பதிப்புகளில்

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை மரங்கள் நடவைக்கும் தெலுங்கானா காவலர்கள்!

YS TEAM TAMIL
29th Aug 2018
Add to
Shares
19
Comments
Share This
Add to
Shares
19
Comments
Share

வாட்ஸ் அப்பில் வெளியாகும் போலியான செய்திகளை எதிர்த்து தனித்துவமான விதத்தில் போராடியதை அடுத்து ஜோகுலம்பா கத்வால் எஸ்பி ரெமா ராஜேஸ்வரி மீண்டும் செய்திகளில் இடம்பெற்றுள்ளார்.

தெலுங்கானாவின் ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில் தேசிய நெடுங்சாலையில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கையை குறைப்பதற்காக ஐபிஎஸ் அதிகாரி ஒரு புதுமையான தீர்வை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு முறை போக்குவரத்து விதிகள் மீறப்படும்போதும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு செடியை நடவேண்டும் என அறிவுறுத்துமாறு மாவட்ட போக்குவரத்து காவலர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.

image


மாநிலத்தில் உள்ள பசுமை போர்வை 24 சதவீதம் இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என்கிற நோக்கத்தைக் கொண்ட தெலுங்கானா அரசின் ’ஹரிதா ஹரம்’ என்கிற மரம் நடும் திட்டத்தையும் இந்த நடவடிக்கை ஊக்குவிக்கும். ரெமா ராஜேஸ்வர் டிஎன்எம்-க்கு தெரிவிக்கையில்,

”குற்றங்கள் பரவலாக காணப்படும்போது அதற்கான தடுப்பு மற்றும் தீர்வு நடவடிக்கைகள் இரண்டுமே மேம்படவேண்டும் என்கிற நோக்கத்துடன் இதில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை இணைத்துக்கொண்டோம்,” என்றார்.

சில நாட்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை 44-ல் ஒரு கோர விபத்து ஏற்பட்டு ஒரு குடும்பமே பலியானது. இத்தகைய விபத்துகளை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக சரியான ஆவணங்கள், ஹெல்மெட் ஆகியவை இல்லாமல் பயணிப்பவர்களை கண்காணிக்கின்றனர். காவலர்கள் இவர்களிடம் அபராதம் வசூலிப்பதுடன் இவர்களை செடி நடும் பணியில் ஈடுபடுத்துகின்றனர்.

”விதிகளை மீறுபவர்கள் மைனர்களாக இருந்தால் அவர்களது பெற்றோரை அழைத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களையும் ஜூலை 8-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஹரிதா ஹரம்’ திட்டத்தில் பங்கேற்க வைக்கிறோம்,” என்றார் ராஜேஸ்வரி.

அத்துடன் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கண்காணிக்க மாநில அரசாங்கம் நெடுஞ்சாலைகளில் சாவடிகளை அமைத்துள்ளது.

மாவட்ட காவலர்கள் இரண்டு லட்சம் செடிகளை அனைத்து காவல் நிலையங்களிலும் பயிற்சி மையங்களிலும் காவல் அலுவலக வளாகங்களிலும் நடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். மரம் நடும் நடவடிக்கைகளில் பொதுமக்களை ஈடுபடுத்தவேண்டும் என்கிற இலக்கு காவலர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அதிகம் பேரைச் சென்றடைய இவர்கள் ’ஜோகுலம்பா கத்வால் மாவட்ட காவலர்கள்’ என்கிற முகநூல் பக்கத்தில் #GreenCopsOfGadwal என்கிற ஹேஷ்டேகுடன் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

மாவட்ட காவலர்கள் மேற்கொள்ளும் இத்தகைய முயற்சியால் தெலுங்கானாவில் பசுமை போர்வை அதிகரிப்பதுடன் போக்குவரத்து விதிமீறல்களும் குறையும்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Add to
Shares
19
Comments
Share This
Add to
Shares
19
Comments
Share
Report an issue
Authors

Related Tags