பதிப்புகளில்

வெற்றிகரமாக உலா வரும் உலகின் தலைச்சிறந்த 5 பிசினஸ் ஜோடிகள்!

19th Oct 2016
Add to
Shares
1.1k
Comments
Share This
Add to
Shares
1.1k
Comments
Share

ஒருவர் தனித்து தொழிலில் வெற்றி அடைவது சாதனை என்றால் கணவன்-மனைவி ஜோடியாக இணைந்து தொழிலில் ஈடுபட்டு உலக அளவின் தங்கள் பிசினஸ்களை வெற்றி அடையச் செய்வது என்பது ரெட்டிப்பு சாதனை. வீட்டில் மட்டுமின்றி தொழிலிலும் ஒற்றுமையாய் செயல் ஆற்றுவது என்பது அவ்வளவு சுலபமில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு முடிவுகளை எடுத்து ஏற்ற, இறக்கங்களின்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து தொழிலை நல்லமுறையில் எடுத்து செல்வது இதில் முக்கியமான ஒன்று. அது போல் உலக அளவில் தொழிலிலும், சொந்த வாழ்க்கையிலும் ஒற்றுமையாய் செயல்பட்டு வெற்றிவாகை சூடிவரும் ஐந்து சிறப்பு ஜோடிகளின் வாழ்க்கை பயணத்தை பார்ப்போம்...

image


முகேஷ்-நீடா அம்பானி

அம்பானிகளை போல் எவருமே இல்லை என்றே சொல்லவேண்டும். உலகின் அதிக பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டெடின் இயக்குனர். இவர் மனைவி நீடா அம்பானியை தனது தந்தை திருபாய் அம்பானி மூலம் சந்தித்தார். நீடா தற்போது ரிலையன்ஸ் பவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் இயக்குனர். மும்பையின் அதிக ட்ராபிக் நிறைந்த ஒரு பகுதியின் சிக்னலில் நீடாவை விரும்புவதாக முகேஷ் தெரிவித்தது ஒரு திரைப்படத்தின் காதல் காட்சியை எல்லாருக்கும் நினைவுப்படுத்தியது. இந்த கோட்டீஸ்வர தம்பதிகள் தங்களது தொழிலின் லாபத்தின் பெரும்பகுதியை ஏழைகளுக்கு செலவழித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘ப்ராஜக்ட் த்ருஷ்டி’ எனும் கண் பார்வையற்றோருக்காக செயல்படும் ரிலையன்ஸின் சமூக திட்டத்தில் நீடா தன் பங்கை பெரிதாக ஆற்றிவருகிறார். முகேஷ்-நீடா ஜோடிக்கு ஆகாஷ், அனந்த் என்ற இரு மகன்களும், ஈஷா என்ற மகளும் உள்ளார். வெற்றிகரமான ஜோடிகளை காண்பதே அரிதான இக்காலக்கட்டத்தில் தொழிலிலும் இணைந்து சாதனைகள் நிகழ்த்திவரும் இந்த ஜோடியை உலகமே பாராட்டுகிறது. 

பில்-மெலிண்டா கேட்ஸ்

பில் கேட்ஸ் பற்றி பேசாமல் தொழிலில் வெற்றிப்பெற்றவர்களை பற்றி பேசிவிட முடியாது. அமெரிக்காவின் அதிக பணக்காரரான பில் கேட்ஸ், 79.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பின்புலம் ஆவார். அமெரிக்க தொழிலதிபர் மற்றும் சமூக சேவகர் மெலிண்டா கேட்சை பில் மணந்துகொண்டார். அவருடைய சொத்து மதிப்பு சுமார் 70 பில்லியன் டாலர்கர் ஆகும். இருவரும் இணைந்து, ‘பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்’ எனும் உலகின் பெரிய தனியார் அமைப்பை நடத்துகின்றனர். மெலிண்டா 90’களில் மைக்ரோசாப்டில் இணைந்தபோது பில் அவரை சந்தித்தார். 1994 இல் ஹாவாயில் இவர்களது திருமணம் நடந்தது. 2018 ஆம் ஆண்டிற்குள் போலியோவை முற்றிலும் ஒழிக்கவும், பெண்களுக்கான புதியமுறை குடும்பக்கட்டுபாடு முறையை 2020க்குள் அறிமுகப்படுத்துவதை தங்களின் இலக்காக கொண்டு செயல்பட்டுவருகிறது இந்த ஜோடி. 

image


மரிசா மேயர்-ஜாக் போக்

மரிசா யாஹூ’வின் சிஇஒ, மற்றும் ஜாக் முன்னாள் வழக்கறிஞர் ஆவார். அவர் பிக் டேட்டா தொடக்க நிறுவனங்களில் முதலீடு செய்பவரும் கூட. மரிசா கூகிளில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது ஜாக் அவரை சந்தித்தார். 12ஆம் தேதி டிசம்பர் மாதம் 2009 இல் மணம் முடிந்தது இந்த ஜோடி. யாஹூவில் இணைந்த மரிசா சிஇஒ’ ஆக பொறுப்பேற்றார். அவர் தான் கர்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். தற்போது இந்த ஜோடி ஒரு மகன் மற்றும் இரட்டை பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆவர். 

ஜெஃப் பெசோஸ்-மெக்கென்சி பெசோஸ்

அமேசானின் நிறுவனர் ஒரு அமெரிக்க கதையாசிரியருடன் காதல் வயப்பட்டார். இருவரும் நியுயார்க் ஹெட்ஜ் பண்ட் நிறுவனம், டி.ஈ.ஷா’ வில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது சந்தித்தனர். 1993 இருவரும் மணம் முடித்தனர். இரண்டு ஆண்டுகள் கழித்து ஜெஃப் அமேசானின் நிறுவனர் ஆனார். 1994 இல் சியாட்டலுக்கு குடிபெயர்ந்த இந்த ஜோடிக்கு, அப்போது முதல் ஏறுமுகம் தான். பெசோஸ், தனது பிரபல புத்தகங்களான ‘The Testing of Luther Albright’ (2005) மற்றும் Traps (2013) வெளியிட்டார். மெக்கன்சி, பைஸ்டாண்டர் ரிவல்யூஷன் எனும் ‘கேலி செய்தலுக்கு எதிரான’ ஒரு அமைப்பை 2014 இல் தொடங்கினார். இந்த ஜோடிக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். 

செர் வாங்-வென்சி சென்

தொழில்நுட்ப வல்லுனர்கள் காதல் வயப்படக்கூடாதா என்ன? செர் வாங், எச்டிசி கார்பரேஷனின் இணை-நிறுவனர், விஐஏ டெக்னாலஜீஸ் தலைவர் மற்றும் சிஇஒ வென்சி’யை மணந்தார். அவருக்காக கணவர் செர் வாங் கிருஸ்துவராக மாறினார். இருவரும் இருவரின் நிறுவனங்களில் பங்குகள் வகிக்கின்றனர். வாங், வென்சி சென் தொடக்கத்தில் தன் நிறுவனத்தில் சந்தித்த பிரச்சனைகளில் இருந்து வெளியில் வர உதவினார். இந்த ஜோடியினருக்கு இரண்டு அழகிய குழந்தைகள் உள்ளனர். 

ஆங்கில கட்டுரையாளர்: சஞ்சனா ரே

Add to
Shares
1.1k
Comments
Share This
Add to
Shares
1.1k
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக