்கொள்ளக்கூடிய இணை நிறுவனரை தேடி கண்டுபிடியுங்கள்” என்கிறார் அவர்.

4. பவர் பாயிண்ட்; பல நிறுவனர்கள் இதை வீண் முயற்சி என கருதினாலும், காட்சி விளக்கங்களை உருவாக்கும் திறன் மிகவும் அவசியாமனது என ஷைலேந்திர சிங் கருதுகிறார். சிறந்த பவர் பாயிண்ட் காட்சி விளக்கத்தை உருவாக்குவதில் நேரத்தை செலவிடுவது உங்கள் சிந்தனைகளுக்கு நல்ல வடிவம் கொடுத்து நிறுவனர்களுக்கு மேலும் தெளிவை அளிப்பதாகவும் அவர் கூறுகிறார்.

5. போட்டியை அறிதல்: "உலகில் நீங்கள் எந்த இடத்தில் நிற்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்” என்கிறார் ஷைலேந்திர சிங். உங்கள் துறையின் அமைப்பை விளக்கும் போட்டி வரைபடம் மற்றவர்களுக்கு தேர்வு செய்யும் வாய்ப்பை அளிப்பதுடன், நிறுவனம் மதிப்பு சங்கியிலில் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதை நிறுவனர் அறியவும் உதவுகிறது. அதிலும் குறிப்பாக மதிப்பு சங்கிலியில் நீங்கள் புதுமை படைக்க விரும்பினால்; மற்றவர்கள் எந்த இடத்தில் இருக்கின்றனர் என்பதை அறிவது அவசியம்.

மைய செய்தி என்ன செய்ய வேண்டும்?

மைய செய்தியை வலுவாக உருவாக்க உதவும் முக்கிய விஷயங்களாக ஷைலேந்திர சிங் கருதுவது:

போக்கை கவனியுங்கள்; ஹைப்பர் லோக்கல் மற்றும் கிளவுட் பற்றி எல்லோரும் பேசுகின்றனர். இந்த துறைகளில் நீங்கள் ஏதாவது செய்து கொண்டிருந்தால், இவற்றுடன் இணைந்திருப்பது நல்லது. இது பொருத்தமாக அமைவதோடு தயாரிப்பை புரிந்து கொள்ளவும் உதவும். ஆனால் இன்னொரு நிறுவனம் எனும் தோற்றத்தை தராமல் முக்கிய போக்குடன் தொடர்பு கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்.

2. எளிமையாக,தெளிவாக; டிராப்பாக்ஸ் தான் இதற்கு சிறந்த உதாரணம் என்கிறார். "எங்கு வேண்டுமானாலும் உங்கள் கோப்புகள்” என்பது எளிமையாக இருக்கிறது. இங்கு எந்த வார்த்தை நுட்பங்களும் இல்லை. இது கூட்டு முயற்சி செயலி என்று சொல்லப்படவில்லை.

3. கொஞ்சம் புரியாத தன்மை; ஒரு குறிப்பிட்ட அளவு புரியாத தன்மை மற்றும் குழப்பம் தேவை என்பதை புரிந்து கொள்ளாமல் பெரும்பாலான நேரங்களில் பலரும் நேரடியான முறையில் தொடர்பு கொள்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். "இது உங்களுக்கான பரப்பை அதிகமாக்கித்தருவதாக கூறும் ஷைலேந்திர சிங், ஆனால் மிகவும் குழப்பமாகி விட்டால் யாருக்குமே புரியாமல் போய்விடும் என்கிறார்.

4. வாடிக்கையாளரை மையமாக கொண்ட செய்தி

5. மறக்க முடியாத தன்மை

6. பத்து முறை மீண்டும் சொல்லுங்கள்

7. வேறுபாடு; "உறுதியான மற்றும் நீங்கள் கடைபிடிக்க கூடிய வேறுபட்டத்தன்மை பெரிய அளவு பயன் தரும் என்கிறார் ஷைலேந்திர சிங்.

8. தெளிவு; தகவல் தொடர்பின் அம்சங்களில் இது மிகவும் முக்கியமானது.

9. சொந்த வார்த்தைகள்; உங்கள் சொந்த வார்த்தைகள் மூலம் உங்கள் உத்திய எடுத்துச்சொல்ல முடியும் என்றால் மிகவும் சிறப்பாக இருக்கும். "உங்கள் மைய அம்சங்கள் குறித்து உங்கள் சொந்த குரலில் புரிந்து கொள்ளலாம்”.

பார்வையாளர் வரைபடம்

முக்கிய பங்குதாரர்களுடனான தகவல் தொடர்பை உயிர்ப்புடன் வைத்திருக்க நிறுவனர்கள் தொடர்ந்து செய்திகளை அனுப்புவது முக்கியம். நிறுவனர் மையமாக இருக்கிறார், அவரைச்சுற்றி ஊழியர்கள், ஆலோசகர்கள், வாடிக்கையாளார்கள், முதலீட்டாளர்கள், மீடியா மற்றும் உலகில் உள்ளவர்கள் இருக்கின்றனர். "இவர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளனர். ஒரு சில நிறுவனங்கள் சிறந்து விளங்க முக்கிய காரணம் அவை தொடர்புடய அனைத்து முக்கிய பங்குதாரர்களுடனும் தகவல் தொடர்பை உயிர்ப்புடன் வைத்திருப்பது தான். இவை தெளிவான குறிப்புகளை அளிக்கின்றன” என்கிறார் ஷைலேந்திர சிங்.ஒவ்வொரு பங்குதாரருடனும் வேறு விதமாக தொடர்பு கொள்வது அவசியம்.

காட்சி விளக்கம்

பல நிறுவனங்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்வதில்லை. குறிப்பாக நன்கறியப்பட்ட நிறுவனர்களுக்கு இது பொருந்தும். "நீங்கள் யார் ,என்ன செய்கிறீர்கள் என மற்றவர்கள் புரிந்து கொள்ள உதவுவது ஒரு சுமை அல்ல, ஒரு வாய்ப்பு” என்கிறார் ஷைலேந்திர சிங். தெளிவான காட்சி விளக்கத்தை அளிப்பதும் முக்கியம். அது உங்களை பற்றியும் உங்கள் நிறுவனம் பற்றியும் நல்ல விதமாக உணர்த்தும்.

தெளிவு- துல்லியம்

ஒரு குழுவாக நீங்கள் எதை நோக்கி செல்கிறீர்கள் என புரிய வைக்க இது உதவும். உங்கள் நிறுவனம் மற்றும் அதன் முன்னேற்றம் பற்றி உங்களால் தெளிவாக உணர்த்த முடியாவிட்டால் முதலீட்டாளர்களுக்கு எப்படி உங்கள் மீது ஈர்ப்பு உண்டாகும்? இதுவும் நிறுவனரின் பொறுப்பு தான். துல்லியமும் முக்கியம். "நீங்கள் மிகையான மற்றும் பொய்யானவற்றை கூறினால் அது நிறுவனர் மற்றும் அமைப்பு மீது நம்பிக்கையின்மையை உண்டாக்கலாம்: என்கிறார் அவர். தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனும் ஆசையில் எண்ணிக்கையை மிகையாக்க வேண்டாம்.

சிறிய சந்திப்புகள்

பல நிறுவனங்கள் பெரிய அறிவிப்புகளின் போது செய்தியாளர்களை சந்திக்கின்றன. ஆனால் அடிக்கடி நேரம் ஒதுக்கி செய்தியாளர்களிடம் உங்கள் நிறுவனம் பற்றி விளக்கி சொல்லுங்கள்.

உங்கள் குரலில் அறியச்செய்யுங்கள்

எப்போது நீங்கள் மற்றவர்களை சந்தித்தாலும் அவர்கள் தங்கள் பார்வையிலேயே பேசுகின்றனர் என்பதால் இது மிகவும் முக்கியம். வலைப்பதிவு, டிவிட்டர் மற்றும் சமூக ஊடகம் மூலம் உங்கள் குரலில் வெளிப்படுங்கள்.

வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை

"வாடிக்கையாளர்களுக்கு மதிப்பீடு, கலாச்சாரம், நிதி பற்றி எல்லாம் கவலையில்லை. உங்களின் மதிப்பு மற்றும் நீங்கள் முக்கியமாக கருதும் விஷயங்களே அவர்களுக்கு தேவை” என்கிறார் ஷைலேந்திர சிங். எனவே வாடிக்கையாளர்களிடம் ஏதாவது கூறும் போது அது சீரானதாக, மதிப்பு மிக்கதாக, உங்கள் ஈடுபாட்டை உணர்த்தக்கூடியதாக இருக்க வேண்டும். இந்த தன்மை குழுவில் உள்ள எல்லோரிடமும் இருக்க வேண்டும். அதில் ஒத்திசைவு இருக்க வேண்டும்.

ஊழியர்கள் ஈடுபாடு

தாக்கம், வளர்ச்சி மற்றும் தங்களுக்கான வாய்ப்புகள் பற்றி தான் ஊழியர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர் என்கிறார் ஷைலேந்திர சிங். உங்கள் கலாச்சாரத்தை அவர்கள் முழுவதும் புரிந்து கொள்ள வேண்டும். "மிகையான எண்ணிக்கைகள் எதிர்மறையான செய்தியை தந்து ஊழியர்கள் நிறுவனம் மீது நம்பிக்கை இழக்க வைக்கும்” என்கிறார் அவர். கூட்டங்கள் மற்றும் இ-மெயில்கள் மூலம் ஊழியர்களை பாராட்டுங்கள். அவர்களை அங்கீகரிப்பது ஊக்கத்தை உண்டாக்கும். "நிறுவனத்தில் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பது குறித்து ஊழியர்களிடம் தகவல் தெரிவியுங்கள்" என்கிறார் அவர் மேலும்.

மூத்த நிர்வாகிகள் குழுவில் ஒரு ஒத்திசைவு இருப்பது முக்கியம். தகவல் தொடர்புக்கான வழிகளும் வேண்டும். அவர்கள் ஒரே இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.

தகவல் தொடர்பை சீராக, தெளிவாக, துல்லியமான மற்றும் வெளிப்படையாக வைத்திருப்பது தான் மிகவும் முக்கியம்.

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags