பதிப்புகளில்

நலிவடந்த பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பு அளித்து அதிகாரமளிக்கும் சென்னை 'இகோ கிச்சன்'

YS TEAM TAMIL
3rd Mar 2018
Add to
Shares
13
Comments
Share This
Add to
Shares
13
Comments
Share

’ப்ராஜெக்ட் இகோ’வின் (சமூக வாய்ப்புகளை மேம்படுத்தும் திட்டம்) ஒரு பகுதியான ’இகோ கிச்சன்’ பெண்களுக்கு சிறு தொழில்முனைவு வாய்ப்புகளை வழங்கி அவர்களுக்கு அதிகாரமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமையல் வாயிலாக இதை அடைய திட்டமிடுவதுடன் சமூகத்திற்கான உணவு கிடைக்கவும் வழிசெய்கிறது.

சென்னையின் ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள ‘இகோ கிச்சன்’ அமைப்பு சூரிய சக்தி கெய்சர்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் விரிவான வடிகாலமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. லாபமோ நஷ்டமோ இல்லாத வணிக மாதிரியில் செயல்படும் இகோ கிச்சன் சமுதாயத்தில் பின் தங்கிய பெண்களுக்கு முதலீடோ அல்லது மூலதன முன்பணமோ இன்றி சிறு கடைகளை அமைத்துக் கொடுக்கின்றனர்.

image


உணவு தயாரிப்பதற்கான செலவை இகோ கிச்சன் ஏற்றுக்கொள்கிறது. பெண்கள் சமையலையும் விற்பனையையும் செய்யவேண்டும். இதிலிருந்து ஈட்டப்படும் லாபத்தில் ஒரு பகுதி இந்தப் பெண்களுக்கு வழங்கப்படும். வீட்டில் நடந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் போன்றோருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. இகோ கிச்சனின் சமீபத்திய முயற்சி குறித்து அதன் மேலாளர் சேது லஷ்மி நியூஸ் டுடே-க்கு தெரிவிக்கையில்,

"பொங்கல் சமயத்தில் ‘டைன் அண்ட் டயலாக்’ என்கிற நிகழ்வு ஏற்பாடு செய்தோம். கார்ப்பரேட் நிறுவனங்களைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள், நாங்கள் ஆதரவளிக்கும் பெண் தொழில்முனைவோர்கள், ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகள் போன்றோர் பங்கேற்றனர். இதில் வெற்றிக்கதைகள் பகிர்ந்துகொள்ளப்பட்டது. வெற்றிப் பயணத்தில் இருக்கும் சவால்களை புரிந்துகொள்ளவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகிறோம்."

10 பெண்களுடன் ’கதிர்’ என பெயரிடப்பட்டு இந்த திட்டம் சோதனை செய்யப்பட்டது. இதனால் பெண்கள் சுய மரியாதையுடன் செயல்படுவதை பார்க்கமுடிந்தது. சில சமயம் நிதி சுதந்திரம் காரணமாக வீடுகளில் நடக்கும் வன்முறையும் குறைந்தது. எனவே தற்போது இது விரிவடைந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நூற்றுக்கணக்கான பெண்களை இணைத்துக் கொண்டுள்ளது.

2010-ம் ஆண்டு துவங்கப்பட்ட இகோ கிச்சன் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது சென்னை மக்களின் பசியை போக்க தனது சூரிய சக்தி அமைப்பைக் கொண்டு பெருமளவு உதவியது. துவங்கப்பட்ட எட்டு ஆண்டுகளில் அனாதை இல்லங்கள், ஆதரவற்றோர், நலிந்தோர் என பலருக்கு உணவு வழங்கி வருகிறது. ’தி இந்து’ உடனான நேர்காணலில் சேது லஷ்மி குறிப்பிடுகையில்,

நிவாரணப் பணியின்போது ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் 5,000 முதல் 7,000 பேருக்கு சமையல் செய்தோம். எதிர்பாராத வகையில் பலர் எங்களுக்கு உதவி புரிந்தனர். உதாரணத்திற்கு கௌசர் என்கிற இளைஞரிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர் தனது உறவினர் ஜாஃபர் மற்றும் 60 தன்னார்வலர்களுடன் இணைந்து 1.5 டன் ஃப்ரேஷ் காய்கறிகளை ஊட்டியிலிருந்து பெற்றுள்ளதாகவும் அதை நன்கொடை செய்ய விரும்புவதாக தெரிவித்தார். அவர்கள் வெள்ள பாதிப்பினால் மிகுந்த துயரங்களை சந்தித்திருப்பதால் உதவ விரும்புவதாகவும் தெரிவித்தனர். தேவையானோருக்கு உதவ முன் வரும் இத்தகைய நபர்களைக் பார்ப்பது நம்பிக்கையளிக்கிறது," என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Add to
Shares
13
Comments
Share This
Add to
Shares
13
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக