பதிப்புகளில்

வலைப்பதிவு மூலம் வருவாய் ஈட்ட ஐந்து எளிய வழிகள்!

13th Nov 2015
Add to
Shares
26
Comments
Share This
Add to
Shares
26
Comments
Share

வலைப்பதிவு செய்வது குறிப்பிட்ட தலைப்பில் உங்கள் ஆர்வம் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான அருமையான வழி. வலைப்பதிவு செய்வது இணையம் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வழியும் கூட. ஆனால் இந்தியாவில் வலைப்பதிவு மூலம் மட்டுமே கணிசமாக வருவாய் ஈட்டுவது சாத்தியம் இல்லை எனும் தவறான கருத்து நிலவுகிறது. இது உண்மை இல்லை. வலைப்பதிவு செய்வது மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இந்திய வலைப்பதிவர்கள் பலர் உள்ளனர். எனவே நீங்கள் வலைப்பதிவாளராக இருந்து இது வரை அதன் மூலம் வருவாய் ஈட்டாமல் இருந்தால், நீங்கள் செயல்படுவதற்கான நேரம் இது!

வலைப்பதிவு மூலம் வருவாய் ஈட்டுவதற்கான ஐந்து சிறந்த வழிகள் இதோ;

image


1.விளம்பர வலைப்பின்னல்

வலைப்பதிவு மூலம் வருவாய் ஈட்ட எளிய வழி இது. முதல் முறையாக வலைப்பதிவு வாயிலாக வருவாய் ஈட்ட முயல்பவர்களுக்கான முதல் படியும் கூட. எனவே பரவலாக பயன்படுத்தப்படும் வழியாகவும் இருக்கிறது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது; இந்தியாவிலும் பிரபலமாக இருக்கிறது.

எப்படி செயல்படுகிறது? வலைப்பதிவில் நீங்கள் விளம்பரங்களை இடம்பெறச்செய்து அவற்றை இணையவாசிகள் கிளிக் செய்வதற்கு ஏற்ப விளம்பர நிறுவனங்களிடம் இருந்து கமிஷன் பெறலாம்.

உங்கள் வலைப்பதிவில் இதை எப்படி செயல்படுத்துவது?

1. முதலில் விளம்பர வலைப்பின்னலை தேர்வு செய்யவும். ஆட்சென்ஸ் ( AdSense-கூகுளுக்கு சொந்தமானது) மிகவும் பிரபலமாக இருக்கிறது. பிட்வர்டைசர் (BidVertiser) மற்றும் இன்ஃபோலிங்க்ஸ் (Infolinks) ஆகியவையும் இருக்கின்றன.

2. நீங்கள் தேர்வு செய்யும் விளம்பர வலைப்பின்னலுக்கு விண்ணப்பிக்கவும். விண்ணப்பத்தில் மற்ற விஷயங்களுடன் நீங்கள் பணம் பெறுவதற்கான வழியையும் தெரிவிக்க வேண்டும். (கமிஷன் தொகையை பெற விரும்பும் வங்கி கணக்கு எண்)

3. விண்ணப்பம் ஏற்கப்பட்டவுடன் இதற்கான ஒப்புதல் மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

4. இதன் பிறகு உங்கள் வலைப்பதிவிற்கான விளம்பர நிரல் (கோட்) அனுப்பி வைக்கப்படும். விளம்பரம் தோன்ற வேண்டிய இடத்தில் இவற்றை இடம் பெற வைக்கலாம். (பதிவுக்கு நடுவே அல்லது பக்கவாட்டில்)

5. நிரல்களை இடம்பெற வைத்தப்பிறகு அடுத்த சில மணி நேரங்களில் விளம்பரங்கள் தோன்றத் துவங்கும்.

6. இனி உங்கள் வேலை முடிந்தது. வாசகர்கள் இந்த விளம்பரங்களை பார்த்து கிளிக் செய்தால் உங்களுக்கு வருமானம் வரும்.

எவ்வளவு சம்பாதிக்கலாம்? கிளிக் ஒன்றுக்கான வருவாய் 0.01 டாலர் முதல் 0.50 டாலர் வரை இருக்கலாம். விளம்பரங்கள் மூலம் எவ்வளவு வரும் என்பது உங்கள் பதிவுகள் தொடர்பானது. ஏனெனில் பதிவுகளின் படி விளம்பரங்கள் தோன்றும். இவை எந்த அளவுக்கு கிளிக் செய்யப்படுகின்றன என்பதும் முக்கியம்.

மேலும் சம்பாதிக்க? எந்த இடம் மற்றும் வகையில் அதிக கிளிக் வருகிறது என அறிந்து விளம்பரங்களை தோன்றச்செய்யலாம். சில வலைப்பதிவுகளில் புகைப்பட விளம்பரம் சரியாக இருக்கும். சிலவற்றில் வாசகங்கள் உள்ள விளம்பரம் சரியாக இருக்கும். இதற்கேற்ப மாற்றம் செய்து கொள்ளவும்.

2. துணை மார்க்கெட்டிங்

இந்த முறையில் கணிசமாக சம்பாதிக்கலாம். உங்கள் பதிவுகளுக்கு தொடர்புடைய பொருட்களை அல்லது சேவைகளை வாசகர்களுக்கு பரிந்துரை செய்கிறீர்கள். நீங்கள் முன்னிறுத்த விரும்பும் பொருள் அல்லது சேவையை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும். உங்கள் வாசகர்கள் எந்த சேவையை வாங்கத்தயாராக இருக்கின்றனர் என அறிந்து கொள்ள கொஞ்சம் ஆய்வு செய்ய வேண்டும். இதை செயல்படுத்தும் போது மிகையாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். வாசகர்கள் உங்கள் பதிவுகளை படிக்க தான் வருகின்றனர், அவர்களை அந்நியமாக்கி விடவேண்டாம்.

எப்படி செயல்படுகிறது? உங்கள் வலைப்பதிவில் தொடர்புடைய சேவை அல்லது பொருளின் விளம்பர இணைப்பை இடம்பெறச்செய்கிறீர்கள். இதை வாசகர்கள் கிளிக் செய்து வாங்கினால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்.

உங்கள் வலைப்பதிவில் இதை எப்படி செயல்படுத்துவது?

1. நீங்கள் இணைய விரும்பும் துணை மார்க்கெட்டிங் வலைப்பின்னலை தேர்வு செய்யவும். கிளிக்பாங்க், ஓஎம்ஜி இந்தியா, ட்ரூட்டிராக் மீடியா ஆகியவை இந்தியாவில் பிரபலமாக இருக்கின்றன. ஃபிளிப்கார்ட் அல்லது அமேசான் வழங்கும் திட்டங்களிலும் இணையலாம்.

2. நீங்கள் தேர்வு செய்த தளத்தில் இணைய விண்ணப்பிக்கவும். அப்போது உங்கள் வலைப்பதிவிற்கு நீங்கள் பின்பற்றும் மார்க்கெட்டிங் அல்லது விளம்பர யுத்திகள் பற்றி கேட்கப்படலாம்.

3. பெரும்பாலான இணையதளங்கள் உங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து 24 மணி நேரம் முதல் 72 மணி நேரத்திற்குள் பதில் அளிக்கும்.

4. விண்ணப்பம் ஏற்கப்பட்டவுடன் அந்த வலைப்பின்னலில் நுழைந்து உங்கள் வலைப்பதிவில் இடம்பெறச்செய்யக்கூடிய விளம்பரங்களை அணுகலாம்.

5. விளம்பர இணைப்பை இணைத்து அது செயல்படுகிறதா என பார்க்கவும்.

6. இனி உங்கள் வாசகர்கள் இதில் கிளிக் செய்து பொருட்களை வாங்கினால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்.

எவ்வளவு சம்பாதிக்கலாம்? கமிஷன் தொகை பலவிதங்களில் மாறுபடும். இது தொடர்புடைய இணையதளம் மற்றும் பொருட்கள் சார்ந்தது. விற்பனையில் 2.5 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை சம்பாதிக்கலாம். வாசகர்கள் வாங்கும் பொருட்களின் அடிப்படையிலும் இது அமையும். உதாரணத்திற்கு ஃபிளிப்கார்ட் விளம்பரத்தை இடம்பெற வைத்தால் மொபைல் வாங்கும் போது கிடைப்பதைவிட துணிகள் வாங்கும்போது அதிக கமிஷன் கிடைக்கும்.

மேலும் சம்பாதிக்க; உங்கள் பதிவு மற்றும் வாசகர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட பொருட்கள் அல்லது சேவையை முன்வைக்கவும். இதன் மூலம் அதிக விற்பனை சாத்தியமாகும். பிரபலமான பொருட்களை எளிதாக விற்கலாம் என்றாலும் கமிஷன் குறைவாக இருக்கும். அதிகம் தெரியாத நல்ல பொருள் என்றால் அதிக கமிஷன் கிடைக்கலாம்.

3. உங்கள் தயாரிப்பை விற்பனை செய்வது

உங்கள் தயாரிப்பை விற்பனை செய்வதை விட வலைப்பதிவு மூலம் சம்பாதிக்க சிறந்த வழி இல்லை. ஏனெனில் இது உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதுவே மிகவும் நிலையான வழியும் கூட. பொருட்களை வடிவமைப்பதில் துவங்கி விலையை தீர்மானிப்பது வரை நீங்கள் தான் ராஜா. அதிகமாக முயற்சி செய்தால் அதிக பயன் கிடைக்கும்.

எப்படி செயல்படுகிறது? உங்கள் திறமை சார்ந்த சேவை அல்லது தயாரிப்பை உருவாக்கி உங்கள் வாசகர்களிடம் விற்பனை செய்யலாம்.

உங்கள் வலைப்பதிவில் இதை எப்படி செயல்படுத்துவது?

1. சேவை அல்லது தயாரிப்பை நீங்களே உருவாக்கவும். அல்லது மற்றவர்கள் உதவியை நாடவும். புத்தகங்கள், குக்கீஸ் போன்றவற்றை உருவாக்கலாம் அல்லது இபுக், வீடியோ வழிகாட்டி போன்றவற்றை உருவாக்கலாம்.

2. உங்கள் தயாரிப்புக்கு ஒரு விலை நிர்ணயிக்கவும். அவற்றை வழங்குவதற்கான வழிமுறையை தீர்மானிக்கவும். அதை எப்படி பெறுவது போன்றவற்றை குறிப்பிடவும். பணம் செலுத்தும் முறையையும் குறிப்பிடவும். பேபால் மூலமாக அல்லது காசோலை மூலமா என குறிப்பிடவும். இந்த முறை உங்களுக்கும், வாசகர்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.

3. உங்கள் தயாரிப்பிற்காக வலைப்பதிவில் சிறப்பு லாண்டிங் பக்கத்தை உருவாக்கவும். அதன் முக்கிய அம்சங்கள், பயன்களை குறிப்பிட்டு வாங்குவதற்கான பட்டன் வசதியை அளிக்கவும்.

4. உங்கள் தயாரிப்பை வாசகர்கள் மத்தியில் பிரபலமாக்கவும். வேறு இடங்களிலும் பிரபலமாக்கவும். இ-மெயில், சமூக ஊடகம், ஆட்வேர்ட்ஸ் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

5. விற்பனை செய்து வருவாய் ஈட்டுங்கள்

எவ்வளவு சம்பாதிக்கலாம்? வானமே எல்லை. தயாரிப்பு முதல் விலை வரை எல்லாம் உங்கள் கையில் என்பதால், நீங்கள் முயலும் அளவுக்கு சம்பாதிக்கலாம். தயாரிப்பு சிறந்ததாக இருந்தால் அதிகம் விற்கும்; அதிகம் வருவாய் வரும்.

மேலும் சம்பாதிக்க; உங்கள் வாசகர்களுக்கு என்ன பொருள் தேவை என்பதை ஆய்வு செய்து தெரிந்து கொண்டு அதன் பிறகு உருவாக்குங்கள். வாசகர்கள் விரும்புவதை அளித்தால் எளிதாக விற்பனை ஆகும்.

4.வலைப்பதிவு மூலம் ஃபிரிலான்ஸ் பணி

குறிப்பிட்ட தலைப்பில் சிறிது காலம் வலைப்பதிவு செய்து வந்தால் அதில் உங்களுக்கு என அனுபவமும், நிபுணத்துவமும் ஏற்பட்டிருக்கும். இந்த திறன் மற்றும் அனுபவம் மூலம் வருவாய் ஈட்டுவதற்கான வழி ஃபிரிலான்ஸ் செய்வது. உங்களுக்கு வடிவமைப்பது அல்லது பேக் செய்வது போன்ற குறிப்பிட்ட திறன் இருந்தால் அவற்றை உங்கள் வலைப்பதிவு மூலம் விளம்பரம் செய்து அந்த திறன் சார்ந்த பணிகளை ஏற்கலாம். உங்களுக்கு குறிப்பிட்ட ஆற்றல் இல்லாவிட்டாலும் கூட, உங்கள் துறையில் புதிய வலைப்பதிவாளர்களை ஈர்த்து அந்த வழிகாட்டுதலுக்கு கட்டணம் வசூலிக்கலாம். இது வரை இலவசமாக அளித்துக்கொண்டிருததை, எத்தனை பேர் உங்கள் ஆலோசனையை நாட தயாராக இருக்கின்றனர் என்பது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

எப்படி செயல்படுகிறது? உங்கள் அனுபவம் மற்றும் திறனை ஆலோசனையாக வழங்கி அவற்றை நாடுபவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கிறீர்கள். நீங்கள் செயல்படுத்தி தரக்கூடிய திட்டங்களை ஏற்று அதற்கும் கட்டணம் வசூலிக்கலாம்.

உங்கள் வலைப்பதிவில் இதை எப்படி செயல்படுத்துவது?

1. ஃபிரிலான்சராக நீங்கள் அளிக்க உள்ள சேவையை பற்றி சுருக்கமாக குறிப்பிடவும்.

2. உங்கள் சேவைவை விவரித்து ஒரு பிரத்யேக லாண்டிங் பக்கத்தை வலைப்பதிவில் உருவாக்கவும். இதில் உங்களை ஏன் அமர்த்திக்கொள்ள வேண்டும், நீங்கள் அளிக்கும் பலன்கள் என்ன மற்றும் முக்கியமாக உங்களை தொடர்பு கொள்ளும் வழி மற்றும் கட்டண விவரத்தில் குறிப்பிடவும்.

3. இந்த சேவை பற்றி வாசகர்களுக்கு தெரிவித்து அவர்கள் பயன்படுத்திக்கொள்ள ஊக்குவிக்கவும். அவர்கள் குடும்பத்தினர் மத்தியிலும் எடுத்துச்சொல்லுமாறு கேட்கவும். வாசகர்களுக்கு உங்கள் திறன் பற்றி தெரிந்திருக்கும் என்பதால் அவர்கள் உங்கள் சேவையை பயன்படுத்திக்கொள்ள முன்வரலாம்.

4. சமூக ஊடகம் போன்ற மற்ற வழிகளிலும் உங்கள் சேவை பற்றி விளம்பரம் செய்யவும். எந்த அளவுக்கு அதிக மக்களுக்கு உங்களுக்கு சேவை பற்றி தெரிய வருகிறதோ அந்த அளவுக்கு வாய்ப்புகள் தேடி வரும்.

5. உங்களை தேடி திட்டம் வரும் போது அவற்றை சிறப்பாக செய்து முடியுங்கள். இதற்கான தொகை உங்கள் வருவாயாக அமையும்.

எவ்வளவு சம்பாதிக்கலாம்? உங்கள் வருவாய் உங்கள் திறன் மற்றும் உங்கள் சேவைக்கு எந்த அளவு வரவேற்பு இருக்கிறது என்பதன் அடிப்படையில அமையும். விலையை நீங்கள் தான் தீர்மானிக்கிறீர்கள் என்பதால் வாய்ப்புகளுக்கு எல்லையில்லை. உங்கள் துறையில் நீங்கள் வல்லுனராக இருந்தால் அதிக வருவாய் கிடைக்கும். மேலும் சிக்கலான திட்டங்களை நாடினால் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

மேலும் சம்பாதிக்க; குறைந்த கட்டணத்திற்கு உங்கள் சேவையை அளிக்க வேண்டாம். சரியான விலையை தீர்மானிக்க முடியாவிட்டால் வாசகர்கள் மத்தியில் கருத்துக்கணிப்பு நடத்தி, எந்த அளவு செலுத்த தயாராக இருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பல வலைப்பதிவர்கள் குறைந்த கட்டணத்தை தேர்வு செய்து அவதிப்படுகின்றனர்.

5. வலைப்பதிவில் நேரடி விளம்பரங்கள்

பல வலைப்பதிவர்கள் வருவாய் ஈட்ட பயன்படுத்தும் மற்றொரு வழி இது. ஆனால் இந்த முறை குறிப்பிட்ட சில துறைகளுக்கே சரியாக பொருந்துகிறது. மேலோட்டமாக பார்த்தால் இது விளம்பர வலைப்பின்னலை போல தோன்றலாம். விளம்பரங்கள் மூலம் வருவாய் வருகிறது என நினைக்கலாம். ஆனால் செயல்பாட்டில் பெரும் வேறுபாடு இருக்கிறது. விளம்பர வலைப்பின்னலில் விளம்பரம் மற்றும் வருவாய் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இந்த முறையில் எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. விளம்பரங்களை நீங்கள் தேர்வு செய்வதோடு, கட்டணத்தையும் தீர்மானிக்கலாம். விளம்பரதாரர்கள் நேரடியாக உங்களை தேடி வருவதால் இடைத்தரகர் கிடையாது. இது வருவாயை அதிகரிக்கச்செய்யும்.

எப்படி செயல்படுகிறது? வலைப்பதிவில் விளம்பரங்களை இடம்பெற வைத்து அவை கிளிக் செய்யப்படுவதற்கு ஏற்ப வருவாய் வரும். அல்லது வார, மாத அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கலாம்.

உங்கள் வலைப்பதிவில் இதை எப்படி செயல்படுத்துவது?

1. வலைப்பதிவில் விளம்பரங்களுக்கான இடத்தை தேர்வு செய்யவும். பக்கவாட்டில் தலைப்பு பகுதியில், கீழே என பல இடங்களில் விளம்பரம் செய்யலாம்.

2. வலைப்பதிவில் விளம்பர அறிவிப்பு பக்கத்தை உருவாக்கவும். இந்த பக்கத்தில் விளம்பர நிறுவனங்களுக்கு உங்கள் வலைப்பதிவு சரியானதா என தீர்மானிக்க கூடிய தகவல்களை இடம்பெற வைக்கவும். உங்கள் வலைப்பதிவு வாசகர்கள் பற்றி, நீங்கள் எழுதும் தலைப்புகள் பற்றி, விளம்பர கட்டணம் பற்றியை தகவல்களும் தேவை. வெவ்வேறு விளம்பரங்களுக்கு வெவ்வேறு கட்டணம் நிர்ணயிக்கலாம். தலைப்பு பகுதி விளம்பரங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கலாம். விளம்பரத்திற்காக தொடர்பு கொள்ளும் வழியையும் குறிப்பிடவும்.

3. வருவாய் வலைப்பின்னலில் உங்கள் வலைப்பதிவையும் இணைத்துக்கொள்ளவும். இதன் மூலம் பல விளம்பர நிறுவங்களை சென்றடையலாம். பைசெல் ஆட்ஸ் (BuySell Ads) இத்தகைய ஒரு நிறுவனம்.

4. வலைப்பதிவில், இங்கே விளம்பரம் செய்யவும் பெட்டிகளை இடம்பெற வைத்து கவனத்தை ஈர்க்கவும்.

5. ஒரு சில நிறுவனங்கள் கட்டணத்தில் பேரம் பேச விரும்பலாம். எனவே வெளிப்படையான தன்மை கொண்டிருங்கள். விளம்பரம் மற்றும் கட்டணம் முடிவானவுடன் வருவாய் வரத்துவங்கும்.

எவ்வளவு சம்பாதிக்கலாம்? விளம்பர கட்டணத்தை தீர்மானிப்பது நீங்கள் தான் என்பதால் வருவாய் உங்கள் கையில் தான் உள்ளது. எனினும் வாசகர் பரப்பு அதிகமாக இருந்தால் விளம்பர கட்டணம் அதிகம் வர வாய்ப்புள்ளது.

மேலும் சம்பாதிக்க: விளம்பரம் செய்யவும் அறிவிப்பை எல்லா இடங்களிலும் இடம் பெற வைக்க வேண்டாம். முக்கிய இடங்களில் மாதிரி விளம்பரங்களை இடம் பெற வைக்கவும். இதன் மூலம் விளம்பர நிறுவனங்கள் மனதில் நல்லவிதமான கருத்து உண்டாகும். இந்த விளம்பரங்களை பார்த்து, நிறுவனங்கள் தாங்களும் விளம்பரம் செய்ய முன்வரலாம். மேலும் இது உங்கள் விளம்பர இடம் பற்றிய முக்கியத்துவத்தையும் உணர்த்தும்.

வலைப்பதிவு மூலம் வருவாய் ஈட்டுவதற்கான ஐந்து முக்கிய வழிகள் இவை. வலைப்பதிவு மூலம் வருவாய் ஈட்டுவது மிகவும் கடினமானதும் அல்ல, எளிதானதும் அல்ல. நீங்கள் தேர்வு செய்யும் பொருள் பற்றி புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். உங்கள் வலைப்பதிவுக்கான விசுவாசம் மிக்க வாசகர்களை பெற கடினமாக உழைக்க வேண்டும். அதைவிட முக்கியமாக உங்கள் வலைப்பதிவை பிரபலமாக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

பல வலைப்பதிவர்கள் நல்ல பதிவுகளை எழுதுகின்றனர். ஆனால் வலைப்பதிவை பிரபலமாக்க முயற்சிப்பதில்லை. பிரபலமாகாத வலைப்பதிவு ரகசிய டயரி போன்றது. பிரபலமாக்கும் முயற்சிகள் மூலம் இலக்கு வாசகர்களை அடையலாம். எனவே உங்கள் வலைப்பதிவை பிரபலமாக்கி வருவாய் ஈட்டும் முயற்சியில் ஈடுபடுங்கள். மேலே உள்ள வழிகளில் ஒன்றை அல்லது எல்லாவற்றையும் முயற்சிக்கிலாம்.

இது விருந்தினர் பக்க கட்டுரையின் மொழிபெயர்ப்பு. கட்டுரையாளர் ஷசாங்க் குப்தா, டிஜிட்டல் மார்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். சமீபத்தில் ‘How to make money online.’ எனும் வலைப்பதிவை துவக்கியுள்ளார். இவரை டிவிட்டரில் தொடர: @Shashankscg

Add to
Shares
26
Comments
Share This
Add to
Shares
26
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக