பதிப்புகளில்

உங்கள் தொழிலை தோல்வியை நோக்கிக் கொண்டு செல்லும் சின்னச் சின்ன பிரச்சனைகள்!

YS TEAM TAMIL
22nd Jul 2017
Add to
Shares
92
Comments
Share This
Add to
Shares
92
Comments
Share

உங்களிடம் வியாபாரத்துக்கான நல்ல யோசனை இருக்கும், உங்கள் சேவை மிக தேவையுள்ளதாக இருக்கும். உங்கள் வியாபார போட்டியாளர்கள் உங்களை முறியடிக்க முடியாமல் திணறலாம். வியாபாரம் ஆரம்பிக்க தேவையான முதலீடு கூட இருக்கலாம்.

ஆனால் இவை அனைத்தும் இருந்தும் இந்தியாவில் உள்ள பல சிறு தொழில்கள் முழுமை அடையாமலும், ஏதோ ஒரு குழப்பத்தில் இருப்பதையும் நான் உணர்கிறேன். நான் கவனித்த ஒரு சிலவற்றை இங்கு பதிவிடுகிறேன்.

image


இது தெளிவான பார்வையையும் தாண்டிய ஒன்று...

தாமஸ் ஆல்வா எடிசனின் கூற்றின் படி, செயல்படுத்தப்படாத காட்சி அனைத்தும் ஒரு மாயே! நாம் பார்த்த பெரும்பாலான நிறுவனர்கள் எல்லாவற்றிற்கும் ஒரு பார்வை வைத்திருப்பார்கள், ஆனால் அவர்களிடம் அதற்கான செயல்முறையை கேட்டால் அவர்களின் பதில் குழப்பமாகவோ அல்லது வெறுமையாகவோ இருக்கும்.

நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களை ஊக்குவிக்க அடித்தளமாக இருப்பது ஒரு சிறந்த பார்வையே ஆகும். ஆனால் அந்த பார்வை நடைமுறையில் செயல்படுத்த முடிந்தவையாய் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, நான் எத்தனை விநியோக சேவை App-ஐ என் போனில் இறக்கிய பிறகு நீக்கியிருப்பேன் என்ற கணக்கை நான் இழந்துவிட்டேன். ஏன் என்றால் குறிப்பிட்டவாறு சேவைகள் யாவும் எனக்கு கிடைக்கவில்லை. இவ்வாறு செயல் படுத்த முடியாமல் பல ஆரம்ப தொழில் நிறுவனங்கள் திணறுகின்றனர்.

ஒரு நல்ல வியாபார யோசனை, வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு அமையவில்லை என்றால் அது ஒரு நல்ல நிறுவனமாக முடியாது. ஒரு சிறந்த நிறுவனத்தை தோற்றுவிக்க முறையான திட்டம் வேண்டும், குறுகிய அல்லது நீண்டகால நோக்கங்கள் வேண்டும் மற்றும் சீரான இலக்கு வேண்டும்.

வியாபார போட்டியிலிருந்து உங்களை வேறுபடுத்திப் பாருங்கள்

போட்டியிலிருந்து உங்களை வேறுப்படுத்திக்காட்ட, நீங்கள் தனித்து இருக்க வேண்டும். எல்லா ஆரம்ப நிறுவனங்கள் செய்வது போல, மற்ற நிறுவனங்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் அனைத்து தளங்களையும் கையில் எடுக்க கூடாது. தொழிலுக்கு ஏற்றவாறு தனி தன்மையுடன் செயல்பட வேண்டும்

தொழில் தொடங்கும் முன் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெளிவாக முடிவு செய்ய வேண்டும். ஒரு நிறுவனத்திற்கு தொடர்புகள் தேவை என்றாலும், அதைவிட அடிப்படையான மற்ற விஷயங்களை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். உதாரணமாக, தொழில் தொடங்கிய பின், சிக்கலான அல்லது ஒரு தனிப்பட்ட பிரிச்சனைக்கு தீர்வு காணாமல், உங்கள் நிறுவனத்திற்கு அச்சகம் போன்ற அடிப்படையான செயலில் ஈடுப்பட்டிருந்தால், நீங்கள் உங்கள் தொழில் நிறுவுவதில் ஏதோ தவறு செய்துள்ளீர்.

முறையான செயல்பாடு இல்லை என்றால் நீங்கள் செய்யும் விளம்பரம், லோகோ டிசைன், வலைத்தள உள்ளடக்கம் போன்ற அனைத்து செயலும் பலனற்றதே ஆகும்.

இங்கு பட்டப்படிப்பு ஒரு சிறிய விஷயமே

உணவு தொழில்நுட்ப தொழிலில் நீங்கள் நுழையும்பொழுது, உங்கள் நிறுவனத்திற்கான App-ஐ உருவாக்க ஐஐடி அல்லது ஐஐஎம் பட்டதாரிகள் தேவையில்லை. ஒரு வேலை உங்களிடம் அதற்கான முதலீடு இருந்தால் நீங்கள் வேலைக்கு அமர்த்தலாம். ஆனால் அது தேவையில்லை, ஏன் என்றால் நம் நாட்டில் திறமைக்கு பஞ்சம் இல்லை. பட்டப்படிப்பை பார்த்து வேலைக்கு சேர்க்காமல், உண்மையான திறமைக்கு வேலை வழங்கிடுங்கள். அதன் பலனை கண்டு பிரமித்து விடுவீர்கள். அதனால் உங்கள் பார்வையை உண்மையாக்கும் சிறந்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்துங்கள்.

வேலை கலாச்சாரம் இலவச உணவு மற்றும் இலவச பானங்களை தாண்டிய ஒன்று

சிறந்த, பளபளப்பான அலுவலகம், தூங்கும் வசதி, இலவச உணவு போன்ற வசதிகள் இருந்தும், சில சமயங்களில் முறிந்து போகும் வேலை கலாச்சாரத்தை நான் பார்த்திருக்கிறேன். அடக்குமுறையான வேலை நேரம், சிறந்த HR கொள்கையின்மை போன்ற சில நெருக்கடிகளால் பல நிறுவனங்கள் சுக்குநூறாக உடைகின்றனர்.

இது ஒரு வணிகம், மிக எளிமையான ஒன்று. எனவே அதை அவ்வாறு நடத்தவே முயற்சி செய்யுங்கள். வேலை கலாசாரம், வேலை நேரம், ஊழியரை ஊக்குவித்தல், நட்பு கொள்கைகள் போன்ற அடிப்படையான விஷயங்களை சரி பார்த்து, நல்ல ஒரு நிறுவனத்தை அமைக்க வேண்டும்.

ஒரு நிறுவனத்தை தொடங்கி, அதில் ஏற்படும் சரிவின் மூலம் கற்றலைவிட, தொழில் தொடங்கும் முன் அதை பற்றி நன்கு ஆராயிந்து பிறகு நிறுவுவதே சிறந்த முறையாகும். ஏற்கனவே தொழில் செய்யும் பல தொழில்முனைவர்களிடம் கற்கும் பாடமே ஒரு ஏணியாய் அமையும்.

உங்கள் தயாரிப்பு மற்றும் செயல்பாட்டில் உங்கள் புத்தி கூர்மை பிரதிபலிக்கட்டும். மற்ற நிறுவனங்களிடம் இருந்து மாறுபட்டு தெரிவதற்காக உங்கள் தொழில் அமைப்பை மாற்ற வேண்டாம்.

ஆங்கிலத்தில்: தமன்னா மிஷ்ரா | தமிழில் - மஹ்மூதா நௌஷின்

Add to
Shares
92
Comments
Share This
Add to
Shares
92
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக