பதிப்புகளில்

இந்தியாவில் பிறப்பு இறப்பு சதவீதம் கணிசமாக குறைந்து, 2005 முதல் 10 லட்சம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டது!

YS TEAM TAMIL
5th Oct 2017
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

2005 முதல் 2015 வரை, அரசு பொது சுகாதரத்துக்கு செலவிடுவதை அதிகரித்து, பெண்களை மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்த்துக்கொள்ளவும் ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக பிறப்பில் இறக்கும் குழந்தைகளின் விகிதம் இந்தியாவில் நன்றாகவே குறைந்துள்ளது.

பட உதவி: Shutterstock

பட உதவி: Shutterstock


ஐந்து வயதுக்கு குறைவான 10 லட்சம் குழந்தைகள் இந்தியாவில் இன்று உயிருடன் இருப்பதற்கு காரணமே பிறப்பு இறப்பு குறைந்ததே ஆகும். குறிப்பாக தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இது கணிசமாக குறைந்துள்ளது.

“இந்தியாவில் மற்ற மாநிலங்களும் இம்மூன்று மாநிலங்களை போல பிறப்பு இறப்பை குறைத்திருந்தால், மில்லேனியம் வளர்ச்சி இலக்கை நாம் 2015-லேயே அடைந்திருப்போம்.”

அதே சமயம், ப்ரீமெச்சூராக பிறந்த குழந்தைகள் மற்றும் குறைந்த எடையுள்ள குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 1000-ல் 12.3 என்ற அளவில் இருந்து 1000-ல் 14.3 என்று உயர்ந்துள்ளது. ஃபர்ஸ்ட்போஸ்ட் செய்தியின்படி, டாக்டர் ப்ரபாத் ஜா குறிப்பிடுகையில்,

”நூற்றுக்கணக்கான சிறப்பு பயிற்சி பெற்ற சென்சஸ் ஊழியர்கள் இந்தியாவில் உள்ள 13 லட்சம் வீடுகளுக்கு சென்று நேர்காணல் நடத்தி, பிறந்த குழந்தை இறப்பு பற்றி தகவல் சேகரித்தனர். இரண்டு மருத்துவர்கள் இதை ஆய்வு செய்து, இறப்புக்கான காரணங்களையும் ஆராய்ந்து உள்ளனர்,” என்றார்.

2030-க்குள் இந்தியா நிலைத்தன்மையான வளர்ச்சி இலக்கை அடைய, குழந்தைகள் இறப்பு மேலும் குறைக்கப்படவேண்டும். குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஆரோக்கியம் மீதான கவனத்தின் அவசியத்தை இது காட்டுகிறது.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பயிற்சிகள் போன்ற பல நிகழ்வுகள் மூலம் அனீமியா, பிறந்த குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவு புகட்டப்படுகிறது. அதே சமயம் பெண்கள் அனைவருமே மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கும் நிலை உருவாகி, பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுவிட்டால் இறப்பு விகிதம் நன்கு குறைந்துவிடும்.

கட்டுரை: Think Change India

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக