பதிப்புகளில்

உங்கள் வாகனமும் குடும்பப் பெருமையை பேசட்டும்! அசத்தும் 'ஸ்டிக்கர்ஸ்'

YS TEAM TAMIL
14th Feb 2016
Add to
Shares
12
Comments
Share This
Add to
Shares
12
Comments
Share

”எங்கூர்லல்லாம் இதுதான் வழக்கம்” எனும் சொற்றொடரை பெருமிதத்தோடு சொல்வது நம்மில் பலருக்கும் வழக்கம்தான். சற்று பெருநகரங்களில் போய் பார்த்தாலோ வெவ்வேறு மாநிலத்தவர்களும் இதே பல்லவியைத்தான் பாடுவார்கள். “நாங்க மலையாளிங்கல்லாம் இப்படித்தான்” என்றோ இல்லாவிடில் “நாங்க பஞ்சாபீஸ்லாம் இப்படித்தான்” என்றோ வட்டாரப் பெருமை பேசுவது நமக்கு புதிதல்ல.

பெங்களூரின் புறநகர்ப் பகுதியான யெலஹெங்கா(Yelahanka) வில் பிறந்து வளர்ந்தவரான செரியன் குன்னத் பல்வேறு மொழி, இன மக்கள் நிறைந்த அந்தச் சூழலை மிகவும் நேசிப்பவராகவே வளர்ந்தார். இத்தகைய சூழல் அவருக்கு இந்தியாவின் பன்மைத் தன்மை நிறைந்த கலாச்சாரத்தை புரிந்து கொள்ள ஒரு வழிகாட்டியாகவும் இருந்தது. “என்னுடைய ஃபேஸ்புக் நண்பர்கள் பட்டியலில் 90 வயது தாத்தா பாட்டி முதல் அவர்களின் பதின்ம வயது பேரன் பேத்திகள் வரை பல்வேறு வயதுக்காரர்களும் உண்டு” என்று சிரித்தபடி கூறுகிறார் செரியன்.

image


விஸ்வேசரையா தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த செரியன், சில நாட்களுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்திருக்கிறார். அதன் பின் பழைய மோட்டார்சைக்கிள்களின் வடிவமைப்பு மீதான தன் காதலை உணர்ந்து அத்துறையில் ஈடுபடத் துவங்கியுள்ளார். பெங்களூர் யெடி(Yezdi) கிளப்புடன் சேர்ந்து பல பழைய பைக்குகளுக்கு மீண்டும் உயிரூட்டியிருக்கிறார்.

தன் தேடல் இத்துறையில்தான் என்பதை உணர்ந்து கொண்ட செரியன், தானியிங்கி வடிவமைப்பு(Automotive Design) துறையில் பட்ட மேற்படிப்பை மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் முடித்துத் திரும்பிய செரியன், தனது சொந்த நிறுவனத்தை தொடங்கும் முன் ஒரு சிறு ஓய்வு எடுக்க விரும்பினார்.

அதற்காக குறிப்பிட்ட இலக்குகள் எதுவுமின்றி இந்தியா முழுவதும் ஒரு பயணியாக சுற்றித்திரிந்த காலகட்டத்தில் அவரை ஈர்த்த விஷயம் வாகனங்களின் மீது ஒட்டப்படும் விதவிதமான ஸ்டிக்கர்களும், அவற்றின் உள்ளடக்கமும். கிட்டத்தட்ட இந்தியாவின் எல்லாப் பகுதியிலும் உள்ள ஆட்டோமொபைல் உரிமையாளர்களுக்கும் இந்த விஷயத்தில் ஒற்றுமையுண்டு. எல்லோருமே அவரவர் கொள்கை, நம்பிக்கை, ரசனை சார்ந்த விதவிதமான ஸ்டிக்கர்களை, வாசகங்களை தங்கள் வாகனங்களின் சுவர்களில் ஒட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்கிறார் செரியன்.

பிறகும் பெங்களூர் திரும்பிய பின் வழக்கமான போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி செயலற்று நின்றிருக்கும் வேளைகளில் தனக்கு முன்னாலிருக்கும் வண்டிகளில் ஏதேனும் வித்யாசமான ஸ்டிக்கர்கள் தன் அன்றைய பொழுதை இனிமையாக்க கிடைக்குமா என்று தேட ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில்தான் ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கேற்பவும், ரசனைக்கேற்பவும் குடும்ப ஸ்டிக்கர் வடிவமைப்பதற்காக "தி இந்தியன் ஃபேமிலி ஸ்டிக்கர்" (theindianfamiliysticker) எனும் நிறுவனத்தை துவக்கினார்.

இதற்காக பல்வேறு அடிப்படை கதாபாத்திரங்களை இவர்கள் வடிவமைத்து வைத்திருக்கிறார்கள். மலையாள ஃபுட்பால் வீரர் பந்து காலி பப்பு (Pandhukalli Pappu), மராத்தி கிரிகெட் வீரர் டெட் பால் டாம்லே (Deadball Damle), பெட்ரோல் நிறுவனத்து ஃபுல்ஸ்பீட் ஃப்ரான்சிஸ் (Fullspeed Francis), ஃபிட்னெஸ் ஆர்வம் மிக்க டெட்லிஃப்ட் தனஞ்செயனும் அவர் மனைவி பிலேட்ஸ் ப்ரியாவும் (Deadlift Dhananjaya & Pilates Priya), ஐடி தம்பதியினரான ஜெ கொரி ஜகதீஷ் & பிதான் பிரியா (JQuery Jagdish & Python Priya) என நீளும் பட்டியல் அது.

image


"இந்த நிறுவனம் சிறிய அளவில் நீடிப்பதையே நான் விரும்புகிறேன், ஏனெனில் அப்போதுதான் வடிவமைப்பிலிருந்து வாடிக்கையாளர் சேவை வரை எனது நேரடி மேற்பார்வையிலிருக்க முடியும்.” என்கிறார் இவர்.

உயர்தர வினைல் காகிதத்தில் 3M அளவில் ஒளி ஊடுருவக் கூடியதாகவே இவர்களது ஸ்டிக்கர்கள் அச்சடிக்கப் படுகின்றன. அப்போதுதான் அது ஒரு கோட்டோவியம் போல் தெரியும் என்பதற்காக இந்த வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் செரியன்.

நிறுவனத்தின் வளர்ச்சி நிதானமாகவும், ஸ்திரமானதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் தெளிவாக இருக்கிறார். ஸ்டிக்கர்கள் விற்பனையில் மாதந்தோறும் 30 சதவீத வளர்ச்சி இருக்கிறது. மாதத்திற்கு 100 ஸ்டிக்கர்கள் என்று ஆரம்பித்த விற்பனை சதவீதம் கடந்த டிசம்பரில் 1500ஐத் தொட்டிருக்கிறது. ஸ்டிக்கர் ஒன்றுக்கு ரூபாய் 90 வரை விலை வைத்து விற்பனை செய்யும் இவர்களது நிறுவனம், பெரும்பாலும் அமேசான் ஃபிளிப்கார்ட் போன்ற வர்த்தக இணையதளங்கள் மூலமாகவே வாடிக்கையாளர்களை சென்றடைகிறது. சில கண்காட்சிகளிலும் தங்களது விற்பனையை நிகழ்த்தினாலும் பெரும்பாலும் இந்நிறுவனம் நம்பியிருப்பது ஆன்லைன் விற்பனையையே. நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் 16லிருந்து 35 வயதுக்குட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் என்று சொல்லும் செரியன் எங்கள் ஸ்டிக்கர்கள் குடும்பத்தை மையப்படுத்தியவை என்பதால் இந்தியாவின் எல்லாப் பகுதியிலும் இவற்றுக்கு வரவேற்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கிறார்.

ஒரு சிறிய உணவு விடுதி உரிமையாளர்கள் உருவாக்கிய ஃபிடோ டிடோ (Fido Dido) எப்படி பின்னாளில் மிகவும் பிரபலமாகி பெப்சியின் செவனப் பானத்தின் விளம்பர முகமாக மாறியதோ அது போன்று இந்தியா முழுமையும் சென்றடையும் வண்ணம் பல்வேறு கதாபாத்திரங்களை உருவாக்கி பிரபலப்படுத்துவதே எங்கள் குறிக்கோள் என்கிறார் செரியன்.

சில்லறை விற்பனை நிலையங்கள் அமைப்பதும் கார்ப்பரேட் நிறுவனங்களோடு சேர்ந்து அவர்களது பணியாளர்களின் தேவைகளுக்கேற்ப ஸ்டிக்கர்களை வடிவமைப்பதுமே இந்நிறுவனத்தின்எதிர்கால திட்டம் ஆகும்.

யுவர் ஸ்டோரி கருத்து

கட்டுரையை படிக்கையில் பல இடங்களில் நமக்கு எழும் கேள்வி ஒன்றுதான் – வாகனங்களில் விதவிதமான வாசகங்களை ஒட்டிச் செல்லும் மனிதர்களும், இணையத்தில் இது போன்ற நகைச்சுவை மிளிரும் கதாபாத்திரங்கள் கொண்ட ஸ்டிக்கர்களைத் தேடித் தேடி வாங்குபவர்களும் ஒன்றா என்பதுதான் அது. இந்நிறுவனத்தின் ஸ்டிக்கர்கள் இணையத்தில் நிறைய விற்பனை ஆவதென்பது இணையத்தில் புழங்கும் மக்களின் புதிய விஷயங்களை செய்து பார்க்கும் ஆர்வம் மட்டுமாகவும் இருக்கக்கூடும். எனவே இந்நிறுவனம் நேரடியாக சில்லறை விற்பனையை ஆரம்பிக்கும் போதுதான் உண்மையில் இந்தியாவில் இந்த வகை முயற்சிக்கான வரவேற்பு என்ன என்பது உறுதியாகும்.

இணையதள முகவரி: The Indian Family Sticker

ஆங்கிலத்தில் : BINJAL SHAH| தமிழில்: எஸ்.பாலகிருஷ்ணன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற வித்தியாசமான தொழில்முனை நிறுவனங்கள் தொடர்பு கட்டுரைகள்:

பாரம்பரியத்தை டி-ஷர்ட் மூலம் பறைசாற்றும் சென்னை angi.in

ஒரு சீரிய பைக்கரும் ஒரு பொறியாளரும் கைகோர்த்து தொடங்கியுள்ள சாலை பாதுகாப்பு தளம்!

Add to
Shares
12
Comments
Share This
Add to
Shares
12
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக