பதிப்புகளில்

மனிதத்துவத்தை கௌரவிக்கும் 'ALERT Being விருதுகள்' 2018- விண்ணப்பங்கள் வரவேற்பு!

18th Jul 2018
Add to
Shares
28
Comments
Share This
Add to
Shares
28
Comments
Share

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது”

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உதவும் மனித மாணிக்கங்களால் தான் இவ்வுலகில் மனிதத்துவம் தழைக்கின்றது. இப்படிப்பட்ட நல்லுள்ளங்களை கௌரவித்து அவர்களின் ஆச்சரியமான உண்மை கதைகள் மூலம் எல்லோரையும் ஊக்குவிக்கும் ஒரு தளம் - ALERT Being Awards – 2018

வெங்கட், வசந்தி, ஆட்டோ ஓட்டுநர் தர்மன்; இம்மூவரும் நான் தினமும் சந்திக்கும் மனிதர்கள் போல் இல்லை! பேருந்து, ரயில் நிலையங்களிலும், தெருக்களிலும் உடல்நலம் குன்றிய முதியவர்களையும், நோயாளிகளையும், ஆதரவற்றவர்களையும் பற்றிய தகவல் கிடைத்தவுடன் அவர்களை குளிப்பாட்டி சுத்தம் செய்து மருத்துவமனைகளிலும், காப்பகங்களிலும் அனுமதிக்கும் சேவையை உயிர்கள் மீதான அன்பு மற்றும் சமூக அக்கறையோடு செய்து வருகின்றனர். அனைத்து மனிதருக்கும் கண்ணியமான வாழ்வு கிட்ட வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். 

image


நெடுஞ்சாலைகள் எப்பொழுதும் நான் கவனமுடன் பயணிக்க வேண்டியவை. திலீப் தன்னுடைய காரில் தடா – காளஹஸ்தி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் விபத்தில் உருக்குலைந்த காரை சூழ்ந்து நின்று பார்த்து கொண்டிருந்தனர். அவர்களை கடந்து சென்று காரில் காயங்களோடு சிக்கிக் கொண்டிருந்த பெண்ணிற்கு அருகில் சென்று தனக்கு தைரியம் வரவழைத்து தன்னால் முடிந்த உதவிகள் மூலம் அந்தச் சூழலை மேலும் மோசமாக மாற்றாமல், பொதுமக்களின் கேள்விகளையும் சமாளித்து ஆம்புலன்ஸ் வரும் வரை அப்பெண்ணிற்கு மேலும் காயம் ஏற்படாமல் பார்த்து கொண்டு ஆம்புலன்ஸில் உள்ள மருத்துவர்களிடம் ஒப்படைத்து தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தார்.

இவர்கள் உட்பட 20 நல்லுள்ளங்கள் 2017-ல் அலர்ட் பீயிங் விருதுகள் மூலம் கௌரவிக்கப்பட்டனர்.

இத்தகைய நிகழ்வுகளில், சாலையில் பயணிக்கும் போதும், பேருந்து, ரயில் நிலையங்களில், தெருக்களில், நம்முடைய வீடுகளில் என அசாதாரண சூழலில் உயிர்களை காப்பாற்றும் மனிதர்கள் மற்றும் அமைப்பை கௌரவிக்கும் பொருட்டு அலெர்ட் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அலர்ட் பீயிங் விருதுகள் – 2018 (ALERT Being Awards – 2018) விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. 

இத்தகைய உண்மை நிகழ்வுகள் மூலம் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் செய்யும் செயற்கரிய செயல்கள் மனிதத்தை தழைக்கச் செய்கின்றன.

திலீப், வெங்கட், வசந்தி, தர்மன் போன்ற மனிதர்கள் செய்யும் சிறு உதவிகூட ஒரு உயிரைக் காக்கிறது.

image


இவர்களைப் போன்று நல்லுள்ளங்களை நீங்கள் அறிவீர்களா?

உங்களுக்குத் தெரிந்த / சார்ந்த அமைப்பு உயிர்களைக் காக்க உதவுகிறதா?

பரிந்துரைகள் அனுப்ப : www.alert.ngo/aba

பரிந்துரைக்க கடைசி தேதி : ஆகஸ்ட் 04, 2018

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் : +91 99440 11115

அலர்ட் தன்னார்வ தொண்டு நிறுவனம் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக 65000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அவசர கால முதலுதவி குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்கி வருகிறது. அலெர்ட் அமைப்பின் நிறுவனர்கள் 2007-ம் ஆண்டு மறைந்த குடியரசுத் தலைவர் ஏபிஜே. அப்துல்கலாம் சந்தித்தபோது அவர் கூறிய “குடும்பத்தில் ஒருவருக்கு முதலுதவி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்ற குறிக்கோளோடு பயணிக்கிறார்கள்.

Add to
Shares
28
Comments
Share This
Add to
Shares
28
Comments
Share
Report an issue
Authors

Related Tags