பதிப்புகளில்

உங்கள் குழந்தை நள்ளிரவோ விடியற்காலையோ திடீரென்று கதறி அழுகிறதா? 'மதர்ஹென்' இருக்க பயமேன்!

YS TEAM TAMIL
29th Feb 2016
Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share

புதிதாக ஒரு குழந்தையை பெற்றெடுத்த தாய்மாரின் நெருங்கிய தோழி யாரையாவது சந்திக்க நேர்ந்தால் அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிப்பார்த்தால் தெரியும். ஒரு குழந்தை தனியாக பிறப்பதில்லை. பெருத்த அலறல் சத்தமும் சேர்ந்துதான் பிறக்கிறது. இது போன்ற ஒரு இனம்புரியாத சூழலுக்கு யாரும் சட்டென்று தயாராவதில்லை. புதிய தாய்மார்கள் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை தூக்கமின்மை மற்றும் உதவிக்கரம் நீட்ட ஆளில்லாத நிலை. இதுபோன்ற ஒரு விரக்தி நிலையில்தான் நானும் காணப்பட்டேன். சில சமயங்களில் வயதில் மூத்த சிலரின் நிரூபிக்கப்பட்ட தீர்வுகள் கூட பலனளிக்காமல் போகும். மருத்துவ வலைதளங்களைப் பார்த்து தெரிந்துகொள்ளலாமென்றால் அதிலுள்ள தகவல்களும் தீர்வுகளும் நம் பயத்தை அதிகரிக்கும். புதிய தாய்மார்களுக்கு தேவைப்படுவது சக தாய்மார்களின் நம்பிக்கை மிகுந்த வார்த்தைகள்தான். அவர்கள் சந்திக்கும் அதே பிரச்சனைகளை சில தாய்மார்கள் சந்தித்திருப்பார்கள். அவர்கள் தனித்துவமாக கையாண்ட விதத்தை தெரிந்து கொள்ளும்போது அவர்களின் தனிமை போக்கப்பட்டு துணிந்து எதிர்கொள்ளும் நம்பிக்கை பிறக்கிறது. தாய்மார்களின் பல்வேறு தீர்வுகளுக்காக உருவானதுதான் அதிதி ஜுஸாவாலாவின் "மதர்ஹென்".

நள்ளிரவு நேரம். குழந்தை திடீரென்று கதறி துடித்து அழுகிறது. என்ன செய்தாலும் சமாதானமாகவில்லை. தாய்மார்களுக்கு இது ஒரு மிகப்பெரிய நெருக்கடி. நானும் இதே நிலைமையில் இரவு முழுக்க கண்விழித்திருந்தேன். எப்படி சமாதானப்படுத்துவது என்று குழம்பினேன். அதிகாலை 2 மணி இருக்கும். அந்த வேளையில் யாரிடம் ஆலோசனை கேட்பது? மேலும் அழும் குழந்தையை தனியே விட்டு எப்படி ஆலோசனை கேட்கச் செல்லமுடியும்?

image


உல்லாசம் முதல் குழப்பம் வரை

தன் அறையை விட்டு வெளியே சென்று பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டியிருக்கும் என்று அதிதி ஜுஸாவாலா நினைத்துக்கூட பார்த்ததில்லை. உல்லாச நகரமான கொல்கத்தாவில் மார்வாரி கூட்டுக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் அதிதி. குழந்தை வளர்ப்பில் எந்தவிதமான கவலையும் அவரது பெற்றோருக்கு இருந்ததில்லை. இதற்குக் கூட்டுக்குடும்பத்தின் ஒத்துழைப்புதான் காரணம். வீட்டு வேலைகள், குழந்தையை அருகில் இருந்து பார்த்துக்கொள்வது, குழந்தைவளர்ப்பிற்குத் தேவையான ஆலோசனை வழங்குவது என எல்லாவிதமான ஒத்துழைப்பும் குடும்பத்தினரிடமிருந்து கிடைத்தது. அதிதி ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார். வணிகவியலிலும் தகவல் தொழில்நுட்பத்திலும் இளநிலை பட்டம் பயின்றார். கார்ப்பரேட்டில் சில நாட்கள் சேர்ந்த பிறகு கொல்கத்தா திரும்பினார். மும்பையில் அவருக்கு முதல் குழந்தை பிறந்தது. அப்போதுதான் அவருக்கு போராட்டம் ஆரம்பமானது.

தாய்மையின் முதற்கட்டம் திணறடிக்கச் செய்தது. என் மனதில் குழந்தை வளர்ப்பு குறித்த பல சந்தேகங்கள் எழுந்தது. நகரத்தின் மிகச்சிறந்த குழந்தை மருத்துவரிடம் ஆலோசனை பெற விரும்புவேன். மருத்துவனை வெகு தூரத்தில் இருக்கும். நீளமான வரிசை. அதிக நேரம் காத்திருக்க வேண்டிவரும். எல்லாம் சேர்ந்து குழந்தைவளர்ப்பு அனுபவத்தையே சிரமமாக்கிவிடும். எந்தவித தொந்தரவுமின்றி விரல்நுனியில் நிபுணர்களின் ஆலோசனை பெற விரும்பினேன். மற்ற தாய்மார்களுடன் அவர்களது தாய்மை அனுபவத்தை பகிர்ந்துகொள்ளவும் விரும்பினேன்.” என்கிறார் அதிதி.

பல ஆன்லைன் ஊடகங்கள் மூலம் சக தாய்மார்களின் ஆலோசனைகளும் நுணுக்கங்களும் பெற விரும்பினார். ஆனால் அந்த தளங்கள் ஒழுங்கற்றும் முறையின்றியும் காணப்பட்டது.

ஸ்டார்ட் அப் கனவு

முன்னர் கார்ப்பரேட்டில் பணிபுரிந்த அனுபவங்கள் நினைவிற்கு வந்தது. எத்தனை பிரச்சனைகளுக்கு தீர்வு தேடியிருப்போம்.

“நான் தகவல் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களுடன் கொல்கத்தாவில் பணியாற்றியிருக்கிறேன். நேரடியாக உரிமையாளரின் கீழ் பணிபுரிந்திருக்கிறேன். அவசியம் ஏற்படும்போது ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளை திறம்பட செய்திருக்கிறேன். ஸ்டார்ட் அப் கனவு என்னை உருத்த ஆரம்பித்தது.”

தொழில்முறை சவால்கள் மட்டுமல்லாமல் ஒரு பெண்ணாக பல பாகுபாடுகளை சந்திக்கவும் தவறவில்லை. “கொல்கத்தாவில் ஒரு மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் நேர்காணலுக்கு சென்றிருந்தபோது அவர்கள் பல கேள்விகள் கேட்டார்கள். “எப்படி வேலைக்கு பயணம் செய்வீர்கள்? இந்த நிலைமையை எப்படி சமாளிப்பீர்கள்? இது போன்ற கேள்விகள் அனைத்தும் பெண் எனும் பாலினத்தை சுட்டிக்காட்டியவாறே அமைந்திருந்தது. நான் அந்த வேலைக்கு தகுதியானவரல்ல என்று அவர்கள் முடிவெடுத்ததால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. “

என்றாவது ஒரு நாள் சுயமாக தொழில் தொடங்கவேண்டும் என்பது அவருடைய கணவருக்கும் அவருக்கும் ஒரு மிகப்பெரிய கனவு. அதை நிறைவேற்றினார்கள். வெப் டிஸைனிங் மற்றும் டெவலப்மெண்ட் சார்ந்த ஒரு டிஜிட்டல் ஏஜென்ஸி தொடங்கினார்கள். அதன் பெயர் ஒய்யும். அதிதி மார்க்கெட்டிங்கிற்கு பொறுப்பேற்றார். இவ்வாறு கூட்டாக தொழில் செய்யும்போது வெற்றி பெறுவது நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும்.

இவை அனைத்தும் சேர்ந்து உருவானதுதான் மதர்ஹென். இது புதிய தாய்மார்களுக்கான உண்மையான தகவல்களின் தொகுப்பு. 

“என் கணவரிடம் இந்த எண்ணத்தை பகிர்ந்தேன். எனக்கு பக்கபலமாக இருந்தார். எங்கள் தனிப்பட்ட சேமிப்பிலிருந்து ஒரு நிறுவனத்தை உருவாக்கினோம்.”

தாய்மார்களுக்காகவே உருவாக்கப்பட்டதுதான் 'மதர்ஹென்'. இது தாய்மார்களை இணைக்கிறது. அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உதவுகிறது. மருத்துவர்களிடம் ஆலோசனை பெற உதவுகிறது. மற்ற நிபுணர்களிடமும் தேவைக்கேற்ப ஆலோசனை பெற உதவுகிறது. “சக தாய்மார்களிடம் உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். உண்மையான ஆலோசனை கிடைக்கும். இரவு பகல் எந்த நேரமும் இது இயங்கும். இப்படித்தான் UK வை சேர்ந்த ஒரு தாய் மதர்ஹென்னை தொடர்புகொண்டார். அவருடைய நான்கு வயது குழந்தைக்கு வயிறு சம்பந்தப்பட்டப் பிரச்சனை. அதிக காய்ச்சல். அதிகாலை நேரம். அருகிலிருக்கும் மருத்துவரை தொடர்புகொள்ள முடியாத நிலை. மதர்ஹென்னை தொடர்புகொண்டார். மற்ற தாய்மார்கள் ஆறுதலளித்து அவரை அமைதிப்படுத்தினார்கள். எங்கள் இணையத்தின் மூலம் குழந்தை மருத்துவரை தொடர்புகொண்டார். பிரச்சனைக்கான தீர்வு உடனடியாக கிடைத்தது.” என்று விவரிக்கிறார்.

குழந்தைகள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள், நிகழ்வுகள் அனைத்தும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. “அருகாமையில் இருக்கும் ப்ரீஸ்கூல், சலுகை விலையில் கிடைக்கும் டயாபர்கள், ஐந்துவயது குழந்தைக்கேற்ற வகுப்புகள். இதுபோன்ற அத்தனை கேள்விகளுக்கும் எங்கள் ஆப்ஸில் பதில் கிடைக்கும்.” என்கிறார் அதிதி.

image


தாய்மார்களுகான பிரத்யேக தளம்

பிரத்யேகமாக தாய்மார்களுக்காக உருவாக்கப்பட்டதால், இதிலுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தாய்மார்கள் அல்லது தாயாகப்போகிறவர்கள். “அவர்கள் தங்கள் பிரச்சனைகளை பகிர்ந்துகொள்ள வசதியான ஒரு செயலி தான் மதர்ஹென். இந்தியாவில் இன்று பெரும்பாலான தம்பதிகள் கூட்டுக்குடும்பமாக அல்லாமல் தனியாகத்தான் வாழ்கிறார்கள். நிறைய தாய்மார்கள் பேறுகால விடுப்பு முடிந்ததும் பணிக்கு திரும்புகிறார்கள். சிறந்த அம்மாவாக, மனைவியாக, மருமகளாக அனைத்து வடிவங்களிலும் உருவெடுத்து தன் பங்கை நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள். பணியிடத்தையும் குடும்பத்தையும் குற்றவுணர்வின்றி சமன்படுத்தவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள். மேலும் குழந்தை வளர்ப்பில் பழங்கால முறைகளுக்கும் இன்றைய சூழலுக்கேற்ற குழந்தைவளர்ப்பிற்கும் இடையே நிலவும் பல முரண்பட்ட கருத்துக்களையும் எதிர்கொள்வது புதிய தாய்மார்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை.

இந்த ஆப்ஸை செயல்படுத்த நினைத்தபோது மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற பயம் ஏற்பட்டது. அதிதியும் அவரது குழுவும் சேர்ந்து 200 தாய்மார்களைக் கொண்டு ஒரு சோதனை முயற்சி மும்மையின் சில பகுதிகளில் மேற்கொண்டனர். செயலி குறித்த கருத்துக்கள் பெறப்பட்டது. மற்ற பகுதிகளிலுள்ள தாய்மார்களுக்கும் தேவை இருப்பது தெரிந்து மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் சேவையை விரிவாக்க தொடங்கியதும் அனைவரிடமிருந்தும் வரவேற்பு கிடைத்தது. பின் மற்ற பெரிய நகரங்களுக்கும் ஒரு சில மாற்றங்களுடன் விரிவாக்கப்பட்டது.

அம்மா போகாதீங்க!

அக்டோபர் 2015 முதல் 4000க்கும் மேற்பட்ட தாய்மார்களை இணைத்துள்ளனர். குழந்தைவளர்ப்பு குறித்த பல தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளது. 

“நாங்கள் எங்கள் நேரத்தை செலவிட்டோம். தொடர்ந்து சிறப்பாக செயல்பட ஆப்ஸில் சில மாறுதல்களை செய்தோம். மாதாமாதாம் நூறு சதவீதம் முன்னேறி வருகிறோம்.” 

பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்ததும் மேலும் சில வருவாய் மாதிரிகளை திட்டமிட்டுள்ளோம். கட்டணத்துடன் கூடிய விவரங்கள், ஸ்பான்சர்ட் கன்டென்ட், அஃபிலியேட் கமிஷன் போன்றவைகளாகும்.

மற்ற தாய்மார்களின் வாழ்க்கையை எளிதாக்குவதையே குறிக்கோளாக கொண்டிருந்தாலும், ஒரு தாயாக அவர் பல தியாகங்களை செய்திருக்கிறார். என்ன ஒரு முரண்பாடு. “எல்லா அம்மாக்களைப்போல என்னுடைய பலவீனமும் என் இரண்டு வயது குழந்தைதான். பணியையும் குடும்பத்தையும் சமன்படுத்துவது அத்தனை சுலபமல்ல. “அம்மா என்னை விட்டுப் போகாதீங்க....” என்று சொல்லும் மகனிடமிருந்து விடைபெறும்போது இதயம் கனக்கும். இருந்தும் என் குடும்பம்தான் என்னுடைய பக்கபலம். 

தொழில்முனைவராகவும் தாயாகவும் சமன்படுத்தி பயணிக்கும் வாழ்க்கை சவாலாக இருப்பினும், அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை ஒப்பிடும்போது ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்திலிருந்து கிடைக்கும் மிகப்பெரிய தொகைக்கான காசோலையின் மதிப்பு சற்றே குறைந்ததுதான். முக்கியமாக என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல மனிதன் என்பவர் சமுதாயத்திற்கு தனக்கான பங்கை அளிக்கவேண்டும். நீங்கள் நம்பும் விஷயத்தை அதிகமாக விரும்பவேண்டும். எதைச்செய்தாலும் அதை விரும்பி செய்யவேண்டும். இவை அனைத்தையும் மனதில் நிறுத்தினால் மற்ற நன்மைகள் தானாக வந்து சேரும். “

இணையதள முகவரி: Motherhen செயலி தரவிறக்கம் 

ஆக்கம் : பின்ஜால் ஷா | தமிழில் : ஸ்ரீ வித்யா 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

பெற்றோர்களின் கவலை தீர்க்கும் 'ஃபுட் ப்ரின்ட்ஸ்' மழலையர் பள்ளி!

பணிபுரியும் தாய்மார்களுக்கு நிம்மதியை தரும் குழந்தைகள் காப்பகம் 'ஹாப்பி மைன்ட்ஸ்'

Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக