பதிப்புகளில்

உபி தேர்தலில் பா.ஜ.க வெற்றி: மோடியின் செல்வாக்கு 2019 தேர்தலிலும் தொடருமா?

19th Mar 2017
Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share

சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனே இந்த கட்டுரையை எழுதவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எழுதவில்லை. பரவிவரும் விவாதங்களும் சலசலப்புகளும் சற்று அடங்கினால் அதிக தெளிவு கிடைக்கும் என்பதற்காகவே பொறுத்திருந்தேன். கடந்த ஒரு வாரமாக பல்வேறு விவாதங்கள் அரங்கேறின. பல்வேறு ஊடகங்களும் ஆய்வுகளும் உருவாகின. மூன்று முக்கிய விஷயங்கள் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. இது குறித்து அதிக ஆழமான நடுநிலையான ஆய்வுகள் அவசியம்.

image


1. மோடியின் மாபெரும் சக்தி தங்கு தடையின்றி முன்னேறிக்கொண்டிருக்கிறது. 2019 பாராளுமன்ற தேர்தலில் அவரை தடுக்க இயலாது.

2. காங்கிரஸ் கட்சி தன்னை நிலை நிறுத்திக்கொள்ள கடும் நெருக்கடியிலுள்ளது. ராகுல் காங்கிரஸ் கட்சியின் பஹாதூர் ஷா சஃபார் என நிரூபித்துக்கொண்டுள்ளார்.

3. வழக்கமான அரசியலுக்கு தேசிய அளவில் மாற்று அரசாக பேசப்பட்ட நிலையிலிருந்து ஆம் ஆத்மி கட்சி சரிவடைந்தது. 

பாஜக உத்திரபிரதேசத்தில் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இது ஒரு மும்முனைப் போட்டி என்றும் மற்ற இரண்டு கட்சிகளையும் தாண்டி எந்த கட்சி வேண்டுமானாலும் வெல்ல வாய்ப்புண்டு என்று தேர்தலுக்கு முன்பு அரசியல் நிபுணர்கள் பலர் தெரிவித்தனர். 

பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ளதாக சிலர் தெரிவித்திருந்த போதிலும் இப்படிப்பட்ட மாபெரும் வெற்றியை யாரும் எதிர்பார்க்கவில்லை. பிஎஸ்பி இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வெறும் 18 இடங்களை மட்டுமே வெல்லும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மோடி தலைமையிலான பாஜக 80 சதவீத இடங்களை வென்றது அதிசயம் என்றே குறிப்பிடலாம். இதனால் 2014-ல் 73 இடங்களை கைப்பற்றியது யதேச்சையாக நடந்ததல்ல என்பது நிரூபனமாகிறது. 

பாஜக உத்தரகாண்டில் குறிப்பிடத்தக்க வகையில் மறுபிரவேசம் செய்துள்ளது. ஆனால் உத்திரபிரதேசம் அனைவரது ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. மோடி மற்றும் அவரது செயல்பாடுகள் குறித்து வெளியான அச்சங்கள் தகர்த்தெறியப்பட்டுள்ளது. தற்போது மோடி மேலதிக திறனுடன் 2019-ல் ஆட்சிக்கு வருவார் என்று கருத்து தெரிவிக்கப்படுகிறது.

இது வெகு விரைவாக கணிக்கப்படும் முடிவு என்று என் தரப்பில் கூறினால் என்னுடைய கருத்து நிச்சயம் மற்றவர்களின் கருத்துடன் ஒன்றாமல் வேறுபடுத்தி பார்க்கப்படும். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டாண்டுகளுக்கும் சற்று கூடுதலான காலம் உள்ளது. ஒரு வாரம் என்பது மிகவும் நீண்ட கால அவகாசம் எனும் சொற்றொடருக்கேற்ப அரசியலில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க இயலாது. இதற்கு வரலாறே சான்று. 

பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்காளம் உருவானபிறகு 1971-ல் திருமதி காந்தி, துர்கா என்றே போற்றப்பட்டார். இந்திராதான் இந்தியா என்றும் இந்தியா என்றாலே அது இந்திராதான் என்றும் பேசப்பட்டது. ஆனால் 1972-ம் ஆண்டு இறுதியில் அவரது புகழ் சரியத் தொடங்கியது. 1975-ல் மக்களுக்கு அவர் மீதான கோபம் மிகவும் தீவிரமடைந்ததால் அவசரநிலையை அறிவிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. 1977-ல் தேர்தலில் தோல்வியடைந்தார். காங்கிரஸ் அல்லாத அரசாங்கம் உருவானது. நினைத்துக்கூட பார்க்க முடியாத செயல்கள் அரங்கேறின.

அதே போல 1984-ல் ராஜீவ் காந்தி 405 இடங்களை வென்றார். அவரது தாய் மற்றும் தாத்தாவினால் கூட பாராளுமன்றத்தில் இவ்வளவு இடங்களை வெல்ல முடியவில்லை. ஆனால் 1987-ம் ஆண்டு போஃபோர்ஸ் (Bofors) விவகாரத்தால் அவதூறு ஏற்பட்டது. இதனால் 1989-ல் வி.பி.சிங் ஆட்சி மலர்ந்தது. 2004-ல் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு தன்னுடைய புகழை கருத்தில் கொண்டு தேர்தலை எளிதாக வென்று விடலாம் என்று எதிர்பார்த்து ஆறு மாதங்களுக்கு முன்பாகவே தேர்தலை அறிவித்தது. ஆனால் படு பயங்கர தோல்வியைத் தழுவியது. 2009-ல் பாஜக இரண்டாவது முறையாக தொடர் தோல்வி அடைந்தபோது உள்கட்சிப்பூசலும் அதிகார சண்டையும் கட்சியில் வலுத்ததால் 2014-ல் ஆண்டில் பாஜக நிலை மோசமாக இருக்கும் என்றும் 2019-ம் ஆண்டிற்கு கட்சி தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டது. 

ஆனால் நிலைமை எப்படி தலைகீழாக மாறியது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். காங்கிரஸ் கட்சி ஒன்றுமில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இப்போதைக்கு மோடிக்கு அதிக வாய்ப்புள்ளதாக தோன்றினாலும் அதுவரை அவர் தனது வேகத்தை தக்கவைத்துக் கொள்வாரா என்பதுதான் கேள்வி. அப்படி தக்கவைத்துக்கொண்டால் அவர் எந்தவித சவாலையும் சந்திக்க நேராது. இல்லையெனில் வரலாறு வேறுவிதமாக மாற்றியெழுதப்படும். 

மற்றொரு கோணமும் உள்ளது. மோடியிடம் ஈர்ப்பு இருந்தபோதும் பாஜக அல்லது என்டிஏ உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தர்காண்ட் பகுதிகளில் மட்டுமே வெற்றியடைய முடிந்தது. இந்த இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருந்ததில்லை. ஆனால் பாஜக ஆட்சியிலிருந்த பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் தோல்வியைத் தழுவியுள்ளது. மேலும் மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியே முதலிடம் வகித்துள்ளது. பஞ்சாப்பில் அகாலி-பாஜக கூட்டணியாக இணைந்தபோதும் காங்கிரஸ் கட்சியின் மாபெரும் வெற்றியை தடுக்க இயலவில்லை. கோவாவில் திருகு வேலைகளில் ஈடுபட்டு ஆட்சி அமைத்தபோதும் மக்கள் பாஜகவை நிராகரித்துவிட்டனர். மணிப்பூரிலும் நேரடியாக வெற்றியடைய முடியவில்லை. பாஜகவும் அதன் கூட்டணிகளும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு எங்கெல்லாம் நடந்துகொள்ளவில்லையோ அங்கெல்லாம் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர். 

மோடி தன்னுடைய புகழை சாதகமாக பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்று நினைத்தால் அது அழிவிற்கே வழிவகுக்கும். அவர் மற்றொரு முறை பிரதமர் பதவியைப் பெற பொருளாதார அடிப்படையிலான முன்னேற்றங்களை வழங்கவேண்டும். ஆனால் காங்கிரஸ் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது. ராகுல் கட்சியின் சுமையாகவே பார்க்கப்படுகிறார். பஞ்சாப் கோவா மற்றும் மணிப்பூரில் கட்சியின் நிலை சிறப்பாக உள்ளபோதும் அவரது தலைமைக்கு எதிராகவே குரலெழுப்பப்படுகிறது. அவருக்கு எந்தவித நற்பெயரும் கிடைக்கவில்லை. அவர் தலைமை மாற்றப்படவேண்டும் அல்லது அவர் செயல்படும் விதம் மாறவேண்டும் என்று முனுமுனுக்கத் துவங்கியுள்ளனர்.

ஆட்சியைக் கைப்பற்ற நெறிமுறை சார்ந்த அல்லது நெறிமுறையற்ற உத்திகள் எதையும் அவர் பயன்படுத்தத் தயங்காதவரும் புகழின் உச்சியில் இருப்பவருமான ஒரு தலைவரை ராகுல் எதிர்க்கிறார். தேசியளவில் பொருந்தாத நிலையில் காங்கிரஸ் கட்சியை ராகுல் செயல்படுத்துகிறார். இதற்கு அருணாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தர்காண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் அரசமைக்க முடியாமல் நீக்கப்பட்டது ஒரு சிறந்த உதாரணமாகும். 

பாஜக கோவா மற்றும் மணிப்பூரில் காங்கிரஸை ஆட்சி அமைக்க விடாமல் தடுத்தது சமீபத்திய உதாரணமாகும். ராகுலின் அணுகுமுறை தற்காப்பு நிறைந்ததாகும். சோனியா காந்தியைப்போலவே ராகுலும் கட்சியின் மூத்த தலைவர்களின் மரியாதையைப் பெறவில்லை. அனுபவமற்றவர்களே உடன் இருப்பதாகவும் அவரது எண்ணங்கள் பொருத்தமான இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. புது திட்டங்களை வழங்கவேண்டும். குடிமக்களுக்கு நம்பிக்கையான எதிர்காலம் உருவாவதை உறுதிப்படுத்தும் விதத்தில் காங்கிரஸ் கட்சியை முன்னிறுத்தவேண்டும். அவர் தன்னை மாற்றிக்கொண்டால் மட்டுமே நிலைப்படுத்திக்கொள்ள முடியும். 

ஆனால் அது அவருக்கு அதிக சுமையளிப்பதாகவோ அல்லது அவரிடம் அதிகம் எதிர்பார்ப்பதைப் போன்றோ அமையும். பஞ்சாப் தேர்தலைப் பொருத்தவரை காங்கிரஸ் போலல்லாமல் ஆம் ஆத்மி கட்சியிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆம் ஆத்மி நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையை வெல்லும் என்று ஊடகங்களால் கணிக்கப்பட்டது. கோவாவிலும் சிறப்பாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் கூட்டணியுடன் இணைந்து பஞ்சாபில் வெறும் 22 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. கோவாவில் ஒரு இடத்தையும் கைப்பற்றவில்லை.

தற்போது ஆம் ஆத்மி கட்சி தனது கோட்டையிலேயே தில்லி மாநகராட்சி தேர்தலில் (MCD Elections) பாஜக/காங்கிரஸ் கட்சியை எதிர்த்து மோதுகிறது. 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 409 இடங்களில் டெபாசிட்டை இழந்தபோது விமர்சகர்கள் ஆம் ஆத்மி கட்சி இறுதி நிலையை எட்டிவிட்டதாக கணித்ததைப் போலவே இப்போதும் விமர்சிக்கின்றனர். இருந்தும் 2015-ல் முன்னெப்போதும் இல்லாத எழுச்சியுடன் ஆம் ஆத்மி மீண்டெழுந்தது. ஆம் ஆத்மி துவங்கி நான்காண்டுகள் மட்டுமே நிறைந்த ஒரு இளம் கட்சி. இவ்வளவு குறுகிய காலத்தில் டெல்லியில் இருமுறை ஆட்சி அமைத்துவிட்டது. 

மற்றொரு மாநிலத்தில் பிரதான எதிர்கட்சியாகவும் உருவெடுத்துள்ளது. இது ஒரு சராசரி சாதனை அல்ல. மற்ற அரசியல் கட்சிகள் ஆம் ஆத்மி கட்சி அடைந்திருக்கும் இடத்தைப் பிடிக்க பல ஆண்டு காலம் எடுத்துக்கொண்டனர். பாஜக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உத்திரப்பிரதேசத்தில் இருந்தாலும் 1980-ல் 3 சதவீதமும் 1985-ல் 4 சதவீத இடத்தை மட்டுமே கைப்பற்றியது. நிச்சயமாக ஆம் ஆத்மி கட்சி சரிந்துவிடவில்லை. விமர்சகர்கள் மறுபடி ஏமாற்றம் அடையப்போகின்றனர். அரசாங்கம் சர்வாதிகாதிகார செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருக்க ஒரு வலுவான எதிர்கட்சி அவசியம்.

ஜனநாயகம் காப்பாற்றப்படவேண்டுமானால் வலுவான விவாதங்கள் கட்டுப்படுத்தப்படாமல் முறையாக இடமளிக்கப்படவேண்டும், மாறுபட்ட கருத்துகளும் மதிக்கப்படவேண்டும், சிறுபான்மையினரின் உரிமை பாதுகாக்கப்படவேண்டும், வேற்றுமையில் ஒற்றுமை காண சகிப்புத்தன்மை அவசியம், வரலாறு மற்றும் பாரம்பரியத்தை உள்ளடக்கி இருக்கவேண்டும். இன்று ஆர்எஸ்எஸ்/பாஜகவிற்கு மேலாதிக்கம் செலுத்த வாய்ப்பளித்துள்ளனர். 

பல ஆண்டுகளாக செயலற்று இருந்த கருத்தியல் வீரியத்தை காட்டியுள்ளது. ஆனால் ஜனநாயகத்தில் வாஜ்பாய்க்கு ஏற்பட்டதுபோல் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும். அதிலிருந்து உயிர்த்தெழ பத்தாண்டு காலம் எடுத்துக்கொண்டது.

கட்டுரையாளர்: அசுடோஷ்

(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)

Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share
Report an issue
Authors

Related Tags