2021: இந்திய யூனிகார்ன்களின் ஆண்டு இது!
இந்திய யூனிகார்ன்களின் வளர்ச்சி - ஒரு பார்வை!
இந்திய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அபரிமிதமான வளர்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. நவம்பர் 29, 2021 அன்று, ஃபின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான Slice யூனிகார்னாக மாறியதை அடுத்து, இந்தியாவில் உள்ள யூனிகார்ன்களின் எண்ணிக்கை 41-ஐ தொட்டுள்ளது.
இந்த 41 என்ற எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் மாதங்களிலேயே வந்துவிட்டது. 2011 மற்றும் 2020க்கு இடையில் எலைட் கிளப்பில் இணைந்த 33 ஆக்டிவ் யூனிகார்ன்களை விட இந்த எண்ணிக்கை 124 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய யூனிகார்ன்களின் வணிக மாதிரிகளின் (business-models) பரிணாம வளர்ச்சியைப் பொறுத்தவரை, நடப்பு ஆண்டு முந்தைய ஆண்டுகளை விட அசாதாரணமானது. இதனிடையே,
41 யூனிகார்ன்களில் 9 ஃபின்டெக் யூனிகார்ன்கள், 4 எண்டர்பிரைஸ்டெக், 3 எட்டெக் மற்றும் 2 கிரிப்டோகரன்சி யூனிகார்ன்கள் என்று கலவையாக உள்ளன. ஃபுட்டெக், ஹெல்த்டெக், ப்ராப்டெக் மற்றும் சமூக வர்த்தகம் ஆகிய துறைகளை சேர்ந்த ஸ்டார்ட்அப்களும் யூனிகார்ன் கிளப்பில் சேர்த்துள்ளன.
நடப்பு ஆண்டில் மிகவும் பழமையான அதேநேரம், தொடங்கிய சில ஆண்டுகளே ஆன நிறுவனங்களும் யூனிகார்ன் கிளப்பில் இணைந்துள்ளன. குறிப்பாக, 1984-ல் ஒருங்கிணைக்கப்பட்ட ஃபைவ் ஸ்டார் பிசினஸ் ஃபைனான்ஸ், தொடங்கிய 37வது ஆண்டுகளுக்குp பிறகு இந்த ஆண்டு மார்ச் மாதம் யூனிகார்ன் நிறுவனமாக உருவெடுத்தது. மறுபுறம், அனந்த் நாராயணனால் நிறுவப்பட்ட Mensa Brands நிறுவனம், தொடங்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் யூனிகார்னாக மாறியது.
ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு மேலும் மேலும் யூனிகார்ன்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில், 2021 ஆம் ஆண்டு ஐபிஓக்கள் (IPO) ஆண்டாக இருந்தது எனலாம். Zomato, Nykaa, PolicyBazaar, மற்றும் Paytm போன்ற பல ஸ்டார்ட்அப் யூனிகார்ன் நிறுவனங்களின் ஐபிஓக்கள் இந்த ஆண்டு பட்டியலிடப்பட்டன.
அதே நேரத்தில், மற்ற யூனிகார்ன்களான Delhivery, Droom, மற்றும் MobiKwik, தங்கள் பட்டியல் திட்டங்களை விவரித்து, முதலீட்டு சந்தை கட்டுப்பாட்டாளரான இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (SEBI) தங்கள் வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ரோஸ்பெக்டஸை (DRHP) தாக்கல் செய்துள்ளன.
ஆங்கிலத்தில்: ராஜீவ் புவா | தமிழில்: மலையரசு