Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: உங்கள் மாணவர்களின் ஆய்வறிக்கையை எழுதியது ஸ்மார்ட்போன்களாகவும் இருக்கலாம்!

ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: உங்கள் மாணவர்களின் ஆய்வறிக்கையை எழுதியது ஸ்மார்ட்போன்களாகவும் இருக்கலாம்!

Tuesday November 29, 2016 , 2 min Read

ஆசிரியர்கள் கவனத்திற்கு! உங்கள் மாணவர்களின் ப்ராஜெக்டுகளை ஸ்மார்ட்ஃபோன்கள் செய்யக்கூடும்!

அறிவியல் வளர்ச்சியினால் முட்டாள்தனம் புதிய உயரத்தை எட்டியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுக் கட்டுரையை சமர்பிக்க தங்களது ஐஃபோனில் ’ஆட்டோ கம்ப்ளீட்’ எனும் வசதியைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்தியாவில் மட்டும் இறுதியாண்டு மாணவர்கள் கிட்டத்தட்ட 60 லட்சம் ப்ராஜெக்டுகளுக்கு மேல் சமர்பித்துள்ளனர். இவற்றைப் பார்க்கும்போது மாணவர்கள் உண்மையிலேயே புத்திசாலிகளா அல்லது ஸ்மார்ட்ஃபோனின் உதவியால் செய்திருக்கிறார்களா என்ற சந்தேகம் பேராசிரியர்களுக்கு வருகிறது. 

image


மனிதர்களின் தலையீடே தேவையில்லையோ என்று எண்ணும் அளவிற்கு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிதமாக உள்ளது. நியூசிலாந்தில் உள்ள கென்டர்பரி பல்கலைக்கழகத்தில் ஹ்யூமன் இன்டர்ஃபேஸ் டெக்னாலஜி துறையின் இணை பேராசிரியர் கிரிஸ்டோஃப் பார்ட்னெக். அறிவியல் பேப்பர் முழுவதையும் ஸ்மார்ட்ஃபோனின் ஆட்டோ கம்ப்ளீட் வசதி மூலம் எழுதி முடிக்க முடியும் என்று உலகிற்கு காட்டியுள்ளார். 

பார்ட்னெக் தனது ஃபோனில் ’ந்யூக்ளியர்’, ‘அட்டாமிக்’ போன்ற வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தி ஆட்டோ கம்ப்ளீட் வசதி மூலம் தனது ஃபோனை மற்ற வேலைகளைச் செய்யவைத்தார். என்ன ஆச்சரியம்! 

உலகத்தரம் வாய்ந்த அறிவியல் பேப்பர் உங்கள் கையில். மொத்த பாடத்தையும் பார்த்து அதிர்ந்த பார்ட்னெக், ஆய்வறிக்கையை ’அட்டாமிக் அன்ட் ந்யூக்ளியர் பிசிக்ஸ்’ சர்வதேச மாநாட்டிற்கு அனுப்பி வைத்தார். அவர்கள் ’அட்டாமிக் எனர்ஜி’ என்ற தலைப்பில் பேசுவதற்காக அவருக்கு அழைப்பு விடுத்தனர். ஆட்டம்ஸ், ந்யூக்ளியர் பிசிக்ஸ் படங்களை பார்ட்னெக் விக்கிபீடியாவின் உதவியால் இணைத்து அறிக்கையை சமர்பித்தார். 

வெறும் பொழுதுபோக்கிற்காக பார்ட்னெக் செய்தது புகழ்பெற்ற மாநாட்டிலிருந்து சர்வதேச அளவில் பிரபலமாகும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. இந்த கட்டுரையை கற்பனையான ஒரு பல்கலைக்கழகத்தின் பெயரைக் குறிப்பிட்டு அதில் அட்டாமிக் பிசிக்ஸ் பயில்வதாகவும், தனது பெயரில் இல்லாமல் திருமதி. ஐரிஸ் பியர் எனும் கற்பனைப் பெயரில் அனுப்பியதாகவும் பல ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார் பார்ட்னெக்.

ஸ்மார்ட்போனின் செயல்கள் ப்ராஜெக்டுகள் உண்மையில் செய்தது போலவே எப்படி மனிதர்களை ஏமாற்றுகிறது என்பதை கிரிஸ்டோஃப் உலகிற்கு காட்டவே இப்படி செய்தார். சர்வதேச அளவில் இப்படிப்பட்ட அபத்தமான செயலை ஏற்றுக்கொள்வது குறித்து அவரது வலைப்பதிவில் எச்சரித்துள்ளார். 

அதேபோல், இணையதளம் வாயிலாக தகவல்களை ஒருங்கிணைத்து இந்திய மாணவர்கள் ப்ராஜெக்ட்கள் சமர்ப்பிக்கக்கூடும். ஆகவே, இந்தியாவிலுள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பல்களைக்கழக பேராசிரியர்கள் தங்கள் மாணவர்கள் சமர்பிக்கும் ப்ராஜெக்ட்கள் உண்மையா அல்லது கருத்துக்கள் திருடப்பட்டு சமர்பிக்கப்படுகிறதா என்பதை கண்டறியும் திறனை வளர்த்துக்கொள்வது அவசியம். 

10,000 வார்த்தைகள் கொண்ட ஒரு ஆய்வுக் கட்டுரையை வாசிக்க சுமார் மூன்று மணி நேரமாகும். இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 60 லட்சம் மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை ஸ்மார்ட் ஃபோனின் ஆட்டோ கம்ப்ளீட் மூலம் பெறுவதை நினைத்துப்பாருங்கள். மாணவர்களின் இப்படிப்பட்ட ஏமாற்றுச் செயலை பேராசிரியர்கள் முயன்று கவனிக்காவிட்டால் நிறைய மாணவர்கள் இவ்வாறு செய்துகொண்டே இருப்பார்கள். 

ஆங்கில கட்டுரையாளார்: விஷால் கிருஷ்ணா