பதிப்புகளில்

இந்தியத் தெருக்களில் நெருப்போடு விளையாடும் பீடா விரும்பிகள்...

sneha belcin
6th Sep 2018
Add to
Shares
12
Comments
Share This
Add to
Shares
12
Comments
Share

ஒரு பெரிய விருந்துக்கு பிறகு கொடுக்கப்படும் வெற்றிலைப் பாக்கும், கொஞ்சம் சுண்ணாம்பும் தொன்னூறுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பெரும் மாயமாக இருந்திருக்கும். மாறி மாறி நாக்கின் நிறம் மாறியிருப்பதை காண்பித்து விளையாடியிருப்போம். ஆனால், போகப் போக இந்த வெற்றிலை பாக்கும், அதன் மீதிருந்த ஆவலும் குறைந்திருப்பதை நாம் கவனத்திருக்கவில்லை.இந்த இடைவெளியில் வெற்றிலை பாக்கும் கூட பரிணாம வளர்ச்சியடைந்து, ‘ஐஸ் பீடா’, ‘ சாக்லேட் பீடா’ என நிறைய வடிவங்களில் சந்தைகளில் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது.

அவற்றையெல்லாம் விட, பெரும் சந்தையாக உருவாகியிருப்பது ‘ ஃபயர் பான்’. இன்ஸ்டாகிராமில் ஃபுட் ப்ளாக்கராக இருக்கும் உங்கள் நண்பர்களில் ஒருவர் நிச்சயமாக , எரிந்து கொண்டிருக்கும் ‘ஃபயர் பானை’ அப்படியே வாயில் போட்டு சுவைப்பது போன்ற ஒரு வீடியோவை கடந்த ஒரு வருடத்தில் பதிவு செய்திருப்பார். 

Image Courtesy : India.com

Image Courtesy : India.com


ஃபயர் பானின் சுவையை விட , அது உண்டாக்கும் சாகச உணர்வு தான் அதை சமீப காலத்தின் முக்கியமான ஸ்ட்ரீட் ஃபுட்டாக கணக்கில் கொள்ள வைக்கிறது.

பெரிய வெற்றிலை, கொஞ்சம் பாக்கு, இனிப்பூட்டும் மசாலாக்கள், பொடித்த ஐஸ் கட்டிகள் இவற்றை எல்லாம் ஒன்றாக்கி, அதன் மீது நெருப்பு வைத்து நேரடியாக வாடிக்கையாளரின் வாயில் ‘ஃபயர் பானை’ திணிக்கிறார்கள் ஃபயர் பான் தயாரிப்பாளர்கள். வாய்க்குள் சென்றதுமேயே வெற்றிலையில் இருக்கும் நெருப்பு அணைந்து, உடனடியாக வாய் முழுதும் குளிர்ந்து போகிறது. இது தான் தற்காலிகமான ட்ரெண்டிங். ஆனால், ஃபயர் பான் யாரால், எங்கு கண்டுபிடிக்கப்பட்டது என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

குஜராத்தில் ராஜ்கோட்டில் ‘கேலக்ஸி பான்’ என்ற கடையை நடத்தி வரும் ப்ரேம் தெர்வானி, எட்டு வருட கால முயற்சிக்கு பிறகு தான் இந்த ‘ஃபயர் பானை’ கண்டுபிடித்திருப்பதாக செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்திருந்தார். பார்களில் கிடைக்கும் ‘ஃப்ளேமிங் ஷாட்’ (எரியும் பானங்கள்) தான் இதற்கு முன்னுதாரணமாக இருந்ததாக சொல்லியிருக்கிறார். 

பான் கடைகள் கூடிக் கொண்டே சென்றதால், தன்னுடைய இருத்தலை நிரூபிக்க இந்த ஃபயர் பானை உருவாக்கியதாகவும் ப்ரேம் பேட்டி அளித்திருந்தார். பின்னர், கேல்க்ஸி பான் கடையில் ‘ஃபயர் பான்’ தயாரிக்க பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் தின்னர் கலக்கப்படுவதாக ரெயிட் நடந்தது தனி கதை.

தில்லியைச் சேர்ந்த ப்ரதுமன் ஷுக்ளா என்பவரும் ‘ஃபயர் பான்’ தன்னால் தான் கண்டுபிடிக்கப்பட்டது என்று நிறுவுகிறார். ஷுக்ளாவின் குடும்பம் இருபது வருடங்களாக பான் கடை நடத்தி வருகின்றது. ஒரு கட்டத்தில், தன்னுடைய வாடிக்கையாளர் ஒருவருக்கு தொண்டை வலி உண்டாகியிருந்ததை தீர்க்க, பானை நெருப்பில் சுட்டுக் கொடுத்ததாகவும், அதை பார்த்த மற்ற வாடிக்கையாளர்கள் தங்களுக்கும் அது வேண்டுமென கேட்டதாகவும் , இப்படித் தான் ஃபயர் பான் உண்டானதாகவும் ப்ரதுமன் சுக்ளா பேட்டியளித்திருக்கிறார்.

Image Courtesy :Next shark

Image Courtesy :Next shark


வட மாநிலங்களில் முதலில் பரவலாகிய ஃபயர் பான், மும்பை, ஹைதராபாத் என பயணித்து தற்போது சென்னை வரை வந்திருக்கிறது. பான் விரும்பிகள் எல்லாரும் ஃபயர் பானை ரசித்து, சுவைத்து சமூக வலைதளங்களில் அப்லோடிய படியே தான் இருக்கிறார்கள் என்றாலும் ஃபயர் பான் வரிசையில் அடுத்தடுத்து வரப்போகும் நவீன பீடாக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ஃபுட் ப்ளாக்கர்ஸ். 

Add to
Shares
12
Comments
Share This
Add to
Shares
12
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக